Friday, October 29, 2010
Thursday, October 28, 2010
Tuesday, October 26, 2010
மத்ஹபுக்கு வக்காலத்து வாங்க வந்தவர் மானத்தை இழந்தார்: சென்னை 3வது விவாதம்
Tuesday, October 26, 2010
சென்னையில் ஷேக் அப்துல்லாஹ் சமாளியுடன் நடைபெற்ற பரபரப்பான விவாதத்தின் நேரடி தொகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (23, 24.10.2010) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.
இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.
சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.
தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.
விவாதத்தின் ஆரம்பமும் அரண்டு போன ஜமாலியும்:
விவாதம் ஆரம்பிப்பதற்காக இரு தரப்பு நடுவர்கள் சார்பாகவும் நாணயச் சுழற்சி மேற் கொள்ளப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தவ்ஹீத் ஜமாத் தரப்பால் சகோதரர் பி.ஜெ தனது வாதத்தை ஆரம்பித்தார்.
பொய்களின் மொத்த உருவம் ஜமாலி:
விவாதத்தின் ஒப்பந்தப்படி ஜமாலியினதும் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்டவர்களினதும் ஆபாசமான அசிங்கமான முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை சகோதரர் பி.ஜெ பட்டியலிட ஆரம்பித்தார்.
முதலாவதாக அபூதாலிப் 'முஸ்லிம்' என்று ஓரிடத்திலும், இன்னோரிடத்தில் அபூதாலிம் காபிர் என்றும் ஜமாலி பேசிய இரண்டு வீடியோ ஆதாரங்களை திரையில் போட்டுக் காட்டினார் சகோதரரர் பி.ஜெ அவர்கள்.
இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் இவர் வல்லவர் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட இந்த வீடியோவில் அபூதாலிப் 'முஸ்லிம்' என்பதற்கு இப்னு அஸாகீர் நஸயீ அபூதாவுத் ஆகிய கிரந்தங்களில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அதன் ஒரு பகுதியை சொல்லி மறு பகுதியை மறைத்திருந்தார்.
அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியே அபூதாலிப் அவர்கள் காபிர் தான் என்பதற்கு சான்றாக இருந்தது.
மீதியை ஏன் மறைத்தீர்கள்? மக்கள் மத்தியில் ஏன் இப்படி பொய்களையும் புரட்டுகளையும் பறப்புகிறீர்கள்? என்று விவாதத்தின் இறுதிவரைக் கேட்டும் இந்தக் கேள்விக்கு ஜமாலி பதிலே தரவில்லை.
முதல் வாதத்திலேயே உளற ஆரம்பித்த ஜமாலி:
பி.ஜெவின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் ஆபாசங்கள் அசிங்கங்கள் இருக்கிறது என்று வாதிட வந்த ஜமாலி அவர்கள்.முதல் வாதத்திலேயே தலைபிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமின்றி பேச ஆரம்பித்தார்.
பி.ஜெ ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறினார். தற்போது ஆண்கள் தொடையை திறந்து கொள்ள அனுமதியுண்டு என்று கூறுகிறார். இது அவர்களது வெளியீடுகளில் உள்ள அபத்தம் என்று முதல் வாதத்தையும், கலாலா தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களின் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் 4வது அத்தியாயம் 12வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தினை அரைகுறையாக வாசித்துவிட்டு, அதில் தவறு உண்டு என்று தனது இரண்டாவது வாதத்தையும் முன்வைத்தார்.
முரண்பாடு என்றால் என்னவென்று ஜமாலிக்கு பாடம் நடத்திய பி.ஜெ:
விவாதம் ஆரம்பித்த அடுத்த கணமே உளறுவதற்கும் ஆரம்பித்தார் ஜமாலி. இருந்தாலும் அவருடைய உளறளுக்கும் விவாதம் என்பதால் பதில் கொடுக்க வேண்டியது பி.ஜெயின் கடமை என்பதால் முதலில் முரண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொன்னார்.
ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு, பிறகு தான் சொன்ன கருத்து தவறு, தற்போது திருத்திக் கொண்டு, இந்தக் கருத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்து விட்டு, முதலாவது கூறிய கருத்துக்கு மாற்றமாக கருத்துச் சொன்னால், அதற்குப் பெயர் முரண்பாடு அல்ல, திருத்தம் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் பாடமாக நடத்திக் காட்டினார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.
இதே நேரம் ஜமாலியைப் போல் ஒரு மேடையில் ஒரு கருத்தையும், இன்னொரு மேடையில் அதற்கு மாற்றமாக இன்னொரு கருத்தையும் சொல்லிவிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொள்கையற்றவனாக தன்னை காட்டிக் கொள்வதென்பது மூடத்தனம் கயமைத்தனம் பித்தலாட்டம் முரண்பாடு என்பதையும் மிக அழகாக விளக்கிச் சொன்னார்.
கிழித்தெறியப் பட்ட மத்ஹபு குப்பைகளும் மாட்டிக் கொண்ட ஜமாலியும்:
ஜமாலியுடையவும் அவர் ஆதரிப்பவர்களினதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருக்கும் முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் கயமைத்தனங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார் பி.ஜெ
ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட ஒரு கேள்விக்குக் கூட ஜமாலியினால் இறுதி வரை பதில் தரவே முடியவில்லை.
மத்ஹபுகளில் மலிந்திருந்த அசிங்கங்கள்:
ஹனபி மற்றும் ஷாபி போன்ற மத்ஹபுகளில் ஒரு சாதாரண மனிதன் கூட நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்களும் அபத்தங்களும் கயமைகளும் நிறைந்துள்ளதை சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்டு சொன்னார்.
சகோதரர் பி.ஜெ பட்டியலிட்ட மத்ஹபு அசிங்கங்களை தலைப்புவாரியாக இங்கு குறிப்பிடுகிறோம்
1.தானாக காற்றை விட்டு தொழுகைகளை முடிக்கலாம்.
2.கிழக்கிலிருக்கும் ஒருவரும் மேற்கில் இருக்கும் இன்னொருவரும் திருமணம் முடிக்கலாம். அப்படி முடித்து ஆறு மாதத்தில் மனைவி பிள்ளை பெற்றால் அதனை குறை சொல்ல முடியாது. ஏனெனில் கராமத்தின் மூலம் அவன் அவளிடத்தில் வந்து போயிருக்கக் கூடும்.
3.ஹஜ்ஜுடைய நேரத்தில் மனைவி தவிர யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொண்டாலும் ஹஜ் முறியாது.
4.ஹஜ்ஜுடைய காலத்தில் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும் ஆணின் ஹஜ்ஜை முறிக்காது.
5.சிறுமியுடன் விபச்சாரம் செய்தால் தண்டனையில்லை.(மத்ஹபு நூல்கள் அதற்காக சொல்லும் காரணங்களை விவாதத்தில் பார்த்துக் கொள்ளவும்).
6.ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை.
7.விபச்சாரம் செய்துவிட்டு பணம் கொடுத்துவிட்டால் அதற்கு தண்டனை இல்லை.
8.பைத்தியத்துடன் விபச்சாரம் செய்தால் தண்டனை கிடையாது.
9.வெளிநாட்டுக் காபிர் உள்நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் காபிருக்கு தண்டனை கிடையாது.
10.ஒரு பெண்ணை கண்ணியா இல்லையா என்று கண்டுபிடிக்க அவளை சுவற்றில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும். அது சுவற்றில் படுகிறதா? இல்லையா? என்பதை வைத்து அவள் கண்ணியா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
11.விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டவன் விபச்சாரியை மனைவி என்று சொல்லிவிட்டால் தண்டனை இல்லை.
12.தனது மர்ம உருப்பை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைத்தால், அவனுக்கு சட்டம் என்ன? என்று அதற்கு சட்டம் தொகுத்துள்ள மத்ஹபுவாதிகள்.
13.தான் திருமணம் செய்த மனைவியுடன் இரவில் உணர்ச்சியுடன் நெருங்கும் போது அவளுடைய மகளின் மீது தவறுதலாக கைபட்டுவிட்டால் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள திருமன உறவு நீங்கிவிடும்.
14.இரண்டு பேர் திருடச் சென்று ஒருவன் உள்ளே சென்று திருடிவிட்டு வெளியிலிருப்பவனுக்கு அதனை கொடுத்தால் இருவருக்கும் தண்டனை இல்லை.(உள்ளே போனவன் திருடியதை வெளியில் கொண்டுவரவில்லை வெளியில் இருந்தவன் உள்ளே போய் திருடவில்லை இதுதான் மத்ஹபின் விளக்கமாம்.)
15.தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் போது முதலாவது வரும் எச்சிலை விழுங்கிவிட வேண்டும்.
16.ஹஜ்ஜின் போது சுய இன்பம் செய்தால் அது ஹஜ்ஜை பாதிக்காது.
17.தொழ வைத்த இமாமையே குர்பானி கொடுக்களாம்.
18.சிறிதளவு கஞ்சா அடிக்கலாம்.
19.குழந்தையை கடத்தியவனுக்கு தண்டனை இல்லை.
20.பல் துலக்கும் போது தனது இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் பல் துலக்க வேண்டும்.
மத்ஹபில் உள்ள குப்பைகள் பட்டியல் போட்டு எடுத்துக் காண்பித்தார் சகோதர் பி.ஜெ. அந்த அசிங்கங்களுக்கு விவாதத்தின் இறுதி வரை எந்த ஒரு பதிலையும் தராது தனது தோல்வியை ஒத்துக் கொண்டு அமைதி காத்தார் ஜமாலி.
நபியவர்கள் மீதே பொய் சொன்ன ஜமாலி, எடுத்துக் காட்டும் படி சவால் விட்டார் பி.ஜெ.
கழுதையுடன் புணருவது தொடர்பான மத்ஹபு குப்பைகளை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டும் போது மத்ஹபு தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஜமாலி இதற்கு மட்டும் நபியவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார்.
அதாவது :
யார் மிருகத்துடன் புணர்கிறானோ அவனுக்கு தண்டனை இல்லை. என்று நபியவர்கள் கூறிய செய்தி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொய் சொன்னார் ஜமாலி.
அப்படி ஒரு ஹதீஸே இல்லை. இருந்தால் திர்மிதியில் இருந்து எடுத்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார் பி.ஜெ. ஆனால் நபியின் மீது பொய் சொன்ன பொய்யர் ஜமாலி இறுதிவரை அப்படி ஒரு ஹதீஸைக் காட்டவே இல்லை.
ஜமாலி நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டிய பொய்கள்:
- அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக இப்னு அஸாகீரில் உள்ளதாக குறிப்பிட்டார் ஜமாலி. ஆனால் இப்னு அஸாகீரில் உள்ள செய்தியோ அபூதாலிப் காபிர் என்பதைத் தான் குறிப்பிடுகிறது.
நபியவர்கள் அபூதாலிபை காபிர் என்று எந்த ஹதீஸில் சொன்னாரோ, அதே ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக நபியின் மீதே பொய் சொன்னார் ஜமாலி.
இது தொடர்பாக அபூதாவுத் நஸாயி போன்ற கிரந்தங்களிலும் ஹதீஸ் வருவதாக சொன்னவர் கடைசி வரை ஹதீஸைக் காட்டவே இல்லை.
புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலும் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் இருப்பாக சொன்னார் ஜமாலி. ஆனால் அதற்கு மாற்றமாக அபூதாலிப் காபிர் என்பதற்கான ஆதாரம் தான் புகாரி முஸ்லிமில் உள்ளது.
- ஒளூ செய்யும் போது வாய்ப் பகுதியை மூன்று முறை தனியாகவும் மூக்கை மூன்று முறை தனியாகவும் நபியவர்கள் கழுவியதாக புகாரியை ஆதாரம் காட்டி பொய் சொன்னார்.
- பெண்கள் ஜும்மாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் சொன்னதாக முஸ்லிமில் ஹதீஸ் இருக்கிறது என்று இல்லாத ஹதீஸை இருப்பதாக நபியவர்கள் மீது இட்டுக் கட்டினார்.
- பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் வரை குர்பானி கொடுக்களாம் என்ற நபியவர்கள் கூறியதாக முஅத்தாவில் ஹதீஸ் இருப்பதாக இல்லாத செய்தியை நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டினார்.
யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும்.
(முஸ்லிம்)
என்ற நபிமொழியை எடுத்துக் காட்டி, இந்த ஹதீஸிற்கு ஏற்றாட் போல், உங்கள் வாதம் உள்ளது என்பதை பி.ஜெ அவர்கள் விவாதக் கலத்திலேயே ஜமாலியிடம் தெரிவித்தார்.
தண்டவாளம் ஏறியது ஜமாலியின் வண்டவாளம்:
விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுகிறது என்று வாதிட வந்த ஜமாலியின் முரண்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் வீடியோ காட்சியாக போட்டுடைத்தார் பி.ஜெ.
அதாவது கூட்டத்திற்கு தகுந்தாற் போல் இடத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதில் வல்லவரான ஜமாலி ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தில்லுமுல்லு வேலைகளை செய்வார்.
அவை வீடியோவாக அரங்கத்தில் போட்டுக் காட்டப்பட்டு அவரிடமே விளக்கம் கேட்கப்பட்டது.
விவாதம் செய்வாதாக அரங்கத்திற்கு வந்தவர் மதில் மேல் குந்திய பூனை போல் இருதி வரை உளரிக் கொட்டிக் கொண்டே இருந்தார்.
அரங்கத்தில் போடப்பட்ட ஜமாலியின் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வீடியோக்கள் தலைப்பு வாரியாக.
- மார்க்க விஷயத்தில் பித்அத் புதிதாக ஒன்றும் உருவாகாது ஆனால் உலக விஷயத்தில் உருவாகும் (வாகனங்கள் நாம் பயன் படுத்தும் பொருட்கள்) என்று ஓரிடத்தில் பேசிய ஜமாலி இன்னோரிடத்தில் தான் சொன்னதை தானே மறுத்துப் பேசிய காட்சி போட்டுக் காட்டப்பட்டது.
- அபூதாலிப் முஸ்லிம் என்று ஒரு மேடையிலும் அவர் காபிர் தான் என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய வீடியோ அரங்கத்தினர் மத்தியில் போட்டுக் காண்பிக்கப் பட்டது.
- இறைவன் அர்ஷில் இருக்கிறான் என்று ஒரு மேடையிலும் அர்ஷில் இல்லை என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.
- ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை என்று தமிழகத்திலும் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்று இலங்கையிலும் ஜமாலி பேசிய வீடியோ போடப்பட்டு முரண்பாட்டிட்கு விளக்கம் கோறப்பட்டது.
- மார்க்க விஷயத்திற்கு சவூதி ஆதாரமாகாது என்று ஒரு வீடியோவிலும் ஆதாரமாகும் என்று இன்னோர் வீடியோவிலும் தனக்குத் தானே முரண்பட்ட காட்சி அரங்கத்தினர் முன்னிலையில் போடப்பட்டது.
- தவ்ஹீத்வாதிகள் மதிக்கும் அறிஞர்களை மரியாதையாக தான் பேசுவதாக குறிப்பிட்ட ஜமாலியிடம் இப்னு தைமிய்யா அவர்களை அவன் இவன் என்று ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப்பட்டது.
- இறைவனுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூட கூறவில்லை என்று கடந்த விவாதத்தில் வாதித்தவர் இப்னு தைமிய்யா இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறினார் என இப்னு தைமிய்யாவை மேடையில் வைத்து வசை பாடும் காட்சி போட்டுக் காண்பிக்கப் பட்டது.
இப்படி தனக்குத் தானே ஜமாலி அவர்கள் முரண்பட்டு பேசிய விடியோக்கள் அரங்கத்தில் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
அந்த வீடியோக்களை பார்த்தவுடன் அவர்கள் தரப்பு மக்களே ஜமாலி யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.
போடப்பட்ட எந்த ஒரு வீடியோவுக்கும் பதில் தர முடியாமல் திண்டாடினார் ஜமாலி.
பி.ஜெ விட்ட சவாலும் விரண்டோடிய ஜமாலியும்:
மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாசங்களையும் அசிங்கங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட போது அதில் உள்ள அசிங்கங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச திராணியற்றுப் போன ஜமாலி இப்படியெல்லாம் அசிங்கங்களை இவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் என்று நீழிக் கண்ணீர் வடித்தார்.
அப்போது பி.ஜெ அவர்கள் அவரிடத்தில் மத்ஹபில் உள்ள அசிங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அசிங்கம் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் நீங்கள் இதை தைரியம் இருந்தால் படித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்.
ஆனால் விவாதத்தின் இருதி வரை அதை அவர் படிக்கவே இல்லை.
விவாதத்திற்கு அவர்கள் தரப்பால் வந்தவர்களே முகம் சுழித்துப் போகும் அளவுக்குத் தான் ஜமாலியின் வாதங்கள் அமைந்தன.
அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்:
அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள். தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)
நன்றி: மௌலவி ரஸ்மின் இணையதளம்
Thursday, October 21, 2010
வாய்களால் ஊதி அனைக்க முடியாத சத்தியக் கொள்கை
Thursday, October 21, 2010
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சக்திகளும் வரிந்து கட்டிக் களமிறங்கியுள்ளனர். இது தமிழக தவ்ஹீத் வரலாற்றில் முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு களமிறங்கினார்கள். திருச்சியில் இவர்கள் அனைவரும் 1990 களில் கூடி தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்க வேண்டுமெனவும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரம் ஏற்படுத்தவும் தவ்ஹீத் பிரச்சாரகர்களைத் தாக்கவும் திட்டங்களை வகுத்தனர்.
அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவிப்பு பல கைகள் வைக்கப்பட்டன. தவ்ஹீத் கூட்டங்களில் புகுந்து ரகளையில் ஈடுப்பட்டனர். மேலப்பாளையத்தில் பீஜே பேசிக் கொண் டிருக்கும்போது மேடையில் ஏறி அவரை அரிவாளால் வெட்டினார்கள். பலத்த காயத்துடன் அவர் பிழைத்துக் கொண்டார்.
இப்படியெல்லாம் இவர்கள் எடுத்த நட வடிக்கைகள் அவர்களுக்குப் பலன் தருவதற்குப் பதிலாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கே பலம் சேர்த்தது.
ஊருக்கு நாலு பேர் கூட இல்லாமல் இருந்த தவ்ஹீத் ஜமாஅத் ஊர்கள் தோறும் கிளை பரப்பவும் தமிழகத்தில் சுமார் 600 மர்கஸ்கள் உருவாகவும் இவர்களின் வன்முறை வெறியாட்டமே காரணமாக அமைந்தது.
இவர்களின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத் குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் மக்கள் மத்தியில் அதிகரித்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் சேருவதற்கு இவர்களே பாதை அமைத்துக் கொடுத்தார்கள்.
விரல் விட்டு எண்ணி விடக் கூடிய அற்பமான நிலையில் நாம் இருந்தபோதே இவர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சவில்லை. நம்முடைய பிரச்சாரத்தைத் தளர்த் தவில்லை. முன்பை விட இன்னும் வீரியமாகவே நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள இவர்களின் எதிர்ப்பு நமக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது.
அதுபோல்தான் இப்போதும் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். முன்பு இவர்கள் எப்படி முனை மழுங்கிய ஆயுதத்தை நமக்கு எதிராகத் தூக்கினார்களோ அதை விட பலவீன மான ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு இப்போது நமக்கு எதிராகக் களம் இறங்கியுள்ள னர்.
திருவிடைச்சேரி எனும் கிராமத்தில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் சுன்னத் ஜமாஅத் பிரமுகர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஹஜ் முஹம்மதுக்கு தவ்ஹீத் ஜமாஅத் சாயம் பூசி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக மக்களை உசுப்பி விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.
இவர்கள் நாடெங்கும் ஒட்டிய ஆளுயர சுவரொட்டியில் கீழ்க்கண்ட வாசகங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
“தமிழக அரசே திருவிடைச்சேரியில் துப் பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரைப் படுகொலை செய்த டிஎன்டிஜே குண்டர்களுக்கும் அவர்களை ஏவியவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கு” என்பது சுவ ரொட்டியின் முக்கிய வாசகம்.
இதில் 19 இயக்கங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 15 இயக்கங்கள் வெறும் லட்டர் பேடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜாக் ஆகிய இரண்டு இயக்கங்கள் தவிர அனைத்து இயக்கங்களும் இதில் இடம் பெற் றுள்ளன.
இவர்கள் இப்படி சுவரொட்டி ஒட்டுவ தால் அந்தக் கொலையைச் செய்த சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என் பவர் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவராகி விடுவாரா? அரசாங்கம் உடனே இந்தச் சுவ ரொட்டியை ஆதாரமாகக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் மீது நடவடிக்கை எடுத்து விட முடியுமா? இந்தச் சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.
அல்லது இப்படி சுவரொட்டிகள் ஒட்டு வதால் மக்கள் அதை அப்படியே நம்பி கொந்தளித்துப் போய் விடுவார்களா? அந்தக் காலம் மலையேறி விட்டது. இவர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையை இழந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன. தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையைப் பிடிக் காத மக்களுக்குக் கூட இந்த ஜமாஅத் இது போன்ற செயல்களில் ஈடுபடாது என்று நல் லெண்ணம் இருக்கிறது. இதனால்தான் ஜூலை 4 அன்று இந்தியாவையே திரும் பிப் பார்க்க வைக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களும் தவ்ஹீத் ஜமாஅத் அழை ப்பை ஏற்று தீவுத்திடலில் குழுமினார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் மீது இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு இருக்கும்போது இவர்களின் ஆளுயர சுவ ரொட்டிகள் இவர்களுக்கு ஒரு பயனையும் அளிக்கப் போவதில்லை. இவர்களின் சுவரொட்டிக்குப் பின்னர் திருவிடைச்சேரியில் நடந்தது என்ன என் பதை மக்கள் விசாரிக்கும்போது 19 கூட்ட மும் பொய்யர்கள் என்பது இன்னும் உறுதி யாகும். இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் பால் மக்கள் கவனம் திரும்பும். இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஒரு இயக் கத்துக்கு எதிராக ஏன் புளுகுகிறார்கள் என்ற விழிப்புணர்வுதான் இதனால் ஏற்ப டும். இன்ஷா அல்லாஹ் இதுதான் சுவரொட்டியால் கிடைக்கும் நன்மையாக இருக்கும்.
இப்போது தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக் கும் அனைவரும் ஏற்கனவே இவர்களின் கூட்டத்தில் இருந்தவர்கள்தான். இவர்களின் தில்லுமுல்லுகளையும், திருகுதாளங்களையும், புளுகுமூட்டைகளையும் கண்டு தான் அங்கிருந்து தவ்ஹீத் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தனர் என்பதை இவர்கள் எண் ணிப் பார்க்கவில்லை.
தவ்ஹீத்வாதிகளைப் பொறுத்தவரை இதுபோன்ற மிரட்டல்களால் அவர்களின் ஈமான் இன்னும் அதிகரிக்குமே தவிர சோர்வோ தளர்வோ அவர்களுக்கு ஏற்ப டாது. அவர்களுக்குப் பின்வரும் வசனங் கள் மன தைரியத்தை அதிகரிக்கும்.
மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற் றனர். அல்லாஹ் மகத்தான அருளுடைய வன். தனது நேசர்களை ஷைத்தான்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்க ளுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!. (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல் லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ் வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
“(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது” என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்கா கவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத் தும் வேதனை அவர்களுக்கு உண்டு. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கல ந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்தி ருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டுவிட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
(திருக்குர் ஆன் 3 : 173 – 179)
அல்லாஹ் போதுமானவன் என்பதில் அசைக்க முடியாத உறுதி கொண்ட தவ்ஹீத் வாதிகளை இதுபோன்ற மிரட்டல்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மேற்கண்ட வசனம் தெளிவாக நமக்குச் சொல்கிறது.
மறுமையில் யாருக்கு நற்பேறு இல்லை என்று அல்லாஹ் முடிவு செய்து விட்டானோ அத்தகையவர்கள்தான் இதுபோல் சத்தியத்துக்கு எதிராக அணி திரள்பவர்கள் என்றும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இவர்களை அடையாளம் காட்டுகிறான்.
மேலும் நாங்களும் தவ்ஹீத்தான் என்று வேஷம் போட்டு கலந்திருந்தவர்களை அல்லாஹ் பிரித்துக் காட்டாமல் அல்லாஹ் விட மாட்டான் என்ற வாக்குறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றி விட்டான். இவர்கள் என்னதான் நடித்தாலும் இவர்கள் தவ்ஹீ தின் எதிரிகள்தான் என்பதை அல்லாஹ் அடையாளம் காட்டுவதற்காக இவர்களைத் தள்ள வேண்டிய இடத்தில் தள்ளி விட் டான். கப்ரு வணங்கிகளையும் அதை எதிர்ப்ப தாக நாடகமாடியவர்களையும். மத்ஹபுவாதி களையும் மத்ஹபை எதிர்ப்பதாக நாடகமாடி யவர்களையும் அல்லாஹ் ஓரணியில் திரட்டி அடையாளம் காட்டி விட்டான். தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இவர் கள் ஒன்றுபட்டிருப்பதுபோல் தோன்றினா லும், இவர்கள் ஒன்றுபட்டு பலம் பெற்றிருப் பதுபோல் காட்டிக் கொண்டாலும் உண்மை யில் இவர்களிடையே எந்த ஒற்றுமையும் இல்லை. இவர்கள் எத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.
இதைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
(முஹம்மதே!) நயவஞ்சகரை நீர் அறியவில்லையா? “நீங்கள் வெளியேற்றப்பட்டால் உங்களுடன் நாங்களும் வெளியேறு வோம். உங்கள் விஷயத்தில் எவருக்கும் எப்போதும் கட்டுப்பட மாட்டோம். உங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் உங்களுக்கு உதவுவோம்” என்று வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரிடம் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுடன் இவர்கள் வெளியேறவே மாட் டார்கள். அவர்கள் மீது போர் தொடுக்கப்பட் டால் அவர்களுக்கு உதவவும் மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள். அவர்களது உள் ளங் களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றியே அதிக பயம் இருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலி ருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிட மாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர் கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். அவர்களுக்குச் சற்று முன் சென்ற சமுதாயத்தினர் போன்றே (அவர்கள் உள்ளனர்) அவர்கள் தமது காரியத்தின் விளைவை அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
(திருக்குர் ஆன் 59:11-15)
பார்வைக்குத்தான் இவர்கள் ஒன்று பட்டதுபோல் காட்டிக் கொள்வார்கள். உண் மையில் இவர்களின் உள்ளம் சிதறிக் கிடக் கிறது. ஒரு தேர்தல் வந்தால் போதும். இவர்க ளின் ஒற்றுமை மாயை கலைந்து போய் விடும். ஆளுக்கு ஒரு கட்சியுடன் பேரம் பேசிக் கொண்டு தனித்தனியாக சிதறிப் போய் விடுவார்கள். ஒரு டிசம்பர் ஆறு வந்தால் போதும் தங்களின் தனி அடையாளத்தைக் காட்டுவ தற்காக தனித்தனி வழியில் பலம் காட்ட போய் விடுவார்கள். நம்மை எதிர்ப்பதில் தவிர வேறு எந்த ஒரு காரியத்திலும் இவர்கள் ஒத்த கருத்தை எட்ட முடியாது. மேலும் இவர்கள் அனை வரும் சேர்ந்து விட்டதால் ஏதோ பலம் பெற்று விட்டதுபோல் காட்டிக் கொள்வார் கள். ஆனால் இவர்கள் கோழைகள். சொந்த பலத்தில் எதையும் சாதிக்கத் திராணியற்ற வர்கள். தங்களுக்கு எந்தச் சேதாரமும் ஏற்படாது என்ற நம்பிக்கை இருந்தால் தவிர எதிலும் இறங்கத் திராணியற்றவர்கள் என்பதையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்கின்றன.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுட னும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
(அல்குர்ஆன் 61:8,9)
Tuesday, October 12, 2010
அதிரை TNTJ வின் வாழ்வாதார உதவி
Tuesday, October 12, 2010
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 29.09.2010 அன்று கடல்கரைத்தெருவில் வசிக்கும் ஏழை பெண்ணிற்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் மெஷின் வழங்கப்பட்டது.
இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
ஆண் பெண் ஹஜ் செய்முறை விளக்கம் மற்றும் ஹஜ் பற்றிய முழு விபரம் வீடியோவுடன்!
Tuesday, October 12, 2010
வீடியோ:
இஸ்லாமிய திருமணம் - தொடர் 2
Tuesday, October 12, 2010
வரதட்சணை ஓர் வன் கொடுமை:
ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது.
இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும்.
இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான்.
ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.
# ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.
# திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
# பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.
# அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.
பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.
வரதட்சணையால் ஏற்படும் கேடுகள்:
வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.
# வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.
# இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர், ஏமாற்றப்படுகின்றனர்.
# விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.
# மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரை தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். இந்தப் பாவத்திலும் வரதட்சணை கேட்போர் பங்காளிகளாகின்றனர்.
# மணவாழ்வு கிடைக்காது என்பதால் கண்டவனுடன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.
# வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
# மானத்துடன் வாழ்ந்த ஒருவனை பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.
# பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சனையை வாங்குவோர் இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காக தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.
இந்த ஆக்கம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின்'இஸ்லாமிய திருமணம்' என்ற நூலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் முழுவதும் இங்கு தொடராக வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ். அந்த நூலை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்.
Saturday, October 09, 2010
தர்ஹாவில் ஹாமீத் பக்ரி!
Saturday, October 09, 2010
காயல்பட்டிணத்தில் உள்ள தர்ஹா ஒன்றில் அவ்லியாவின் கப்ரில் நின்று கூட்டாக துஆ கேட்பது யார் தெரிகின்றதா? யார் ஒரு காலத்தில் தர்ஹாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தாரோ அதே பக்ரி தான்.
எப்படி இருந்த இவர் இப்படி ஆகி விட்டாரே என்று வருத்தப்படுபவர்கள் நேர்வழி பெற இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!
Friday, October 01, 2010
நீதி செத்துப் போனது - பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!
Friday, October 01, 2010
பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.
எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.
ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.
நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.
இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
இப்படிக்கு,
ரஹ்மதுல்லாஹ், மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அரசியல்தனமான தீர்ப்பு! - தினமணி தலையங்கம்
Friday, October 01, 2010
ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.
கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.
நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?
அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.
தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.
அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.
அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.
மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.
நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.
நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...
அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!
இஸ்லாமிய திருமணம் - தொடர் 1
Friday, October 01, 2010
மண வாழ்வின் அவசியம்:
மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதிலிருந்து மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம்.
மணவாழ்வு, ஆன்மீகப் பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, திருமணத்தை அதிகமதிகம் வலியுறுத்துகிறது.
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி தந்திருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: புகாரி 5074, முஸ்லிம் 2488
நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5063
மேற்கண்ட நபிமொழியிலிருந்து முஸ்லிம்களுக்கு திருமணம் எவ்வளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
திருமணத்தின் நோக்கம்:
திருமணத்தின் அவசியம் குறித்து இஸ்லாம் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:1)
சந்ததிகள் பெற்றெடுப்பது திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று என இதன் மூலம் அறியலாம்.
உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி)
நூல்: புகாரி 1905, 5065, 5066
தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணத்தின் மற்றொரு நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
திருமண ஒழுங்குகள்:
திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த ஒழுங்குகளைப் பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத் திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக் காண்போம்.
மணப் பெண் தேர்வு செய்தல்:
மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும், இருக்கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ, உடல் அழகையோ பிரதானமாகக் கருதக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
மணமகனைத் தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண் களின் நன்னடத்தையையே பிரதானமாகக் கொள்ள வேண்டும்.
பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5090
பெண் பார்த்தல்:
ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன்பே பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தமக்குரிய வாழ்க்கைத் துணை பற்றி பல எதிர்பார்ப்புகளை மனதில் வைத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் தமது வாழ்க்கைத் துணை அமையாததை திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அறிய நேர்ந்தால் தம்பதியரிடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். அதனால் முன்பே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான் மணமுடிக்க விருப்பதைக் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்து விட்டாயா? எனக் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீ சென்று அவளைப் பார்த்துக் கொள்! அவர்களின் கண்களில் ஒரு பிரச்சினை உள்ளது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2552
அன்ஸாரிப் பெண்களின் கண்கள் மற்றவர்களின் கண்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் காரணம் காட்டி மனைவியை நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக முன்னரே மணப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: திர்மிதீ 1007, நஸயீ 3183, இப்னுமாஜா 1855
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதலை தமிழக முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது பாவச் செயல் எனவும் கருதுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.
பெண் பார்க்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மணமகனின் தாயும், சகோதரிகளும் தான் பெண் பார்க்கின்றனர். இணைந்து வாழ வேண்டிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் உரிமையை இதன் மூலம் மறுக்கின்றனர்.
பெண் பார்ப்பதை வலியுறுத்தி இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.
பெண்ணின் சம்மதம்:
பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அவர்களின் சம்மதம் பெறுவது மிகவும் அவசியமாகும்.
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
பெண்ணின் பொறுப்பாளர்:
மணப் பெண்ணின் சம்மதம் அவசியம் என்றாலும் ஒரு பெண் தானாக தன் திருமணத்தை நடத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான் நடத்தி வைக்க வேண்டும். மண மகன் சார்பில் இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை.
பொறுப்புள்ள நபரின் முன்னிலையில் திருமணம் நடக்கும் போது பெண்களை வஞ்சகமாக ஏமாற்றும் ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. பெண்களுக்குச் சேர வேண்டிய மஹர் தொகை போன்றவற்றைப் பெற்றுத் தருவதற்கும் பெண்கள் சார்பில் வலி என்னும் பொறுப்பாளர் அவசியமாகும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களை மணக்காதீர்கள் என்று 2:221 வசனத்தில் ஆண்களுக்குக் கட்டளையிடும் இறைவன் இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்று அதே வசனத்தில் கூறுகிறான்.
ஆண்கள் தாமாகவே திருமணம் செய்யலாம் என்பதையும், பெண்களுக்கு அவர்களின் பொறுப்பாளர்கள், பொறுப்பாளர்கள் இல்லாவிட்டால் சமுதாயத் தலைவர்கள் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவர்களின் குடும்பத்தார் அனுமதியுடன் அவர்களை மணந்து கொள்ளுங்கள்.
(திருக்குர்ஆன் 4:25)
இந்த வசனமும் ஒரு பெண் தானாக மணமுடித்துக் கொள்வதைத் தடை செய்கிறது.
பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 1020, அபூதாவூத் 1785
கட்டாயக் கல்யாணம்:
முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும். பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(திருக்குர்ஆன் 2:232)
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவோர் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் இந்த உரிமையைப் பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.
பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதைக் கூட பாவச் செயலாகக் கருதும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் இது போன்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை மணமுடித்துக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணமுடிக்க விரும்பாததால் மற்றொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.
நூல்: புகாரி 2311, 5029, 5120.
வெட்கமில்லாமல் இப்படிக் கேட்கலாமா? என்று அவரை நபிகள் நாயகம் (ஸல்) கண்டிக்கவில்லை. விபச்சாரம் செய்வதற்குத் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர திருமணம் செய்யுமாறு கேட்க எந்த வெட்கமும் தேவையில்லை.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றவள். நீரும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன் என்றார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
நூல்: நஸயீ 3288
பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்கு இவை சான்றுகள்.
ஆனாலும் அவர்கள் பொறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்தை நடத்திட வேண்டும். பொறுப்பாளர்கள் மறுக்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.
மஹரும் ஜீவனாம்சமும்
திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.
பெண்களுக்கு அவர்களின் மஹர் தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள் என்பது குர்ஆனின் கட்டளை. (அல்குர்ஆன் 4:4)
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.
ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகின்றது. (அல்குர்ஆன் 4:20)
மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்; அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
(பார்க்க.. அல்குர்ஆன் 2:237)
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.
கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.
இந்த ஆக்கம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் 'இஸ்லாமிய திருமணம்' என்ற நூலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் முழுவதும் இங்கு தொடராக வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ். அந்த நூலை முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்.