Saturday, May 30, 2015

அதிரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி


பிறையை கண்களால் பார்ப்பது தான் நபிவழியா?

நாளின் துவக்கம் எது? மக்ரிபா? சுபுஹா?

உலகின் ஏதாவது ஓரிடத்தில் பார்க்கப்படும் பிறை அனைத்துப்பகுதிகளுக்கும் பொருந்துமா?

ஓரிடத்தில் பார்க்கப்படும் பிறை எவ்வளவு பகுதியை கட்டுப்படுத்தும்?

அரபா நோன்பை எதன் அடிப்படையில் நோற்பது?

இன்னும் இது போன்று பிறை குறித்த பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில்களை நேரில் கேட்டு தெளிவுபெற அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளை


துபையில் நடைபெற்ற அதிரை (TNTJ) அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம் துபை தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் 29-5-2015 வெள்ளிகிழமை மதியம் 2:00 மணியளவில் அல்லாஹ்வின் கிருபையால் அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அபுதாபி சார்ஜா அஜ்மான் போன்ற பகுதிகளிலிருந்து அதிரை சகோதர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிரையில் ஏகத்துவ பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் அல் ஹிக்மா பெண்கள் மதரசா பற்றியும் ஆலோசித்து பல தீர்மானங்களோடு முடிவு செய்யப்பட்டு இறுதியாக அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தர்பியா நிகழ்த்தி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!













Monday, May 18, 2015

Sunday, May 17, 2015

அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியில் பரிசளிப்பு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின் சார்பாக நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு தேர்வு எழுதிய மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று (17.5.2015) ஞாயிற்றுகிழமை மாலை 4.00 மணிக்கு புதுமனைத்தெருவில் உள்ள அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியில் நடைபெறும் இதில் மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் ஆலிமாக்களின் மார்க்க சொற்பொழிவும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி உங்கள் வீட்டு பெண்களை கலந்துக்கொள்ள சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Thursday, May 14, 2015

Monday, May 11, 2015

Thursday, May 07, 2015

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி வகுப்பு பெண்களுக்கு அல்-ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரில் நடைபெற்றுவருகிறது இன்று அல்-ஹிக்மா பெண்கள் கல்லூரிக்கு வருகை தந்த மௌலவி எம்.ஐ சுலைமான் அவர்கள் மாலை கோடைக்கால பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்த மாணவிகளுக்கு அல்லாஹ்வின் வஹி மட்டுமே மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்



Tuesday, May 05, 2015

[தேதி மாற்றப்பட்டுள்ளது] நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்ஷா அல்லாஹ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,பேய் பிசாசு, சூனியம் என்ற பெயரில் பரிகாரம் செய்வதாகக் கூறி அப்பாவிகளிடம் மோசடியாக பணம் பறிக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் மீதும்,புரோகிதத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு மையவாடியில் இடம் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் போட்டு மனித உரிமைக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீதும்,பொது மேடைகளில் கொல்லுவேன், தலையை வெட்டுவேன், சொத்துக்களை சூறையாடுவேன் என்று மிரட்டல் விடும் ரவுடிகள் மீதும்,வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும்,

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: மே 14, வியாழக் கிழமை
இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை,
நேரம்: மாலை 4 மணி

கண்டன உரை: ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி

உத்தம நபியை இழிவுபடுத்த விட மாட்டோம் என்பதை உணர்த்திட…
பத்ர் களத்தை கண்ட சமுதாயமே அலைகடலென ஆர்ப்பரித்து குடும்பத்துடன் வா என அழைக்கிறது…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
சென்னை மாவட்டம்.
9566137765, 7708067163.

Monday, May 04, 2015

சிற்பபாக நடைபெறும் கோடைகால பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளை சார்பாக கோடைகால பயிற்சி பகுப்பு இந்த வருடம் 2.5.2015 சனிக்கிழமை முதல் துவங்கியது ஆண்களுக்கு தவ்ஹீத் பள்ளியிலும் பெண்களுக்கு மதியம் 2.30 மணி முதல் 6.00 மணிவரை புதுமனைத்தெருவில் உள்ள தவ்ஹீத் மதரஸா அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியிலும் நடைபெறுகிறது பெண்களுக்கான வகுப்புகளை மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி மற்றும் ஆலிமாக்கள் பாடம் நடத்துகிறார்கள் இதில் சென்ற வருடங்களை விட அதிகமான மாணவிகள் பயிற்சி வகுப்பிற்கு வருகிறார்கள்

Sunday, May 03, 2015

இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை பட்டுக்கோட்டை ஐ கேர் ஆப்டிக்கல்ஸ் இனைத்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் (3.5.2015 ) இன்று நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் காலை 10.00 முதல் மதியம் 2.00 வரை நடைபெற்றது. 150க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு இலவச கண் பரிசோதனை செய்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்









Friday, May 01, 2015