Tuesday, January 27, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 16.1.15(வீடியோ)

பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு 
 

Wednesday, January 21, 2015

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துத்திற்கு உதவி செய்வீர்


அதிராம்பட்டினம் திலகர் தெருவைச்சார்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சகோதரின் 13 வயது மகன் ஹோட்கின் லிம்போமா வகை கேன்ஷரால் பாதிக்கப்பட்டுள்ளான் இந்த கேன்ஷர் 2வது ஸ்டேஜில் உள்ளது உடனே கீமோதெரபி ட்ரீட்மெண்ட ஆரம்பிக்க வேண்டும் இதுவரை கடனுபட்டு ரூ30 000 வரை டெஸ்ட்களுக்கு செலவாகிவிட்டது எனவே கொடையுள்ள படைத்தவர்கள் இந்த சிறுவனின் மருத்துவ உதவிக்காக அதிரை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் உங்கள் உதவிகளை வழங்கினால் அதை சிறுனின் மருத்துவ சிகிச்சைகாக வழங்கப்படும்

தொடர்புக்கு : 9944824510, 9500821430, 8015379211 

வங்கி கணக்கு விபரம்:

வங்கி கணக்கு பெயர் (Name) : TAMIL NADU THOWHEED JAMAATH
வங்கி பெயர் (Bank Name) : CANARA BANK
கணக்கு எண் (Account Number) : 1201201001103 
Branch) : ADIRAMPATTINAM
IFSC Code: CNRB0001201

Saturday, January 17, 2015

5 பேருக்கு வைக்கப்பட்ட சூனியம் பலித்ததா? (வீடியோ)

5 பேருக்கு வைக்கப்பட்ட சூனியம் பலித்ததா?
 அடுத்தது என்ன ? P J



Friday, January 16, 2015

அப்பாஸ் அலியின் உளறல்களுக்கு வரிக்கு வரி பதில்; (வீடியோ)

அதிராம்பட்டினத்தில் 10.1.2015 சனிக்கிழமை நடைபெற்ற மார்க்கவிளக்க பொதுக்கூட்டத்தில் அப்பாஸ் அலியின் உளறல்களுக்கு வரிக்கு வரி பதில் என்ற தலைப்பில் சகோதரர் செய்யது இபுராகீம் நிகழ்த்திய உரை (வீடியோ)




Sunday, January 11, 2015

அதிரையில் நடைபெற்ற மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக நேற்று 10.1.2015 சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி அருகில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று இதில் M I சுலைமான் வஹி அல்லாதது வழிகேடே! என்ற தலைப்பிலும் செய்யது இபுராகீம் அப்பாஸ் அலியின் உளறல்களுக்கு வரிக்கு வரி பதில் என்ற  தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் குருகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்










Monday, January 05, 2015

அதிரையில் கொள்கையற்ற சர்க்கஸ் கூடாரத்தின் சங்கமம்



அ தா த குழுவினர் கொள்கையற்றவர்கள் என்பது மேலும் நிரூபனமானது.

சூனியம் (சிஹ்ர்) குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை தவறானது என்பதாலும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கும் சில செய்திகள் குர்ஆனுக்கு முரண்படவில்லை என்பதாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தான் விலகியதாகக் கூறிய, அ தா தவிற்கு கிடைத்த புதிய ஆய்வாளர் (?) அப்பாஸ் அலியை அழைத்து வந்து பேச வைத்ததன் மூலம் தாங்கள் கொள்கையற்றவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் அ த த குழுவினர்.
ஏனென்றால்....

மேலே சொன்ன இரண்டு காரணங்களால் தான் அவர் ஜமாஅத்திலிருந்து விலகியிருக்கிறாரே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொல்வது போல் அவர் காசுக்காகவோ, அரபு நாட்டு சம்பளத்துக்காகவோ மாறவில்லை. (?)

அல்லது இலங்கை உமர் அலி போன்று, குர்ஆன் மட்டும் போதும் என்ற வழிகேட்டைச் சொன்ன ரஷாத் கலிஃபா போன்று மூளை குழம்பியதால் அவர் ஜமாஅத்திலிருந்து விலகவில்லை (?). அப்படி மாறினால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது தான் சொன்ன மார்க்கக் கருத்துக்கள் அனைத்தும் பொய் என்றல்லவா அவர் சொல்லியிருப்பார். அப்படி அவர் சொல்லவே இல்லை. (?) பாவம்.

எனவே அவர் கொள்கையற்றவரல்ல, கொள்கையில் உறுதியானவர். மேலே சொன்ன இரண்டு காரணங்கள் தவிர தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் மற்ற அனைத்துக் கருத்துக்களும் சரியானது என்று நம்புகின்றார் (?). அப்பாஸ் அலியின் கொள்கை தெரியாமல் அவரை மேடையேற்றியுள்ளனர் பிஜே எதிர்ப்புக் கொள்கையுடைய அ த த வினர்.

அவரின் கொள்கை உறுதி (?)க்கு சில சான்றுகள்
எஸ் டி பி ஐயைக் குறித்து கொள்கையற்ற கூட்டம் என அவர் ஏகத்துவம் மாத இதழில் கிழி கிழி என கிழித்து கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலிருந்து இன்னும் அவர் மாறவில்லை. (?)

இது தெரியாமல் அந்த அமைப்பிலிருந்து சிலர் வந்து அமர்ந்திருந்தனர். பாவம்!
தமுமுகவை சுனாமியில் ஊழல் செய்தவர்கள், ஃபித்ரா பணத்தை லட்சக்கணக்கில் மூட்டை போட்டவர்கள் என்றெல்லாம் இங்கிருக்கும் போது பேசியவர் தான் அப்பாஸ் அலி. அதிலிருந்தெல்லாம் அவர் இன்னும் மாறவில்லை. (?)

அப்படியிருக்கும் போது தமுமுக குறித்து அவரின் கருத்து என்னவென்றே தெரியாமல் பிஜேவை எதிர்த்துப் பேசுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அக்கூட்டத்தில் இந்த கொள்கை கெட்ட கூட்டமும் வந்திருந்தனர்.
நபித்தோழர்களை பின்பற்றும் சலஃபிக் கூட்டத்தை வழிகெட்ட கூட்டம் என்று அவர் ஏகத்துவம் இதழில் எழுதிய கட்டுரையை பல ஊர்களில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் நோட்டீஸாக அடித்து பரப்பினர். அந்த அளவுக்கு ஸலஃபிக் கொள்கையினரின் வழிகேட்டை தெளிவாக

அடையாளம் காட்டி எழுதியிருந்தார். அந்தக் கருத்திலிருந்தும் அவர் இன்னும் மாறவில்லை. அதிலும் அவர் உறுதியாகத் தான் இருக்கிறார் (?)

இது தெரியாமல் சலஃபுக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் அப்பாவியாய் வந்து இக் கூட்டத்தில் சங்கமித்திருந்தனர். அய்யோ பாவம்! சலஃபுக் கூட்டம்!

பிறை விசயமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தின் அடிப்படையில் தமிழகத்தில் பார்க்கப்படும் பிறையை வைத்தே தமிழகத்தில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற கருத்தையே அப்பாஸ் அலி சொல்லி வந்தார். அதிலிருந்தும் இன்னும் அவர் மாறவில்லை. (?)

இது தெரியாமல் உலகப் பிறை ஊணப் பிறை பார்க்கும் கும்பலும் இதில் சங்கமமாகியுள்ளனர். பெருநாள் வரும் போது அப்பாஸ் அலியை விரட்டி விடுவார்களா? இவர்களின் ஊனப் பிறை குறித்து அப்பாஸ் அலி விமர்சித்து விளக்கமளிப்பாரா? என்பது பின்னால் தெரியும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் வரதட்சனை தான் என்றும் அவர்கள் விரும்பிக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது என்றும் ஆடம்பரத் திருமணம் கூடாது என்றும் அவர் தனது வரதட்சனை ஓர் பெண் கொடுமை என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் கர்ஜனையிலிருந்து அவர் இன்னும் மாறவில்லை.

அப்படியிருக்கும் போது எல்லாக் கல்யாணத்திலும் பிரியாணிக்காக பல் இளிக்கும் கொள்கைக் குன்றுகள் (?) அப்பாஸ் அலியை தெரியாமல் அழைத்து வந்து விட்டனர்.

அது மட்டுமல்ல, இனி அப்பாஸ் அலியை திருமணத்தில் தஃவா செய்ய அழைப்பார்கள். எந்த ஆடம்பரக் கல்யாணத்துக்கும் பெண் வீட்டார் விருந்து போடும் திருமணத்துக்கும் அவர் போக மாட்டாரே? பார்க்கத் தான் போகிறோம் அவரின் கொள்கை உறுதியை(?) ( வேடிக்கையை! )

பிஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் தவறு இருப்பதாகக் கூறியவர்களை தன் வாதத்தின் மூலம் பொறிந்து தள்ளியவரல்லவா? அப்பாஸ் அலி. அதிலிருந்தும் அவர் மாறவில்லை(?)

பிஜே தமிழாக்கத்தில் நிறைய தவறுகள் இருப்பதாக அவதூறுப் பிரச்சாரம் செய்து வரும் அ த த குழுவினர் இதையெல்லாம் அவரிடம் கேட்காமலேயே அவரை மேடைக்கு அழைத்து வந்து விட்டனர்.

அப்பாஸ் அலி முன்னர் சொன்ன ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இவர்களிடம் இருக்கையில் மக்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் மூலை நரைத்தவர்கள்.

பெண்கள் முகத்தை மூடக் கூடாது என்று சலஃபிகளிடம் ஆணித்தரமாக விவாதம் செய்தவர் அப்பாஸ் அலி. அதிலும் இன்று வரை உறுதியாக இருக்கிறார் (?).

இதைப் பற்றியெல்லாம் இனியும் அ தா தவினர் போன்று யாரும் மேடை அமைத்துக் கொடுத்தால் பழைய வேகத்துடன் பேசுவார்( ? ). மேடை கிடைத்ததற்காக கொள்கையை மறைப்பவர் அல்ல இந்த அப்பாஸ் அலி (?)

பாதுகாப்பான பயணமாக இருந்தால் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஹஜ்ஜு உள்ளிட்ட எந்த பயணமாக இருந்தாலும் மஹ்ரமான ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணம் செய்து போகலாம் என்று எழுதிய அப்பாஸ் அலி அதிலும் இனி உறுதியாகத் தான் இருப்பார். (?)

இதையெல்லாம் அவர் எழுதும் போது கேலி செய்த கும்பல் இப்போது அதை மறந்து விட்டு அவர் கூட்டத்துக்கு வந்து விட்டனர். ஹய்யோ! ஹய்யோ! சிரிப்பு தான் வருது.

அதிகாரம் உடையவரே அமீராக இருக்க முடியும். இயக்கத்தின் தலைவர்கள் அமீராக முடியாது. அமீர் என்ற பெயரில் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற கருத்திலேயே அப்பாஸ் அலி இருந்தார். இன்னும் அக்கருத்தில் உறுதியாகத் தான் இருக்கிறார். (?)

அமீரை ஏற்றுக் கொண்ட கூட்டம் அறியாமல் அப்பாஸ் அலியை மேடையேற்றி விட்டனர்.

ஜகாத் விசயத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் கொடுத்த பொருளுக்கே திரும்பத் திரும்ப ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தையும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்னும் அதே கருத்தில் தான் இருக்கிறார் (?).

ஆனால் இக்கருத்து உலகத்தில் யாருமே சொல்லாத கருத்து என்று விமர்சித்த கூட்டம் ஜகாத் விசயத்தில் அப்பாஸ் அலியின் கருத்தை கேட்காமல் மேடையேற்றிவிட்டனர்.


எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் இவர்கள் செயல்படுகிறார்கள். அண்ணனைப் பேசினால் தான் 30 வருடமாக காணாமல் போன இயக்கத்தை வளர்க்க முடியும் என்பது தான் கொள்கையற்ற இந்தக் கூட்டத்தினரின் நோக்கம்

அதனால் தான் தங்களுடன் பல கருத்துக்களில் மாற்றமாக உள்ள அப்பாஸ் அலியை அழைத்து வந்துள்ளனர்

பிற இயக்கத்தினரின் மேடைகளில் ஏறக் கூடாது என்றும் அப்பாஸ் அலி பேசியிருக்கிறாரே பிறகு எப்படி இந்த மேடையில் ஏறினார் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அவர் கொள்கையில் உறுதியானவர் (?) மிகச் சிறந்த ஆய்வாளர் (?) பணத்துக்காகவோ மேடைக்காகவோ அவர் இவர்களின் மேடை ஏறவில்லை. தான் முன்பு சொன்னதை மறக்கும் நோய் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

இல்லை இல்லை!, தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் தற்போது அப்பாஸ் அலி வாபஸ் வாங்கிக் கொண்டார் என்று இந்தக் கூடாரம் சொல்வார்களானால் சூனியம் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மறுக்கும் ஹதீஸ்களைப் பற்றிய ஆய்வால் (?) அவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்கவில்லை என்பதும், கொள்கை கெட்டுத் தான் மூலை குழம்பித் தான்இ பணத்துக்காகத் தான் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றினார் என்பதும் அதற்காகத் தான் அவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்கி நடவடிக்கை எடுத்தது என்பதும் மேலும் நிரூபனமாகும்.

அப்பாஸ் அலியின் கொள்கை தெரியாமல் அவரை மேடையேற்றியதன் மூலம் இவர்கள் கொள்கையற்றவர்கள் என்பது மேலும் நிரூபனமாகியிருக்கிறது

கொள்கையற்ற கூட்டம் கொள்கையை இழந்த அப்பாஸ் அலியை நம்புகிறது. கொள்கையிழந்த அப்பாஸ் அலி கொள்கையற்ற அனைவருடனும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

அவர்கள் இவரை வழிகெடுப்பார்களா? இவர் அவர்களை வழிகெடுக்கப் போகிறாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

Sunday, January 04, 2015

கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து அப்பாஸ் அலி பதறி ஓட்டம்:

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து அப்பாஸ் அலி பதறி ஓட்டம்:

ஞாயிற்றுக்கிழமை 04.01.2015 அதிரையில் அப்பாஸ் அலி உரை நிகழ்த்த உள்ளதாகவும், அந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கேள்வி கேட்டால் அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்ற ரீதியில் பல பில்டப்புகளை கொடுத்து கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

04.01.2015 அன்று அதிரையில் அப்பாஸ் அலி.

ததஜவினருக்கு அறிய வாய்ப்பு!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்இன்ஷா அல்லாஹ், அதிரையில் எதிர்வரும் 04.01.2015 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து...

ததஜவினருக்கு அறியதோர் வாய்ப்பு

1. ஒரு சில மாதங்களுக்கு முன் மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் காரைக்கால் நகருக்கு வருகை தந்திருந்தபோது, ததஜவினர் 'சூனியம்' குறித்து தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும்இ தெளிவுபெற வேண்டி சிறப்பு கேள்வி பதில் நேரத்தை ஒதுக்கித் தரும்படியும் பகிரங்கமாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வேண்டிக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களும் அவர்களின் மனநிலையில் உள்ள ஏனைய ததஜவினரும்...

2. ததஜ தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தபடி, மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் பேசும் இடங்களில் எல்லாம் சூனியம் சம்பந்தமாக கேள்வி கேட்டு அவரை திணறடிக்க விரும்பும் ததஜவினரும்...

3. மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கேள்வி கேட்க விரும்பும் ததஜ சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்...இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்.

மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் உரைக்குப்பின் நேரடியாக கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

மேற்கண்டவாறு அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் சொல்லப்பட்டது பெயரளவுக்குச் செய்யப்பட்டதா? உண்மையாகவே தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய எங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக அறிவிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அப்பாஸ் அலியை வைத்து பொதுக்கூட்டம் நடத்தும் தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கு நமது அதிரை கிளை சார்பாக கடிதம் வழங்கினோம்.

அதில் கீழ்க்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதிரை தாருத் தவ் ஹீத் நிர்வாகிகளுக்குஇ

அஸ்ஸலாமு அலைக்கும்

எங்களுக்கு சூனியம் தொடர்பாக சுமார் 30க்கும் மேற்பட்ட கேள்விகள் உள்ளன. அவை அனைத்துக்கும் விளக்கம் அளித்தால் தான் உண்மையான அறிவிப்பாக இது இருக்க முடியும். அவ்வாறு இல்லாமல் கூட்டம் முடியும் நேரத்துக்கு நெருக்கத்தில் கேள்வி பதில் என்று ஆரம்பித்துஇ இத்துடன் நேரம் முடிந்து விட்டது என்று சொல்லப்பட்டால் அந்த அறிவிப்பு போலி அறிவிப்பாகி விடும். எனவே இதை உறுதிப்படுத்திக் கொள்ள இக்கடிதம் அளிக்கிறோம். எங்களின் கேள்விக்காக குறைந்தது எங்களுக்கு இரண்டு மணி நேரங்கள் ஒதுக்கித் தர வேண்டும்.

அல்லது குறைந்தது 20 கேள்விகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இப்படி உறுதி மொழி அளித்து எங்களுக்கு எழுத்து மூலமான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும் கேள்விகள் எழுத்து மூலமாக இல்லாமல் வாய்மொழியாக கேட்க அனுமதிக்க வேண்டும். எழுத்து மூலமாக கேள்வி என்று அறிவித்தால் அதில் தனக்கு சாதமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் நாடகம் நடத்தி எங்கள் கேள்விகள் தவிர்க்கப்படும் என்ற சந்தேகம் ஏற்படும். இதற்கு இடம் தாரமல் நேரடி வாய் மொழியான் கேள்விக்கு உத்தரவாதம் தர வேண்டும் என்று கோரி இம்மடலை அளிக்கிறோம்.

ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேரடியாக கேள்விகள் கேட்க தங்களது எழுத்துப்பூர்வமான ஒப்புதலை வரக்கூடிய 31.12.14 புதன் கிழமை இரவு 8மணிக்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு,

அதிரை கிளை தலைவர்

மேற்கண்டவாறு நாம் அவர்களுக்கு அளித்த கடிதத்திற்கு கீழ்க்கண்டவாறு பதிலளிதத்தன் மூலம் வாய்ச்சொல் வீரர் அப்பாஸ் அலி நமது தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையினரது கேள்விகளை சந்திக்க திராணியில்லாமல் ஓட்டமெடுத்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

அவர்கள் அளித்துள்ள பதிலை பாருங்கள்:

'2மணி நேரத்தில் தவ்ஹீத் ஜமாத்தினர் மட்டுமல்லாது பார்வையாளர் பகுதியில் இருப்பவர்களது கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். 3 நிமிட்த்திற்கு மேல் கேள்வி கேட்க அனுமதியில்லை' இது தான் அவர்களது பதில் கடித்த்தின் சாரம்சம்.

தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று தான் அவர்களது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்கள்.

நாம் குறைந்தது 20 கேள்விகள் கேட்பதற்கோ அல்லது குறைந்தது 2மணி நேரமோ ஒதுக்கச்சொல்லி கேட்டிருந்தோம். நமது கேள்விகளை எதிர்கொள்ள நான் தயார் என்று சொல்பவர் என்ன செய்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்தை நாங்கள் ஒதுக்குகின்றோம்; தவ் ஹீத் ஜமாஅத்தினர் எப்படி வேண்டுமானாலும், அந்த இரண்டு மணி நேரத்தில் கேள்விகளைக் கேட்கலாம்; அத்துனை கேள்விகளுக்கும் அப்பாஸ் அலி வரிக்கு வரி பதிலளிப்பார் என்று பதில் தந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பதிலளிக்க திராணியில்லாமல், 'இரண்டு மணி நேரத்தை கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக நாங்கள் ஒதுக்கியுள்ளோம்; அதில் தவ் ஹீத் ஜமாஅத்தினரும் கேள்வி கேட்கலாம்; தவ் ஹீத் ஜமாஅத் அல்லாத பார்வையாளர் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்படும் என்று சொல்லி தவ் ஹீத் ஜமாஅத்தினரது கேள்விகளுக்கு பயந்து பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டமெடுத்துள்ளனர்.

கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு கேள்விகளை மட்டும் தவ் ஹீத் ஜமாஅத்தினரை கேட்க விட்டு விட்டு, பார்வையாளர் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் கேள்வி கேட்க அனுமதி அளித்துள்ளதால் உங்களுக்கு கேள்வி கேட்க அனுமதியில்லை என்று ஓட்டமெடுப்பதற்குத்தான் இத்தகைய நாடகம் என்பதை அனைவரும் எளிதில் விளங்கலாம்.

தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று அறிவிப்பு செய்துவிட்டு, கேள்வி கேட்க அனுமதிக்கின்றோம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வந்து தாராளமாக கேள்வி கேட்கலாம் என்று சொல்லிவிட்டு, நாம் கேள்வி கேட்க அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தவுடன் அந்தர் பல்டி அடித்து, 'உங்களுக்கும் பதில் சொல்வார்; ஊருக்கும் பதில் சொல்வார்' என்று ஓட்டமெடுத்துள்ளார் அப்பாஸ் அலி.

மேலும் ஒரு கேள்வி கேட்க 3 நிமிட்த்திற்கு மேல் அனுமதியில்லையாம். சந்தேகங்களுக்கு பதில் சொல்பவர் இப்படித்தான் 3 நிமிட ஷரத்துகளை போடுவார்களா?

பொதுப்படையாக கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றோம் என்று போட்டிருந்தால் நாம் கடிதம் கொடுத்திருக்கமாட்டோம். தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை கோடிட்டுக்காட்டி அறிவிப்பு செய்துவிட்டு எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்று சொல்லி அறிவிப்பு செய்துவிட்டு இப்படி அந்தர் பல்டி அடித்துள்ளதன் மூலம் இவர்களது உண்மை முகம் அம்பலமாகியுள்ளது.

மேலும் கேள்விக்கு பதில் அளிப்பதாக இருந்தால் எவ்வித சலசலப்பும் ஏற்படாது என்பதற்கு பொறுப்பேற்று நாம் உறுதிமொழிக்கடிதம் வழங்க வேண்டுமாம். அப்பொழுதுதான் கேள்வி பதில் நிகழ்ச்சியில் நாம் கேள்வி கேட்க அனுமதி அளிப்பார்களாம். அப்படியானால் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு மட்டும்தான் கேள்வி கேட்க அனுமதி அளிக்கின்றோம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். நாம் எவ்வித சலசலப்பும் ஏற்படாது என்று பொறுப்பேற்று கடிதம் வழங்கிய பிறகு பார்வையாளர்கள் பகுதியில் இருந்து யாராவது சலசலப்போடு கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வார்களாம். இப்படி ஒரு முரண்பட்ட உளறலையும் தங்களது கடித்த்தில் உளறியுள்ளனர்.

இஸ்மாயில் ஸலபி கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக அறிவிப்புச் செய்தவுடன் 2மணி நேரம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்கியதுமே ஆட்டம் கண்டு சப்பை காரணங்களைச் சொல்லி ஓட்டமெடுத்தார். அதுபோலத்தான் தற்போது அப்பாஸ் அலியும் தவ்ஹீத் ஜமாஅத்தினரது கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியில்லாமல் ஓட்ட மெடுத்துள்ளார். சூனியத்திற்கு கொடி தூக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த இழி நிலையைத்தான் வல்ல ரஹ்மான் ஏற்படுத்துவான் என்பது மீண்டும் ஒரு முறை நீருபணமாகி உள்ளது.

குறிப்பு : அப்பாஸ் அலியின் உளறல்களுக்கு வரிக்கு வரி பதிலளிக்கக் கூடிய மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 10.01.15 சனிக்கிழமை இரவு 6.30மணிக்கு நடைபெறும் இன்ஷா அல்லாஹ்....

வாழ்வாதார உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக வருட வருடம் வசூல் செய்த குர்பானி தோல்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அதிரையில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்துவருகிறது அதன் தொடர்ச்சியாக இந்த வருடம்  தோல்கள் மூலம் கிடைத்த பணத்தில் முதல் தவனையாக 5 நபர்களுக்கு கிளைச்சார்பாக உதவிகள் செய்யப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்

சுரைக்காய் கொல்லையை சார்ந்த மின்சார வசதி கூட இல்லாத மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சகோதரிக்கு தையல் மிஷின் வழங்கியபோது



மேலத்தெருவை சார்ந்த சகோதரிக்கு கிரைன்டர் மிஷின் வழங்கியபோது


தரகர் தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவி வழங்கியபோது


தரகர் தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவி வழங்கியபோது


தரகர் தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவி வழங்கியபோது

Saturday, January 03, 2015

அதிரையில் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்


இன்ஷா அல்லாஹ்  வருகின்ற 10.1.2015 சனிக்கிழமை மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வாபள்ளி அருகில் அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் 


அதிரைக்கிளையில் ஆசோனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையில் ஆலோசனைக்கூட்டம் 2.1.15 வெள்ளிக்கிழமை மஹரிப் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையிலும்  அதிரைக்கிளை துபை பொருப்பாளர் ஜாஹிர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

வருகின்ற 10.1.2015 சனிக்கிழமை மாலை தக்வா பள்ளி அருகில் செய்யது இபுராகீமை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது

பெண்கள் மதரஸா நடத்துவதற்கு மாதம் சுமார் 30.000 தேவைப்படுகிறது அதை ஒரு பங்கு 1000 ரூபாய் என்று வைத்து 30 பங்கு தாரர்களை சேர்ப்பது (ஒருவர் எத்தனை  பங்கு வேண்டுமானாலும் தரலாம்)





Thursday, January 01, 2015

புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவனின் மருத்துவத்திற்கு உதவி

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தை சார்ந்த கூலித்தொழிலாளி செய்யது என்பவரின் மகன் வஸிம் அஹ்மது ( வயது 5 ) என்ற சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் அவதியுற்று வருகின்றான் என்றும், இச்சிறுவனின் மருத்துவ செலவு வகைக்கு  ₹ 6 இலட்சம் வரை தேவைப்படுவதாக கூறி கடந்த [ 19-11-2014 ] அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் கிளையின் சார்பில் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 இந்த அறிவிப்பை பார்த்த அதிரை எஸ் ஏ இம்தியாஸ் அகமது ரூபாய் 57.000 அவரின் சகோதரர் மூலம் அதிரை கிளை நிர்வாகிகளிடம் தரப்பட்டது அந்த பணத்தை மேலப்பாளையம் கிளைத்தலைவருக்கு அனுப்பப்பட்டு அதை 29 வார்டு தலைவர் ரம்ஜானிடம் ஒப்படைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

 மேலப்பாளையம் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது



 அதிரை கிளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது