Friday, May 28, 2010
Saturday, May 22, 2010
மேலத்தெருவில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்
Saturday, May 22, 2010
கடந்த 14.05.2010 அன்று மேலத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி 'வட்டி' என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி 'வட்டி' என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
Tuesday, May 18, 2010
அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம்
Tuesday, May 18, 2010
அதிராம்பட்டிணத்தில் கடந்த 25.04.2010 முதல் 11.05.2010 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த பயிற்சி முகாமை மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி முகம்மது நாசர் ஆகியோர் நடத்தினார்கள்.
பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டது.
பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12.05.2010 அன்று 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தலைமை தாங்கினார்.
அந்நூர் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ரிஜ்வானா மற்றும் ஆயிஷா ஆலிமா ஆகியோர் உரையாற்றினார்கள்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் மற்ற மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பத்து ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, May 12, 2010
Monday, May 10, 2010
பிலால் நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்
Monday, May 10, 2010
கடந்த 14.04.2010 அன்று அதிராம்பட்டிணம் பிலால் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.
Saturday, May 08, 2010
பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்
Saturday, May 08, 2010
அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி, மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.
Tuesday, May 04, 2010
அதிரை TNTJ வின் மருத்துவ உதவி
Tuesday, May 04, 2010
அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரியின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதை கிளை செயலாளர் ஹைதர் அலி அவர்கள் வழங்கினார்.
Saturday, May 01, 2010
அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்
Saturday, May 01, 2010
கடந்த 24.04.2010 அன்று அதிராம்பட்டிணம் தக்வா பள்ளிவாசல் அருகில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.
முதலாவதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர், மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'ஒரிறைக் கொள்கையும், சமுதாய ஒற்றுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில், குர்ஆன் ஹதீசை அடிப்படையாக கொண்டு அமையும் ஒற்றுமை தான் உண்மையான ஒற்றுமையாக இருக்க முடியும் என்பதை அழகாக தெளிவுபடுத்தினர்.
பின்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'இம்மையும், மறுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில் முஸ்லிம்கள் எப்படி மறுமையை லட்சியமாக கொண்டு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'உணரப்படாத தீமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில் முஸ்லிம் சமுதாயம் தீமைகள் என்று உணராத பல்வேறு தீமைகளை பட்டியல் போட்டு விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் பெண்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.