Sunday, March 07, 2010

வாய்க்கால் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 06.03.2010 அன்று அதிராம்பட்டிணம் வாய்க்கால் தெரு ரஹ்மானிய்யா பள்ளிவாசல் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.




இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'கணவன் மனைவி கடமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பலர் கலந்து கொண்டு உரையை கேட்டனர்.

2 கருத்துரைகள் :

As.Alaikum
naan sri lana la irukkan brother

enda friend oruvar love panraru athai thadukka niraya muyatchi seithu vitten avar maruhira mathiry illa , itha naan thadukkama iruntha antha pawam ennayum seruma brother

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.

காதல் செய்யும் உங்களின் நண்பருக்கு அது தவறு என்று எடுத்து கூறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள். மார்க்க வழிகாட்டுதலுக்கு மாற்றமாக ஒருவர் தவறு செய்யும் போது அது தவறு என்று அவரிடம் நேரடியாக சூட்டிக்காட்டுவது மார்க்கம் காட்டி நடைமுறை. அதை நீங்கள் செவ்னே செய்துள்ளீர்கள். தொடர்ந்து அவருக்கு அது தவறு என்று எடுத்துச்சொல்லுங்கள். அதற்கான நன்மை உங்களுக்கு கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்.

அவர் அந்த செயலை தொடர்ந்து செய்யும் பட்சத்தில், நீ இந்த தவறு செய்யும் காரணத்தினால் உன்னை அல்லாஹ்விற்காக வெறுக்கிறோன் என்று சொல்லி, அவரின் நட்பை தூரமாக்கிவிடுங்கள். இது தான் மார்க்கத்தின் வழிகாட்டுதல். இதை செய்யும் பட்சத்தில் மார்க்க அடிப்படையில் நீங்கள் குற்றமற்றவர்.

தவறு செய்யும் அவருடன் நீங்கள் சேர்ந்து இருப்பது மார்க்க அடிப்படையில் தவறு.

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 78

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.