Tuesday, March 30, 2010

அதிரை TNTJ வின் மருத்துவ உதவி

அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. இதை கிளை துணைத்தலைவர் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்கினார்.


Saturday, March 27, 2010

மரைக்காயர் (அக்ஸா) பள்ளி அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

மரைக்காயர் (அக்ஸா) பள்ளி மற்றும் ரஹ்மானிய மதரஸா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக 25.03.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'புகழை விரும்பாத நபி (ஸல்)' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 


தனது உரையில் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு புகழை விரும்பாதவர்களாக இருந்தார்கள் என்பதை விளக்கினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரும் எழுந்து நிற்க கூடாது என்று கட்டளையிட்டதை எடுத்துக் காட்டினார். இன்று மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில போலி முல்லாக்கள், தங்களுக்கென்று குடை பிடிக்க ஒரு கூட்டத்தை உருவாக்கியிருப்பதை தவறு என்று விளக்கி பேசினார்.

இதில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.  மரைக்காயர் (அக்ஸா) பள்ளியில் இருந்த சகோதரர்களும் உரையை கேட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, March 25, 2010

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்!  ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். 
(அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப்பட்டது தான்.  ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதாயம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு!  ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!

இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.

பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.

குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)

இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்!  இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள்.

அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.


(அல்குர்ஆன் 4:125)

இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான்.  அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை – அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான்.  இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. 
(அல்குர்ஆன் 16:123)

நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.

“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை).
(அல்குர்ஆன் 60:4)

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.

அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். 
(அல்குர்ஆன் 9:114)

இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான்.  ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.  முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர்.  முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு – நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.  
(அல்குர்ஆன் 18:28)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள்.  ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான்.  இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார்.  எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள்.  “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார்.  அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.

ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.  
(அல்குர்ஆன் 80:1-10)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.

ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது.  ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.  இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை.  இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான்.  அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். 
(அல்குர்ஆன் 60:8,9)

இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை.  ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Wednesday, March 24, 2010

நக்கீரன் அலுவலகம் முற்றுகை: தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி அறிவிப்பு!

நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பிட்டு மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான செய்தியை கண்டித்து இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாளை (25-3-2010) சென்னையில் உள்ள நக்கீரன் அலுவகத்தை முற்றுகையிடும்!

நாள்: 25-3-2010

நேரம்: மாலை 3.30 மணி

இடம்: நக்கீரன் அலுவலகம், சென்னை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அதிரடி ஆர்ப்பாட்டத்திற்கு அணி அணியாய் வாருங்கள்!


முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரனுக்கெதிரான உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்!

Thursday, March 18, 2010

முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.

மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்

எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ‘அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ – இறைச் செய்தி – வர முடியாது” என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் ஏற்படுத்தலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக் கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடை களை உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்து விட்டேன். (அல்குர்ஆன் 5:3)

‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: முஸ்லிம் (3541)

‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” எனவும் நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 2697 முஸ்லிம் 3540

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அதுவும் அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன். புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது. அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை என்பதே மவ்லிதை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலைச் (நல்லறத்தைச்) செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லிது ஓதுமாறு நாயகம்(ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததே மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

தமிழகத்தில் ரபீவுல் அவ்வல் மாதத்தில் சுப்ஹான மவ்லிதும், ரபீவுல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன் மவ்லிதும் ஓதப்படுகிறது. ரபீவுல் ஆகிர் மாதத்தில் ஓதப்படும் முஹ்யித்தீன் மவ்லிது ஏன் ஓதப்படுகிறது? முற்காலத்தில் வாழ்ந்த அப்துல்காதிர் ஜீலானி என்ற பெரியாரை புகழ்வதற்காகவே இந்த மவ்லித் ஓதுகிறோம் என்று கூறுகின்றனர்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிகச் சிறந்த மார்க்க மேதை! உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர்! இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகின்றோம். ஆயினும் அவரது பெயரால் போலிகள் சிலர் இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்(ஸல்) அவர்களுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும் மாற்றமாகக் கதையை புனைந்து முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறச் செய்துள்ளனர்.

காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் துதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து ‘என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது” என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ‘காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு!’ என்று உன் மகனுடைய காதில் கூறு” என்றார்கள். அவர் கட்டளையிடப் பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. இவ்வாறு முஹ்யித்தீன் மவ்தில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் பதினைந்து மாதகாலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா? இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும் காய்ச்சலுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும் அதை நீக்குபவனும் அல்லாஹ்தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்ப டையான கொள்கை. இதை திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிருந்தும் அறியலாம்.

‘நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.’

(அல்குர்ஆன் 26:80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள் அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

‘இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.’

(அல்குர்ஆன் 57:22)

‘எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப் பத்தைக் கொண்டே தவிர இல்லை.’

(அல்குர்ஆன் 54:11)

இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

‘மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை” என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

(நூல்: புகாரி 5675)

நபி(ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது. அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்பமுடியாது.

முஹ்யித்தீன் மவ்லிதில் உள்ள மற்றொரு கதையை பாருங்கள்:

ஜும்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசிரியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பி விட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள்.

இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறும் ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்து விட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.

ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசகாகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆ தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன்’ என்றேன்.

நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன்? இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர்இ இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக்கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா?’ என்று கேட்டார்.

நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றிவிட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாஃபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தக் கதையிலுள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அபத்தம் – 1:
ஜும்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இறைநேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜும்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போதுதான் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று இந்த கதை கூறுகின்றது.

ஒரு சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் செய்யவேண்டும். வலுக் கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது சுன்னத்தை நிறை வேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.

அபத்தம் – 2:
கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாஃபஹா செய்தார்கள் என்பதிருந்து இதை அறியலாம். உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது.

எந்த ஆத்மாவுக்கு இறைவன் மரணத்தை ஏற்படுத்தி விட்டானோ அவற்றைத் தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான்.

(அல்குர்ஆன் 39:42)

அவர்கள் (மரணித்தது முதல்) திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கின்றது.

(அல்குர்ஆன் 23:99)

இறந்தவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.

…பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக்கூறப்படும். ‘நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களை கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் ‘நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! அந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி)
நூல்: திர்மிதி (991)

இது நபியவர்கள் தந்த விளக்கம். நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர் ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அபத்தம் – 3:
ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக்கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸிற்கு இது முரணாக உள்ளது. மேலும் இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் கூற்றுக்கு (30:52 35:22) முரணாக உள்ளது.

திருக்குர்ஆனுக்கும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் நேரடியாக மோதக்கூடிய இதுபோன்ற அபத்தங்கள் நிறைந்த இந்த மவ்லிதை ஒரு உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா?! அல்லது அன்னியர்களின் சதிதிட்டமா? நமக்கு பொருள் தெரியாது என்பதால் மார்க்க அறிஞர்கள் ராகமிட்டுப் பாடி நம்மை ஏமாற்றுகிறார்களா?! என்பதையெல்லாம் நாம் தெளிவாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. இஸ்லாத்தின் கடமைகள் எத்தனையோ இருக்கும் போது மார்க்கம் அனுமதிக்காத இணை வைப்புக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மவ்லித் தேவைதானா? என்பதை ரபியுல் ஆகிர் மாதமான இம்மாதத்தில் சிந்திப்போம்: செயல்படுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வழிநடத்தி செல்வானாக!

Tuesday, March 16, 2010

தனிப்பள்ளி கட்ட மார்க்கத்தில் ஆதாரம் உண்டா?



தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே!

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்! தாயத்து தகடுகள், தர்ஹா வழிபாடுகள், மௌலிது குப்பைகள் போன்ற இணை கற்பிக்கும் காரியங்களை எதிர்த்ததற்காகவும் மத்ஹபுப் பிரிவினைகளைக் கண்டித்ததற்காகவும் ஏகத்துவ வாதிகள் ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்? தொழுகைக்குக் கூட பள்ளி வாசல்களில் தடை செய்யப்பட்டனர்.

நான்கு மத்ஹபுகளுக்கு மாற்றமாக தலையில் தொப்பி போடாமல், நெஞ்சில் கைகட்டி, விரலசைத்துத் தொழுபவர்கள் இப்பள்ளியில் தொழக் கூடாது; இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றெல்லாம் ஜமாஅத்துல் உலமாவின் தூண்டுதலின் பேரில் ஊருக்கு ஊர் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் போர்டுகள் மாட்டப்பட்டன.

நபிவழியின் பிரகாரம் விரலசைத்துத் தொழுதவர்களின் விரல்கள் நறுக்கப்பட்டன. கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஆனால் அதே சமயம், மது அருந்துபவர்கள், வரதட்சணை வாங்கும் கயவர்கள், வட்டி மூசாக்கள், நாத்திகவாதிகள், அரசியல் புரோக்கர்கள் ஆகிய அனைவருக்கும் பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. எங்களது அடிப்படை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஆகிய இரண்டு மட்டுமே என்றுரைத்ததற்காக மட்டுமே தவ்ஹீத்வாதிகள் பள்ளிகளை விட்டும் விரட்டப்பட்டனர்.

இவர்கள் நம்மைப் பள்ளிகளை விட்டும் விரட்டுவதென்ன? இது போன்ற பள்ளிகளில் உண்மையான முஃமின்கள் ஒரு போதும் நிற்கக் கூடாது என்பது தான் ஏக நாயனின் கட்டளை! இதோ இறைவனின் கட்டளையைப் பாருங்கள்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! 
அல்குர்ஆன் 9:107, 108

மேற்கண்ட வசனத்தில் நபியவர்களுடைய காலத்தில் ஏகத்துவவாதிகளுக்கெதிராக முனாஃபிக்கீன்கள் கட்டிய ஒரு பள்ளிவாசலைப் பற்றித் தான் அல்லாஹ் பேசுகிறான். முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியைப் பற்றி அல்லாஹ் நான்கு காரணங்களைக் கூறுகிறான்.

1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்
2. ஏக இறைவனை மறுத்தல்
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல் 
4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்

இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.

இந்த நான்கு காரணங்களும் எந்தெந்தப் பள்ளிகளில் காணப்படுகின்றதோ அவற்றைக் கட்டியவர்கள் அதனைப் பள்ளிவாசல் என்று சொல்லிக் கொண்டாலும் அவை இறைவனின் பார்வையில் இறையாலயமாகாது. இப்படிப்பட்ட பள்ளிகளில் உண்மையான முஸ்லிம்கள் சென்று தொழுவதும் தகாது.

இன்று நம் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்றதா என்று பார்ப்போம்.

1. முஃமின்களுக்குத் தீங்கிழைத்தல்:

நபிகள் நாயகம் காலத்தில் பள்ளிவாசல் என்பது மக்களின் துயர் துடைக்கும் மையமாக விளங்கியது. பசியால் வாடுபவர்களும், படுப்பதற்கு இடமில்லாதவர்களும், பிணியால் அவதிப்படுவோரும், துயரங்களுக்கு உள்ளானவர்களும் நாடி வரும் இடமாகப் பள்ளிவாசல் தான் இருந்தது. ஆனால் இன்றோ வயிற்றுச் சோறுக்கு வழியில்லாதவன் கூட பள்ளிக்கு வரி கட்டவில்லையென்றால் அவனுக்கு அடக்கம் செய்ய இடம் கிடையாது என்று அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் நபிவழியின் பிரகாரம் விரலசைத்து, நெஞ்சில் கைகட்டி தொழுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பெண்களுக்குப் பள்ளிவாசல்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. மஃரிப் உடைய முன் சுன்னத் போன்ற தொழுகைகள் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நபி வழியின் பிரகாரம் சப்தமிட்டு ஆமீன் கூறுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பள்ளியில் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் படிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

தன்னைப் பெற்ற தந்தைக்கு மகன் ஜனாஸா தொழுவிப்பதற்குப் பள்ளிவாசல் நிர்வாகிகள் கதவடைக்கின்றனர். சத்தியக் கருத்துகளை உள்ளது உள்ளபடி பள்ளியில் எடுத்துரைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. நபிவழியின் பிரகாரம் வரதட்சணை வாங்காமல் அனாச்சாரங்களை ஒழித்து செய்யப்படும் திருமணங்களுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. பதிவுப் புத்தகம் தர மாட்டோம் என்று மிரட்டப்படுகின்றனர்.

வரதட்சணை வாங்கினாலும் பள்ளிக்குப் பங்கு தரவேண்டும் என்று ஜமாஅத்துகள் விதி வகுத்துள்ளன. வரதட்சணைத் திருமணங்கள் பள்ளிவாசல் இமாம், முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் முன்பாகவே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன.

பள்ளிவாசல்களுக்குக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் மக்களிடம் பணம் கறப்பதில் தான் பள்ளிகள் போட்டியிடுகின்றனவே தவிர யாருக்கும் எந்த உதவியும் இன்றைய பல பள்ளிகளில் காண முடிவதில்லை. இவ்வாறு பல விஷயங்களில் பள்ளிவாசல்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இடமாகத் தான் உள்ளனவே தவிர நபிகள் நாயகம் காலத்தில் இருந்த ஒரு நிலையை சில பள்ளிகளில் தவிர மற்றவற்றில் காண முடிவதில்லை. 

2. இறை நிராகரிப்பு:

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

மேற்கண்ட வசனத்திற்கு நேர் எதிராகப் பல பள்ளிவாசல்கள் இணைவைப்புக் காரியங்களின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. பள்ளிவாசல்களுக்குப் பெயர் வைக்கும் போதே நாகூராண்டவர் பள்ளிவாசல், முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்று இறைவனல்லாத ஆண்டவர்களுக்காகத் தான் பள்ளிவாசல்களே கட்டப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவர் எங்கும் வருவார் என்ற குஃப்ரான நம்பிக்கையில் தான் பல பள்ளிகளுக்கு இவருடைய பெயரைச் சூட்டுகின்றனர்.

இறைவனுடைய அடிமைகளை எல்லாம் இறைவனாகப் பாவித்து ஓதப்படுகின்ற கேடுகெட்ட மௌலிது குப்பைகள் பள்ளிவாசல்களில் தான் அரங்கேற்றப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் விரைந்து வருவார்; அழைப்பிற்குப் பதில் தருவார் என்ற நரகத்து வரிகளை உள்ளடக்கிய யாகுத்பா, சுப்ஹான மௌலிது, நாகூர் ஆண்டவர் மௌலிது, ஸலாத்துன் னாரிய்யா போன்ற பல குப்பைகள் பள்ளிவாசல்களில் கொட்டப்படுகின்றன. பள்ளிவாசல்களுக்குள்ளேயே கப்ருகள் கட்டப்பட்டு வணக்க வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் பள்ளிவாசல்களோடு இணைந்ததாக பள்ளிவாசல் காம்பவுண்டிற்குள் அட்டாச்டு தர்ஹாக்களும் இணைந்துள்ளன. மேலும் தாயத்து தகடுகள், பில்லி, சூனியம், பால்கிதாப் பார்த்தல், போன்ற இன்னும் பல இணை கற்பிக்கும் காரியங்கள் அனைத்தும் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. இவ்வாறு பல பள்ளிகள் இறை நிராகரிப்பின் தளங்களாகத் தான் திகழ்கின்றன. இந்த இரண்டாவது காரணமும் பல பள்ளிகளில் நிதர்சனமாக, தெளிவாகவே காணப்படுகிறது.

3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்:

பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் மையமாகும். ஆண்டியும், அரசனும், கருப்பனும், வெள்ளையனும் சமம் என்றுரைக்கும் இடம் தான் பள்ளிவாசல். ஆனால் இத்தகைய பள்ளிவாசல்கள் தான் முஃமின்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் இடங்களாக நமக்கு மத்தியில் காட்சியளிக்கின்றன. நான்கு மத்ஹபுகளின் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் எங்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று போர்டு மாட்டி வைத்திருப்பதே பிரிவினைக்கு முதல் சான்றாகும். சமுதாயத்தில் ஏற்படும் எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் கூட தீர்த்து விடலாம். ஆனால் இந்த ஷாஃபி, ஹனஃபி பிரச்சினை கியாமத் நாள் வரை தீராத பிரச்சினையைப் போன்றும், ஜாதிப் பிரிவினைகளைப் போன்று பிறக்கும் போது ஒட்டிக் கொண்டு பிறக்கின்ற ஒரு பிரிவினையாகி விட்டது. இன்றைக்கும் கூட பல ஊர்களில் ஷாஃபியாக்கள் மற்றும் ஹனஃபியாக்களுக்கு மத்தியிலான திருமண உறவுகள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. பள்ளிவாசல்கள் உருவாக்கப்படும் போது இது ஷாஃபி பள்ளி இது ஹனஃபி பள்ளி என்று பிரிவினையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரே பள்ளியில் குறுக்காகச் சுவர் வைக்கப்பட்டு ஷாஃபிகள் ஒரு புறமும், ஹனஃபிகள் ஒரு புறமும் தொழுது வருகின்றனர். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற பெரும் மதரஸாக்களிலெல்லாம் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைப் போன்று ஷாஃபி மாணவர்கள் ஒரு புறமும் ஹனஃபி மாணவர்கள் ஒரு புறமும் மிகவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

கஃபாவில் கூட பல ஆண்டுகளாக நான்கு முஸல்லாக்கள் விரிக்கப்பட்டிருந்தன. தவ்ஹீதின் ஆட்சி வந்த பிறகு தான் அவையனைத்தும் ஒன்றாக்கப்பட்டன. அனைத்து ஆலிம்களும் ஷாஃபி ஹனஃபி பிரிவினை தான் சரி என்றே பள்ளிவாசல்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.

இமாம் ஷாஃபியின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் அபூ ஹனீஃபாவின் மிகச் சிறந்த ஒரு மார்க்கத் தீர்ப்பை ஷாஃபியானவன் பின்பற்றினால் அவன் நரகவாதியா? இமாம் அபூ ஹனீஃபாவின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் ஷாஃபி அவர்களின் மிகச் சிறந்த மார்க்க ரீதியிலான கருத்துக்களை ஹனஃபியானவன் பின்பற்றினால் அவன் நரக வாதியா?

இதற்கெல்லாம் இந்தப் பிரிவினை ஆலிம்கள் பதில் கூறத் தயாரில்லை. இப்படிப்பட்ட இந்த மத்ஹப் பிரிவினைகளின் உலைக்களங்களாகத் தான் இன்றைய பல பள்ளிகள் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பள்ளிகள் உண்மையான முஸ்லிம்கள் தொழுவதற்குத் தகுதியானதா? என்பதை உண்மை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

4. அல்லாஹ்விற்கும் தூதருக்கும் எதிராகப் போர் புரிபவர்களுக்குப் புகலிடம்:

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். 
அல்குர்ஆன் 9:17, 18

மேற்கண்ட வசனங்கள் இணைகற்பிப்பவர்கள் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது கூடாது என்பதைத் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகிகள்:

1. அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர்களாகவும்
2. தொழுகையை நிலை நாட்டுபவர்களாகவும் 
3. ஸகாத்தை நிறைவேற்றுபவர்களாகவும். 
4. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளின் நிலைகளை நாம் பார்க்கும் போது இதற்கு நேர்மாற்றமாகத் தான் உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மௌலிதுகள் போன்ற அனைத்து இணை கற்பிக்கும் காரியங்களுக்கும் குத்தகைதாரர்களாகத் திகழ்கின்றனர். இவையனைத்தையும் பள்ளி வாசல்களில் இவர்கள் தான் அரங்கேற்றுகின்றனர்.

மேலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யக்கூடிய வட்டி மூசாக்கள், வரதட்சணையை ஆதரிக்கும் இமாம்கள், முத்தவல்லிகள், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள், லாட்டரி வியாபாரிகள், கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள், பள்ளிவாசலை சீட்டாட்டத்திற்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்தி விட்டுப் பாங்கு சொன்னவுடன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறக் கூடியவர்கள், அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கக்கூடிய அரசியல் புரோக்கர்கள், பெண்களைப் பலவந்தமாக அடையக் கூடிய காமவெறியர்கள், விபச்சாரம் செய்யக் கூடியவர்கள், மது அருந்தக் கூடியவர்கள் ஆகியோர் தான் இன்றைக்குப் பல பள்ளிவாசல் நிர்வாகிகளாகக் காட்சி தருகின்றனர். மேலே சுட்டிக்காட்டப்பட்ட காரணங்களிலும் அல்லது சொல்லப்படாத இன்னும் பல தீய காரணங்களிலும் ஒன்றோ இரண்டோ அல்லது இதற்கு அதிகமான விஷயங்களோ இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்படாமல் இல்லை. இவற்றை வெளிப்படையாகவே பலர் செய்து வருகின்றனர். இப்படி இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, இறைவனுக்கெதிராக யுத்தம் செய்கின்றவர்களுக்குப் புகலிடமாகத் தான் பல பள்ளிகள் திகழ்கின்றன.

இது போன்ற பள்ளிகள் உண்மையான முஃமின்கள் நின்று வணங்குவதற்குத் தகுதியானவை கிடையாது என்பது தான் முதலில் நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இறைவனின் பிரகடனமாகும். 

1. முஃமின்களுக்கு தீங்கிழைத்தல்
2. ஏக இறைவனை மறுத்தல் 
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல் 
4. அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போரிடுவோருக்குப் புகலிடம்.

இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.

நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!
அல்குர்ஆன் 9:108

முனாஃபிக்கீன்கள், நாங்கள் நல்லதற்காகத் தான் இப்பள்ளியைக் கட்டியுள்ளோம் என்று சத்தியம் செய்து கூறிய போதும் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கூறியது பொய் என அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அது போன்று மேற்கண்ட நான்கு காரணங்களும் நடைபெறுகின்ற பள்ளிவாசல் நிர்வாகிகள் நாங்கள் நல்லதற்காகத் தான் இந்தப் பள்ளியை நிர்மாணித்துள்ளோம் என்று கூறிய போதிலும் இந்நான்கு காரணங்களும் நீக்கப்படுகின்ற வரை அவை முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளிகளாக ஆகாது என்பதே உண்மையாகும்.

முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளி எது?

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்குர்ஆன் 9:108

இப்படிப்பட்ட பள்ளி வாசல்கள் வரிசையில் தவ்ஹீத் பள்ளிகள் தான் முன்னிலை வகிக்கின்றன. இன்றைக்குத் தவ்ஹீத் பள்ளிகள் ஏழை மக்கள் நாடிவரும் தலங்களாகவும் துயர் துடைக்கும் இடங்களாகவும் திகழ்கின்றன. தவ்ஹீத் பள்ளிகளின் பணிகளை பட்டியலிடத் துவங்கினால் இந்த இதழ் பற்றாது. மக்களுக்கு இடையூறு செய்தல் என்பது தவ்ஹீத் பள்ளிகளில் அறவே கிடையாது. முஃமின்களைப் பிரிக்கக்கூடிய மத்ஹபுப் பிரிவினைகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. அனைத்து மத்ஹபிலிருந்து நபிவழிக்கு வந்தவர்களும் இன்றைக்கு ஒரே முறையில் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். மேலும் மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்களும் அவர்களது முறைப்படி தொப்பி அணிந்து விரலசைக்காமல் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிலை நாட்டுகின்றனர். அவர்கள் தாக்கப்படுவது கிடையாது. பித்அத்தான காரியங்களைச் செய்வதற்குத் தான் தவ்ஹீத் பள்ளியில் தடை விதிக்கப்படுமே தவிர வேறு யாரும் தடுக்கப்படுவது கிடையாது. மேலும் நபி வழியின் அடிப்படையில் தொழுபவர்கள் மட்டுமே இங்கு வரவேண்டும் என்ற போர்டுகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. மேலும் ஏகத்துவத்தை எடுத்துரைத்து, இணை கற்பிக்கும் காரியங்களை அழிக்கக் கூடிய தளங்களாகத் தான் தவ்ஹீத் பள்ளிகள் திகழ்கின்றன.

இறைவன் கூறிய பண்புகளுக்குச் சொந்தக்காரர்கள் தான் தவ்ஹீத் பள்ளிவாசல் நிர்வாகிகளாகத் திகழ்கின்றனர். எனவே தான் இன்றைக்கு ஊருக்கு ஊர் தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளிகளை உருவாக்கி வருகின்றது. இவை அடித்தளமிடப்படும் போதே இறையச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

இதை இங்கு எழுதுவதற்குக் காரணம், அனைத்து இறையாலயங்களும் இதைப் போன்று மாற வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, மற்ற ஆலயங்களைத் தகர்க்க வேண்டும் என்பதற்கல்ல. இந்நிலை கனியும் தருணம் இறைவன் நாடினால் வெகு தூரத்திலல்ல. மிக அருகில் தான் காட்சியளிக்கிறது.

மேற்கண்ட நான்கு தீய நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகள் திருந்திக் கொண்டால் அப்போது தான் அவை பள்ளிவாசல்களாகக் கருதப்படும்.

இதனை வேறொரு விதமாகவும் அல்லாஹ் நமக்குத் தெளிவு படுத்துகிறான். இப்ராஹீம் நபியிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என்று கூறும் இறைவன், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கூட்டத்தை விட்டு நாம் விலகி விட வேண்டும் என வழி காட்டுகிறான். 

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
அல்குர்ஆன் 60:4

இணை கற்பிப்பவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி வாசல்களைப் புறக்கணித்து, தக்வா எனும் இறையச்சத்தின் அடிப்படையில் பள்ளிகளை அமைப்பது உண்மை முஸ்லிம்களின் கடமையாகும். அது குடிசையாக இருந்தாலும் சரியே!

Saturday, March 13, 2010

பெரியார் தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்: அரப் நியுஸ் பத்திரிக்கையில் செய்தி!


பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அரப் நியுஸ் பத்திரிக்கைச் செய்தி:

பீ.ஜே சவூதியில் நுழைய தடையா? பீ.ஜே நூல்களுக்கு தடையா?

சவூதி அரேபியாவிலும் இன்னபிற அரபு நாடுகளிலும் பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்கு தடை!

பீ.ஜே.யின் நூல்களுக்கும் தடை!

சவூதி அரேபியாவில் பீ.ஜே. நுழையத் தடை!

சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்!

என்றெல்லாம் சில மதனிகளும் பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலி உலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு சகோதரர்கள் விளக்கம் கேட்கும்போது தக்க விளக்கம் அளித்து வந்த போதும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்தவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேய்ந்து போன ரிகார்ட் போல் இதையே பயங்கரமான ஒரு செய்தியாகச் சொல்லிக் கொண்டு திரிகின்றது இந்தக் கும்பல்.

இது குறித்து விரிவாக எழுதும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டனர்.

அரபு நாடுகள் தான் அத்தாரிட்டியா?


இவர்கள் கூறுவது போல் எனது நூல்களை அரபு நாடுகளில் தடை செய்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். அரபு நாடுகளில் நுழைவதற்கு எனக்குத் தடை போட்டு விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இதன் காரணமாக எனது கருத்துக்கள் தவறு என்பது நிரூபணமாகி விடுமா?

அவர்கள் தான் மார்க்கத்தின் அத்தாரிட்டியா? நான் சொல்லும் கருத்துக்கள் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்பட்டு இருப்பதாகவோ, தவறானதாகவோ உள்ளது என்று தக்க ஆதாரத்துடன் நிரூபித்தால் தான் எனது கருத்துக்கள் தவறு என்று ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. நமது கருத்துக்களை எதிர் கொள்ள அவர்களிடம் சரக்கு  இல்லாததால் இதுவே இவர்களுக்கு பெரிய ஆதாரமாகத் தெறிகிறது.

சத்தியத்தைச் சரியாக எடுத்துச் சொல்லும் யாராக இருந்தாலும் இது போன்ற அடக்குமுறைகளை எதிர் கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு தான் நாங்கள் களத்தில் இறங்கி இருக்கிறோம்.

இவர்கள் ஆசைப்படுவது போல் சவூதி என்ன, ஒட்டுமொத்தமாக உலகமே திரண்டு தடை போட்டாலும் நமது பயணம் நின்று விடாது. இக்கொள்கையை நம்பியவர்களின் மன உறுதியை எந்த வகையிலும் இது குலைக்காது என்பதைத் திட்டவட்டமாக நான் அறிவித்துக் கொள்கிறேன்.

கூலிக்கு தவ்ஹீத் பேசும் இந்தக் கும்பல் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எப்போது என்னைப் பாதிக்கும்? சவூதியிலோ மற்ற அரபு நாடுகளிலோ நான் ஊதியம் பெற்று அதற்காகவே தவ்ஹீதைச் சொன்னால் அந்த நாடுகளின் கோபப் பார்வை என்னைப் பாதிக்கும்.

எந்த ஒரு கால கட்டத்திலும் நான் எந்த அரபு நாட்டு அரசிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ பணமோ, பொருளோ, அன்பளிப்போ பெற்றதில்லை. சில நேரங்களில் அரபு நாடுகளில் பணி புரிவோர் இலவசமாக வழங்கப்படும் கிதாப்களை வாங்கி அனுப்பும் போது பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதனையும் நான் பெற்றுக் கொண்டதில்லை.

ஜாக் அமைப்பில் பணியாற்றிய அந்த சமயத்தில் மதனிகள் அல்லாத கஷ்டப்படும் உலமாக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு கமாலுத்தீன் மதனீ அவர்கள் மதனிகளாக இல்லாத சில தாயிகளுக்கு சிறிய அளவிலான உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் எந்த நிறுவனத்திடமிருந்தும் நான் எதையும் பெற விரும்பவில்லை என்று மறுத்து விட்டேன். எந்தக் கால கட்டத்திலும் இதில் நான் சபலப்பட்டதே இல்லை. அப்படி இருக்கும் போது இவர்கள் ஆசைப்படுவது போன்ற தடைகள் வந்தால் அது என்னை எள் முனையளவும் பாதிக்கப் போவது இல்லை.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியில் வெளியிட ஜாலியாத் மூலம் அனுமதி கேட்ட போது நான் அனுமதியளித்துள்ளேன்.

சில மதனிகள் நூல்கள் எழுதி அதை இலவசமாக வெளியிடப் போகிறோம் என்று கூறி உதவி அளிக்கும் நிறுவனத்துக்கு தவறான தகவல் தந்து லட்சங்களைக் கறப்பார்கள். ஒரு நூல் வெளியிட்டு பெரிய சொத்து வாங்கியவரை நான் அறிவேன்.

எனது நூல்களை வெளியிட அனுமதி கேட்கும் போது அதற்கான ராயல்டி இவ்வளவு வேண்டும் என்றால் அதைத் தருவதில் சவுதி நிறுவனங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அப்படி இருந்தும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக் வெளியிட அனுமதித்தேன். இந்த அனுமதிக்காக மற்றவர்கள் அடைகின்ற ஆதாயமும் எனக்கு இல்லை. இலவசமாக அவர்கள் வெளியிடும் போது அந்த நூலின் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கனவே நான் அச்சிட்டு வைத்திருந்த நூல்கள் தேங்கும் என்ற வகையிலும் எனக்கு இழப்பு ஏற்படும்.

செய்திகள் மக்களைச் சென்றடைந்தால் சரி என்று தான் நினைத்தேனே தவிர சவூதி அரபு நாட்டுப் பனத்துக்கு பல்லிளிக்கவில்லை.

அவ்வாறு பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. (இது பின்னர் விளக்கப்பட்டுள்ளது). செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு நமது சிரமம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தான் நான் அனுமதியளித்தேன்.

இதை சுயதம்பட்டம் அடிப்பதற்காக குறிப்பிடவில்லை. அரபு நாடுகள் தடை விதித்தால் அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை என்பதற்காகவும், சவூதி அரசு மூலம் வெளியிடப்படும் எனது இலவச நூல்களை காண்பவர்கள் பீஜேக்கு இதன் மூலம் பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் இதைக் குறிப்பிடுகிறேன்.

தடை பூச்சாண்டி ஏன்?


இந்தத் தடை பூச்சாண்டி ஏன் என்றால் அதற்கும் காரணம் உண்டு. அரபு நாடுகள் சென்ற தமிழ் கூறும் முஸ்லிம் சகோதரர்கள் அங்கே சென்றதும் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத்வாதியாக மாறி வருகிறார்கள். தங்களால் இயன்ற தஃவா பணிகளையும் சுயநல நோக்கமின்றி செய்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சவூதியில் உள்ள ஜாலியாத்கள் எனும் தஃவா சென்டர்களில் முக்கிய மொழிகளுக்கு அம்மொழி பேசும் பிரச்சாரகர்களை நியமித்திருக்கிறார்கள். அது போல் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிமல்லாத மக்களிடமும் தூய இஸ்லாத்தைச் சொல்கிறோம் என்ற பெயரில் சம்பளம் வாங்கும் இவர்களில் பலர் அந்தப் பணியைச் செய்வதில்லை. இவர்களின் உப்புக்குச் சப்பாக நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டங்களூக்கும் மக்கள் செல்வதில்லை. நம்மைக் காட்டி பணம் கறக்கிரார்கள் என்று மக்கள் நம்புவதால் இவர்கள் நடத்தும் சன்மார்க்க(?) விளக்கக் கூட்டத்தை மக்கள் அங்கீகரிப்பதில்லை.

அதே சமயம் தவ்ஹீத் சகோதரர்கள் தமிழ் மொழியில் மட்டும் மார்க்கத்தை அறிந்த சிலர் மூலம் நடத்தும் பிரச்சார் நிகழ்ச்சிகளில் பெருமளவு பங்கெடுப்பார்கள். படியளக்கும் எஜமானர்களுக்கு இது தெரிந்தால் இவர்கள் தூங்கி வழிவது தெரிந்து விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்? சன்மார்க்கக் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களை குறிப்பாக என்னை வசைபாடுவது. என் மீது வெறுப்பை விதைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சிக்கு மக்கள் போக மாட்டர்கள் என்று தங்கள் பிரச்சாரப் பாணியை அமைத்துக் கொண்டார்கள். பாவம்! இவர்கள் மார்க்கம் பேசாமல் தனி நபர் தாக்குதல் நடத்தியது இன்னும் அவர்களைத் தனிமைப்படுத்தி விட்டது.

அடுத்து என்ன செய்யலாம்? 


சவூதியில் சட்டதிட்டங்கள் கடுமையானவை. அங்கே கூட்டமாக கூடி பேசினாலே பிரச்சனையாகி விடும். பீஜேக்கு தடை என்று மக்களிடம் பரப்பினால் ஆகா தடை செய்யப்பட்டவர்களின் அமைப்பில் செயல்பட்டால் நமக்கு பிரச்சனை வருமோ என்று தவ்ஹீத் சகொதரர்களூக்கு பயம் வருமாம். இதன் காரணமாக தங்கள் செயல்பாடுகளை முடக்கி விடுவார்கள். களத்தில் நிற்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள், பயந்து போய் முடங்கி விடுவார்கள். இப்படி கணக்குப் போட்டதன் விளைவு தான் இந்தப் பிரச்சாரம்.

இந்தச் சகோதரர்களை முடக்கிப் போட்டால் தான் முன்பு போல் இவர்கள் வாயில் வந்ததையெல்லாம் உளற முடியும்.

அவர்களை அச்சுறுத்தி பணிய வைக்கவே இந்த தரம் கெட்ட பொய்ப் பிரச்சாரம்.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டமோ, வேறு விதமாக இருந்தது. யார் இப்படி பரப்பினார்களோ அவர்களின் கூடாரம் காலியானது. இந்த இழி செயல் செய்த சில போலி உலமாக்கள் பாலியல் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்காக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஆட் குறைப்பு என்ற பெயரில் சிலர் தூக்கி அடிக்கப்பட்டார்கள். பாக்கவிகளும் அஷ்ரபிகளும் சிறைக் கம்பிக்குப் பின்னால் நின்றார்கள்.

இவர்களின் மதனி செல்வாக்கோ, அரபு மொழிப் புலமையோ, ஜாலியாத் பதவியோ இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தவ்ஹீத் தாயியாக களத்தில் நின்ற தாயிகளுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

உணர்வு ஏட்டில் எழுதப்படும் கட்டுரைகளைப் பற்றி போட்டுக் கொடுத்து குறிப்பிட்ட சில பக்கங்களுக்கு கறுப்புச் சாயம் பூசியதையும், சில பக்கங்களைக் கிழித்து விட்டு விற்பனை செய்ய வைத்ததையும் தவிர வேறு ஒன்றும் இவர்களால் செய்ய முடியவில்லை. அது கூட மார்க்க அடிப்படையில் செய்த இடையூறு அல்ல. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானல் சவூதி பிரமுகருக்கு ரோஜா மாலை தூவுவது போன்ற படம் இடம் பெற்று அது விமர்சிக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் உள்ளதை இவர்கள் தான் தணிக்கைக்குச் சொல்லும் நிலையில் இருந்ததால் இதைக் கிழிக்கச் செய்தனர். இது ஒரு உதாரணமே.

மூன்றாவது திட்டம்:


சவூதியில் எனக்கோ, எனது நூலுக்கோ எந்தத் தடையும் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் சவூதி அரசின் கவனத்துக்கு பீஜேயைப் பற்றி கொண்டு சென்றால் நிச்சயம் தடை செய்து விடுவார்கள் என்பதால் அதற்கான புகாரையும் தயார் செய்து சவூதியின் தலைமை முஃப்திக்கு அனுப்பினார்கள்.


1. தம்மாம் ஜாலியாத்தில் பொழுதைப் போக்கும் முகம்மது ஜக்கி முகம்மது 
(இலங்கைவாசி)

2. தம்மாம் ஜாலியாத்தில் இதே போல் பொழுதைப் போக்கி சம்பளம் வாங்கும் முபாரக் மஸ்வூத் லெப்பை எனும் முபாரக் மதனி (இலங்கைவாசி)


3. இதே வேலை பார்க்கும் முகம்மது நூஹ்

ஆகிய இம்மூவரும் கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை எழுதினார்கள்.

அந்தக் கடிதம் இதோ.


சவூதியின் தலைமை முஃப்தியும் மூத்த உலமாக்கள் அமைப்பின் தலைவருமான அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அவர்களுக்கு எழுதப்பட்ட நான்கு பக்கக் கடிதம் இது தான்:








இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிடும் விஷயம் இது தான்.

தமிழகத்தில் ஜைனுல் ஆபிதீன் என்று ஒருவர் இருக்கிறார். இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரபலமானவர். முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவரிடமும் பிரபலமானவர்.

குர்ஆன் சுன்னாவின் பால் அழைப்பதிலும் பித்அத்தை ஒழிப்பதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

எழுத்து, பேச்சு, விவாதம், கருத்தரங்கம் என்று பல் துறைகளில் இவருக்கு ஆற்றல் உண்டு. கப்ர் வணங்கிகளுடனும், காதியானிகளுடனும், கிறித்தவர்களிடமும் இவர் விவாதங்கள் பல நடத்தியுள்ளார்.

இவரது பேச்சுக்கள் குறுந்தகடுகளாகவும் ஒளிப்பேழைகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாமர மக்கள் மத்தியில் இவருக்குப் பெரிய வரவேற்பு உள்ளது.

இவர் திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்துள்ளார். சில வசனங்களுக்கு விளக்கக் குறிப்புகளும் கொடுத்துள்ளார். இது இரண்டு முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் சில தவறுகளை நாங்கள் காண்கிறோம். அவற்றுள் சில

1. அல்லாஹ் மேகத்தில் வருவான் என்பதற்கு அல்லாஹ்வின் தண்டனை வரும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

2. ஹாரூத் மாரூத் மலக்குகள் அல்ல. ஷைத்தான்கள் என்று எழுதியுள்ளார்.

3. ஸாத் அத்தியாயத்தில் 34 வது வசனத்தில் அவரது சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தைப் போட்டோம் என்று மொழிபெயர்க்காமல் அவரை ஒரு சடலமாகப் போட்டோம் என்று எழுதியுள்ளார். சுலைமான் நபி ஒரு இரவில் நூறு மனைவியருடன் உடலுறவு கொண்டதாக வரும் ஹதீஸ்களை மறுத்துள்ளார்.

4. ரசூல், நபி என்பதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்று எழுதியுள்ளார்.

5. ஆதம்(அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதாமல் ஒரு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதியுள்ளார்.

6. சிஹ்ர் - சூனியம் என்பது கற்பனை என்கிறார்.

7. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை மறுக்கிறார்.

8. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அதை மறுக்க வேண்டும் என்கிறார். இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50 உள்ளன எனக் கூறுகிறார்.

9. பத்து தடவை பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று நபிகள் நாயகம்  மரணிக்கும் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.

10. ஸாலிம் என்ற இளைஞருக்கு பாலூட்டு அவர் உன் பிள்ளையாகி விடுவார் என்று ஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக வரும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.

11. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரர்களைக் குறிக்காது. ஷைத்தானையே குறிக்கும் என்று எழுதியுள்ளார்.

12. பெண்கள் முகத்தை மறைக்க எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். இதனால் ஒழுக்கக் கேடுகள் தான் ஏற்படும் என்கிறார்.

13. குர்ஆனை எடுத்து எழுதிய நபித் தோழர்கள் சில எழுத்துப் பிழைகளை விட்டுள்ளனர். அது அப்படியே உள்ளது எனக் கூறி சில ஆதாரங்களையும் கூறுகிறார்.

14. குர்ஆனின் ஓரத்தில் ஸஜ்தா என்றும் மற்றும் சில வார்த்தைகளும் பின்னால் எழுதப்பட்ட பித்அத் என்று கூறி இவ்வாறு செய்தவர்களைக் கண்டிக்கிறார்.

15. நிச்சயமாக என்பதை அறவே தவிர்த்து விட்டார்.

இவரது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாங்கள் கண்ட தவறுகள் இவை. இவை தவிர அவரது உரைகளிலும், நூல்களிலும் இன்னும் பல தவறுகளைச் செய்துள்ளார். உதாரணத்துக்காக சில. இவை மட்டுமல்லாமல் இன்னும் உள்ளன.

1. இறைவன் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் செய்யவில்லை.

2. இஜ்மாவையும், கியாஸையும் அறவே மறுக்கிறார்.

3. சலபிக் கொள்கையை மறுத்து கிண்டல் செய்கிறார். அவர்கள் தக்லீது செய்பவர்கள் என்கிறார்.

4. மனித உடலுக்குள் ஜின்கள் நுழைவதையும் இவர் மறுக்கிறார்.

5. நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களை யாரும் கனவில் காண முடியாது என்கிறார்.

6. பலவீனமான ஹதீஸ்கள் துணைச் சான்றுகள் மூலம் சரியான ஹதீஸ் என்ற நிலைக்கு உயரும் என்பதையும் மறுக்கிறார்.

7. தாடியைக் கத்தரிக்க எந்த அளவும் நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார்.

8. ஆடைகளைத் தரையில் இழுபடும்படி தொங்க விடுவதால் தவறல்ல என்கிறார்.

9. ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்கிறார். ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்கிறார்.

10. ஜும்ஆவுக்கு முன் சுன்னத் உண்டு என்கிறார்.

11. குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் இதயம் பிளக்கப்பட்டதை மறுக்கிறார். அது குர்ஆனுக்கு முரண் என்கிறார்.

இவரது இத்தகைய தவறுகளை நேருக்கு நேராகவும் எழுத்து வடிவிலும் சகோதர தாயிகள் அவருக்குச் சுட்டிக் காட்டிய பின்னரும் தன் நிலையில் நீடிக்கிறார். எதிர் கருத்து சொல்பவர்களை விவாதத்துக்கு அல்லது முபாஹலாவுக்கு அழைக்கிறார்.

இவருக்கு இருக்கும் பேச்சாற்றல் காரணமாக இவர் கூறுவதை பாமர மக்கள் நம்புகின்றனர்.
அதனடிப்படையில் தங்களிடம் இது குறித்து சில விளக்கங்களை எதிர் பார்க்கிறோம்.

1. இவருடன் நாங்கள் எப்படி நடந்து கொள்வது

2. குர்ஆன் ஹதீஸ் பக்கம் மக்களை அழைப்பதற்காக இவர் பாடுபடுவதாலும், பித்அத்களை  ஒழிக்கப் பாடுபடுவதாலும் இவரைப் பற்றி மக்கள் மத்தியில் பேசக் கூடாது. அது தான் சமுதாயத்துக்கு நன்மை என்று சலபி உலமாக்கள் சிலர் கூறுகின்றனர். இது சரியா?

3. எவ்விதத் தவறும் இல்லாமல் மன்னர் பஹத் செலவில் ஒரு தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவரது தமிழாக்கத்தை விற்பதும் வாங்குவதும் கூடுமா? அவரது தமிழாக்கம் ரகசியமாக சவூதி அரேபியாவில் விற்கப்படுகிறது.

இது பற்றி தங்களின் மேலான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

இது தான் மேற்படி மதனிமார்கள் எழுதிய புகார் பட்டியல்.

கடிதத்தில் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியுடன் எழுதப்பட்டதைக் கண்டு இவர்களை நாகரிகமாக விமர்சித்தவர்கள் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. மக்களிடம் இவர்கள் செய்யும் விமர்சனம் எவ்வளவு தரம் கெட்டதாக இருந்தது என்பதை நாம் அறிவோம்.

நமது கொள்கைச் சகோதரர்கள் பற்றி உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து இழி செயல் புரிந்தனர் என்பதும் தம்மாமில் பிரசித்தம்.

தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை எனக் கூறி, தர்கா விழாக்களுக்கு வாழ்த்து வழங்கிய தமுமுகவின் கொள்கை இவர்களுக்குத் தடையாக இல்லை.

சில அறியாத சகோதரர்கள் தமுமுக தேவை என்று நினைக்கிறார்கள். சமுதாயத்துக்கு குரல் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்புவதால் இப்படி நினைக்கிறார்கள். அந்தக் காரணமும் இவர்களுக்கு இல்லை. இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் தமுமுக இவர்களுக்கு உதவாது. தம்மாமிலும் உதவ முடியாது. அப்படி இருந்தும் தம்மாம் தமுமுகவுடன் இவர்கள் கை கோர்க்க முடிகிறது. தமுமுக நட்த்தும் தொலைக் காட்சி நிகழ்ச்சயில் முகம் காட்ட முடிகிறது. சவூதியில் ஹிஸ்ப் எனப்படும் அரசியல் அமைப்புகளுக்குத் தடை என்ற போதும் இவர்களுடன் கூடிக் குலாவ முடிகிறது.

ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக், விடியல் ஆகிய இயக்கங்களின் கொள்கைகளும் சவூதியின் கொள்கைக்கும் இவர்கள் ஏற்றுக் கொண்ட கொளகைக்கும் முரணானவை. இவர்களும் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எதிராக எந்தப் புகாரையும் இவர்கள் அளித்ததில்லை.

சவூதியில் எதையும் தீர விசாரிப்பார்கள் என்பதால் தான் தரக் குறைவாக எதையாவது எழுதினால் மாட்டிக் கொள்வோம் என்று இப்படி ஒரு புகார் அனுப்பினார்கள்.

இவர்கள் அனுப்பிய புகாருக்குப் பின்னர் சவூதி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இவர்கள் ஆசைப்பட்டது போல் எந்தத் தடையும் போடவில்லை.

மாறாக புகார் அனுப்பியவர்கள் வழியாக எனக்கு இரண்டு மடல்களை அனுப்பி என்னிடம் சேர்ப்பிக்கும் படியும்இ இந்தப் புகார் கடிதத்தையும் பீ.ஜே.க்கு அனுப்ப வேண்டும் என்றும் புகார் எழுதியவர்களுக்கு சவூதி அரசு உத்தரவிட்டது.

இதன் பின்னர் புகார் அனுப்பியவர்களில் ஒருவரான முபாரக் மதனி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவூதி அரசு உங்களுக்கு சில தகவல்களைத் தெரிவிக்க பணித்துள்ளது. உங்கள் பேக்ஸ் நம்பர் வேண்டும் என்று கேட்டார். யாருக்கும் தெரியாமல் அவர் எழுதிய புகார் கடிதத்தை அவர் வழியாகவே எனக்கு அல்லாஹ் கிடைக்கச் செய்தான்.

இவர்கள் கொளகை வாதிகள் என்றால் நாங்கள் தடை செய்ய வேண்டும் புகார் கொடுத்தவருக்கு அரசு மரியாதையா? என்று கேட்டு வெலையை உதறி இருக்க வேன்டும்.

இத்துடன் சவூதி அரசின் சார்பில் என்னிடம் சேர்ப்பிக்கச் சொன்ன கடிதங்கள் இது தான்.






தலைமை முப்தீ அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் தம்மாம் ஜாலியாத் முதீருக்கு எழுதுவதுஇ அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜைனுல் ஆபிதீன் என்பவர் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கம் பற்றி உங்கள் ஜாலியாத் தாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் பல தவறுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அழகிய முறையில் ஜைனுல் ஆபிதீனுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் கொண்டுள்ளோம். இவ்வாண்டு (ஹிஜ்ரி 1426) ராபிதா அல் ஆலமுல் இஸ்லாமி மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்ற அழைப்பு விடுக்கிறோம். துல்ஹஜ் பிறை 1 முதல் ஹஜ் முடியும் வரை நமது விருந்தினராக அவரை அழைக்கும் அழைப்பிதழையும் இணைத்துள்ளோம். எனவே இந்த அழைப்பிதழை அந்தப் பெரியவரிடம் விரைந்து சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

என்பது முதல் கடிதம். 

அடுத்த கடிதம் எனக்கு எழுதப்பட்டதாகும்.

பெறுநர்: பேராசிரியர் ஜைனுல் ஆபிதீன்

இந்தியாவின் பிரச்சார தாயி.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு உங்களை அழைக்கிறோம். அதற்கான அனுமதி எண் ......

உங்களை உபசரிக்கும் செலவு எங்களுடையது. பயணச் செலவு உங்களுடையது.

ஜனவரி 1 2006 முதல் ஜனவரி 16 2006 வரை விருந்தினராக இருப்பீர்கள்.

இஹ்ராம் நிய்யத்துடன் பிரவேசிக்க வேண்டும்.

சவூதி வருகை பற்றி ஒரு வாரம் முன்பு பேக்ஸ் மூலம் தெரிவிக்கவும்.

நீங்கள் ஒருவர் மட்டுமே வரலாம்.

இப்படி இரண்டாம் கடிதம் கூறுகிறது-

ஹஜ் அழைப்பில் ஹஜ் கிரியை முடியும் வரை இஹ்ராமுடன் தங்கவே அழைப்பு இருந்தது. விவாதித்தல் பற்றி எந்த விபரமும் காணப்படவில்லை. முப்தி அவர்களின் கட்டளையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.

ஹஜ் முடிந்த பின் எங்கே விவாதிப்பது, அதற்கான கால அளவு எதுவுமே இதில் காணப்படவில்லை.

சாதாரண நட்பு முறையில் பேசவே அவர்கள் விரும்பியுள்ளனர் இதிலிருந்து தெரிகிறது. இந்த மதனிகள் சுட்டிக் காட்டிய விஷயங்கள் புதுமையானது அல்ல என்பதால் கண்ணியப்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்தது.

இல்லாவிட்டால் ஹஜ் இல்லாத காலங்களில் இதற்காக வரச் சொல்லி அழைப்பு அனுப்பி இருப்பார்கள். ஹஜ் பரபரப்பில் இதற்காக அழைப்பு அனுப்ப மாட்டார்கள்.

இந்த அழைப்புக்கு நாம் பதில் அளித்து கடிதம் அனுப்பினோம். அதன் கடிதம் இதோ.



(கடிதம்)

தமிழக முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக கும்பகோணத்தில் ஜனவரி 29 அன்று மாநாடு பேரணி நடத்துகிறோம்.

நானே அமைப்பில் தலைவராக இருப்பதால் இந்தக் கட்டத்தில் என்னால் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது என்று பேரணியின் நோக்கம் செயல்பாடு அனைத்தும் விளக்கப்பட்டது.

எனவே ஜனவரிக்குப் பின் இரண்டு மாத அவகாசத்தில் தாங்கள் வசதிப்படும் எந்த நாளில் என்னை அழைத்தாலும் எனது சொந்தச் செலவில் வந்து மதனிமார்கள் கூறிய புகார்கள் குறித்து நட்பு முறையில் கலந்துரையாடல் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று பதில் போட்டேன்.

அந்த பதிலை முபாரக் மதனி அக்கடிதத்தில் குறிப்பிட்ட அத்தனை பேக்ஸ் எண்ணுக்கும் அனுப்பினேன்.

ஜித்தாவின் ஷிப்லி அவர்கள் மூலம் நேரடியாகவே நேரடியாகவே ஜித்தாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும் சேர்ப்பித்தேன்.

ஆண்டுகள் பலவாகியும் அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

இதிலிருந்து ஹஜ்ஜுக்கு விருந்தாளியாக அழைத்து கௌரவப்படுத்தவே விரும்பியுள்ளார்; விவாதிப்பதற்கு அல்ல என்பது உறுதியானது.

இவர்களின் புகார் பைஸா பெறுமானமில்லாதது என்பது சவூதி அரசின் நடவடிக்கையில் இருந்து தெரிகிறது.

ரகசியமாக குர்ஆன் தமிழாக்கம் விற்பனை செய்யப்படுகிறது என்று இவர்கள் போட்டுக் கொடுத்தும் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. பொதுவாக பிரச்சாரம் தொடர்பாக எத்தகைய கடும் நடவடிக்கையை சவூதி எடுக்குமோ அவற்றில் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.

இது தான் நடந்த உண்மை. இது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி இவர்கள் எழுதிய புகார்களில் எதை இவர்கள் குறையாக சுட்டிக் காட்டினார்களோ அவை அனைத்தும் அவர்களிடம் என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.

இதனால் தான் இது தான் பைபிள் என்ற நூலை இலவசமாக ஜாலியாத்கள் வெளியிட்டன.




இது போல் இயேசு இறைமகனா என்ற நூலையும் இலவசமாக வெளியிட்டுள்ளனர்.



பித்அத் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையையும் புத்தகமாக வெளியிட்டனர்.


நோன்பு என்ற எனது நூலையும், திருமறையின் தோற்றுவாய் என்ற நூலையும் வெளியிட்டனர்.

 
அதற்காக என்னிடம் அனுமதி கேட்டு எழுதிய கடிதம் இதோ.




 
இன்னும் சில கடிதங்கள் தவறி விட்டன.



சவூதியில் படித்தவர்களாக இவர்கள இருந்தும்இ எனக்கெதிராக எல்லா வகையான கேடுகளையும் சவூதியில் செய்து முடிக்க எல்லா வாய்ப்புகளையும் இவர்கள் பெற்றிருந்தும் இவர்களின் எந்தத் திட்டமும் பலிக்கவில்லை.

துபை, கத்தர் போன்ற நாடுகளில் எனக்கு எதிராக செயல்பட்டவரும் இவர்களைப் போன்ற ஒரு மதனி தான். அவர் செய்த தில்லுமுல்லுகள், திருகு தாளங்கள் என்னென்ன? என்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் விளக்குகிறேன்.

பீ.ஜே. கோடி கோடியாக பணம் சேர்த்து விட்டார் என்று புளுகுபவர்களுக்கும் பதிலளிக்க நண்பர்கள் வற்புறுத்துகின்றனர். பொது வாழ்வில் எனது நேர்மை குறித்து எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளும் அபத்தமானவைஇ உண்மைக்கு புறம்பானவை என்பதையும் அடுத்தடுத்து விளக்குவேன் இன்ஷா அல்லாஹ்.

மதனிகளாக இருந்தும் இவர்களின் தில்லுமுல்லுகளைக் கண்டு கொதித்துப் போன நல்ல மதனிகளும் உள்ளனர். நம்மால் செய்ய முடியாததை இந்தச் சாமானியர்களாவது செய்கிறார்களே என்று மகிழ்ச்சியடையும் மதனிகளை எனது இந்த விமர்சனம் கட்டுப்படுத்தாது.

Thursday, March 11, 2010

அதிரை AJ பள்ளி சுவர் இடிப்பு - கொதித்து எழுந்த முஸ்லிம்கள்

அதிராம்பட்டிணம் பழஞ்செட்டி தெருவில் உள்ள AJ பள்ளியின் சுற்றுப்புற சுவரை ஒரு பாஸிஸ்ட் JCB இயந்திரத்தை வைத்து நேற்று (10.03.2010) இரவு 10 மணி அளவில் இடித்து தள்ளியுள்ளான்.

இதனை அறிந்த முஸ்லிம்கள் AJ  பள்ளியில் திரண்டனர். உடனே, பள்ளி சுற்றுப்புற சுவரை கட்ட ஆரம்பித்தனர்.
 
AJ பள்ளிக்கு பக்கத்தில் வசிக்கும் பாலு என்பவன் தான் இந்த செயலை செய்தது. காவல்துறையையும் சட்டத்தையும் மதிக்காமல் இவ்வாறு செய்த பாலு என்ற ஃபாஸிஸ்ட்டு தலைமறைவாகிவிட்டன. இதன் பின்னர், இவனின் வீட்டை காவல்துறை சோதனையிட்டது. பள்ளியின் சுற்றுப்புற சுவரை உடனே, கட்டுவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. பள்ளியின் சுற்றுப்புற சுவரை இடித்த JCB இயந்திரம் அதிகமான வேகத்தில் பட்டுக்கோட்டையை நோக்கி தப்பிவிட்டது.

இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்யவிட்டால், காவல்நிலைய முற்றுகைக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் மற்ற இயக்கத்தினர் பள்ளியை முகாமிட்டுள்ளனர்.
 
விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில்.

தகவல்: அதிரை Y. அன்வர் அலி (தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்)

Tuesday, March 09, 2010

நெசவுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிரையின் அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.



இதன் தொடர்ச்சியாக, கடந்த 08.03.2010 அன்று அதிராம்பட்டிணம் நெசவுத் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வெட்கம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பலர் கலந்துகொண்டு உரையை கேட்டனர்.

Monday, March 08, 2010

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அமல்படுத்த கோரி சென்னையில் ஜூலை 4ல் மாபெரும் மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கடந்த 07-03-2010 ஞாயிறு அன்று மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைமையில் ஈரோடு பவானி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கே.கே.எஸ்.கே. மஹால் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இது மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி துவக்க உரையுடன் காலை 10.30க்கு ஆரம்பமானது.

பின்னர், பெருகிவரும் ஜமாஅத்தின் பணிகள் நிமித்தமாக கூடுதலாக ஒரு துணைத்தலைவர் பொறுப்பின் அவசியத்தை மாநிலத்தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

கூடுதல் துணைத்தலைவர் பொறுப்பிற்கு மாநிலச் செயளாலர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வை மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில மேலாண்மைக்குழு இணைந்த கூட்டுக்கூட்டம் நியமித்ததற்கு மாநில செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான மத்திய அரசில் இடஒதுக்கீட்டு கோரிக்கையை வென்றெடுக்கவும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அம்சங்களை வலியுறுத்தவும் ஜூலை4 ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் முஸ்லிம்களின் கோரிக்கை மாநாட்டை நடத்த வேண்டியதன் அவசியத்தை மேலாண்மைக்குழு உறுப்பினர் பீ.ஜைனுல் ஆபிதீன் விளக்கி செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்றார். அதைத்தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது எப்படி? என்ற ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க மாநாட்டுக்குழு அமைக்கப்பட்டு அந்த குழுபற்றிய அறிவுப்பும் வெளியிடப்பட்டது. வழக்கம்போல் நடத்தப்படும் கோடை கால நல்லெழுக்கப் பயிற்சி தொடர்பாகவும் மாவட்ட வாரியாக ஆலோசனைகள் பெறப்பட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் பணிகளை இன்னும் வீரியப்படுத்த, அவர்களை ஊக்குவிக்கும் முகமாக டிஎன்டிஜேயின் ரியாத் மண்டலம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. தங்களது மாவட்டத்தின் செயல்பாடுகளை உடனுக்குடனே தவ்ஹீத் ஜமாஅத்தின் http://www.tntj.net/ இணையதளத்திற்கு அதிக செய்திகளை அனுப்பி வைத்து முதலிடம் பெற்ற இரமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ. 18,000ம், இரணடாம் இடம்பெற்ற கோவை மாவட்டத்திற்கு ரூ. 17,000ம், மூன்றாம் இடம் பிடித்த தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு ரூ. 15,000ம் வழங்கப்பட்டது.

மேலும் அதைத் தொடர்ந்து பத்து இடங்களை பிடித்த மாவட்டங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் 39 மாவட்டங்களுக்கும் பீ.ஜே. மொழி பெயர்த்த 156 திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு மாற்று மத அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு நிர்ணய சட்டம் குறித்தும் அதில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மற்றங்கள் குறித்த விளக்கத்தையும் பீ.ஜே. செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

அதில் மேலாண்மைக்குழுவின் அதிகார வரம்பு என்ன? மாநில நிர்வாகத்தின் வரவு செலவுகளை சரி பார்க்க தணிக்கைகுழு அமைக்கப்பட்டதன் விபரங்களையும் அவர் விளக்கினார். மேலும் தணிக்கை குழுவின் தலைவராக அன்வர்பாட்ஷா, உறுப்பினர்களாக சைஃபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி, தம்மாம் தவ்ஃபீக், துபை முஹம்மது சர்புதீன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதற்கான அங்கீகாரத்தையும் செயற்குழு வழங்கியது. அதைத்தொடர் ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு செயற்குழு இனிதே நிறைவு பெற்றது.

07-3-2010 மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டில் காங்கிரஸின் துரோகமும் டி.என்.டி.ஜே.யின் போராட்டமும்

1. 2004 ல் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தனது விசாரணை அறிக்கையை 2007ல் மத்திய சமர்ப்பித்தார். அதை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதிக்காமல் பத்திரிக்கைகள் மூலம் அறிக்கை விபரம் கசியத்தொடங்கிய பிறகு மிகவும் தாமதமாக 2009ல் நாடாளுமன்றத்தில் கமிஷன் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு அரசின் நடவடிக்கை அறிக்கையை கூட சமர்ப்பிக்காமல் கமிஷன் அறிக்கையின் மீதும் விவாதிக்காமல்? சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் பச்சை துரோகம் செய்துவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஜூலை 4 ல் சென்னைத் தீவுத் திடலில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி 15 லட்சம் முஸ்லிம்களை திரட்டி கோரிக்கையை வென்றெடுப்பது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

3. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக கடந்த 2004 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை பிடித்தது. முழு ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தும் வெறும் கமிஷனை அமைத்ததைத் தவிர இடஒதுக்கீட்டிற்காக வேறு எந்த முயற்சியும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு பொதுக்கருத்து எட்டப்பட வேண்டும் என்ற சாக்கைச் சொல்லி இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு வருகின்றது. காங்கிஸின் இந்த மெத்தனப்போக்கையும் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் ரங்கனாத் கமிஷன் அறிக்கையை உடனே அமுல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஆந்திர இடஒதுக்கீடு பறிப்புக்கு கண்டனம்

4. அண்மையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. மூன்றாவது முறையாக ஆந்திர உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்து முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் மண்னை அள்ளிப்போட்டுள்ளது. உடையில் கறுப்புச் சட்டையும் உள்ளத்தில் காவிச் சிந்தனையும் கொண்ட நீதிபதிகள் இந்த நீதித்துறையில் குடியேறி இருப்பதை தெள்ளத்தெளிவாக இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மத அடிப்படையிலான ஒதுக்கீடுதான் என்ற விபரம் பாமரனுக்கும் தெரிந்த உண்மையாகும். அத்துடன் ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது முஸ்லிம்களில் பிற்பட்டோர்கள் என்ற அடிப்படையில் தான் என்பது மற்றொரு உண்மையாகும். இந்த உண்மைகளுக்குப் புறம்பாகவும் மாநிலத்தில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லை என அரசு கருதினால் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 16(4) பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை மதரீதியானது என்று காரணம் காட்டி ரத்து செய்திருப்பது முஸ்லிம்களுக்கு இழைத்த மாபெறும் அநீதியும் அநியாயமும் ஆகும். ஆந்திர நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு இழைத்த இந்த அநியாயத்தையும் அக்கிரமத்தையும் இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

புதுவை மாநில அரசுக்கு கோரிக்கை

5. புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 2.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக புதுவை சட்டமன்றத்தில் புதுவை காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை சட்டமாக்குவோம் என்றும் ஆந்திராவைப் போன்று புதுவையில் வட்டியில்லா கடன் வழங்குவோம் என்றும் புதுவை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்துகின்ற புதுவை அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு உடனே அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு புதுவை அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுள்ளது.

மேற்குவங்க அரசுக்கு நன்றி

6. முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ள மேற்குவங்க அரசை இச்செயற்குழு பாராட்டுகின்றது. அத்துடன் அம்மாநிலத்தில் 25 சதவீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர். அவர்களின் அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்குமாறு அம்மாநில அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

சாமியார்கள் ஒடுக்கப்படவேண்டும்

7. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது. மனிதனுக்கு எந்த கடவுள் தன்மையும் கிடையாது. மனிதத்தன்மையை விட்டு மனிதன் மாறி தெய்வீகத்தன்மை அடைய முடியாது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே தரகர்கள் இருக்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையாகும். இந்தக் கடவுள் கொள்கையை மக்கள் புரியாத காரணத்தினால் ஒழுக்கமிக்க சாதாரண மனிதனை விட சாமியர்களை கடவுளாக நம்பி ஏமாறுகின்றனர். மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி பல சாமியார்கள் மக்களை ஏமாற்றிவருகின்றனர். எனவே மனிதன் கடவுளாக முடியாது என்ற அடிப்படையை மக்கள் விளங்கி சாமியர்களின் சதிவலையில் விழாமல் தங்களை காத்துக்கொள்ள வேண்டுமென அனைத்து சமுதாய மக்களையும் இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

8. இந்த சாமியார்களின் பட்டியலில் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தவர் நித்யானந்தா என்ற மோசடி பேர்வழி. இந்த நித்யானந்தா மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக, கர்நாடக மற்றும் மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9. நாடு முழுவதும் ஆன்மீகத்தின் பெயரால் வளம் வருகின்ற இந்த சாமியார்கள் ஏராளமான நிலங்களை வளைத்துப்போட்டுள்ளனர். மேலும் பல்லாயிரம் கோடி அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அவர்களிடத்தில் உள்ளன. அவர்கள் அவற்றை எந்த வழியில் பெற்றார்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் மூலம் கண்டுபிடித்து முறைகேடாக அவர்களிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

10. கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க உதவுகின்ற இந்த ஆசிரமங்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகளை ரத்துசெய்ய வேண்டுமென மத்திய அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

11. தங்களை கடவுளர்களாக காட்டிக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக ஆசிரமங்கள் என்ற பெயரில் சொத்துக்களை குவித்து வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற பிரபலமான ஆண் பெண் சாமியார்களின் பாதங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விழுந்து வணங்கி ஆசிபெறுவதால் இந்த சாமியார்களின் சட்டவிரோதமான செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு அதிகாரிகள் தயங்குகிறார்கள். சாமியர்களின் பெருக்கத்திற்கு இதுவே காரணம் என்று இச்செயற்குழு கருதுகிறது. மதச்சார்பின்மையை காக்கின்ற வகையில் மத்திய மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் இவர்களுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

12. மதத்தின் பெயரால் செவிடர்களை செவியேற்கச் செய்கின்றோம். குருடர்களை பார்க்கச் செய்கின்றோம் முடவர்களை நடக்கச் செய்கின்றோம் என்று மந்திரம் செய்வதாக நேரிலும் தொலைக்காட்சியிலும் நடத்தப்பட்டுவரும் அனைத்து மதத்தவர்களின் நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டுமென மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

புனே குண்டுவெடிப்பு

13. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை இந்த மாநில செயற்குழு கண்டிக்கின்ற அதே வேளையில் கண்காணிப்புக் கேமராவில் கூட குற்றவாளி யார்? என்று கண்டுபிடிக்க முடியாதபோது விசாரணைக்கு முன்பே எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை இச்செயற்குழு கண்டிக்கின்றது.

14. மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று குரலெழுப்பி மும்பையில் இனவெறி தாக்குதலை நடத்திய சிவசேனா மற்றும் நவநிர்மான் சேனா அமைப்பினர்களின் மீது சட்டப்படி தயவுதாட்சணையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது..

15. தொடர்ந்து இந்தியர்களின் மீது இனவெறித்தாக்குதல் நடத்திவருகின்ற இனவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கின்ற ஆஸ்திரேலிய அரசை இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விலைவாசி உயர்வு

16. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப்பெறுவதுடன் பிற நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் பெட்ரோல் டீசலுக்கு வரி விதிப்பதை கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

17. சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரம் உரியோருக்கு வழங்கப்படாமல் அப்படியே திரும்ப அனுப்பப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்த நிதி கோரி விண்ணப்பிக்கும் போது அந்த நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றே சம்பந்தப்பட்டத் துறையினர் பதிலளிக்கின்றனர். இந்த அநீதியை உடனே தடுத்து நிறுத்தி உரியவருக்கு நிதி கிடைக்க ஆவண செய்யுமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஊடக கருத்து சுதந்திரம் பறிப்புக்கு கண்டனம்

18. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வரதராஜரின் மரணம் மர்மமாக நீடிக்கிறது. அது ஒரு படுகொலை என பலமான ஐயம் எழுவதால் காவல் துறை விசாரணையை சரியான கோணத்தில் கொண்டுசென்று உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பான செய்தியை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சியின் மீது தாக்குதல் நடத்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினரை இம்மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஈரோட்டில் தொழிற் பூங்கா

19. நூறாண்டு காலமாக தோல் தொழிலில் சிறப்புற்று விளங்கும் ஈரோடு மாநாகரில் தோல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக ஈரோட்டில் தோல் தொழில் பூங்காவை ஏற்படுத்தித்தர வேண்டுமென இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு

20. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம தொகுதிகளில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட வகை செய்யும் சட்ட மசோதாவை நாளை (8.3.2010) பிரதமர் தாக்கல் செய்ய போவதாக தெரிகிறது. இந்த முடிவு எதிர் காலத்தில் இந்திய அரசியலில் கேலிக்கூத்தாகத்தான் அமையும். எதார்த்தத்தில் ஒட்டுமொத்த மகளிர் ஜனத்தொகையில் 33 சதவிகிதம் பெண்கள் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. மேலும் எந்த ஒரு அரசியலில் கட்சியிலும்கூட மொத்த உறுப்பினர்களில் 33 சதவிகித பேர் பெண்களாக இல்லை. சில மகளிர் அமைப்பினர்களின் பெண் பிரமுகர்களின் கோரிக்கைத்தானே தவிர ஒட்டு மொத்த பெண் சமுதாயமும் தனக்கு அரசியலில் இட ஒதுக்கீடு கேட்டு போராடவில்லை. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கான களப்பணியாகிய பிரச்சாரம் சுவரொட்டி ஒட்டுதல்இ சிறை செல்லுதல், இன்னபிற தியாகங்களை செய்வதில் 5 சதவிதம் கூட பெண்கள் இல்லாத நிலையில் 33 சதவிகிதம் அளிப்பது அநீதியாகும். இந்தியாவை விட அதிகமாக கல்வி அறிவிலும் பெண் உரிமையைப்பற்றியும் பேசும் மேற்கத்திய நாடுகளில் கூட 10 சதவிகிதம் பெண்கள்கூட அரசியலில் இல்லை எனும் போது கல்வி அறிவிலும் அரசியல் ஈடுபாட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ள இந்திய பெண்கள் சமுதாயத்தின் மீது வலிய திணிப்பதாகவே அமையும். மேலும் ஒரு குறிப்பிட்ட சில ஆணாதிக்க அரசியல்வாதிகளின் கைப்பாகையாகவே அந்த பெண்கள் இருப்பார்கள். இதை உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்ட பெண்கள் பிரதிநிதிகள் விஷயத்தில் நாட்டுமக்கள் நிதர்சனமாக கண்டுவருகிறார்கள். எனவே இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு அநீதி என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.