Sunday, November 30, 2014

அதிரையில் காவல்துறை, மருத்துவர்கள் உட்பட 96 நபர்கள் இரத்ததானம் செய்தனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை காலி இரத்த வங்கியுடன் இனைந்து இன்று 30.11.2014 நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்களில் காலை 10.00 முதல் பகல் 2.30 வரை இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தியது இதில் ஆர்வத்துடன் 10 க்கும் அதிகமான பெண்கள் உடபட 108 நபர்கள் கலந்துக்கொண்ட இந்த முகாமில் 96 நபர்கள் இரத்ததானம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்






































Friday, November 28, 2014

Tuesday, November 25, 2014

கோவை இஸ்லாம் ஒர் இனிய மார்க்க நிகழ்ச்சி

கோவை இஸ்லாம் ஒர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்க முடியாமலும் பல கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டும், பலர் முன்பு கேள்வி கேட்க முடியாத மாற்று மத சகோதரர்களுக்கு அவர்களின் அய்யங்களை தீர்ப்பதற்காக ஒரு பகுதி தனியாக ஓதுக்கப்பட்டு கோவை மாவட்ட ஆண் பெண் தாயிக்கள் தனி தனியாக சிறப்பாய் இஸ்லாத்தை மாற்று மத அன்பர்களுக்கு விளக்கமளித்தனர் இங்கு வந்த அனைத்து மாற்று மத அன்பர்களுக்கும் திருக்குர்ஆன் இஸ்லாமிய புத்தகங்கள், மற்றும் சிடிக்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்













Monday, November 24, 2014

குளத்திற்கு தண்ணீர்விடும் களப்பனியில் தவ்ஹீத் ஜமாஅத் (வீடியோ)

CMP வாய்காலில் இருந்து செடியன் குளத்திற்கு தண்ணீர்விடும் களப்பனியில் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தின் நேற்று இரவு முழுவதும் ஈடுபட்டனர் அல்ஹம்துலில்லாஹ்
















Sunday, November 23, 2014

TNTJயின் கோரிக்கையை ஏற்று செடியன் குளத்திற்கு இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செடியன் குளம் தண்ணீர்யின்மை காரணமாக வரண்டு காணப்படுகின்றன அதிரை பேரூராட்சி நிர்வாகம் செடியன் குளத்திற்கு தேவையான நீர் நிலையை உடன் உருவாக்கி தரும்படி 1.11.2014 அன்று பேரூராட்சி தலைவர் துனைத்தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியயோருக்கு  கோரிக்கை அனு அளிக்கப்பட்டது ஜமாஅத்தின் கோரிக்கை ஏற்று இன்று பேத்த குளம் வழியாக செடியன் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



அவ்லியா வந்து அமரும் புளியமரம் அகற்றப்பட்டது


அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் அடக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஹாஜா ஒலி தர்ஹாவில் அவ்லியா பல் துவக்கிவிட்டு போட்ட குச்சித்தான் தர்ஹாவிற்கு வலது புறம் அமைந்துள்ள பெரிய புளிய மரமும் அதன் மேடையும் என்று நம்புகின்றனர்.

கொடிமரம் ஏற்றப்படும் போதெல்லாம் ஹாஜா ஒலி அந்த புளிய மரத்தின் உச்சியில் வந்து அமர்ந்திருப்பார்களாம் அப்போது உச்சி கொப்பு ஆடுது பாருங்கள் என்பார்கள் அது மட்டுமல்லாது உச்சி கொப்பு ஆடும்போது அந்த புளிய மரத்து இலையை பரித்து சாப்பிட்டால் பிள்ளை இல்லாதவர்களுக்கு  பிள்ளை உண்டாகின்ற பாக்கியம் கிடைக்கும் என்ற கண் மூடித்தணமான நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் அந்த மரம்பட்டுபோனதால் அதை வெட்டி அப்புறப்படுத்திவிட்டார்கள் (இப்போ பிள்ளையில்லாதவர்கள் வேப்ப இழையை தின்பார்கள் போலும்) 20.11.2014 அந்த புளிய மரத்து மேடையும் JCB மூலம் இடித்து தரைமட்டமாகி விட்டார்கள் அதோடு சேர்த்து புளிய மரத்து மேடையில் கட்டப்பட்ட குட்டி அவ்லியாவுடைய கபுரும் இருந்தது அதையும் சேர்த்து இடித்து தகர்க்கப்பட்டுள்ளது சமாதி வழிப்பாடு எப்பேர்பட்ட மடத்தனமான மூடநம்பிக்கை என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

தர்ஹா கப்ரு வணங்கிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் இருக்கின்ற கப்ரை இல்லாமல் ஆக்குவோம் இல்லாத இடத்தில் கப்புரை உண்டாக்குவோம் அதை ஏற்று கொள்ளுகின்ற மடையர் கூட்டம் இருக்கின்றார்கள் என்பதை ஊருக்கு உணர்த்தியுள்ளார்கள் இவையெல்லாம் இனை வைப்பு என்று என்றைக்கு விளங்கி தவ்பா செய்ய போகின்றார்கள்

இப்படிக்கு
 Yஅன்வர் அலி

Saturday, November 22, 2014

அதிரையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் அரபிக்கல்லூரி

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம் இன்று 22.11.2014 தவ்ஹீத் பள்ளியில் தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) வருகின்ற 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 2.00 வரை தஞ்சை காலி இரத்தவங்கியுடன் இனைந்து  நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்துவது

2) வருகின்ற 2015 கல்வி ஆண்டில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண் அரபிக்கல்லூரி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது