Monday, June 22, 2015
Friday, June 19, 2015
சஹர் பாங்கு நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள்!
Friday, June 19, 2015
No comments
சஹர் பாங்கு நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள்!
சஹர் பாங்கு நபிமொழியை நிராகரிக்காதீர்!
மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.
பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 621
‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 5299,7247 முஸ்லிம், நஸயீ
மேற்கண்ட நபிமொழியை நடைமுறைப்படுத்தும் முகமாக அனைத்தப் பள்ளிவாசல்களிலும் சஹர் நேரத்தில் பாங்கு சொல்லி நபிவழியை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அறிவிப்பு:
கடந்த வருடங்களில் அதிரை ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் ஸஹருக்காக பாங்கு சொல்லப்பட்டது போல், இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் ஸஹருக்கு பாங்கு சொல்லப்படும்.
என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
Wednesday, June 17, 2015
தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு
Wednesday, June 17, 2015
No comments
ரமலான் மாதம் ஆரம்பம்!
பிறைதேட வேண்டிய நாளான இன்று 17.06.15 புதன் கிழமை மஹரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 18.06.15 வியாழக்கிழமை மஹரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.