Saturday, September 27, 2014
மரியாதைக்குரிய பொய்யர் காசிமியின் கிழிந்த முகத்திரை! (வீடியோ)
Saturday, September 27, 2014
No comments
Friday, September 26, 2014
அவதூறு சுமத்தி விட்டு ஓட்டமெடுக்க முயலும் மீடியா மொஜிக்கர் நிஜாமுதீனை விரட்டும் தவ்ஹீத் ஜமாஅத்!
Friday, September 26, 2014
No comments
அவதூறு சுமத்தி விட்டு ஓட்டமெடுக்க முயலும் மீடியா மொஜிக்கர் நிஜாமுதீனை விரட்டும் தவ்ஹீத் ஜமாஅத்!
தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞரும், சினிமா தியோட்டரில் மார்க்க ஆய்வு செய்யும் மார்க்க மேதையுமான அதிரை மீடியா மெஜிக் நிஜாம் என்பவர் விவாதத்தில் தப்பிக்க போடும் வித்தைகளை தோலூரித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று (26.09.2014) அனுப்பட்ட கடிதம்.
Thursday, September 25, 2014
Tuesday, September 23, 2014
அதிரை TNTJ துபாய் கிளை நடத்தும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம்!
Tuesday, September 23, 2014
No comments
அதிரை TNTJ துபாய் கிளை நடத்தும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் !
அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் கிளை நடத்தும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.
நாள் : 26-09-2014 வெள்ளிக்கிழமை,
நேரம் : மாலை 4.45 மணிக்கு,
இடம் : JT மர்கஸ், துபாய்.
மேலும் விவரத்துக்கு:
050 506 3755,
055 742 8381
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - மண்ணடி சூனியம் ஒழிப்பு பொதுக்கூட்ட வீடியோ!
Tuesday, September 23, 2014
No comments
Sunday, September 21, 2014
Saturday, September 20, 2014
தெருமுனை பிரச்சாரம்
Saturday, September 20, 2014
No comments
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக நேற்று வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு பாக்கியத்துஸ் ஸாலிஹத் பள்ளிவாசல் வருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி எது தவ்ஹீத் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, September 17, 2014
பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் – பில்லி சூனியத்திற்கு எதிரான தெளிவான ஓர் ஆய்வு நூல்
Wednesday, September 17, 2014
No comments
நூல் பெயர் : பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்
ஆசிரியர் : P. ஜெய்னுலாப்தீன் (PJ)
வெளியீடு : நபீலா பதிப்பகம்
தமிழுலகில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தீவிர இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருபவரும், எளிய தமிழில் திருமறைக் குர்ஆனை மொழியாக்கம் செய்து, விளக்கவுரை எழுதியவரும், பண்ணூலாசிரியரும், பிரபல இஸ்லாமிப் பிரச்சாரகருமான சகோ. பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் புதிய புத்தகம் 'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்பதாகும்.
இறைவன் ஒருவன் தான் இருக்கின்றான், அவன் அல்லாஹ் மாத்திரம் தான், அவனுடைய தூதர்களில் இந்த உலகுக்கு அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் அவரல்லாத யாரையும், எதனையும் பின்பற்றக் கூடாது என்றும், மகான்கள், அவ்லியாக்கள், இறை நேசர்களிடம் உதவி தேடுகின்றோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்யும் காரியங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழுலகில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் பேய், பிசாசு,பில்லி சூனியம் போன்ற மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வழிமுறைகளையும் பகிரங்கமாகவும் தீவிரமாகவும் எதிர்த்து வருகின்றார்.
குறித்த உரையில் இவர் விடுத்த சவால் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் புதுவிதமான எதிர்பார்பை ஏற்படுத்திவிட்டது.
'சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்பவர்கள், முடிந்தால் எனக்கு சூனியம் செய்து பாதிப்பை உண்டாக்கிக் காட்டுங்கள். அப்படி பாதிப்பை உண்டாக்கிவிட்டால் அவர்களுக்கு ஐம்பது இலட்சங்கள் பணம் பரிசாகத் தருவேன்' என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார்.
இறுதியில் தமிழகம் திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் அகோரி என்ற பூசாரி சகோ. பி.ஜெ அவர்களுக்கு 'நான் சூனியம் வைத்து 48 நாட்களுக்குள் பி.ஜெ தற்கொலை செய்து மரணித்து விடுவார்' 49 வது நாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் எனக்கு ஐம்பது இலட்சங்கள் தர வேண்டும்' என்றும் தனது சூனியத்தினால் பி.ஜெ க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவிட்டால் தான் புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு பில்லி சூனியத்திற்கு எதிராக பகிரங்க பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறி பி.ஜெய்னுலாப்தீனுக்கு சூனியம் செய்வதற்கு ஒத்துக் கொண்டார்.
இருவரும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்ட இந்த சூனிய ஒப்பந்தம் முடிவதற்கு இன்றும் சுமார் 10 நாட்களே உள்ளன. அதாவது எதிர்வரும் 17.09.2014 அன்று இறுதித் தேதியாகும்.
நிலைமை இவ்வாறிருக்க பில்லி சூனியம் குறித்து இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கின்றது? என்பது பற்றிய தெளிவான செய்திகளை உள்ளடக்கிய ஒரு ஆய்வுத் தலைப்பாக 'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற தலைப்பில் தற்போது ஒரு அருமையான புத்தகத்தினையும் சகோ. பி.ஜெ அவர்கள் வெளியிட்டுள்ளார்.
சுமார் 228 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் ஒவ்வொரு முஸ்லிம்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல தகவல்களை உள்ளடக்கியதாகும்.
ஆரம்ப கால ஏகத்துவப் பிரச்சாரங்களின் போது சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும், நபியவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இது தொடர்பில் வரக் கூடிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்த சகோதரர் பி.ஜெ அவர்கள் இது தொடர்பில் மீண்டும் ஆய்வு செய்து, குறித்த செய்திகளின் தவறுகளையும், புனித குர்ஆனுக்கு மாற்றமான போக்கையும் தெளிவாக தனது உரைகளின் மூலம் விளக்கினார்.
'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற இந்த நூலின் மூலம் சூனிய நம்பிக்கையில் வாழ்க்கையைத் தொலைத்து, மறுமையை இழக்கும் காரியத்தில் ஈடுபடும் சாமானிய முஸ்லிம்களுக்கு ஒரு மிகப் பெரிய தெளிவை வழங்கும் விதமாக இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆகிய இரண்டு தலைப்புக்களில் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் இறை வேதமான திருமறைக் குர்ஆன், நபியவர்களின் வார்த்தைகளான ஹதீஸ்களை ஆகியவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது போன்ற விபரங்கள் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளன.
நூலின் இரண்டாம் கட்டமாக 'சூனியம்' பற்றிய செய்திகள் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று வாதிடும் உலமாக்கள் முன் வைக்கும் முக்கிய ஆதாரங்கள் 'நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?' என்ற தலைப்பில் வேறு வேறு வாசகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 06 ஹதீஸ்கள் ஆராயப்பட்டுள்ளன.
அதே போல் 'குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் சூனிய நம்பிக்கை' என்ற தலைப்பில் சூனியம் பற்றிய செய்திகளை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பற்றிய முழுமையான விளக்கங்கள் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
அதே போல் இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபணம் செய்வதற்காக காலத்திற்கு காலம் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய அர்ப்புதங்களில் சந்தேகத்தை உண்டாக்கும் விதமாக இந்த சூனிய நம்பிக்கை உள்ளதை விளக்கும் விதமாக 'அர்ப்புதங்களை அர்த்தமற்றதாக்கும் சூனிய நம்பிக்கை' என்ற ஒரு தலைப்பும் இதில் உள்ளடங்கப் பெற்றுள்ளது.
இதற்கும் மேலதிகமாக,
போன்ற தலைப்புக்களில் சூனியத்தினால் யாருக்கும், யாராலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பது சந்தேகமற தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
நூலின் மூன்றாம் கட்டமாக சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று ஒருவர் நம்புவதினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்பது தெளிவாக ஆராய்ந்து விபரிக்கப்பட்டுள்ளது.
'சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தலே!' என்ற தலைப்பில் சூனியத்தினால் யாருக்கேனும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஒரு முஸ்லிம் நம்பினால் அவன் இறைவனுக்கு இணை கற்பித்த பாவத்தில் வீழ்ந்து விடுவான் என்றும், அது பற்றிய ஆதாரங்களும் விளக்கப்பட்டுள்ளதுடன்,
போன்ற தலைப்புக்களில் சூனியத்தை உண்மை என்று நம்புவதும், அதனால் பாதிப்பு உண்டாகும் என்று நம்புவதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பாவத்தை பெற்றுத் தரும் என்ற உண்மைக்கு மாற்றமான கருத்துக் கொண்ட உலமாக்களின் வாதங்களுக்குறிய பதில்கள் அடுக்கடுக்காக தொகுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
நூலின் நான்காவது பகுதி திருமறைக் குர்ஆனின் 02 வது அத்தியாயம் 102 வது வசனம் பற்றி விரிவாக ஆராய்கின்றது.
சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று வாதிடுவோர் முன் வைக்கும் ஆதாரங்களில் பிரதான ஆதாரமான 02:102 வது வசனம் தொடர்பில்,
02:102 வது வசனம் சொல்வது என்ன? என்ற தனித் தலைப்பிலும், திருமறைக் குர்ஆன் 113, 114வது அத்தியாயங்கள் சூனியம் தொடர்பாகத் தான் இறக்கப்பட்டதா? என்பதை விளக்கும் விதமாக '113இ 114 வது அத்தியாயங்கள் சூனியத்திற்கு ஆதாரமாகுமா?' என்ற தனியான ஒரு தலைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
நான்கு மத்ஹபு அறிஞர்கள் மற்றும் புகாரி விளக்கவுரையாளரான இமாம் இப்னு ஹஜர் தொகுத்த செய்திகள் அதே போல் அறிஞர் இப்னு தைமிய்யா போன்றவர்கள் சூனியம் விஷயத்தில் கொண்டிருந்த நிலைபாடுகள் மற்றும் இமாம் ஐனி, இமாம் ஷவ்கானி, இமாம் தபரி போன்ற பல அறிஞர்களின் சூனியம் பற்றிய நிலைபாடுகள் அறபி மூலத்துடன் விளக்கமளிக்கப்பட்டு இத்தலைப்பு தொகுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
நூலின் இறுதிப் பகுதியாக,
போன்ற தலைப்புக்களில் சில கேள்விகளுக்கான பதில்களும் சிறப்பாக அமைக்கப் பெற்றுள்ளன.
'முன்னர் சொன்னதை மாற்றிச் சொல்வது ஏன்?' என்ற தனித் தலைப்பில் புகாரிஇ முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்ற செய்திகளை வைத்து சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று பேசியும், எழுதியும் வந்த சகோதரர் பி.ஜெ அவர்கள் தற்பொது 'சூனியத்தினால் எவ்வித பாதிப்பையும் உண்டாக்க முடியாது' என்ற நிலைக்கு மாறியது ஏன்? என்றும் இப்படி மாறுவது சரிதானா? என்ற கேள்விக்குறிய அருமையான பதிலும் மிகச் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.
மத்ரஸாக்களில் கல்வியை தொடரும் மாணவர்களும், ஹதீஸ் கலை மற்றும் தப்சீர் கலை ஆய்வு மாணவர்களும் குறிப்பாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறப்பான நூல் தான் 'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற நூலாகும்.
-

- இந்த வகையில் சூனியம் தொடர்பில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்ட அவர் கடந்த ரமழான் மாதத்தில் தொடர்ந்து பத்து நாட்கள் சென்னையில் அமைந்துள்ள 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' மாநில தலைமையகத்தில் இரவுத் தொழுகையின் பின்னர் 'இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்' என்ற தலைப்பில் ஒரு தொடர் உரையாற்றினார்.
- இவ்வுரை பொது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதுடன், சூனியக் காரர்களுக்கும், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்களுக்கும் மத்தியில் பலத்த தாக்கத்தை உண்டாக்கியது.
குறித்த உரையில் இவர் விடுத்த சவால் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் புதுவிதமான எதிர்பார்பை ஏற்படுத்திவிட்டது.
'சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்பவர்கள், முடிந்தால் எனக்கு சூனியம் செய்து பாதிப்பை உண்டாக்கிக் காட்டுங்கள். அப்படி பாதிப்பை உண்டாக்கிவிட்டால் அவர்களுக்கு ஐம்பது இலட்சங்கள் பணம் பரிசாகத் தருவேன்' என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார்.
- இந்த அறைகூவல் ரமழான் முழுவதும் தமிழகத்தின் 'மெகா' தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்டது மட்டுமல்லாமல், பேஸ்புக், ட்டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களிலும் பலத்த வாதப் பிரதி வாதங்களை உண்டாக்கிவிட்டது.
இறுதியில் தமிழகம் திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் அகோரி என்ற பூசாரி சகோ. பி.ஜெ அவர்களுக்கு 'நான் சூனியம் வைத்து 48 நாட்களுக்குள் பி.ஜெ தற்கொலை செய்து மரணித்து விடுவார்' 49 வது நாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் எனக்கு ஐம்பது இலட்சங்கள் தர வேண்டும்' என்றும் தனது சூனியத்தினால் பி.ஜெ க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவிட்டால் தான் புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு பில்லி சூனியத்திற்கு எதிராக பகிரங்க பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறி பி.ஜெய்னுலாப்தீனுக்கு சூனியம் செய்வதற்கு ஒத்துக் கொண்டார்.
இருவரும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்ட இந்த சூனிய ஒப்பந்தம் முடிவதற்கு இன்றும் சுமார் 10 நாட்களே உள்ளன. அதாவது எதிர்வரும் 17.09.2014 அன்று இறுதித் தேதியாகும்.
நிலைமை இவ்வாறிருக்க பில்லி சூனியம் குறித்து இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கின்றது? என்பது பற்றிய தெளிவான செய்திகளை உள்ளடக்கிய ஒரு ஆய்வுத் தலைப்பாக 'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற தலைப்பில் தற்போது ஒரு அருமையான புத்தகத்தினையும் சகோ. பி.ஜெ அவர்கள் வெளியிட்டுள்ளார்.
சுமார் 228 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் ஒவ்வொரு முஸ்லிம்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல தகவல்களை உள்ளடக்கியதாகும்.
ஆரம்ப கால ஏகத்துவப் பிரச்சாரங்களின் போது சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும், நபியவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இது தொடர்பில் வரக் கூடிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்த சகோதரர் பி.ஜெ அவர்கள் இது தொடர்பில் மீண்டும் ஆய்வு செய்து, குறித்த செய்திகளின் தவறுகளையும், புனித குர்ஆனுக்கு மாற்றமான போக்கையும் தெளிவாக தனது உரைகளின் மூலம் விளக்கினார்.
'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற இந்த நூலின் மூலம் சூனிய நம்பிக்கையில் வாழ்க்கையைத் தொலைத்து, மறுமையை இழக்கும் காரியத்தில் ஈடுபடும் சாமானிய முஸ்லிம்களுக்கு ஒரு மிகப் பெரிய தெளிவை வழங்கும் விதமாக இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.
- மார்க்கம் இரு வகை!
- திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் எவ்வாறு புரிந்து கொள்வது?
ஆகிய இரண்டு தலைப்புக்களில் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் இறை வேதமான திருமறைக் குர்ஆன், நபியவர்களின் வார்த்தைகளான ஹதீஸ்களை ஆகியவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது போன்ற விபரங்கள் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளன.
- 'குர்ஆனுடன் மோதும் சில ஹதீஸ்கள்' என்ற தலைப்பில்,
- இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா?
- நபியாவதற்கு முன்னர் மிஃராஜ் நடந்திருக்குமா?
- ஏர் கலப்பை பழிப்பிற்குறியதா?
- உலகத்தை படைக்க ஏழு நாட்களா?
- அன்னியப் பெண்ணுடன் நபியவர்கள் நெருக்கமாக இருந்தார்களா?
- குர்ஆன் வசனம் காணாமல் போகுமா?
- சுலைமான் நபியை கொச்சைப்படுத்தலாமா?
- வானவரின் கன்னத்தில் மூசா நபி அறைந்தார்களா?
- ஒரு பெண் அந்நிய இளைஞருக்கு பாலுட்டலாமா?
நூலின் இரண்டாம் கட்டமாக 'சூனியம்' பற்றிய செய்திகள் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று வாதிடும் உலமாக்கள் முன் வைக்கும் முக்கிய ஆதாரங்கள் 'நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?' என்ற தலைப்பில் வேறு வேறு வாசகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 06 ஹதீஸ்கள் ஆராயப்பட்டுள்ளன.
அதே போல் 'குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் சூனிய நம்பிக்கை' என்ற தலைப்பில் சூனியம் பற்றிய செய்திகளை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பற்றிய முழுமையான விளக்கங்கள் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
அதே போல் இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபணம் செய்வதற்காக காலத்திற்கு காலம் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய அர்ப்புதங்களில் சந்தேகத்தை உண்டாக்கும் விதமாக இந்த சூனிய நம்பிக்கை உள்ளதை விளக்கும் விதமாக 'அர்ப்புதங்களை அர்த்தமற்றதாக்கும் சூனிய நம்பிக்கை' என்ற ஒரு தலைப்பும் இதில் உள்ளடங்கப் பெற்றுள்ளது.
இதற்கும் மேலதிகமாக,
- சூனியம் செய்யப்பட்டதை மறுக்கும் திருக் குர்ஆன்
- சூனியத்தை மறுக்கும் நபி (ஸல்) அவர்கள்
- அல்லாஹ்வின் பார்வையில் சூனியம்
- அல்லாஹ் வழங்கிய ஆற்றலினால் சூனியம் செய்யப்படுகின்றதா?
- ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்யப்படுகின்றதா?
போன்ற தலைப்புக்களில் சூனியத்தினால் யாருக்கும், யாராலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பது சந்தேகமற தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
நூலின் மூன்றாம் கட்டமாக சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று ஒருவர் நம்புவதினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்பது தெளிவாக ஆராய்ந்து விபரிக்கப்பட்டுள்ளது.
'சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தலே!' என்ற தலைப்பில் சூனியத்தினால் யாருக்கேனும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஒரு முஸ்லிம் நம்பினால் அவன் இறைவனுக்கு இணை கற்பித்த பாவத்தில் வீழ்ந்து விடுவான் என்றும், அது பற்றிய ஆதாரங்களும் விளக்கப்பட்டுள்ளதுடன்,
- அற்புதங்களை நம்புதல் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகுமா?
- சாமிரி செய்த அற்புதத்தை நம்புவது இணை கற்பித்தலாகுமா?
- தஜ்ஜால் செய்யும் அற்புதத்தை நம்புவது இணை கற்பித்தலாகாதா?
போன்ற தலைப்புக்களில் சூனியத்தை உண்மை என்று நம்புவதும், அதனால் பாதிப்பு உண்டாகும் என்று நம்புவதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பாவத்தை பெற்றுத் தரும் என்ற உண்மைக்கு மாற்றமான கருத்துக் கொண்ட உலமாக்களின் வாதங்களுக்குறிய பதில்கள் அடுக்கடுக்காக தொகுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
நூலின் நான்காவது பகுதி திருமறைக் குர்ஆனின் 02 வது அத்தியாயம் 102 வது வசனம் பற்றி விரிவாக ஆராய்கின்றது.
சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று வாதிடுவோர் முன் வைக்கும் ஆதாரங்களில் பிரதான ஆதாரமான 02:102 வது வசனம் தொடர்பில்,
02:102 வது வசனம் சொல்வது என்ன? என்ற தனித் தலைப்பிலும், திருமறைக் குர்ஆன் 113, 114வது அத்தியாயங்கள் சூனியம் தொடர்பாகத் தான் இறக்கப்பட்டதா? என்பதை விளக்கும் விதமாக '113இ 114 வது அத்தியாயங்கள் சூனியத்திற்கு ஆதாரமாகுமா?' என்ற தனியான ஒரு தலைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
- 'சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா?' என்ற தனியான ஒரு தலைப்பில் சூனியத்தினால் எவ்வித பாதிப்பையும் உண்டாக்க முடியாது என்ற கருத்தை சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த உலமாக்கள் பிரச்சாரம் செய்வதற்கு முன் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது அவர்களின் நூல்களை ஆதாரமாக முன் வைத்து சிறப்பாக தொகுக்கப்பட்டள்ளது.
- சூனியத்தினால் எவ்வித பாதிப்பையும் உண்டாக்க முடியாது என்பது வழிகெட்ட முஃதசிலாக்களின் கருத்து என்றும் முஃதஸிலாக்களின் வழியில் தான் தவ்ஹீத் ஜமாத் பயணிக்கின்றது என்றும் அவதூறுகளை பரப்பி வந்த உலமாக்களுக்கு சாட்டையடியாக இத்தலைப்பு தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
நான்கு மத்ஹபு அறிஞர்கள் மற்றும் புகாரி விளக்கவுரையாளரான இமாம் இப்னு ஹஜர் தொகுத்த செய்திகள் அதே போல் அறிஞர் இப்னு தைமிய்யா போன்றவர்கள் சூனியம் விஷயத்தில் கொண்டிருந்த நிலைபாடுகள் மற்றும் இமாம் ஐனி, இமாம் ஷவ்கானி, இமாம் தபரி போன்ற பல அறிஞர்களின் சூனியம் பற்றிய நிலைபாடுகள் அறபி மூலத்துடன் விளக்கமளிக்கப்பட்டு இத்தலைப்பு தொகுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
நூலின் இறுதிப் பகுதியாக,
- அதிகம் பேர் சொல்வது ஆதாரமாகுமா?
- ஒன்றுமில்லாத சூனியம் எப்படி பாவமாக ஆகும்?
- மேஜிக் செய்வது இணை கற்பித்தலா?
போன்ற தலைப்புக்களில் சில கேள்விகளுக்கான பதில்களும் சிறப்பாக அமைக்கப் பெற்றுள்ளன.
'முன்னர் சொன்னதை மாற்றிச் சொல்வது ஏன்?' என்ற தனித் தலைப்பில் புகாரிஇ முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்ற செய்திகளை வைத்து சூனியத்தினால் பாதிப்பை உண்டாக்க முடியும் என்று பேசியும், எழுதியும் வந்த சகோதரர் பி.ஜெ அவர்கள் தற்பொது 'சூனியத்தினால் எவ்வித பாதிப்பையும் உண்டாக்க முடியாது' என்ற நிலைக்கு மாறியது ஏன்? என்றும் இப்படி மாறுவது சரிதானா? என்ற கேள்விக்குறிய அருமையான பதிலும் மிகச் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.
- மொத்தத்தில் சூனியத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர்களுக்கும்,நாங்களும் தவ்ஹீத் வாதிகள் தான் என்று கூறிக் கொண்டு சூனியத்தை நம்பி இணை வைப்பில் மூழ்கியவர்களுக்கும் அவர்களின் தவறான வாதங்களுக்குறிய தெளிவான பதிலாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது என்பதில் மாற்றமில்லை.
மத்ரஸாக்களில் கல்வியை தொடரும் மாணவர்களும், ஹதீஸ் கலை மற்றும் தப்சீர் கலை ஆய்வு மாணவர்களும் குறிப்பாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறப்பான நூல் தான் 'பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்' என்ற நூலாகும்.
நன்றி rasminmisc.com
-
Monday, September 15, 2014
சென்னையில் பீ ஜே கலந்துக்கொள்ளும் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம்
Monday, September 15, 2014
No comments
அக்னீ பரீட்சை நிகழ்ச்சியில் பீஜே ( வீடியோ )
Monday, September 15, 2014
No comments
தவ்ஹீத் என்ற பெயரில் இஸ்லாமிய சமுதாயத்தை பிளவு படுத்துவது சரியா?
தவ்ஹீத் பிரச்சாரம் செய்து குடும்பத்திற்குள் பிளவு ஏற்படுத்தலாமா?
தர்காக்களுக்கு வரும் இந்து மத சகோதரர்களது செயலை மத நல்லிணக்கமாக ஏற்க மறுப்பது ஏன்?
சூனிய சவாலுக்கு 50 லட்சம் உங்களுக்கு கிடைத்தது எப்படி?
பந்தயம் கட்ட இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா?
என்பன உள்ளிட்ட இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பீஜே பதிலளிக்கும் அக்னீ பரீட்சை கேள்வி பதில் நிகழ்ச்சி

Saturday, September 13, 2014
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம்
Saturday, September 13, 2014
No comments
ஏக இறைவனின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம்
பங்கு ஒன்றுக்கு 1200 ரூபாய்
அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்களுடன் நங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம்
அறிவிப்பாளர் :ஜாபிர் (ரலி )நூல் முஸ்லீம் 2325
நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது .ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்
அறிவிப்பாளர் :இப்னு அப்பாஸ் (ரலி )நூல் திர்மீதி 1421 நசாயி 4319 இப்னுமாஜா 3122
குர்பானி தோல் மூலம் ஏழைகள் நலம் நாடுவீர் !!
அறிவிப்பாளர் :அலி (ரலி )நூல் புகாரி 1710 முஸ்லீம் 2320
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை வருடம் தோறும் குர்பானி தோல்களை வசூல் செய்து ஏழைகள் முன்னேறும் வகையில் தையல் இயந்திரம் ,கிரைண்டர் ,போன்ற பொருட்களும் ,கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளும் அதிரையில் உள்ள ஏழைகளுக்கு வழங்கி வருகிறது .அல்ஹம்துலில்லாஹ் .
காலம் முழுவதும் வசூலில் நடைபெறும் மதரசாக்களும் ,குறிப்பிட்ட ஒரு சிலரும் தோலை வாரிசெல்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் .உங்கள் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் வழங்கி ஏழைகளுக்கு அதன் பயனை வழங்கிடுவீர்
குறிப்பு :குர்பானி தோல் விற்ற பணத்தில் ஐந்து பைசா கூட இயக்க வளர்ச்சிக்கோ வேறு எந்த பணிகளுக்கோ செலவிடபடாது என்று உறுதிக் கூறுகிறோம்
உங்கள் குர்பானி தோல்களையும்,பங்கினையும் தருவதற்கு தொடர்பு கொள்ள
செல் :
M K M. ஜமால் முஹம்மது 95971-28886
A. பீர் முஹம்மது 80153-79211
S P பக்கீர் முகைதீன் 95008-21430
A K. மீரா முகைதீன் 99448-24510
M. அப்துல் ஜப்பார் 96295-33887
Y. அன்வர் அலி 96291-15317
A K S. நவாஸ் 99525-96270
நீங்கள் போன் செய்தால் ,வீடு தேடி வந்து குர்பானி தோல்களை பெற்றுக்கொள்வோம்
Thursday, September 11, 2014
குர்பானி தொடர்பான கேள்விகளும் பதில்களும்
Thursday, September 11, 2014
No comments
குர்பானி தொடர்பான கேள்விகளும் பதில்களும்
குர்பானி தோல்களை மத்ரஸா, பள்ளிவாசலுக்குக் கொடுக்கலாமா?
'ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த (கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.
அறிவிப்பவர் : அலீ(ரலி)
நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2535)
தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது.
இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.
கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?
கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் இதை நிறைவேற்றுவதற்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு சான்றாக கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறக்கூடிய ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.
அல்லாஹ்வின் தூதரே! நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (19021)
கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் இல்லை. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது. கடன் இருக்கும் போதோ அல்லது கடன் வாங்கியோ அவர் குர்பானி கொடுப்பது கூடாது.
கடனைத் தவிர அனைத்து பாவமும் ஷஹீதிற்கு மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3832)
வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமமப்படுத்த மாட்டான்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர, அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
அல்குர்ஆன் 2: 286
போனவருடம் குர்பானி கொடுத்தவர் வசதி இல்லாவிட்டாலும் நடப்பு வருடத்திலும் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டுமா?
சிலர் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். போன வருடம் குர்பானி கொடுத்துவிட்டு இந்த வருடம் குர்பானி கொடுக்காமல் இருந்தால் மற்றவர்கள் நம்மை மட்டமாக நினைப்பார்கள் என்று எண்ணி கடன்பட்டு குர்பானி கொடுக்கிறார்கள். இவ்வாறு இஸ்லாம் நமக்குக் கட்டளையிடவில்லை. குர்பானியின் நோக்கமே இறையச்சம்தான். எனவே நடப்பு வருடத்தில் குர்பானி கொடுக்க வசதியிருந்தால் மட்டுமே அவர் மீது கடமையாகும்.
குர்பானி கொடுப்பவர்தான் அறுக்க வேண்டுமா?
குர்பானி கொடுப்பவரோஇ அல்லது வேறு நபரோ அறுக்கலாம். அறுக்கத் தெரியாவிட்டால் அல்லது வேறு காரணத்தால் அறுக்க முடியாமல் போனால் மற்றவர்களை வைத்து அறுக்கலாம்.
வெள்ளை நிறத்தில் கருப்பு கலந்த கொம்புள்ள இரு ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். தனது கரத்தால் அவ்விரண்டையும் அறுத்தார்கள். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவற்றின் கழுத்தில் தம் காலை வைத்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3975)
பின்னர் மினாவிலுள்ள பலியிலிடும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக் கொண்டார்கள்.
நூல் : முஸ்லிம் 2334
வீட்டில் தலைவர் மட்டும் தான் நகம், முடிகளை வெட்டாமல் இருக்க வேண்டுமா? அல்லது குடும்பத்தினர் அனைவரும் நகம், முடிகளை வெட்டாமல் இருக்க வேண்டுமா?
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்க நாடியவரையே நகம், முடிகளை வெட்டாமல் இருக்கக் கட்டளையிட்டுள்ளார்கள். குடும்பத்தினர் அனைவரும் இதைப் பேணவேண்டுமென கட்டளையிடவில்லை.
நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாயீ (4285)
எந்த ஆடு குர்பானி கொடுக்கப்படத் தகுதியானது?
குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை,தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூற்கள்: திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294), இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக குறை தெரியும் பிராணியைத் தடைசெய்துள்ளார்கள். உதாரணமாக குருடு, நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானி கொடுப்பதில் குற்றமில்லை.
நபி (ஸல்) அவர்கள் 'கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூற்கள்: முஸ்லிம் (3637)
நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதைத் தடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
நூல் : நஸயீ (4301)
தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும். இவ்வகைப் பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதைக் குர்பானி கொடுப்பதில் தவறில்லை.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும்.
பாலுட்டும் பிராணி
குட்டியை ஈன்று பால்கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்துவிட்டால் குட்டி பாசத்திற்கும், பாலுக்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதைக் கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு அன்சாரித் தோழர் இதை உண்ணுங்கள் என்று கூறிவிட்டு (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் : (4143)
பிராணியின் வயது
'இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார். அவர் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா (ரலி)
நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3963)
அபூபுர்தா (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுத்த போது அதற்குப் பகரமாக நபி (ஸல்) அவர்களிடம் முஸின்னாவை விட ஜத்அ (ஆறுமாத குட்டி) உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்ட கேள்வியிலிருந்து முஸின்னாவைத்தான் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தனர். அதில் எனக்கு 'ஜத்வு' கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3974)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானி கொடுத்தோம்.
அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்
நூல் : நஸாயீ 4306
பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை. இதை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.
முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் : ஆடு, மாடு இ ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகள் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால்தான் வயது விசயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
முஸின்னா என்பது ஆட்டிலும், மாட்டிலும் இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.
அடுத்து ஜத்அ என்பதையும் கொடுக்கலாம் என்றும் சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்அ என்பது முஸின்னாவுக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஆறுமாதம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
முஸின்னா இல்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு அடுத்த நிலையில் உள்ள ஜத்அ வகையைக் கொடுக்கலாம்.
குர்பானிக்காக வாங்கப்பட்ட ஆடு இடையில் இறந்துவிட்டால் புதிதாக ஓர் ஆட்டை வாங்கி குர்பானி கொடுக்க வேண்டுமா? வசதியில்லாதவர் என்ன செய்ய வேண்டும்?
குர்பானி கொடுத்தால்தான் கடமை நீங்கும். கொடுப்பதற்கு முன்னர் இறந்துவிட்டால் வசதி இருந்தால் புதிதாக ஓர் ஆடு வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும். வாங்குவதற்கு வசதியில்லாவிட்டால் மாட்டில் கூட்டுக் குர்பானி கொடுக்கலாம். அதற்கும் வசதியில்லாவிட்டால் குர்பானி கொடுக்கத் தேவையில்லை. அல்லாஹ் யாரையும் அவரின் சக்திக்கு மீறி சிரமப்படுத்த மாட்டான்.
இறந்தவர் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு சரியான ஹதீஸ் ஆதாரம் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீசுடன் மோதுகிறது.
ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பயன்தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 3358
பெண்கள் குர்பானிப் பிராணியை அறுக்கலாமா?
பெண்கள் குர்பானிப் பிராணியை அறுத்தார்கள் என்றோ அல்லது நபிகளார் பெண்கள் குர்பானி பிராணியை அறுங்கள் என்றோ நேரடியான செய்திகள் இல்லை. என்றாலும் பெண்கள் பிராணியை அறுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. பெண்கள் அறுத்த பிராணியை சாப்பிடலாம் என்று நபிகளார் அனுமதியும் வழங்கியுள்ளார்கள். எனவே குர்பானிப் பிராணியை பெண்கள் அறுப்பதில் குற்றம் ஏதும் இல்லை.
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக் (ரலி),
நூல்: புகாரி 5504
கோழி, குதிரை போன்ற பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாமா?
நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணிகளாக ஆடு, மாடு, ஒட்டகத்தையே வழிகாட்டியுள்ளார்கள். கோழி, குதிரை போன்ற வேறு பிராணிகளை அவர்கள் கூறாததால் அவற்றைக் குர்பானி கொடுக்க முடியாது.
ஹஜ் செய்பவர் உள்ளூரில் குர்பானி கொடுக்க வேண்டுமா?
குர்பானி என்ற கடமை ஹஜ் கடமை மூலமாகவே உள்ளூரிலுள்ளவர்களுக்கு கடமையாகியுள்ளது. ஒருவர் ஹஜ் செய்து அங்கு குர்பானி கொடுத்துவிட்டால் அவர் குடும்பம் சார்பாக உள்ளூரில் குர்பானி கொடுக்கத் தேவையில்லை. நபிகளார் ஹஜ் செய்தபோது உள்ளூரில் குர்பானி கொடுக்கக் கட்டளையிடவில்லை.
மாடு, ஒட்டகத்தில் எத்தனை நபர்கள் கூட்டாகக் கொடுக்கலாம்?
ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஒர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2325
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316), இப்னு மாஜா (3122)
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்).
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : அபூதாவூத் (2425)
மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரமாக உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடுதான் கொடுக்க வேண்டுமா?
பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூற்கள்: புகாரி 5565, முஸ்லிம் (3975)
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில் 63 ஒட்டகைகளை தம் கரத்தால் குர்பானி கொடுத்துள்ளார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அறுக்கும் படி கூறினார்கள்.
நன்மையைக் கருதி அதிகமாகக் குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானி பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.
மிக நீண்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத் துண்டுகளைச் சமைத்துச் சாப்பிட்டதாக உள்ளது.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2334)
குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.
மேற்கண்ட ஹதீஸ்கள் பெருமையை நாடாமல், ஏழைகளின் தேவைகளைக் கருதி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம் என்று கூறுகிறது. சிலர் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.
இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்குப் போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாகக் கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: அதா இப்னு யஸார்
நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)
இது மட்டுமல்லாமல் குர்பானி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு போதுமானது என்று தெளிவுபடுத்தி விட்டார்கள்.
குர்பானிப் பிராணியை அறுக்கும்போது என்ன கூற வேண்டும்?
பிராணியை அறுக்கும்போது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற துஆவை சிலர் ஒதுகின்றனர். இது பற்றி அபூதாவுத் பைஹகீ இப்னுமாஜா ஆகிய நூற்களில் ஒரு பலவீனமான ஹதீஸ் இடம்பெறுகிறது. ஆகயால் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சஹீஹான ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் சில வார்த்தைகளைக் கூறியதாக உள்ளது.
அறுக்கும்போது 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூற வேண்டும்.
'நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூற்கள்: புகாரி(5565), முஸ்லிம் (3635)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்ற வாசகம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
வெள்ளை நிறத்தில் கருப்பு கலந்த கொம்புள்ள இரு ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். தனது கரத்தால் அவ்விரண்டையும் அறுத்தார்கள். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவற்றின் கழுத்தில் தம் காலை வைத்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3635)
பெருநாள் தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலில் பணிபுரியும் ஹஜ்ரத்மார்களுக்கும் மோதினாருக்கும் கடுமையான வேலை ஆரம்பித்துவிடும். ஒவ்வொருவரும் தங்களுடைய குர்பானிப் பிராணியை அறுப்பதற்காக அவர்களையே நாடி இருப்பார்கள். இவர்கள் அறுத்தாலே குர்பானி ஏற்கப்படும் என்று பலர் இன்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கரத்தால் அறுத்துள்ளதால் குர்பானி கொடுப்பவர் தானே அறுப்பதே சிறந்ததாகும்.
குர்பானி இறைச்சியை மூன்று பங்காகத்தான் பிரிக்க வேண்டுமா?
குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், அடுத்தது ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.
உறவினர்கள், ஏழைகள், யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.
'அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.
அல்குர்ஆன் 22 : 36
இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமெனக் கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களைப் பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
நூல் : புகாரி 1717
பிராணியை அறுத்துவிட்டு விரும்புபவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி முழுவதையும் கொடுத்து விட்டார்கள். மூன்றில் ஒரு பங்கை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை. முஸ்லிமின் அறிவிப்பில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் ஒரு துண்டு எடுத்து அதை மட்டும் சமைத்துச் சாப்பிட்டதாக இடம் பெறுகிறது. எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் வழங்கலாம்.
மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. பஞ்சம் மிகைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தை சேமித்து வைக்கக்கூடாது என்று மக்களுக்கு தடை விதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அல்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள் மக்கள் (பஞ்சத்தால்) பசிபட்டினியோடு இருந்த ஒரு ஆண்டில்தான் அவர்கள் அப்படி (த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதியுள்ளவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதை சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆபிஸ் பின் ரபீஆ
நூல் : புகாரி (5423)
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர்பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் (அன்று) வந்திருந்த பலகீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (3643)
ஏழைகள் உண்ணுவதற்காக பணக்காரர்கள் சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்திருந்தது குர்பானிப் பிராணியின் மாமிசத்தை நாம் தர்மம் செய்வதின் அவசியத்தைக் காட்டுகிறது. மாமிசத்தைச் சேமித்து வைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என மேலுள்ள இரண்டு ஹதீஸ்களும் கூறுகிறது.
குர்பானி இறைச்சியை காபிர்களுக்கு வழங்கலாமா?
குர்பானி மாமிசத்தை காஃபிர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை.
'அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.
அல்குர்ஆன் 22 : 36
(22 : 36) வது வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் அல்லாஹ் கூறுகிறான். ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் கஃபிரான ஏழைக்கும் வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரமப்படக் கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக அதிகம் இருந்தால் காஃபிர்களுக்கும் வழங்கலாம்.
எத்தனை நாட்கள் குர்பானி கொடுக்கலாம்?
ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும், அதற்குப் பிறகுள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.
'தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி)
நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)
நன்றி : தீன்குலப்பெண்மணி
Tuesday, September 09, 2014
ஒட்டகம் ஓர் அற்புதம்
Tuesday, September 09, 2014
No comments
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? அல்குர்ஆன் 88:17
இது அல்லாஹ் எழுப்புகின்ற கேள்வியாகும். மனித சிந்தனையைத் தூண்டுகின்ற, மனிதனை அறிவியல் ஆய்வுக்குக் கொண்டு செல்கின்ற அற்புதமான கேள்வி இது!
தன்னுடைய பாலைவனப் படைப்பான ஒட்டகத்தின் அற்புதத்தைப் பற்றி மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறான். ஒட்டகத்தின் அற்புத ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கின்ற ஒரு கட்டுரை அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் வெளியானது. அந்தக் கட்டுரை இதோ:
50 டிகிரியிலும் வியர்க்காது
ஆடுகளையும், மாடுகளையும் பார்த்துப் பழகிய நமக்கு ஒட்டகம் என்பது விந்தையான விலங்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்கள் மந்தை மந்தையாகச் சுற்றித் திரிகின்றன.
இந்தியாவில் காணப்படும் ஒட்டகங்கள் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள். அரேபியன் வகையைச் சேர்ந்தவை. சராசரியாக 300 கிலோ எடை முதல் ஆயிரம் கிலோ எடைவரை வளரும். உயரம் 7 முதல் 8 அடி உயரம் வரை. சாதுவாகக் காணப்படும் ஒட்டகங்கள், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை என்பது ஆச்சரியம்.
ஒட்டகம் குறுகிய கால இடைவெளியில் 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப மாற்றத்தைத் தாங்கும் உடல் அமைப்பைப் பெற்றது. 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்கூட இதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறாது. அதனால்தான் பாலைவனத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது.
பாலைவன மணல் பகுதியில் சுற்றித் திரியும் விலங்கினம் என்பதால், இயற்கையாகவே ஒட்டகங்களுக்கு வித்தியாசமான சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன. மூக்கு, வாய்ப் பகுதிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், இதன் மூக்குக்குள் எளிதாக மணல் புகாது. முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் வித்தியாசமாக மடக்கிவைத்து இது படுத்திருப்பது வித்தியாசமான காட்சி.
ஒட்டகத்தின் தண்ணீர்
பாலைவனங்கள் என்றால் தண்ணீரே இருக்காது. அங்கு வாழும் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்யும்? தண்ணீர்த் தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளும்?
உலகில் வாழும் பல உயிரினங்களுக்கும், வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பை இயற்கையே கொடுத்திருக்கிறது. அதில் ஒட்டகமும் ஒன்று. ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் திமில் போன்ற மேட்டுப் பகுதியைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த இடத்தில் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர்ச் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. இதோடு, ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீர் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது. திமிலில் சேமிக்கப்படும் கொழுப்பு உணவுப் பொருட்களின் மூலம் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இந்த வளர்சிதை மாற்றம் மூலம் ஒட்டகத்துக்குத் தானாகவே நீர் கிடைத்துவிடும்.
இதை வைத்தே சில வாரங்கள் வரை நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் தாக்குப்பிடிக்க முடியும். இப்படி மீண்டும் மீண்டும் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் ஒட்டகத்தால் முடியும். உடலுக்குள்ளே நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதால் தான் ஒட்டகத்தைப் 'பாலைவனக் கப்பல்' என்றழைக்கிறார்கள்.
நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இவை இந்து தமிழ் நாளிதழில் வெளியான தகவல்களாகும். இந்தக் கட்டுரை ஒட்டகத்தின் அற்புதத்தை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கின்றது. நாம் இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
30 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெப்பத்தைத் தாங்கும் ஒட்டகத்தின் உடல்வாகையும் வலிமையையும் இந்தக் கட்டுரை விவரிக்கின்றது.
மனித உடலில் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். கோடையில் வளிமண்டல வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த வெப்பத்தை மனித உடல் தாங்காது என்பதற்காக, அதைக் குளிர்விப்பதற்காக வியர்வை சுரப்பிகள் மூலம் வியர்வை மழையை இறைவன் கொட்டச் செய்கிறான்.
இதனால் மனித உடலில் தண்ணீர் இருப்பு குறைகின்றது. அதைச் சரிகட்ட தாகம் எடுக்கின்றது. குடம் குடமாக நீரை உடலில் கொட்டி இழந்த நீர்ச்சத்தை மனிதன் ஈடுகட்டி விடுகின்றான். கோடையில் மனிதனின் நிலை இது!
ஆனால் ஒட்டகத்தின் நிலை இப்படி இருந்தால் என்னாவது? பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு மனிதனை அது சுமந்து செல்கின்றது. அதனுடைய உடலில் எனும் எளிதில் வளையத்தக்க வெப்ப நீர்நிலைக் கருவி போன்ற அமைப்பு உள்ளது. அதனால் அதன் உடல் 42 டிகிரி வெப்பநிலையை அடைகின்ற வரை அதற்கு வியர்ப்பதில்லை. 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு 8 நாட்கள் உணவுஇ நீர் இன்றி ஒட்டகம் உயிர் வாழும்.
ஒட்டகம் ஒரு தடவை தண்ணீர் குடித்தால் தனது உடலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு சுமார் 137 லிட்டர் தண்ணீரைக் குடித்துக் கொள்கிறது. ஒட்டகம் குடிக்கின்ற தண்ணீர் அதன் உடலில் எங்கே சேமித்து வைக்கப்படுகின்றது? இந்தத் தண்ணீர் ஒட்டகத்தின் திமில்களில் தான் சேமித்து வைக்கப்படுவதாகப் பரவலாக நம்புகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல!
திமில்களில் இருப்பது சுமார் 40 கிலோ அளவிலான கொழுப்பாகும். இந்தக் கொழுப்பு, ஒட்டகத்தின் உடலில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கின்றது. வெப்பத்தின் தாக்கம் உள்ளே பாயாமல் காக்கும் அரணாகத் திகழ்கின்றது. இந்தக் கொழுப்பு - வளர்சிதை மாற்றம் அடைகின்ற போது, அதாவது உடலுக்குத் தேவையான சத்தாக மாறுகின்ற போது, அப்பொழுதும் அங்கு ஓர் அற்புதம் நிகழ்கின்றது.
அதன் ஒவ்வொரு கிராம் கொழுப்புக்கு ஈடாக ஒரு கிராம் தண்ணீரை ஒட்டகத்தின் உடல் பெறுகின்றது. ஒட்டகம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன் இந்த எதிர் வினையாக்கத்தை நிகழ்த்துகின்றது.
குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது. அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டுப் பாலூட்டும் மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஒட்டகத்தின் உடலில் 40மூ நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.
நீர்ச்சத்து வீணாவதை விட்டும் தடுக்கக்கூடிய வகையில் தான் ஒட்டகத்தின் குடலும், சிறுநீரகமும் மிக வலுவாக அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டகத்தின் சிறுநீர் மிகவும் அடர்த்தியானதாகும். இதன் அடர்த்தி கடல்நீரை விட அதிகமானது. அதன் சிறுநீர் மருந்துத் திரவம் அல்லது பழச்சாறு போன்று அமைந்திருக்கின்றது. ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் இருக்கின்றது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.
'உக்ல்' அல்லது 'உரைனா' குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறு நீரையும் பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறினார்கள். நூல்: புகாரி 233
நபி (ஸல்) அவர்கள் உரைனா கூட்டத்தினரை ஒட்டகத்தின் சிறுநீர் குடிக்கச் சொன்னதன் அறிவியல் உண்மையும் நமக்குப் புலனாகின்றது.
ஒட்டகம் ஓர் அனைத்துண்ணி ஆகும். சைவம், அசைவம் என அனைத்தையும் சாப்பிடுகின்ற கால்நடைப் பிராணி ஆகும்.
பெரும்பான்மையான பாலைவன உணவு உலர்ந்த, முள்ளடர்ந்த தாவர இனங்கள். எத்தகைய கூரிய முட்செடிகளையும் இழுத்து வளைத்து சாப்பிடக்கூடிய அளவுக்கு அதனுடைய உதடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜீரண உறுப்புக்களும் சவால்களைச் சந்திக்கின்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மாமிசம், எலும்பு, உப்பு, இனிப்பு என அனைத்து வகை உணவுப் பொருட்களிலும் ஒட்டகம் பாரபட்சம் காட்டுவது கிடையாது. தண்ணீரில் நல்ல தண்ணீர், உப்புத் தண்ணீர் என பேதம் கொள்வதில்லை.
பாலைவனங்களில் வீசுகின்ற பாலைவனப் புயல் ஒரு வித்தியாசமான புயலாகும். தூசியையும் மணல் துகள்களையும் மணற்பரப்பின் அடிப்பகுதியிலிருந்து அப்படியே வாரியிறைக்கும். கண் இமைகளை மூடவில்லை என்றால் கண்ணின் கருவிழிகளில் ஊடுறுவி பதம் பார்த்துவிடும். மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற பாலைவனப் புயலின்போது ஒட்டகம் தன் இமைகளை இறுக மூடிக் கொள்கிறது. அப்படியானால் பயணம் எப்படி என்று பயப்படத் தேவையில்லை. இமைகள் மூடினாலும் பார்வையை மறைப்பதில்லை. இமைகளின் தோல்கள் கண்ணாடிகள் போன்று ஒளி ஊடுறுவும் தன்மை கொண்டதாகும். அதனால் அவை கண்களை மூடிக் கொண்டு வெளியே பார்க்கும் சக்தி கொண்டவை. ஒட்டகத்தின் இந்தப் பார்வையிலும் அல்லாஹ்வின் அற்புதங்கள் ஒளிந்திருக்கின்றன.
ஒட்டகத்தின் உடலமைப்பு
ஒட்டகத்தின் உடல் மெல்லிய மயிர் தோலில் அமைந்துள்ளது. இந்தத் தோலமைப்பு ஒட்டகத்தைப் பகல் நேரத்தில் கரித்துப் பொசுக்குகின்ற சூரிய வெப்பக்கதிர்களின் பிரதிபலிப்பிலிருந்து காப்பதற்காகத் தான். அதே சமயம் இரவு நேரத்தில் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே போகும் போது அந்தக் குளிரின் கோர ஆட்டத்திலிருந்தும் இந்தத் தோலமைப்பு காக்கின்றது.
ஒட்டகம் பாலைவனத்தின் தரையில் படுக்கின்ற போது, தரைச் சூடு அதன் உடலில் தாவி, வாட்டி வதைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் உடல் அமைப்பில் சில குறிப்பிட்ட தோல் பகுதிகள் பல அடுக்குகளால் ஆகியிருக்கின்றது.
மனிதனின் பாதங்களின் அடிப்பகுதியில் தோலமைப்பு உடலின் இதர தோலை விட முற்றிலும் வேறுபாடானது. சற்று தடிமனாக அமைந்திருக்கின்றது. இந்தத் தடிமனான பாதப் பகுதி நடந்து, நடந்து காய்த்துப் போவதால் ஏற்பட்டதல்ல. பிறக்கும் போதே அப்படியே அமைந்துள்ளது.
இதுபோன்றே ஒட்டகமும் பிறக்கும் போதே அதன் தோல் பகுதி வெப்பம், குளிர் போன்றவற்றைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் தடிமனாக அமைந்துள்ளது.
மனிதன் பயணிக்கின்ற இந்த பாலைவனக் கப்பலில் தான் அல்லாஹ்வின் எத்தனை தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன.
அல்லாஹு அக்பர்! இது மிகப் பெரிய இறை ஏற்பாடாகும்.
ஒட்டகத்தின் உயிரணுக்கள்
பாலூட்டிகளின் இரத்த அணுக்கள் வட்ட வடிவமானவை! ஆனால் ஒட்டகத்தின் உயிரணுக்கள் முட்டை வடிவமானவை! நீர்ச்சத்து குறையும் போது அதன் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!
ஒட்டகம் அதிகமான தண்ணீர் பருகும் போது இந்த உயிரணுக்களில் தண்ணீர் ஊடுறுவுகின்ற போது அது பாதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படி ஓர் அமைப்பை ஆக்கியுள்ளான்.
மூக்கு துவாரத்தை மூடும் கதவுகள்
பாலைவனப் புயலின் போது பொடிப்பொடி மணல் துகள் மூக்கில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகஇ மூக்கை மூடக்கூடிய விஷேச மூடிகள் உள்ளன. அவற்றை வைத்து மூக்கு துவாரத்தை மூடிக் கொள்கின்றன.
நாசித்துவாரத்தைக் குளிரூட்டுவதற்காக இறைவனின் தனி ஏற்பாடும் நாசிப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த அலாதியான அற்புத ஏற்பாடு, ஒட்டகம் சுவாசிக்கின்ற மூச்சுக் காற்று மூக்கின் வழியே கடந்து சொல்லும் போது அதன் நீர்ச்சத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான்.
ஒட்டகத்தின் பாதங்கள்
இந்த ஒட்டகத்தின் பாதங்கள் மனிதர்கள் அணிகின்ற ஷூக்கள் போன்று தரைச் சூட்டின் தாக்குதலிலிருந்து அதைப் பாதுகாக்கின்றது. அதிக எடை கொண்ட பாரங்களை ஒட்டகம் சுமந்து செல்கின்ற போது பாலை மணலில் புதைந்து உள்வாங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பிரத்தியேக தொழில்நுட்பத்தில் அதன் பாதங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஒட்டகத்தின் ஒவ்வொரு உள், வெளி உறுப்புகளும் தனித்தனி அற்புதத்தைத் தாங்கி நிற்கின்றன.
இதனால் தான் அல்லாஹ், 'ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?'' (88:17) என்று கேட்கின்றான்.

நன்றி : ஏகத்துவம்
Monday, September 08, 2014
அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (வீடியோ)
Monday, September 08, 2014
No comments
Thursday, September 04, 2014
தடைப்பட்ட நீரை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தினர்
Thursday, September 04, 2014
No comments
கடந்த மூன்று நாட்களாக நமதூருக்கு வந்துக்கொண்டுயிருந்த ஆற்று நீர் நேற்று காலை 11.00 மணியில் இருந்து நின்றுவிட்டது இதை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் பகல் 2.00 மணிக்கு போரூராட்சி தலைவர் மற்றும் அதிரை இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு சில இடங்களில் ஏற்பட்ட உடைப்புகளை அடைத்தும் தண்ணீர் வரும் வழிகளில் உள்ள குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர் பிறகு இரவும் இந்த பணிகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஈடுபட்டனர்
Wednesday, September 03, 2014
ஹஜ் – உம்ரா கேள்வி பதில்
Wednesday, September 03, 2014
1 comment
ஹஜ்ஜுக்குரிய காலமான ஷவ்வால் மாதம் துவங்கியதையொட்டி, ஹாஜிகள் ஹஜ்ஜுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டனர். நோன்புப் பெருநாள் முடிந்த கையோடு ஹஜ் செல்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.
எனவே அவர்களுக்கும், இன்னும் ஹஜ்ஜைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைக்கும் அனைத்து வாசகர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த ஏகத்துவ இதழ் ஹஜ் - உம்ரா கேள்வி பதில் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது.
இந்தக் கேள்வி பதில் சிறப்பிதழ் உதயமாவதற்கு, ஃபிரான்ஸைச் சேர்ந்த உம்மு நஃபீஸ் என்ற சகோதரி ஒரு தூண்டுகோலாக இருந்தார்.
ஏகத்துவம் இதழில், 'தூதர் வழியில் தூய ஹஜ்' என்ற தலைப்பில் ஹஜ் சிறப்பிதழ் முன்பு வெளியானது. அதில் ஹஜ் தொடர்பான முழுமையான விளக்கங்கள் இடம்பெற்றன. அதைப் படித்துவிட்டு எழுந்த சந்தேகங்களை அவர் ஏகத்துவத்திற்கு அனுப்பி வைத்தார்.
அதற்கான பதில் அவருக்கு அப்போதைக்கு சுருக்கமாக எழுதி அனுப்பப்பட்டது. இப்போது அந்தக் கேள்விகளுக்கு முழு விளக்கங்களைத் தாங்கி, ஆதாரங்களுடன் இந்த இதழ் மலர்ந்திருக்கின்றது.
இந்தக் கேள்விகளுடன் ஹஜ், உம்ரா தொடர்பாக ஹஜ் பயிற்சி வகுப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆன்லைன் பிஜே இணைய தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் போன்றவையும் தொகுத்து அவற்றிற்கும் பதிலளிக்கப்பட்டுள்ளன.
இஹ்ராம்
கேள்வி: 1
துல்ஹஜ் மாதத்திற்கு முன்பே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் பலமுறை உபரியான உம்ராக்கள் செய்யலாமா? பல உம்ராக்கள் செய்யும் போது ஒவ்வொரு உம்ராவையும் முடித்தபிறகு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமா? அல்லது விடுபடாமலே தொடர்ந்து பல உம்ராக்கள் செய்யலாமா? இஹ்ராமிலிருந்து விடுபட்டு, மீண்டும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்றால் எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்?
ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர்.
இந்த வாதம் சில அடிப்படைகளைப் புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்களையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற நேரத்தில் செய்வதை மார்க்கம் தடை செய்யவில்லை.
ஒருவர் அவருக்கு வசதியான ஒருநாள் சனிக்கிழமை நோன்பு நோற்கிறார். இந்த நாளில் நபிகளார் நோன்பு நோற்றார்களா? இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்கக்கூடாது. காரணம் பொதுவாக நோன்பு வைக்கலாம் என்ற அனுமதியே இதற்குப் போதுமானது.
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)'' என்றார்கள்.
அவர் 'இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்கஇ 'இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், 'இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' எனக் கேட்க, 'இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், 'இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ 'இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர'' என்றார்கள்.
அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்' என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 46
கடமையான அமல்களில் ஒருவர் கூடுதலாக விரும்பி செய்யலாம் என்பதை 'நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர' என்ற நபிகளாரின் வாசகம் நமக்கு உணர்த்துகிறது.
இதைப் போன்று ஹஜ் உம்ரா பற்றி பேசும் வசனத்திலும் அல்லாஹ் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:158)
ஸஃபா, மர்வாவில் சுற்றுவது உம்ராவில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது தொடர்பாகப் பேசும் போது, 'நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்' என்று நன்மைகளை கூடுதலாகச் செய்ய விரும்புபவர் அதிகம் செய்யலாம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
இதைப் போன்று ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருதடவை செய்ய வேண்டிய கடமையாகும். அதை ஒருவர் விரும்பினால் கூடுதலாகவும் செய்யலாம் என்பதை நபிகளார் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் (1463)
எனவே ஒருவர் விரும்பினால் ஒரு பயணத்தில் கூடுதலாக உம்ரா செய்யலாம். ஆனால் கூடுதலாக உம்ரா செய்ய வேண்டுமென யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது.
உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் கட்டி விட்டால் அதுதான் உம்ராவின் துவக்கம் ஆகும். இதன் பின்னர் தவாஃப் செய்து, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்துகள் தொழுது, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஸயீ செய்து, முடியைக் களைந்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது. தலைமுடியை மழிப்பது அல்லது குறைப்பது தான் உம்ராவின் முடிவாகும்.
இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது கத்தரித்ததும் உம்ரா செய்பவர் அதிலிருந்து விடுபட்டு விடுகின்றார். இதன்பிறகும் அதே உம்ராவில் நீடித்தல் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.
ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.
வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் அவர், தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
நூல்: புகாரி 1529
ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது.
மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம் முறையிட்ட போது) எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.
நூல்: புகாரி 319
வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, 'உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்!'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1788
நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.
துல்ஹஜ் பிறை 1 வரை பல உம்ராக்கள் செய்ய விரும்பினால் மேற்கண்ட முறைப்படித் தான் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு உம்ராவிலிருந்து விடுபட்டு, மறு உம்ரா செய்ய முடியுமே தவிர முதலில் செய்த உம்ராவில் இருந்தவாறே அடுத்த உம்ராவைச் செய்ய முடியாது.
கேள்வி: 2
இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் கட்டவேண்டுமா? அல்லது இஹ்ராம் கட்டும் எல்லைக்கு வந்து, நிய்யத் சொல்லும் போது தான் கிப்லாவை முன்னோக்கி இருக்கவேண்டுமா?
இஹ்ராம் ஆடை அணியும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று ஹதீஸில் வரவில்லை. ஆனால் மீக்காத் எனப்படும் எல்லைக்கு வந்து தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் - புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள்.
(நூல்: பைஹகீ சுனனுல் குப்ரா 9258)
கேள்வி: 3
இஹ்ராமின் நிய்யத் 'லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்' என்று சேர்த்து சொல்லவேண்டுமா? 'லப்பைக்க உம்ரதன்' அல்லது 'அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன்' என்பது மட்டும் போதுமானதா?
கிரான் அடிப்படையில் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். தமத்துஃ முறையில் செய்வதாக இருந்தால் தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி 'நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்றார்கள். அதற்குத் தோழர்கள் 'நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்வது?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்இ 'நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால் அதை - (குர்பானிப் பிராணியை)... அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது'' என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 1568
நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ் செய்யப் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஹஜ்ஜை மட்டுமே மனதில் எண்ணியிருந்தனர். பின்னர் அவர்கள் மக்கா சென்றதும் ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. அப்போது அவர்கள் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துக் கொண்டனர். இந்த அடிப்படையில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து கிரான் அடிப்படையில் செய்பவர்கள் செய்பவர்கள், 'லப்பைக்கல்லாஹும்ம பி ஹஜ்ஜத்தின் வ உம்ரத்தின்' என்றோ, 'லப்பைக்கல்லாஹும்ம பி உம்ரத்தன் வ ஹஜ்ஜத்தன்' என்றோ சொல்லிக் கொள்ள வேண்டும்.
தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ரா செய்யும் போது, 'லப்பைக்கல்லாஹும்ம உம்ரத்தன்' என்றும் பிறகு ஹஜ் செய்யும் போது, 'லப்பைக்கல்லாஹும்ம ஹஜ்ஜத்தன்' என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட இந்த வார்த்தைகளைத் தவிர்த்து, 'நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு அதை எளிதாக்கி, ஏற்றுக் கொள்வாயாக' (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) என்று சிலர் கூறுகின்றர். இது பித்அத்தாகும்.
கேள்வி: 4
இஹ்ராம் அணிந்த பின் தொழ வேண்டுமா?
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது எந்தத் தொழுகையும் தொழவில்லை. ஆனால் அவர்களின் கடமையான தொழுகை இஹ்ராமுக்குப் பின்னால் அமைந்தது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ('விடைபெறும்' ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) 'துல்ஹுலைஃபா'வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, 'பைதாஉ' எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 2184
இதுபோன்று தொழுகை நேரங்களுக்குப் பிறகு நம்முடைய இஹ்ராம் யதார்த்தமாக அமைந்து கொண்டால் அவ்வாறு தொழுது கொள்ளலாம். ஆனால் அதே சமயம் இப்படி தொழுகை நேரத்திற்குப் பின்னர் தான் அமைக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி: 5
நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லிஇ தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா?
நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு தொழ வேண்டும் என்ற உத்தரவு வந்தது.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து 'இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!'' எனக் கட்டளையிட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற நான் கேட்டேன்.
நூல்: புகாரி 1534
இதன்படி துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.
கேள்வி: 6
இஹ்ராமுக்கு முன் நகம், முடிகளைக் களைந்து கொள்ள வேண்டுமா? துல்ஹஜ் பிறை பிறந்த பிறகு ஊரிலிருந்து புறப்படுபவர்கள் (குர்பானிக்காக) பிறை 1க்குப் பிறகு நகம்இ முடி களையக் கூடாதல்லவா?
இஹ்ராமுக்கு முந்தி நகம், முடிகளைக் களைய வேண்டும் என்று எந்த ஹதீசும் வரவில்லை. ஆனால் இஹ்ராமுக்குப் பின்னால் இவற்றைக் களைகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்பு களைந்து கொள்ள வேண்டும். துல்ஹஜ் பிறை 1க்குப் பிறகு புறப்பட நேர்ந்தால் அப்போதும் முடி, நகம் களைந்து கொள்ளலாம். குர்பானிக்காக முடி, நகம் களையக்கூடாது என்பது ஹாஜி அல்லாதவர்களுக்குரிய சட்டமாகும். ஹாஜிகளுக்கு இஹ்ராம் கட்டிய பிறகு தான் இவை தடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: 5
ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு சொல்லக்கூடிய 'இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்' என்று ஹதீஸ் உள்ளதா?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, 'நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!'' என்றார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாüயாகவே இருக்கிறேன்'' என்று சொன்னார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, 'இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்' என்று சொல்லிவிடு!'' எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 5089
கேள்வி: 7
இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் பெண்களுக்கும் அனுமதி உண்டா?
பெண்கள் நறுமணம் போடக்கூடாது என்று தனியாக எந்தத் தடையும் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு நறுமணம் பூசிக் கொண்டு, இஹ்ராமுக்குப் பின்பு வரை நீடிக்கச் செய்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கüன் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தே இருந்தார்கள்.
நூல்: புகாரி 271
கேள்வி: 8
வாசனையுள்ள ஹேர் ஆயில், வலி தைலங்கள், தலைவலிக்கு போட்டுக் கொள்ளும் ஒடுக்கலான், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவது என்பதில் அடங்குமா? போட்டவுடன் கழுவிவிடும் வகையிலான சோப்பு, ஷாம்பூ வகைகள் வாசனையாக இருந்தால் குற்றமா? அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்ததா?
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, 'அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! அவரது தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்), தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1839
இந்த ஹதீஸின் அடிப்படையில் இஹ்ராமின் போது நறுமணம் பூசக்கூடாது. ஆனால் கண்வலி, காது வலிக்கு மருந்து இட்டுக் கொள்ளலாம்.
நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் 'அல்மலல்' எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் 'அர்ரவ்ஹா' எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகி விட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், '(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) 'இஹ்ராம்' கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது, இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்'' என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 2089
இந்த அடிப்படையில் தலைவலிக்குத் தைலம் தடவிக் கொள்ளலாம். தைலத்தில் நறுமணம் கலந்திருந்தாலும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை. ஆனால் குளிக்கும் போது பயன்படுத்துகின்ற ஷாம்பு, வாசனை சோப்பு, தலைக்குத் தடவும் எண்ணெய் போன்றவை மருந்து வகையில் அடங்காது. அவற்றில் நறுமணம் கலந்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
கேள்வி: 9
'ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!' என்ற நபிமொழியின்படி, கட் ஷூ அணிந்து கொள்ளலாமா? குளிர் அதிகமாக உள்ள பகுதிகளில் செருப்புக்குப் பதிலாக அதையே இஹ்ராமிலும் அணிந்துக் கொள்ளலாமா?
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 'ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால்இ அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1838
நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் காலுறைகளை வெட்டி அணிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் பின்வரும் ஹதீஸில் வெட்ட வேண்டும் என்று கூறவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தும்போது, 'யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்!'' என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
நூல்: புகாரி 1841
இது நபி (ஸல்) அவர்கள் அரஃபா தினத்தில் கூறியதாகும். எனவே, ஆரம்ப நிலையில் காலுறைகளை வெட்டி அணிய வேண்டும் என்று கூறியிருந்தாலும், இறுதியாக அந்த நிபந்தனையைக் கூறாமல் காலுறை அணிந்து கொள்ளட்டும் என்று பொதுவாகக் கூறுவதால் இந்த அனுமதியைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் ஷூ அணிவதில் தவறில்லை.
கேள்வி: 10
காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா? அல்லது பெண்கள் காலுறை மற்றும் உள்ளாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள், அதுபோல் எதுவும் நபிவழியில் சொல்லப்பட்டுள்ளதா?
செருப்பு கிடைக்காதவர் காலுறை அணிந்து கொள்ளலாம் என்ற சட்டம் ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் காலுறை, உள்ளாடைகள் அணிய வேண்டும் என்றோ, அணியக் கூடாது என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை. பெண்கள் முகத்திரையும், கையுறையும் அணியக் கூடாது என்று மட்டும் தடை உள்ளது.
கேள்வி: 11
பெண்கள் இஹ்ராம் சமயத்தில் முகமும் முன் கைகளும் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றால் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா? உடல் ஆரோக்கியம் பேணிக்கொள்ள ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி இங்குள்ள ஹஜ் சர்வீஸில் அறிவுறுத்துகிறார்கள். பெண்கள் முகம் மூடக்கூடாது என்றால் ஃபேஸ் மாஸ்க் இஹ்ராமில் ஆண், பெண் இருவருக்கும் கூடுமா?
பெண்கள் பொதுவாக முகம், கை, கால்கள் மறைக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மார்க்கத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முகத்தை மூடுவதற்குத் தடை விதிக்கின்றார்கள்.
'இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1838
ஃபேஸ் மாஸ்க் போன்ற முகத்தை மறைக்கும் சாதனங்களைக் குறித்தே நபி (ஸல்) அவர்கள் இந்தத் தடையை விதித்துள்ளார்கள் என்று இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
கேள்வி: 12
பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் பெண்கள் தலைசீவுவதும் கூடாது என்கிறார்கள். இது சரியா? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் இஹ்ராமைக் களைவதற்காக 'உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு, உம்ராவை விட்டுவிடு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, இஹ்ராமில் இருக்கும்போது தலையை அவிழ்த்து சீவக்கூடாது என்ற கருத்தையும் சொல்லுமா?
இஹ்ராமின் போது ஆண்களும், பெண்களும் செய்யக்கூடாத அல்லது தடை செய்யப்பட்ட காரியங்களை குர்ஆனும் ஹதீசும் தெளிவுபடுத்தி விட்டன. இதில் தலை வாருதல் இடம்பெறவில்லை. இதிலிருந்தே தலை வாருவதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டி ருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (அதனால் என்னால் முதலில் எண்ணியிருந்த உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபி (ஸல்) அவர்கüடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!'' என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன்.
நூல்: புகாரி 317
இந்த ஹதீஸ், இஹ்ராமின் போது ஆண்களோ, பெண்களோ தலை வாரிக்கொள்வதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும். அத்துடன் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டாலும் அவர்கள் இஹ்ராமில் தான் இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
தவாஃபைத் தவிர மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்பது ஆயிஷா (ரலி) அவர்கள் இஹ்ராமில் இருக்கின்றார்கள் என்பதற்கு சரியான சான்றாகும்.
கேள்வி: 13
இஹ்ராம் ஆடையில் ஆண்கள் தலை, கால்களை மறைக்கக்கூடாது என்பதால் குளிர் மற்றும் உறங்கும் சமயங்களிலும் தலை, கால்களை மூடும் விதமாக போர்வை போர்த்தலாமா? தலை, கால்களை விட்டுவிட்டு உடம்பில் மட்டும்தான் போர்த்திக் கொள்ள வேண்டுமா?
ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்யும் போது அணிந்திருக்கும் இஹ்ராம் ஆடையில் தான் தலையை மறைக்கக் கூடாது. உறங்கும் போது போர்வை போர்த்துதல் என்பது ஆடையில் சேராது. குளிருக்காக நன்கு மூடப்பட்ட ஓர் அறைக்குள் போய் உறங்குவது எப்படியோ அப்படித் தான் போர்வை போர்த்திக் கொண்டு உறங்குவதும் ஆகும். எனவே உறங்கும் போது தலையை மறைத்து போர்வை போர்த்துவதில் தவறில்லை.
கேள்வி: 14
ஆண்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் முன்னர் குளிக்கும் தேவை ஏற்பட்டால், மூட்டப்பட்ட கைலியை (ஈரத்திற்காக) அணிந்துக் கொண்டு குளிக்கலாமா? மூட்டப்படாத வேட்டி அணிந்து குளிப்பதுதான் சிறந்ததா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் போது அந்த உத்தரவை நம்மால் இயன்ற அளவுக்குப் பின்பற்றுவது தான் சரியான செயலாகும். உடுத்திக் குளிப்பதற்கும், மாற்றுக்காகவும் தையல் இல்லாத துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொள்வது என்பது பெரிய சிரமமான காரியமல்ல. நபிவழியை முடிந்த அளவுக்குக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
கேள்வி: 15
வழக்கமாகப் போடும் கடுகளவு மூக்குத்தி மற்றும் மெல்லிய குச்சியளவிலான மோதிரம் போன்றவற்றை இஹ்ராமின்போது அணியலாமா? (மற்ற நேரங்களில் இதுபோன்ற சிறிய அளவுகளில் இருந்தால் இவை வெளியில் தெரியலாமா?)
இஹ்ராமின் போது அணியத் தடை செய்யப்பட்டவைகளில் இவை இடம்பெறவில்லை. ஆனால் பொதுவாக அலங்காரங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண்கள் நகைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.
அல்குர்ஆன் 24:31
கேள்வி: 16
இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா?
முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!
அல்குர்ஆன் 2:197
எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, மார்க்க ரீதியிலான வாதங்கள் செய்வது விதண்டாவாதத்தில் வராது.
கேள்வி: 17
ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா? ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது.
பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்குக் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது.
'ஹஸ்அம்' கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும் போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டது'' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அவருக்காக நீ ஹஜ் செய்'' என்று அவரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: புகாரி 1513, 1854, 1855, 4399, 6228
உயிருடன் இருப்பவர் ஹஜ் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம். அது அவர் சார்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.
'என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா?'' ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உன் தாய் மீது கடன் இருந்தால் நீதானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிக தகுதி உள்ளது'' என்றார்கள்.
நூல்: புகாரி 1582, 7315
அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதில் இருந்து கடமையான ஹஜ்ஜாக இருந்தால் தான் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.
உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது.
ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம்.
அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது'' என்றேன். 'உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும் உம்ராவும் செய்துகொள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி (852)
பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவைச் செய்யும் போது மட்டும் தான் இந்த அனுமதியாகும்.
இந்த ஹதீஸைத் தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது.
ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. தனித்து உம்ரா செய்ய வேண்டும் என்பது நம்மீது கட்டாயக் கடமையும் இல்லை.
ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஒரு மனிதர் 'லப்பைக்க அன் ஷுப்ருமா'' (ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஷுப்ருமா என்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். 'உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் 'இல்லை'' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894
பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
கேள்வி: 18
ஆண்களுக்கான இஹ்ராம் ஆடையில் எந்தத் தையலும் இல்லாமல், ஓரங்களில் ஊக்கு மாட்டிக் கொள்வதற்கு பதிலாக ப்ரெஸ் பட்டன் கொடுத்து கடைகளில் விற்கிறார்கள். அதைப் பயன்படுத்தலாமா?
பயன்படுத்திக் கொள்ளலாம். காரணம் அது தடை செய்யப்பட்டவைகளில் இல்லை.
கேள்வி: 19
ஆண்கள் இஹ்ராமின் போது ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா?
ஜட்டி என்பது தையல் ஆடை என்பதால் அதை இஹ்ராமின் போது அணியக்கூடாது. தையல் இல்லாத வகையில் லங்கோடு போன்ற துணியால் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம்.
தல்பியா
கேள்வி: 1
தல்பியாவை ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா? அதேபோல், ஒருவருக்கொருவர் குழம்பாமல் இருப்பதற்காக, தனியாக ஒருவர் சொல்லிக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சொல்வது நபிவழிக்கு மாற்றமானதா?
அவரவர் தல்பியா சொன்னதாகத் தான் ஹதீஸில் வருகிறதே தவிர ஒருவர் சொல்லஇ மற்றவர்கள் சொன்னதாக வரவில்லை.
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் சொல்வது குறித்து, 'நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், 'தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை'' என்று பதிலüத்தார்கள்.
நூல்: புகாரி 970
இந்த ஹதீஸின் அடிப்படையில் அவரவர் சொல்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள். ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் சொல்வது நபிவழிக்கு மாற்றமானதாகும். அவரவர் சொல்லும் போது அது கூட்டாகச் சொல்வதாகத் தான் அமையும். எனவே இது தவறில்லை.
கேள்வி: 2
கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்த வேண்டுமா?
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் - புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்' என்றும் கூறுவார்கள்.
நூல்: புகாரி 1573
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹரம் எல்லைக்கு வந்ததும் தக்பீரை நிறுத்த வேண்டும் என்பதே சரி!
ஹரமில் நுழைதல் ரூயஅp; தொழுதல்
கேள்வி: 1
ஹரமில் 'பாபு பனீ ஷைபா' வழியாக நுழைவது சுன்னத் என்பதை அறிந்திருக்கிறேன். சிலர் 'பாபுஸ்ஸலாம்' வழியாக நுழைவது சுன்னத் என்கிறார்கள். 'பாபு பனீ ஷைபா' என்பதும் 'பாபுஸ்ஸலாம்' என்பதும் ஒன்றா?
இரண்டு வாசல்களும் ஒன்று தான். நபி (ஸல்) அவர்கள் இந்த வாசல் வழியாக நுழைந்திருக்கிறார்கள். இது ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் செல்வதற்கு வசதியான வாசல். காரணம் ஹஜருல் அஸ்வத் அமைந்த கஅபாவின் மூலையில் இருந்து தான் ஒருவர் தனது தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். இந்த வாசல் மகாமு இப்ராஹீம் அமைந்துள்ள கஅபாவின் பகுதியை முன்னோக்கியிருக்கும்.
கேள்வி: 2
ஹரம் ஷரீஃபில் நுழைந்த பிறகு 'தஹிய்யதுல் மஸ்ஜித்' தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா? அல்லது முதல் அமலே தவாஃபில் தான் ஆரம்பிக்க வேண்டுமா?
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் 'ஹஜருல் அஸ்வத்' உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 2334, 1603
நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாம் தவாஃபைத் துவக்குவது தான் நபிவழியாகும்.
கேள்வி: 3
ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா?
மஸ்ஜிதுல் ஹரமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1190
ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச் சிறந்தது என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்னத் அஹ்மத் 14167
அஹ்மதில் இடம் பெறும் இந்த ஹதீஸ் புகாரியிலும் இதர நூற்களிலும் இடம்பெறும் ஹதீசுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. இந்த ஹதீஸ்களில் தொழுகை என்று தான் இருக்கின்றது. ஒரு லட்சம் நன்மை என்று இல்லை.
மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு ரக்அத் தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு லட்சம் ரக்அத் தொழும் நன்மையைப் பெற்றுத் தருகின்றது. அங்கு இரண்டு ரக்அத் தொழுவது மற்ற பள்ளிகளில் இரண்டு லட்சம் ரக்அத் தொழுவதற்குச் சமமாகும்.
கேள்வி: 4
தொழுவதற்கு தடை செய்யப்பட்ட 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு இல்லை என்பது சரியா? மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்கும் அந்த விதிவிலக்கு உண்டா?
அப்து மனாஃபின் சந்ததியினரே! இந்த ஆலயத்தில் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்காதீர்கள். இரவு பகல் எந்த நேரமும் தொழக் கூடிய எவரையும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூற்கள்: திர்மிதி 795இ அபூதாவூத் 1618, நஸயீ 2875
தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரங்களிலிருந்து மஸ்ஜிதுல் ஹராமுக்கு மட்டும் இந்த ஹதீஸ் விதிவிலக்கு அளிக்கின்றது. அங்கு எந்த நேரத்திலும் தொழுவதற்கு அனுமதியுள்ளது. இந்த விதிவிலக்கு மஸ்ஜிதுந்நபவீக்குப் பொருந்தாது.
கேள்வி: 5
மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பது சுன்னத் எனும்போது, நம்முடைய ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால், ஹோட்டலில் குளித்துவிட்டு ஹரமுக்கு வரலாமா? மக்காவுக்கு வெளியில் குளித்துவிட்டு வருவது மட்டும்தான் சுன்னத்தா?
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் - புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்' என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஉ,
நூல்: புகாரி 1573
இந்த ஹதீஸ், மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என்று தெரிவிக்கின்றது. மக்கா எல்லைக்குள் தான் தங்குமிடம் அமைகின்றது என்றால் வந்த பின் குளித்துக் கொள்ளலாம்.
தவாஃப்
கேள்வி: 1
தவாஃபுக்கு உளூ அவசியமா?
ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஅபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள்.
கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
'முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள்'' என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்தார்கள்.
(புகாரி 1615, 1642)
இதைத் தமது கருத்தை நிலைநாட்டும் ஆதாரமாக எடுத்து வைக்கிறனர். இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதம் பலவீனமானதாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அந்தக் காரியம் கட்டாயக் கடமை என்ற பொருளைத் தராது. அவர்களின் காரியங்களில் கடமையானவைகளும் உள்ளன. விரும்பத்தக்கவைகளும் உள்ளன. அனுமதிக்கப்பட்டவைகளும் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறிய போது அவருக்குப் பதில் சொல்லாமல் தயம்மும் செய்த பின்னர் தான் பதில் ஸலாம் கூறியுள்ளார்கள்.
(புகாரி 337)
இதை ஆதாரமாக வைத்து ஸலாமுக்குப் பதில் கூற உளூ அவசியம் என்று முடிவு செய்ய முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த காரியங்களில் எவை குறித்து வலியுறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்களோ அவை மட்டும் தான் கட்டாயமானவையாகும்.
அவர்கள் கட்டளை பிறப்பிக்காமல் வணக்க வழிபாடுகள் தொடர்பான ஒன்றைச் செய்தால் அவை விரும்பத்தக்கவை என்று தான் கருத வேண்டும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற முடிவுக்கு வர முடியாது.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீ தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்'' என்று கூறினார்கள்.
இது புகாரியில் 305, 1650 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் இதையும் தமது கருத்துக்குரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
இந்த ஹதீஸிலும் இவர்களின் வாதத்தை நிரூபிக்கும் கருத்து இல்லை.
மாதவிடாய் நின்று தூய்மையாகும் வரை தவாஃப் செய்யக் கூடாது என்பது தான் இதிலிருந்து பெறப்படும் கருத்தாகும். உளூவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதைப் போல் தவாஃபும் செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இதிலிருந்து விளங்குகிறதே தவிர மாதவிடாய் அல்லாத போது பெண்கள் உளூச் செய்யாமல் தவாஃப் செய்யக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து பெற முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்ததால் அது விரும்பத்தக்கது என்று கூற முடியும்.
ஆயினும் தவாஃபுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதால் தவாஃபுக்கு முன்பே உளூச் செய்து கொள்வது நமது சிரமத்தைக் குறைக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பேணிக் கொண்ட நன்மையும் கிடைக்கும்.
கேள்வி: 2
தவாஃபை ஆரம்பிக்கும்போது 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது சரியா?
பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகத் தான் பைஹகீ எனும் நூலில் காணப்படுகின்றது. எனவே இது நபி வழியல்ல. தவாஃபின் போது ஹஜ்ருல் அஸ்வதுக்கு அருகில் வருகின்ற ஒவ்வொரு தடவையும் அதை நோக்கி சைகை செய்து தக்பீரும் சொல்வது தான் நபிவழியாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1613
கேள்வி: 3
தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய முதல் 3 சுற்றுக்களிலும் 'ரமல்' என்று சொல்லப்படும் புஜத்தை குலுக்கவேண்டும் என்று சொல்வது சரியா? 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா?
இது ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் தான். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு இந்திருக்குமானால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருப்பார்கள்.
கேள்வி: 4
உபரியான தவாஃப்கள் செய்யும் போது ஆண்கள் வலது புஜம் தெரியுமாறு இஹ்ராமின் மேலாடையை அணிந்து கொள்ள வேண்டுமா?
நபி (ஸல்) அவர்கள் வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா
நூல்: திர்மிதி 787, அபூதாவூத் 1607
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வலது புஜம் தெரியுமாறு ஆடையணிந்தது தவாஃபுல் குதூமில் மட்டும் தான். காரணம், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலால் ஆகிவிடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
(அபூதாவூத் 1708)
ஒவ்வொருவரும் தையல் ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்றாகி விடுகின்றது. தவாஃபுல் விதாவிலும் இதுபோன்றே ஆடை அணிவதால், வலது புஜம் திறந்து இடது புஜத்தை மூடுவது தவாஃபுல் குதூமில் மட்டும் தான் என்பதைத் தெளிவாக விளங்கலாம். மற்ற உபரியான தவாஃபுகளில் இந்த முறை இருப்பதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
கேள்வி: 5
தவாஃபின்போது உளூ அவசியமில்லை என்றாலும் அது சுன்னத் என்ற அடிப்படையில் உளூ செய்கிறோம். தவாஃபை முடிப்பதற்குள் உளூ முறிந்து அந்த சுன்னத்தைத் தொடர விரும்பினாலோ, அவசரமான இயற்கைத் தேவைகளினால் பாதியில் சென்றுவிட்டாலோ, ஒரே நேரத்தில் 7 சுற்றுக்களையும் சுற்ற இயலாமல் போனாலோ இடையில் களைப்பாறிவிட்டு பிறகு மீதி சுற்றுகளை அந்த பாதியிலிருந்தே தொடரலாமா? அதுபோல் ஸயீயிலும் பாதியில் நிறுத்தி தொடரலாமா?
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
அல்குர்ஆன் 2:286
இந்த வசனத்தின் அடிப்படையில் எவரையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. இயற்கைத் தேவை அல்லது இயலாமை போன்ற காரணங்களால் தவாஃபை இடையில் முறித்து விட்டால், விடுபட்ட சுற்றிலிருந்து மீண்டும் தொடங்கிக் கொள்ளலாம்.
உபரியான தவாஃப் என்றால் சுற்றுக்களைத் தொடராமல் விட்டாலும் அதனால் பாதிப்பு இல்லை. ஆனால் உம்ரா, ஹஜ் ஆகியவற்றின் தவாஃபுகளைத் தொடராமல் விட்டால் அது முழுமையடையாது. எனவே விட்ட இடத்திலிருந்து மீண்டும் சுற்றுக்களைத் தொடர்ந்து முழுமைப்படுத்த வேண்டும். ஸயீயிலும் இவ்வாறு தான்.
கேள்வி: 6
ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிட முடியாதபட்சத்தில், அதை நோக்கி கையை நீட்டி 'அல்லாஹு அக்பர்' என சொல்லும்போது சைகைக்காக நீட்டிய கையை முத்தமிட்டுக் கொள்ளலாமா? ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி கையை நீட்டி தக்பீர் சொல்லிய பிறகு 'அல்லாஹும்ம ஈமானம் பிக, வ தஸ்தீகம் பிகிதாபிக....' என்பதுபோல் ஆரம்பிக்கும் துஆக்களுக்கு ஆதாரம் உள்ளதா?
இப்னு உமர் (ரலி) அவர்கள், 'நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்!'' எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1611
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள்.
நூல்: புகாரி 1612, 1613, 5293
ஹஜ் அஸ்வதை கைகளால் தொட்டு, அந்தக் கையை முத்தமிடுவது, வாயால் முத்தமிடுவது போன்றவை தான் ஹதீஸ்களில் இடம்பெறுகின்றது. இதற்கு இயலாவிட்டால் அதை நோக்கி சைகை செய்வதற்கு ஆதாரம் உள்ளது.
சைகை செய்த கையை முத்தமிட்டதாக ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் இல்லை.
ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடுவதற்காகவோ, அல்லது சைகை செய்வதற்காகவோ பிரத்தியேகமான பிரார்த்தனை எதுவும் ஹதீஸ்களில் இல்லை.
கேள்வி: 7
நேரடியாக முத்தமிட வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் தக்பீர் சொல்லித் தான் முத்தமிடவேண்டுமா? சைகை செய்வதற்கு மட்டும்தான் தக்பீரா? இடது அல்லது வலது எந்த கையால் வேண்டுமானாலும் சைகை செய்துக் கொள்ளலாமா?
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1613
ஹஜ்ருல் அஸ்வதுக்கு வரும் போதெல்லாம் தக்பீர் சொல்ல வேண்டும். நேரடியாக முத்தமிட வாய்ப்புக் கிடைத்தாலும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும் போது தக்பீர் சொல்வது நபிவழியாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும்போதும், தலைவாரும்போதும், செருப்பணியும்போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள்அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.
நூல்: புகாரி 426
நபி (ஸல்) அவர்கள் அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையால் செய்வதையே விரும்புவார்கள். எனவே வலது கையைக் கொண்டு சைகை செய்வதே சிறந்ததாகும்.
கேள்வி: 8
'ருக்னுல் யமானியை முத்தமிடக்கூடாது; கையால் தொட மட்டுமே செய்ய வேண்டும்' என்பது சரியா? 'ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது சரியா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் 'யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 166, 1609
இந்த ஹதீஸில் முத்தமிட்டதாகக் கூறப்படவில்லை. தொடுவது மட்டும் தான் கூறப்படுகின்றது.
ருக்னுல் யமானியை முத்தமிட்டதாக நாம் தேடிய வரையில் எந்த ஹதீசும் இல்லை. ருக்னுல் யமானியை கையால் தொடுவது தான் நபிவழியாகும்.
கேள்வி: 9
ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா?
ருக்னுல் யமானியை கையால் தொடுவது நபிவழியாகும். சைகை செய்வது தொடர்பாக ஹதீஸ்களில் காண முடியவில்லை.
கேள்வி: 10
தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு, ஸயீ செய்வதற்கு முன்னர் மீண்டும் வந்து ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடச் செல்லும் போது அதைத் தொட இயலாவிட்டால், அப்போதும் சைகை செய்து கொள்ளலாமா?
அந்த சமயத்தில் சைகை செய்வது பற்றி ஹதீஸில் கூறப்படவில்லை.
மகாமு இப்ராஹீமில்...
கேள்வி: 1
தவாஃபுக்கு பிறகு 'மகாமு இப்ராஹீமி'ல் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா? அல்லது துஆ செய்யாமல் நேரடியாக ஸயீ செய்ய செல்ல வேண்டுமா? 'மகாமு இப்ராஹீமி'ல் எப்போது தொழுதாலும் துஆ செய்யவேண்டுமா?
மகாமு இப்ராஹீமில் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததாக ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை. முஸ்லிம் (2137) அறிவிப்பவின்படி, அங்கு தொழுதுவிட்டு ஜம்ஜம் நீரைப் பருகுதல், தலைக்கு ஊற்றுதல், ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல் தவிர்த்து வேறெதுவும் வரவில்லை. எனவே இவற்றை முடித்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்யச் செல்ல வேண்டும்.
கேள்வி: 2
மகாமு இப்ராஹீமில் 2 ரக்அத் தொழுகைக்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா? பெண்கள் தலை முக்காட்டுக்கு மேல் சிறிது ஊற்றிக் கொள்ளலாமா?
நேரடியாகவோ, அல்லது முக்காடு வழியாகவோ தலையில் ஊற்றிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள்.
(நூல்: அஹ்மத் 14707)
கேள்வி: 3
ஜம்ஜம் நீர் அருந்தும் முன்போ அல்லது அருந்தி முடித்த பிறகோ துஆ செய்வது சுன்னத்தா? பிரத்யேக துஆ எதுவும் உள்ளதா?
இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில் துஆச் செய்ததாகவும் நபிவழியில் ஆதாரம் இல்லை.
ஸயீ செய்தல்
கேள்வி: 1
ஸஃபா, மர்வாவில் ஸயீ ஆரம்பிக்கும்போது, 'இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்' என்ற வசனத்தை ஓதிய பிறகு, 'அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்' என்று கூறுவதன் அரபி வாசகத்தைத் தரவும்.
அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி
கேள்வி: 2
ஸஃபா மர்வா மீது தற்போது ஏறமுடியாத வண்ணம் கேட் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதன் அடிவாரத்திலேயே நின்று (சுன்னத்தாக சொல்லப்பட்டவற்றை) கிப்லாவை முன்னோக்கி ஓதிக் கொள்ளலாமா? 3 முறை ஓதும்போது அவற்றுக்கிடையே நாம் கேட்கும் விருப்ப துஆவை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீட்டித்து கேட்கலாமா?
ஸஃபா மர்வாவின் அடிவாரத்திலேயே நின்று ஓதிக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விருப்ப துஆ கேட்கலாம்.
கேள்வி: 3
ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)
தோள்களைக் குலுக்க வேண்டும் என்றால் சற்று விரைந்து நடக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். மற்றபடி பெண்களுக்கென்று இதில் தனிச் சட்டம் இல்லை.
கேள்வி: 4
பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஆண்களும், பெண்களும் 'ரப்பிக்ஃபிர் வர்ஹம், வதாவஜு அம்மா தஃலமு, இன்னக அன்தல் அஅஜ்ஜுல் அக்ரம்' என்ற துஆ ஓதவேண்டும் என்பது ஆதாரமானதா?
இல்லை.
கேள்வி: 5
உபரியான தவாஃபைப் போன்று உபரியான சயீ மட்டும் செய்ய ஆதாரம் உள்ளதா?
இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கேள்வி: 6
சயீ செய்யும்போது ஸஃபாஇ மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா?
நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி என்றில்லாமல் சாதாரணமாக ஏதேனும் திக்ருகளை ஓதிக் கொண்டு சென்றால் தவறில்லை.
தலை மழித்தல்
கேள்வி: 1
1) உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா? தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்கவேண்டுமா?
ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும், ஹஜ் காலத்தில் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுபவர்களும் மழிப்பது தான் சிறந்தது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள்,'இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!'' எனக் கூறியதும் தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்'' என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள்,'இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்....'' என்றனர். நபி (ஸல்) அவர்கள் 'முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1727
தமத்துஃ, கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அப்போது அவர்கள் முடியைக் குறைப்பது சுன்னத்தாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி 'நீங்கள் தவாஃபையும், ஸஃபா,மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்க்காக இஹ்ராம் கட்டி இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்றார்கள்.
(நூல்: புகாரி 1568)
இதன் பின்னர் ஹஜ்ஜை முடித்ததும் மேற்கண்ட 1727 ஹதீஸின் அடிப்படையில் முழுமையாக மழித்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.
அல்குர்ஆன் 48:27
முடியைக் குறைத்தல் என்று தான் திருக்குர்ஆன் வசனத்திலும், ஹதீஸிலும் சொல்லப்படுகின்றது. முடியைக் குறைத்தல் என்றால், ஆண்களைப் பொறுத்த வரை முடி வெட்டும் போது எப்படிக் குறைப்பார்களோ அதுபோன்று குறைத்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கு மழித்தல் கிடையாது; முடியைக் குறைத்தல் மட்டுமே உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் சிறிதளவு கத்தரித்துக் கொள்ளுதல் போதுமானது.
தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு முடியைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 1694
கேள்வி: 2
ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா? உடனே தான் குறைக்க வேண்டுமா?
உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத் தாமதமாகும்.
கேள்வி: 3
பெண்கள் இஹ்ராமைக் களையும் முன் ஒரு விரல் நுனியளவு மட்டுமே முடியை வெட்ட வேண்டும் என்று அளவு சொல்கிறார்களே, இது சரியா?
குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே ஹதீஸில் வருகின்றதே தவிர எவ்வளவு குறைக்க வேண்டும் என்று வரவில்லை.
பிறை 8, 9 தொடர்பான கேள்விகள்
கேள்வி: 1
பிறை 7ல் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்தவேண்டுமா? ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததில் அங்கு அவ்வாறு நடத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.
பிறை 7ல் இமாம் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லை. பிறை 9ல் அரஃபாவில் இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.
சூரியன் உச்சி சாய்ந்ததும் 'கஸ்வா' எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் ('உரனா') பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2137)
கேள்வி: 2
எட்டாம் நாள் காலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு குளித்து இஹ்ராம் அணிந்துக் கொண்டுஇ லுஹரை மினாவில் தொழுவது போன்ற நேரத்தில் புறப்பட்டால் போதுமா? முற்கூட்டியே செல்லவேண்டுமா?
இங்கு சில குழுவினர் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மினாவுக்குப் புறப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் 8ஆம் நாள் லுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் மறுநாள் ஃபஜ்ரு ஆகியவற்றை மினாவில் தொழுகிறார்கள். அப்படியானால் 8ஆம் நாளின் ஃபஜ்ரை மக்காவில்தானே தொழுதிருப்பார்கள்? நாம் அந்தக் குழுவினருடன் சேராமல் தனியாகச் செல்ல வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நாமும் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின் அவர்களோடு சேர்ந்து சென்றால் தவறாகுமா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2137)
நபி (ஸல்) அவர்களை இந்த விஷயத்தில் அப்படியே பின்பற்ற வேண்டும். லுஹரை மினாவில் தொழும் வகையில் புறப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் முன் பின்னாகப் புறப்படுவது நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை.
கேள்வி: 3
அரஃபாவுக்கு முந்திய அன்று (8ஆம் நாள் முடிந்த) இரவு மினாவில் துஆ, திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? தூங்கி விடுவது தான் சுன்னத்தா?
மினாவில் துஆ, திக்ரு போன்றவை செய்ததாக எந்த ஹதீசும் இல்லை.
அரஃபா நாள்
கேள்வி: 1
மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்ô?. இதில் 'தக்பீர்' என்பது 'அல்லாஹு அக்பர்' என்பது மட்டுமா? மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா?
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் சொல்வது குறித்து, 'நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள்,'தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை'' என்று பதிலüத்தார்கள்.
நூல்: புகாரி 970
தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான்.
கேள்வி: 2
அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு - ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே?
தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.
(நூல்: முஸ்லிம் 2137)
ஜம்வு தக்தீமாக, லுஹர் நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்பது சரியானது தான்.
கேள்வி: 3
அன்றைய குத்பா உரையின்போது பேசக்கூடாது என்று (ஜும்ஆ குத்பாபோல்) தடை எதுவும் உள்ளதா?
இமாம் (குத்பா) உரையாற்றும் போது பேசக் கூடாது என்ற தடையிலிருந்து அரஃபா உரை விதிவிலக்கு பெறாது. எனவே உரையை செவி தாழ்த்திக் கேட்க வேண்டும்.
கேள்வி: 4
அங்குள்ள 'ஜபலுர் ரஹ்மா' மலையில் ஏறுவது சுன்னத் அல்ல என்றாலும், பெண்கள் அதில் ஏறக்கூடாது என்று சொல்வது சரியா?
அதில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் ஹஜ்ஜின் கிரியை என்றோ சுன்னத் என்றோ கருதி ஏறக் கூடாது.
கேள்வி: 5
அரஃபாவில் போய் சேர்ந்தது முதலே துஆ செய்யலாமா? 'ஜபலுர் ரஹ்மா' மலையடிவாரத்திலோ, அரஃபாவில் மற்ற எங்குமோ துஆ செய்யும்போது நின்றுக்கொண்டுதான் துஆ செய்ய வேண்டுமா? இயலாதவர்கள் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாமா? அங்கு எப்போது தல்பியா சொல்லவேண்டும்? துஆ செய்யாத இடைப்பட்ட நேரங்களில் சொல்லவேண்டுமா?
அரபாவில் திக்ரு, துஆக்கள் என்ற எந்த வணக்கத்திலும் ஈடுபடலாம். நிற்க இயலாதவர்கள் உட்கார்ந்தும் செய்து கொள்ளலாம். துஆ செய்யும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தல்பியா சொல்லிக் கொள்ளலாம். ஜபலுர்ரஹ்மத் என்று குறிப்பிட்டு வரும்போது அங்கு துஆவைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த ('ஜபலுர் ரஹ்மத்' மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது 'கஸ்வா' எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்து வந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
(நூல்: முஸ்லிம் 2137)
நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.
(நூல்: நஸயீ 2961)
இந்த ஹதீஸின் அடிப்படையில் துஆவில் ஈடுபட வேண்டும். துஆவை நின்றும்இ உட்கார்ந்தும் செய்யலாம்.
முஸ்தலிபா ரூயஅp; கல் எறிதல்
கேள்வி: 1
மினாவில் 8ஆம் நாளன்று எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா?
முஸ்தலிபாவில் படுத்து உறங்கிய பிறகு அன்றைய ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் ஃபர்ளை மட்டும்தான் தொழ வேண்டுமா?
நபி (ஸல்) அவர்கள் அங்கு கடமையான தொழுகைகளை மட்டுமே தொழுததாக ஹதீஸில் (முஸ்லிம் 2137) வருகின்றது. இந்த ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.
'நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதார்கள்' என்று ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுச் சொல்லாததால் அன்று இரவு அவர்கள் வித்ரு தொழவில்லை என்றாகிவிடாது. மாறாகஇ நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதது, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதது அவர்களது பார்வையில் படாமல் கூட இருந்திருக்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு சாப்பிட்டார்கள், சிறுநீர் கழித்தார்கள் போன்ற பல விஷயங்களை அறிவிப்பாளர் சொல்லாமல் விட்டிருக்கலாம். அதனால் அவற்றை நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்றாகி விடாது.
'நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை' என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் கூட மினா, முஸ்தலிஃபாவில் இந்தத் தொழுகைகள் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜாபிர் (ரலி) இவ்வாறு குறிப்பிட்டுக் கூறவில்லை. எனவே அந்தத் தொழுகைகளைப் பற்றி அவர் அறிவிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரவில் உங்களுடைய தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1245
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பொதுவாகக் கட்டளையிட்ட பின், அவர்கள் வித்ரு தொழுகையை விட்டதாகவோ அல்லது குறிப்பிட்ட வேளையில் தொழ வேண்டாம் என்று தடுத்ததாகவோ எந்த ஹதீசும் வராத வரை வித்ரு தொழ வேண்டும் என்பது தான் அடிப்படையாகும். மேலும் வித்ரு தொடர்பான ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவும் இருப்பதால் மினாவில் நாம் வித்ரு தொழுவது தான் நபிவழி.
ஃபஜ்ருடைய முன்சுன்னத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் வழமையாகக் கடைப்பிடித்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத் அளவிற்கு வேறு எந்த கூடுதல் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
நூல்: புகாரி 1169
வித்ருக்கு நாம் கூறிய வாதங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும் என்பதால் ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை முஸ்தலிஃபாவில் தொழுவது தான் நபிவழியாகும்.
கேள்வி: 2
அன்றைய இரவு முழுதும் நபி (ஸல்) அவர்கள் படுத்து உறங்கிவிட்டதாக முஸ்லிம் 2137ல் வருகிறது. ஆனால் புகாரியின் 1679வது ஹதீஸில் அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் இரவு தங்கியிருக்கும்போது சந்திரன் மறையும் வரை தொழுதார்கள் என்று வருகிறதே? இரவு தொழ முடிந்தால் அப்படியும் செய்யலாமா?
நபி (ஸல்) அவர்களின் நடைமுறை தெளிவாக இருக்கும் போது அஸ்மா (ரலி) அவர்களின் செயலை நாம் பார்க்க வேண்டியதில்லை.
கேள்வி: 3
முஸ்தலிபாவில் தான் கல் பொறுக்கவேண்டும் என்பது சரியானதல்ல என்றாலும், வாய்ப்பு கிடைத்தால் அங்கேயே பொறுக்கி வைத்துக் கொள்வது தவறாகுமா? கற்களை நமக்காக நம்முடனிருக்கும் பிறர் பொறுக்கித் தரலாமா? அவரவர் தான் பொறுக்க வேண்டுமா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், 'ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும்.
(நூல்: முஸ்லிம் 2248)
இயன்றவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான் சரியாகும். இயலாதவர்களுக்கு கற்களைப் பொறுக்கிக் கொடுப்பது தவறல்ல.
கேள்வி: 4
முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரைத் தொழுதுவிட்டு, 'மஷ்அருல் ஹராம்'முக்கு வந்து கிப்லாவை நோக்கி துஆ செய்துவிட்டு (முஸ்லிமின் 2137 ஹதீஸ்படி) சொல்லவேண்டிய 'அல்லாஹ் அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு' என்பதை ஒருமுறை சொன்னால் போதுமா?
எண்ணிக்கை எதுவும் ஹதீஸில் இடம்பெறவில்லை.
கேள்வி: 5
10ஆம் நாள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிடக்கூடிய சலுகை பெண்களுக்கு மட்டும்தானா? வயோதிகர்கள் ஆண்களாக இருந்தால் இது பொருந்துமா? சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிட அனுமதியளிக்கப் பட்டவர்கள் அன்றைய ஃபஜ்ரைத் தொழுவதற்காக மீண்டும் முஸ்தலிஃபாவில் தங்கிய இடத்திற்கே வந்துவிட வேண்டுமா? அல்லது கல் எறிந்த பக்கத்து இடங்களிலேயே தொழலாமா? பெண்களுக்கு துணையாக உடன் வந்த ஆண்கள் ஃபஜ்ரை எங்கு நிறைவேற்ற வேண்டும்?
சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பி விடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் 'மஷ்அருல் ஹராம்' எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்கு தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். பிறகு, இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் 'ஜம்ரா'வில் கல்லெறிவர். '(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய (நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு செய்ய) அனுமதியளித்துள்ளார்கள்'' என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
நூல்: முஸ்லிம் 2281
அஸ்மா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் அவர்கள் கூறியதாவது:
அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, 'மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?'' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றதும் 'புறப்படுங்கள்!'' எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தமது கூடாரத்தில் சுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், 'அம்மா நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகின்றதே!'' என்றேன். அதற்கவர்கள், 'மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதியளித்துள்ளார்கள்'' என்றார்கள்.
நூல்: புகாரி 1679
இந்த ஹதீஸ்களில் சூரியன் உதிப்பதற்கு முன்பே கல்லெறியலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் சூரியன் உதயமான பிறகு கல்லெறிவதே சிறந்தது. ஏனெனில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பிய நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் முன்பு கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பி வைத்தார்கள். சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதி 817
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, முற்கூட்டியே சென்றாலும் சூரியன் உதிக்கும் வரை பலவீனர்கள் காத்திருந்து தான் கல்லெறிய வேண்டும் என்று அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். எனவே பலவீனர்கள் இந்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது தான் சிறந்ததாகும்.
இவ்வாறு முற்கூட்டியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் மினாவில் ஃபஜ்ர் தொழுது கொள்ளலாம் என்பதை மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸ் விளக்குகின்றது.
கேள்வி: 6
நமக்கு கல் எறிந்த பிறகுஇ நோயாளி மற்றும் பலவீனர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கு பதிலாக நாம் கல் எறியலாமா?
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்!
அல்குர்ஆன் 64:16
முடிந்தவரை அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தாங்களே கல்லெறிய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் பிறரிடம் பொறுப்புச் சாட்டலாம். ஆனால் இவ்வாறு பிறருக்காக எறிபவர்கள் முதலில் தமக்காக எறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்றவர்களுக்காகக் கல்லெறிய வேண்டும்.
கேள்வி: 7
குர்பானி கொடுக்க இயலாதவர்கள் அங்கு இருக்கும்போது நோற்க வேண்டிய அந்த மூன்று நோன்புகளை அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் நோற்கலாம் என்று கூறுகிறீர்கள். பொதுவாகவே அந்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் அல்லவா? ஹாஜிகளுக்கு மட்டும் அந்த நாட்களில் நோன்பு நோற்க சலுகை உள்ளதா? அல்லது அய்யாமுத் தஷ்ரீக் முடிந்த பிறகு நோன்பு நோற்றுவிட்டு தவாஃபுல் விதா செய்யலாமா?
ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது:
குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!
நூல்: புகாரி 1998
மேற்கண்ட ஹதீஸ் குர்பானிப் பிராணி கிடைக்காதவர் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதியளிக்கின்றது.
பத்தாவது நாளின் மற்ற அமல்கள்
கேள்வி: 1
தவாஃபுல் இஃபாளாவை 10வது நாளின் அஸர் நேரம் முடிவதற்குள் செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா? அப்படி அஸர் முடிய முன் 'தவாஃபுல் இஃபாளா'வை தவறவிட்டவர்கள், அதற்கு முன்பே இஹ்ராம் ஆடையைக் களைந்திருப்பார்களேயானால், மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து, நிய்யத் செய்து, மறுநாள் வந்துதான் தவாஃபுல் இஃபாளா செய்ய வேண்டுமா?
பத்தாம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் தவாப் செய்து விட்டால் சட்டை பேண்ட் போன்ற தையல் ஆடை அணிந்து தவாப் செய்யும் சலுகை கிடைக்கும். நறுமணமும் பூசிக் கொள்ளலாம். தவாபுக்கு முன் சூரியன் மறைந்து விட்டால் அந்தச் சலுகை போய் விடும்.
'நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
(நூல்: அபூதாவூத் 1708)
பத்தாம் நாளன்று கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் ஆகிய வணக்கங்களைச் செய்யும் போதே அன்றைய தினம் சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியுமா? முடியாதா? என்ற முடிவுக்கு வந்து விடலாம்.
10ஆம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளா செய்ய முடியும் என்றால் நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளுடன் தவாஃபை முடித்து மொத்தமாக இஹ்ராமுடைய கட்டுப்பாடுகளை விட்டு விடுதலையாகிவிடலாம்.
சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியாதென்றால் இஹ்ராம் உடையைக் களையாமல் அப்படியே இருந்து, சூரியன் மறைந்த பிறகு தவாஃப் செய்து விட்டு, ஒரேயடியாக எல்லா கட்டுப்பாடுகளை விட்டும் விடுதலையாகி விடலாம்.
இதுபோன்ற சூழலில் முதல் விடுதலையின் பயனை இழக்க நேரிடும். அதாவது உடலுறவைத் தவிர உள்ள நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளை இழக்க நேரிடும். தவாஃபுல் இஃபாளாவை முடித்து விட்டால் முழு விடுதலையை அனுபவித்துக் கொள்ளலாம்.
பத்தாம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளாவை செய்யத் தவறியவர்கள் மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய இரவு அல்லது மறுநாள் வரை தவாஃபுல் இஃபாளா செய்யலாம். ஆனால் தவாஃபுல் இஃபாளாவை முடிக்கின்ற வரை இஹ்ராமின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையாக முடியாது.
கேள்வி: 2
அன்றைய தினம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாஃபுல் இஃபாளாவையும், ஸயீயையும் எப்போது செய்வது? தூய்மையாவதற்கு ஒரு வாரம் ஆகிவிட்டால் ஹஜ்ஜுடைய நாட்கள் முடிந்துவிடும் நிலையில் எப்படி அவற்றை நிறைவேற்றுவது?
இத்தகைய பெண்களுக்கு இரண்டு விதமான நெருக்கடிகள் ஏற்படலாம்.
1. தூய்மையாவதற்கு முன்னால் பயணம் புறப்பட நேரிடலாம்.
2. தூய்மையாவதற்குரிய காலம் ஹஜ்ஜின் 11, 12, 13 நாட்களையும் தாண்டிச் செல்லலாம்.
தவாஃபுல் இஃபாளா என்பது ஹஜ்ஜின் தவாஃபாகும். இதைச் செய்யாவிட்டால் ஹஜ் நிறைவேறாது. இதைக் கீழ்க்காணும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்திய உறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், 'அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?'' எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், 'அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!' என்றதும் 'அப்படியாயின் புறப்படுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1733
மாதவிலக்கு ஏற்பட்டவர் தூய்மையாகி, தவாஃபுல் இஃபாளா செய்வதற்குள் பயணத் தேதி முடிந்து விடுவது போன்ற நெருக்கடியான கட்டத்தில் இரத்தம் உறிஞ்சுகின்ற இறுக்கமான ஆடை (நாப்கின்) அணிந்து கொண்டு தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றலாம். இவ்வாறு அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அடுத்ததாக, பயணத் தேதி மீதமிருந்தாலும் துப்புரவாகும் நாள் ஹஜ்ஜுடைய நாட்களான 13ஆம் நாளையும் தாண்டிச் செல்கின்ற நெருக்கடி ஏற்படலாம்.
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்!
அல்குர்ஆன் 64:16
இந்த வசனத்தின் அடிப்படையில், ஹஜ்ஜுடைய நாட்களைத் தாண்டி விட்டாலும் அதை நிர்ப்பந்தம் என எடுத்துக் கொண்டு, துப்புரவான பின் தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றியாக வேண்டும்.
கேள்வி: 3
பத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதுடன் மினாவிலும் வந்து 2வது முறை தொழ வேண்டுமா? இரண்டு முறையும் 4 ரக்அத்கள் முழுமையாக தொழ வேண்டுமா? அன்றைய தொழுகைகளில் எல்லா வக்துகளையும் கஸ்ரு இல்லாமல் முழுமையாகத் தான் தொழவேண்டும்?
பத்தாம் நாள் அன்று மினாவில் 'ஜம்ரதுல் அகபா'வில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்துஇ தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும்.
இது 'தவாஃப் ஸியாரா' எனவும் கூறப்படுகிறது. இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று 'தவாஃப் அல் இஃபாளா' செய்து விட்டுஇ திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2307
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.
தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இமாமாக இருந்ததால் இரண்டு முறை தொழுதுள்ளார்கள். நாம் மக்காவில் தொழுவதே போதுமானதாகும். பயணத்தின் போது பொதுவான கஸ்ருத் தொழுகையின் சட்ட அடிப்படையில் லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும்.
அய்யாமுத் தஷ்ரீக்
கேள்வி: 1
11, 12, 13 ஆகிய நாட்களில் எறியவேண்டிய கற்களை எப்போது, எங்கு பொறுக்க வேண்டும்? 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரேநாளில் பொறுக்கி வைத்துக் கொள்ளலாமா?
மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக மினாவில் பொறுக்கிக் கொள்ளலாம்.
கேள்வி: 2
முதல் ஜம்ராவில் கல் எறிந்த பிறகு வலது பக்கமாக நகர்ந்து நின்றும்,இரண்டாவது ஜம்ராவில் கல் எறிந்த பிறகு இடது பக்கமாக நகர்ந்து நின்றும் கிப்லாவை நோக்கி துஆ செய்யவேண்டுமா? இதில் வலது பக்கம், இடது பக்கம் என்பது ஜம்ராவுக்கு வலது ஃ இடது பக்கம் என்று குறிக்குமா? அங்குள்ள மஸ்ஜிதுல் ஹீஃபாவுக்கு வலது ஃ இடது பக்கம் என்று குறிக்குமா?
கல்லெறிபவரின் வலது பக்கம், இடது பக்கத்தையே குறிக்கும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய்இ கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, 'இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்!'' எனக் கூறுவார்கள்.
நூல்: புகாரி 1751, 1753
கேள்வி: 3
3வது ஜம்ராவில் கல்லெறிந்த பின், அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்று துஆ செய்யவேண்டுமா?
புகாரி 1751, 1753 ஆகிய ஹதீஸ்களின்படி முதல் இரண்டு ஜம்ராக்களில் துஆச் செய்வது நபிவழியாகும். மூன்றாவது, கடைசி ஜம்ராவில் துஆச் செய்வது இல்லை.
கேள்வி: 4
கல் எறிவது அல்லாமல் இந்த நாட்களில் வேறு அமல்கள் எதுவுமுள்ளதா? நாம் விரும்பி செய்யக்கூடிய உபரியான அமல்கள் மட்டும்தானா? வாய்ப்பு கிடைத்தால் தவாஃப் செய்ய மக்காவுக்கு வரலாமா?
அதிகமதிகம் தவாஃப் செய்து கொள்ளலாம். விரும்பிய அமல்களைச் செய்து கொள்ளலாம்.
'அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875)
கேள்வி: 5
கல் எறிந்த பிறகு வேறு இடங்களுக்கு செல்லத் தக்க காரணம் இல்லாமல், சொந்தத் தேவைகளுக்காக மக்காவிலுள்ள ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ பகலில் செல்ல அனுமதி உண்டா? கல்லெறிந்து முடியும்வரை முழு நாட்களும் மினாவில்தான் தங்கி இருக்கவேண்டுமா?
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
நூல்: புகாரி 1634
இந்த ஹதீஸ் அடிப்படையில் தக்க காரணம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் மினாவில் தான் தங்க வேண்டும்.
கேள்வி: 6
தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறியவேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம் என்றால், ஒவ்வொரு ஜம்ராவிலும் தலா 14 என தொடர்ந்து ஒரே நேரத்தில் எறிந்துவிடலாமா?
மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: திர்மிதீ 878)
இதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 14 கற்கள் எறிந்து கொள்ளலாம்.
கேள்வி: 7
12வது நாளில் சூரியன் மறையும் முன்பாக கல்லெறிந்துவிட்டவர்கள் 13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால், அவர்கள் அந்த நாளில் புறப்படும் நேரம் சூரியன் மறையும் முன்பாக இருக்கவேண்டுமா? அல்லது கல்லெறிவது மட்டும் சூரியன் மறையும் முன்பாக இருந்தால் போதுமா?
12ஆம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் புறப்படுவதாக இருந்தால் மட்டுமே 13ஆம் நாள் கல் எறியத் தேவையில்லை.
இதர சந்தேகங்கள்
கேள்வி: 1
? எந்த இடத்தில் துஆ செய்தாலும் தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத் என்பது சரியா? அரபாவில் மட்டும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தால் போதுமா?
தஹ்மீதுஇ ஸலவாத் சொல்லித் தான் துஆ செய்ய வேண்டும் என்று ஹதீஸ் எதுவும் வரவில்லை.
பொதுவாக சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்ததும், கழிவறை செல்லும் போது. படுக்கும் போது போன்ற அன்றாடப் பழக்கவழக்கங்களின் துஆக்களைத் தவிர இதர துஆக்களில் கையை உயர்த்துவது நபிவழியாகும். அரஃபா உள்ளிட்ட எந்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் இது பொருந்தும்.
கேள்வி: 2
தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக் கொண்டு தொழுகை, தவாஃப், ஸயீ போன்ற அமல்களை செய்யலாமா?
மூன்று அல்லது ஏழு என ஒரு பெண்ணுக்கு வழக்கமாக வரக்கூடிய நாட்களைத் தாண்டி அதிகமான நாட்கள் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாளா தான். இரத்தம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), 'நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவளாக இருக்கின்றேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை. இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். (மாதவிடாயன்று). ஆயினும் (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்குத் தொழுகையை விட்டுவிடு! பிறகு குளித்துவிட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுதுகொள்!'' என்றார்கள்.
நூல்: புகாரி 325
கேள்வி: 3
தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கக்கூடாது என சொல்லப்படுவதால், அதற்கு பிறகு உபரியான உம்ராக்கள் செய்யவோ,மார்க்கம் சேராத சொந்த வேலைகளுக்கோ கூட தங்கக் கூடாதா? அப்படி மற்ற தேவைகளுக்காக தங்கவேண்டி இருந்தால் அதுவரை தவாஃபுல் விதாவை தள்ளிபோடலாமா? அதிகப்பட்சமாக எத்தனை நாள் வரை தள்ளிப் போடலாம்?
(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.
அல்குர்ஆன் 2:198
ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது கூடத் தவறில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே இதன்படி மார்க்க காரியங்களுக்காகவோ, சொந்தக் காரியங்களுக்காகவோ தவாஃபுல் விதாவைத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்.
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.
அல்குர்ஆன் 2:197
இந்த வசனத்தில் ஹஜ் வணக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது குறிப்பிட்ட மாதங்கள் என்று அல்லாஹ் கூறுவதால், துல்ஹஜ் மாதம் முடிவதற்குள் தவாஃபுல் விதாவை நிறைவேற்றுவது சிறந்தது.
கேள்வி: 4
மஸ்ஜிதுந் நபவிக்குத் தொழும் நோக்கத்திற்காக சென்றால், அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அப்போது பொது மையவாடிகளில் ஓதும் பொதுவான துஆவினை ஓதினால் போதுமா?
மஸ்ஜிதுந்நபவிக்கென்றோ, நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கென்றோ தனிப்பட்ட எந்த துஆவும் ஹதீஸ்களில் இல்லை.
'அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்' (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்)
நூல்: முஸ்லிம் 367
இதுபோன்ற பொதுவான துஆ ஓதிக் கொள்வது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது குறிப்பாக எதையும் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்களில் வரவில்லை.
'மனாஸிக்குல் ஹஜ் வல் உம்ரா' என்ற நூலில் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள், 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு' என்று தொழுகையில் வருகின்ற ஸலவாத்தைச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். எனினும் இதற்கு ஹதீஸ் ஆதாரம் எதையும் காட்டவில்லை.
இப்னு உமர் (ரலி) அவர்கள், 'அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்ர்! அஸ்ஸலாமு அலைக்க யா அபத்தீ (என்னுடைய தந்தையே!)' என்று கூறுவார்கள்.
இந்த நடைமுறையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். நபித்தோழர்களின் கருத்து மார்க்கமாகாது என்ற அடிப்படையில் இதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.
இப்னு தைமிய்யா இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கருத்தையும் உஸைமீன் மேற்கோள் காட்டுகிறார்.
மஸ்ஜிதுந்நபவிக்கு வருகின்ற ஒவ்வொரு மனிதனும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வெறுத்திருக்கின்றார்கள். காரணம் முன்னோர்களான நபித்தோழர்கள் இதைச் செய்து கொண்டிருக்கவில்லை.
மாறாகஇ அவர்கள் பள்ளிக்கு வந்து தொழுவார்கள். அந்தத் தொழுகையில், 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு' (நபியே! உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் அருளும் அவனது பரக்கத்துகளும் உண்டாகட்டுமாக!) என்றஇ நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதக் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவார்கள். தொழுகை முடிந்து பள்ளியில் அமர்வார்கள் அல்லது வெளியே சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் மீது தொழுகையில் ஸலவாத்தும், ஸலாமும் சொல்வது மிகச் சிறந்தது என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தது தான்.
இவ்வாறு இப்னு தைமிய்யா கூறுவதாக ஸாலிஹ் அல் உஸைமீன் குறிப்பிடுகின்றார்.
எனவே இதைக் கவனத்தில் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது பிரத்தியேக துஆ எதுவும் கூறாமல் பொது மையவாடிகளில் ஓதும் பிரார்த்தனையை மட்டுமே கூறவேண்டும்.
கேள்வி: 5
மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியது என்று சொல்கிறார்களே, அது எந்த இடம்?
மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்தபடியாக, மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது சிறப்புக்குரியதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1190, அஹ்மத் 14167
மஸ்ஜிதுந்நபவீக்குப் பயணம் மேற்கொள்வதும் இந்த அடிப்படையில் தான் அமைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 2383
இவ்வாறு மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்பவர்கள் அங்கு எந்த இடத்திலும் தொழுது கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1195, 1196
இந்த இடத்திற்கு மேற்கண்ட சிறப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற அந்தஸ்து மஸ்ஜிதுந்நபவீ முழுமைக்கும் உரியதாகும்.
கேள்வி: 6
ஹஜ், உம்ரா செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் அவர்கள் தவாஃப், ஸயீ போன்ற வணக்கங்களைச் செய்வதற்குத் தாமதமாகின்றது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இதைத் தவிர்ப்பதற்காக மாதவிலக்கைத் தள்ளிப் போடுகின்ற மாத்திரை, ஊசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா?
இவ்வாறு ஊசி, மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என்று சவூதி ஆலிம்கள் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றனர். இது தவறாகும்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 5:3
இந்த வசனத்தில் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்கிறான். அதாவது ஹஜ்ஜின் போது பெண்களுக்கு ஏற்படுகின்ற இந்த மாதவிலக்குப் பிரச்சனைக்கும் உரிய தீர்வை மார்க்கம் தந்து விட்டது.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
அல்குர்ஆன் 2:195
நமக்கு நாமே நாசத்தைத் தேடிக் கொள்ளக் கூடாதுஇ நாசத்தை விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான். மாதவிலக்கு என்பது இயற்கை! அதை மாற்றுவது உடலில் வேறுவிதமான நோயை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்படுத்திவிடும். அதனால் நமது உடலுக்கு நோயை விளைவிக்கின்ற இந்தக் காரியத்தைக் குர்ஆன் தடை செய்கின்றது. மாதவிலக்கு எனும் இயற்கை செயல்பாட்டை மாத்திரைகள் மூலம் மாற்றி உடலுக்குக் கேடு விளைவிப்பதால் இதைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடையாகும்.
கேள்வி: 7
இஹ்ராம் கட்டிய பின்னர் கணவன் மனைவியிடம் உடலுறவில் ஈடுபட்டால் என்ன பரிகாரம்?
சவூதியைச் சேர்ந்த அறிஞர்கள் இதை இரண்டு நிலைகளாகப் பிரிக்கின்றனர். 1. முதல் விடுதலைக்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவது.
பத்தாம் நாளன்று கடைசி ஜம்ராவில் கல்லெறிந்து விட்டால் நறுமணம் பூசிக் கொள்ளலாம்; தையல் ஆடை அணிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுக்குரிய தவாஃபுல் இஃபாளாவை செய்து முடிக்கின்ற வரை உடலுறவைத் தவிர இஹ்ராமில் தடுக்கப்பட்ட அனைத்துக் காரியங்களும் அனுமதிக்கப்படுகின்றன. இதற்குத் தான் முதல் விடுதலை என்று பெயர்.
தவாஃபுல் இஃபாளாவை முடித்துவிட்டால் உடலுறவுக்குரிய தடையும் நீங்கி விடுகின்றது. இதற்கு இரண்டாவது விடுதலை என்று பெயர்.
இவ்வாறு முதல் விடுதலைக்கு முன்பு, அதாவது முழுமையான இஹ்ராமின் போது உடலுறவில் ஈடுபட்டுவிட்டால் இரண்டு வகையான தீர்வுகளைக் கூறுகின்றனர்.
1. உழ்ஹிய்யாவில் கொடுப்பது போன்று ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை பரிகாரமாகக் குர்பானி கொடுத்து அந்த இறைச்சியை ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும். அந்த இறைச்சியை அவர் சாப்பிடக் கூடாது.
2. அவருடைய ஹஜ் வீணாகி விடுகின்றது. அவர் தாமதமின்றி மறு ஆண்டு அந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.
இரண்டாம் நிலை, முதல் விடுதலைக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடுவதாகும்.
இவ்வாறு ஈடுபட்டுவிட்டால் இரண்டு தீர்வுகளைக் கூறுகின்றனர்.
1. ஓர் ஆட்டை அறுத்து, ஏழைகளுக்குப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அந்த இறைச்சியை அவர் சாப்பிடக்கூடாது.
2. ஹரம் எல்லைக்கு அப்பால் அருகில் உள்ள இஹ்ராம் கட்டுகின்ற எல்லைக்குப் போய் தனது இஹ்ராமைப் புதுப்பித்து, இஹ்ராமுக்குரிய ஆடைகளை அணிந்து ஹஜ்ஜுக்குரிய தவாஃபுல் இஃபாளாவைச் செய்ய வேண்டும்.
இஹ்ராமுக்குப் பிறகு ஒருவர் உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அதற்குரிய பரிகாரம் இது என்று சவூதியைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் தீர்ப்பளிக்கின்றனர்.
இவ்வாறு தீர்ப்பளிக்கும் ஆலிம்கள் இதற்குரிய குர்ஆன்இ ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டவில்லை.
நமக்குத் தெரிந்த வரை நோயாளிகள், தலையில் காயம், புண் ஏற்பட்டவர்கள், பேன் பற்றியவர்கள், ஹஜ்ஜின் போது குர்பானி கொடுக்க இயலாதவர்கள், வேட்டையாடியவர்கள் போன்றவர்களுக்குரிய பரிகாரத்தை குர்ஆன் ஹதீஸில் நாம் பார்க்க முடிகின்றது.
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:196
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியாவில் என்னருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?'' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன். அதற்கு 'உம் தலையை மழித்துக் கொள்ளும்!'' என்றார்கள். என் விஷயமாகத்தான் (2:196ஆவது) இறைவசனம் அருளப்பெற்றதுது; அப்போது நபி (ஸல்) அவர்கள், 'மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாஉ தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1815
இங்கு நோயாளிகள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள், பேன் பற்றியவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் குறித்துக் கூறப்படுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! 'தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடுஇ மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
அல்குர்ஆன் 5:94, 95
இந்த வசனம், வேட்டையாடுவதற்குரிய பரிகாரத்தைக் குறிப்பிடுகின்றது.
இதைத் தவிர இஹ்ராமின் போது ஏற்படுகின்ற வேறு குற்றங்களுக்குப் பரிகாரத்தைக் காண முடியவில்லை.
இஹ்ராமில் இருப்பவர் முதல் விடுதலைக்கு முன்போ, அல்லது பின்போ உடலுறவில் ஈடுபட்டால் இன்னது தான் பரிகாரம் என்று குர்ஆன், ஹதீஸில் கூறப்படவில்லை.
அப்படியானால் இதுபோன்ற தவறுக்குப் பரிகாரம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.
ஒருவர் உளூச் செய்கின்றார். உளூ முறிந்து விட்டால் அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும். இதுதான் அதற்குரிய பரிகாரம். ஒருவர் தொழுகின்றார். தொழுகையில் உளூ முறிந்து விடுகின்றது. அந்தத் தொழுகையை அவர் மீண்டும் தொழ வேண்டும். இதுபோன்று ஒருவர் ஹஜ் செய்யும் போது அதற்காக இஹ்ராமில் நுழைந்து விட்டார்.
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!
அல்குர்ஆன் 2:197
அல்லாஹ் கூறும் இந்தத் தடையை மீறி, உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அவர் அந்த ஹஜ்ஜை திரும்ப நிறைவேற்ற வேண்டும். அதுதான் இதற்குரிய பரிகாரமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
கேள்வி: 8
ஒரு பெண் ஹஜ் தமத்துஃக்காக இஹ்ராம் கட்டி விட்டார். அவர் தவாஃபுல் குதூம் - உம்ராவுக்கான தவாஃப் செய்வதற்கு முன்னால் மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது. அரஃபா நாளில் தங்குவதற்கு முன்பு தான் அவர் மாதவிலக்கிலிருந்து தூய்மையடைகின்றார். இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா?
ஹஜ்ஜுக்காக அவர் இஹ்ராம் கட்டும் போது தனது ஹஜ்ஜை கிரான் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும். தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தல் தவிர உள்ளஇ ஹாஜிகள் செய்கின்ற மற்ற வணக்கங்களை அவர் செய்து கொள்ள வேண்டும். துப்புரவானதும் அவர் ஹஜ்ஜுக்குரிய தவாஃபும், ஸஃபா மர்வாவில் ஸயீயும் செய்து விட்டால் அவருக்கு ஹஜ்ஜும் உம்ராவும் கிடைத்து விடும்.
உம்ராவுக்கான தவாஃப் இந்த கிரான் முறையில் கடமையாக ஆகாது. சுன்னத்தாக ஆகிவிடும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 'விடைபெறும்' ஹஜ் ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக 'இஹ்ராம்' கட்டினோம். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், 'எவரிடம் பலிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும்'' என்று சொன்னார்கள்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மக்காவிற்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடவுமில்லை.
ஆகவேஇ இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், 'உன் தலை (முடி)யை அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக 'இஹ்ராம்' கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு'' என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் (இஹ்ராம் கட்டுவதற்காக) 'தன்ஈம்' எனும் இடத்திற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு) நான் உம்ராச் செய்தேன். 'இது உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பதிலாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
உம்ராவிற்காக 'இஹ்ராம்' கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர்.
நூல்: முஸ்லிம் 2123
கிரான் முறையில் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் ஒரே தவாஃப் போதுமானது என்று கூறப்படுவதால் உம்ராவுக்காக தனி தவாஃப் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கேள்வி: 9
தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர் அரஃபா நாளில், அரஃபாவில் தங்குகின்ற நேரத்தில் தான் மக்காவிற்குள் வந்து சேர முடிந்தது. இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் தான் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா? இனி, இவர் உம்ரா, அதற்குரிய தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ போன்றவை செய்ய முடியாதே! இவர் என்ன செய்ய வேண்டும்?
முந்தைய (கேள்வி எண்: 8) பதிலில் உள்ளவாறு தனது ஹஜ்ஜை கிரான் என்ற முறையில் ஆக்கிக் கொண்டு விட்டால் இவருக்கு இந்த நிலையில் ஹஜ், உம்ராவுக்கும் சேர்த்து ஒரே தவாஃப், ஸயீ செய்தால் போதுமானது. ஹஜ், உம்ரா இரண்டும் சேர்த்து இவருக்குக் கிடைத்து விடும்.
கேள்வி: 10
புகாரி 2734 ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டதாக வருகின்றது. ஆனால் இப்போது யாரும் உம்ரா செய்யும் போது ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுத்துப் பலியிடுவதில்லையே! ஏன்?
நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் உம்ராவுக்கு வரும் போது பலிப்பிராணிகள் அழைத்து வந்தார்கள். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் மக்கா இணை வைப்பாளர்களுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. அது தான் ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும்.
இதன்பிறகு, கொண்டு வந்த ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு, முடியை மழித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்.
அந்த உடன்படிக்கை விதியின்படி மறு ஆண்டு அவர்கள் உம்ராவை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் எந்தப் பலிப்பிராணியையும் கொண்டு வரவில்லை. இந்த அடிப்படையில் உம்ராவின் போது குர்பானி கொடுத்ததற்கும், கொடுக்காததற்கும் நபி (ஸல்) அவர்களிடம் முன்மாதிரி இருக்கின்றது.
இதன்படி இப்போதும் ஒருவர், உம்ராவின் போது பலிப்பிராணியை அறுக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தது போன்று பலிப்பிராணியை உடன் அழைத்து வந்து குர்பானி கொடுக்கலாம். ஹஜ்ஜுக்குச் சென்று அங்கு போய் குர்பானி கொடுப்பது போன்று உம்ராவில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.