Friday, May 28, 2010

Saturday, May 22, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற ஜூலை 4 பிரச்சாரம்

கடந்த 14.05.2010 அன்று மேலத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி 'வட்டி' என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

Tuesday, May 18, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம்

அதிராம்பட்டிணத்தில் கடந்த 25.04.2010 முதல் 11.05.2010 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த பயிற்சி முகாமை மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி முகம்மது நாசர் ஆகியோர் நடத்தினார்கள்.



பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டது. 

பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12.05.2010 அன்று 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தலைமை தாங்கினார்.

அந்நூர் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ரிஜ்வானா மற்றும் ஆயிஷா ஆலிமா ஆகியோர் உரையாற்றினார்கள்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் மற்ற மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பத்து ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, May 12, 2010

ஆலடித்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 26.04.2010 அன்று அதிராம்பட்டிணம் ஆலடித்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இதில் மௌலவி முஹம்மது நாசர் மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Monday, May 10, 2010

பிலால் நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 14.04.2010 அன்று அதிராம்பட்டிணம் பிலால் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Saturday, May 08, 2010

பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டிணம் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி, மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி மற்றும் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் உரையாற்றினார்கள்.

Tuesday, May 04, 2010

அதிரை TNTJ வின் மருத்துவ உதவி

அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரியின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதை கிளை செயலாளர் ஹைதர் அலி அவர்கள் வழங்கினார்.

Saturday, May 01, 2010

அதிரையில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்

கடந்த 24.04.2010 அன்று அதிராம்பட்டிணம் தக்வா பள்ளிவாசல் அருகில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.


முதலாவதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் 'ஜூலை மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர், மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் 'ஒரிறைக் கொள்கையும், சமுதாய ஒற்றுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில், குர்ஆன் ஹதீசை அடிப்படையாக கொண்டு அமையும் ஒற்றுமை தான் உண்மையான ஒற்றுமையாக இருக்க முடியும் என்பதை அழகாக தெளிவுபடுத்தினர்.

பின்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'இம்மையும், மறுமையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில் முஸ்லிம்கள் எப்படி மறுமையை லட்சியமாக கொண்டு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'உணரப்படாத தீமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் தனது உரையில் முஸ்லிம் சமுதாயம் தீமைகள் என்று உணராத பல்வேறு தீமைகளை பட்டியல் போட்டு விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இதில் பெண்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, April 29, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

29.04.2010 அன்று ஜகபர் சாதிக் என்ற சகோதரருக்கு மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நபிவழியில் திருமணம் நடைபெற்றது.

மணமகன் மஹராக 10 பவுன்  தங்கம் வழங்கினார். இந்த திருமணம் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Monday, April 26, 2010

அழகிய கடனும் அர்ஷின் நிழலும்

வியாபாரம் செய்வதற்காக நாடார் சமுதாயத்தில் பொருள் கடன் கொடுத்து உதவுகின்றார்கள். அதல பாதாளத்தில் கிடப்பவனுக்கு பொருளாதாரம் எனும் மலை உச்சியில் இருப்பவர்கள் கடன் எனும் கயிறு கொடுத்து, கை கொடுத்து உதவுகின்றார்கள். உலகையே குறிக்கோளாகக் கொண்ட அந்தச் சமுதாயம் இந்த நல்ல காரியத்தைச் செய்கின்றது. ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்ட இந்தச் சமுதாயம் இதைக் கண்டு கொள்ளவேயில்லை.

இஸ்லாமிய மார்க்கம் ஐந்து நேரத் தொழுகையின் மூலம் கூட்டுத் தொழுகையைத் தந்து சமுதாயத்தின் உறுப்பினர்கள் படும் அவதிகளைக் கண்டு கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பள்ளிக்கு வரக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமின் வாழ்க்கை எப்படிக் கழிகிறது என்பதைக் கணக்கில் கொள்ளச் செய்கிறது.

இது அல்லாமல் ஒரு முஸ்லிம் தன் அண்டை வீட்டுக்காரருக்கு, தன் வீட்டில் ஆக்கிய உணவுகளை வழங்கச் செய்து அவர் எப்படி காலம் தள்ளுகிறார் என்று பக்கத்து வீட்டுக்காரரின் பிரச்சனையை இஸ்லாம் பார்க்கச் செய்கிறது. இன்று நம்முடைய சமுதாயம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது. 

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் 2:273)

தன் சமுதாயத்தில் உள்ள சகோதரன் என்ன சிக்கலில் சிரமத்தில் இருக்கிறான்? என்று பார்த்து அல்லாஹ் உதவச் சொல்கிறான். இவ்வாறு கண்டறியாதவர்களை அல்லாஹ் அறிவிலி என்கின்றான். அல்லாஹ் தனது வசனத்தில் கூறியது போன்று அடுத்தவரிடம் வாய் திறந்து யாசிக்காமல் இருப்பவர்களை, அவர்கள் வாய் திறந்து யாசிக்க வைக்காது உதவச் சொல்கின்றது இஸ்லாம். ஜகாத்’ எனும் பொருளாதாரத்தை இது போன்றவர்களுக்கு வழங்கச் சொல்கின்றது.

இன்று இஸ்லாமிய சமுதாயக் கூட்டமைப்பில் இது போன்ற நற்பணிகளெல்லாம் அரிதாகிப் போய் விட்டது. விபச்சாரம் என்ற வாசலை அடைத்த இஸ்லாம் மனிதனின் உடற்கூறுகளைக் கவனித்து ஒன்றுக்கு மேல் நான்கு வரை திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. அது போல் யாசகம் கேட்கும் பாதையை அடைத்த இஸ்லாம் ஜகாத், தான தர்மம், கடன் போன்ற வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றது

தொழிலுக்கு யாரேனும் வந்து கடன் உதவி கேட்கும் போது கொடுக்கும் நிலையில் உள்ளவரின் உள்ளத்தில் உதிக்கின்ற முதல் எண்ணம் இவன் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் என்ன செய்வது? என்பது தான். இந்த எண்ணத்திற்கு அவர் வலுவூட்டினால் நிச்சயமாக அவர் கொடுக்க மாட்டார். இப்படிப்பட்டவர் ஏதேனும் ஒன்றில் ஏமாந்ததும் அன்று அவன் கடனாகக் கேட்டானே, அவனுக்குக் கொடுத்திருந்தாலாவது, நம்முடைய பணம் அவனிடம் கடனாக நின்றிருக்குமே என்று பின்னால் யோசிப்பார். இது ஒரு நிலை.

கொடுக்கும் நிலையில் உள்ளவரின் சிந்தனைப் பொறியில் தட்டுகின்ற இன்னொரு சிந்தனை என்னவெனில், நாம் இவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து நம்முடைய அந்தத் தொகையில் இவன் முன்னேறுவதை விட நாமே அந்தத் தொகையைப் பயன்படுத்தி முன்னேறினால் என்ன? என்ற எண்ணம் ஏற்படுவது மற்றொரு நிலை. இது போன்ற எண்ணம் ஏற்படுவது இயல்பானது தான்.

மறுமையில் கிடைக்கும் மகத்தான கூலி இஸ்லாத்தில் எல்லாமே மறுமையை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன. ஒருவர் அடுத்தவருக்காகக் கொடுக்கும் அந்தத் தொகையில் இவரே தன்னை வளர்க்கலாம். ஆனால் இவர் அடுத்தவருக்காகக் கொடுக்கின்ற இந்த தொகைக்குரிய நன்மைகளையெல்லாம் மறுமையில் அல்லாஹ் இவருக்கு வழங்கி விடுகின்றான். எல்லாவற்றிற்குமே அல்லாஹ்விடம் கூலி உண்டு. கொடுப்பவர் அல்லாஹ்வுக்காகவே கொடுக்க வேண்டும். ஒரு வேளை கடன் பெற்றவர் நட்டம் அடைந்து விட்டால் அந்தத் தொகையை மீட்பதற்காக வட்டிக்காரனைப் போன்று இரக்கமற்ற அரக்கக் குணம் கொண்டவனாக நடந்து விடக் கூடாது. ஒன்று அவகாசம் கொடுக்கலாம். அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்து விடலாம். இந்த இரண்டிற்கும் மறுமையில் கிடைக்கும் நன்மையைப் பார்ப்போம்.

“அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும், (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது, “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா (ரலி)
நூல்: அஹ்மத்

உதாரணமாக நஸீர் என்பவர் ஜலீல் என்பவருக்கு ஜனவரி 2005 முதல் தேதி பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுக்கின்றார். அவர் அளிக்கும் அவகாசம் ஒரு வருடம். அதாவது டிசம்பர் 2005 வரை தவணை எனில், ஒவ்வொரு நாளும் கடன் கொடுத்தவர் இந்தப் பத்தாயிரத்தைத் தர்மம் செய்தவர் போல் ஆகின்றார். டிசம்பர் 2005 தாண்டிய பிறகும் கடன் பெற்றவர் திரும்பத் தரவில்லை. அவருடைய கஷ்டத்தைப் புரிந்து கொண்டு கடன் கொடுத்தவர் 2006 டிசம்பர் வரை அவகாசம் அளிக்கின்றார் எனில் அவர் ஒவ்வொரு நாளும் ரூ.20,000/- தர்மம் செய்தவர் போலாகின்றார்.

வட்டியை ஒரேயடியாக வெட்டி வீழ்த்தும் மார்க்கம் எந்த அளவுக்கு நன்மைகளை அள்ளி அபரிமிதமாக அளவுக்கதிகமாக வழங்குகின்றது என்று பாருங்கள். மனிதன் இலாப நட்ட கணக்குப் பார்க்கும் மனநிலை கொண்டவன் என்பதாலும் கடன் வழங்கியவர் அந்தத் தொகையைத் தன் தொழிலுக்காகப் பயன்படுத்தி இலாபம் சம்பாதிப்பதை தியாகம் செய்கின்றார் என்பதாலும் அல்லாஹ் மறுமையில் இவருக்குக் கூலியாக வாரி வழங்குகின்ற சன்மானங்களைக் கவனியுங்கள்.

இதைச் செல்வந்தர்கள் கைக்கொண்டிருந்தால் ஏழைகள் எத்தனை வளங்களையும், நலங்களையும் பெற்றிருப்பார்கள் என்று நாம் எண்ணிப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கடன் தொடர்பான விவகாரங்களில், வழக்குகளில் அல்லாவின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அணுகுமுறையைக் கையாளுகின்றார்கள். “இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் கொடுத்திருந்த கடனைப் பள்ளிவாசலில் வைத்து நான் கேட்டேன். எங்கள் இருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து “கஅபே!” என்று கூப்பிட்டார்கள்.

“இதோ! வந்தேன். அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “பாதி” என்பதைக் காட்டும் விதமாக சைகை மூலம் காட்டி “உமது கடனில் இவ்வளவை தள்ளுபடி செய்வீராக” என்று கூறினார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். “எழுவீராக! பாதியை நிறைவேற்று வீராக” என்று (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி

தர்மங்களைப் பெற்றேனும் தள்ளுபடி செய்தல்:

நபி (ஸல்) அவர்கள் கடன் பட்டவர்களைக் கண்டு வாளாவிருந்ததில்லை. உடனே அவருடைய கடனைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளைக் காண ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பழங்கள் வாங்கிய வகையில் ஒருவரது கடன் அதிகமாகி அவர் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபித் தோழர்களை நோக்கி) “அவருக்குத் தர்மம் செய்யுங்கள்” என்றார்கள். ஆனால் வசூலான தொகை கடனைப் பூர்த்தி செய்யுமளவுக்கு எட்டவில்லை. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் அவருடைய கடன்காரர்களிடம், “கிடைத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதைத் தவிர வேறு எதுவுமில்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி (ரலி)
நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கடன்பட்டவருக்காகத் தர்மங்களைப் பெற்றேனும் கடனைச் செலுத்தியிருப்பதை நாம் காண முடிகின்றது. இன்று கடன்பட்டவர்கள் நடுத்தெருவில் உள்ள அரண்மனை போன்ற வீடுகளை விற்று விட்டுச் செல்வதை சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஏழைக்கு இரங்கியவருக்கு இறைவன் இரங்குதல். அல்லாஹ்வின் அடியார்களிலிருந்து ஓர் அடியார் அவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனால் அவரிடம், “உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய்?” என்று அல்லாஹ் கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “அல்லாஹ்விடத்தில் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க மாட்டார்கள்” என்ற (4:42) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதற்கு அடியான், “என்னுடைய ரட்சகனே! உன்னுடைய பொருளை எனக்கு வழங்கினாய். மக்களிடம் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கடன்பட்டவருக்கு (கடனை) தள்ளுபடி செய்வது என்னுடைய குணமாகும். அதனால் (கடன்பட்ட) பணக்காரரிடம் நளினமாகவும், (கடன்பட்ட) வறியவருக்கு தவணையும் அளித்துக் கொண்டிருந்தேன்” என்று பதிலளித்தார். உடனே மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ், “இந்த அடியானை விட நான் மிகவும் உரிமை படைத்தவன். எனவே, இந்த அடியானின் பாவத்தைக் கண்டு கொள்ளாது விட்டு விடுங்கள்” என்று (மலக்குகளிடம்) கூறுகின்றான்.

அறிவிப்பவர்: ரிப்ஈ பின் ஹிராஷ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2920

இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் புகாரியிலும் பல இடங்களில் இடம் பெறுகின்றது. ஐங்காலத் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றைச் செய்தால் போதும் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்பி இத்தகைய வணக்கங்களைச் செய்கின்றோம். ஆனால் இது போன்ற சமுதாயச் சேவையின் மூலம் சொர்க்கம் செல்வதைக் காணத் தவறி விடுகின்றோம். எனவே, நாம் செய்யும் வணக்க வழிபாடுகளுடன் இந்தச் சேவையையும் செய்கின்ற போது இது நம்மை சுவனத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றது.

அர்ஷின் நிழலில்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த ஹதீஸுக்கு அப்படியே செயல் வடிவம் கொடுத்தனர். அபூகதாதா (ரலி)யிடம் ஒருவர் கடன் பட்டிருந்தார். கடனைக் கேட்டு அவரிடம் செல்லும் போது அவர் ஒளிந்து கொள்வார். ஒரு நாள் (அவ்வாறு) வந்த போது சிறுவன் வெளியே வந்தான். அவனிடம் அவரைப் பற்றி விசாரித்த போது “ஆம் வீட்டில் கஸரா (இறைச்சியும் மாவும் கலந்த சூப்) சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்” என்று சொன்னார். உடனே அபூகதாதா (ரலி) “இன்னாரே! வெளியே வந்து விடு. நீ அங்கு தான் இருக்கிறாய் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது” என்று சொன்னார்,

அவர் வெளியே வந்ததும் “நீ என்னை விட்டும் ஒளியக் காரணம் என்ன?” என்று கேட்டார். “என்னிடம் (ஒன்றும்) இல்லை. நான் கஷ்டப்படுகிறேன்” என்று சொன்னார். இதைக் கேட்ட அபூகதாதா (ரலி) அழுதார்கள். பிறகு “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மது பின் அல்குரளி
நூல்: அஹ்மத்

இதே கருத்தில் முஸ்லிமிலும் ஹதீஸ் இடம் பெறுகின்றது. கடன் பட்டவர் தான் அழ வேண்டும். ஆனால் மேற்கண்ட இந்த ஹதீஸில் கடன் கொடுத்தவரான அபூகதாதா (ரலி) அழுகின்றார்கள். இதை எங்கேனும் நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கிய தோழர்களின் கூட்டத்தில் உள்ள அபூகதாதா (ரலி) அவர்கள் கடன்பட்டவர் படும் கஷ்டத்தைக் கண்டு அழுகின்றார். இப்படி இந்தச் சமுதாயம் சஹாபாக்களின் வழியில் ஆக்கம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இன்று கடன் கொடுத்தவர் கடன் பட்டவரிடம் காட்டு மிராண்டித்தனமாக நடப்பதைப் பார்க்கின்றோம். வாயில் வரும் வார்த்தைகளைத் திட்டி தீர்ப்பதை, தனது கொதிப்பைக் கொட்டி வார்ப்பதையும் பார்க்கின்றோம். நாக்கை பிடுங்கி சாகக் கூடாதா? தூக்கு மாட்டி தொங்கக் கூடாதா? என்று நெருப்புக் கங்குகளை அள்ளி வீசுகின்றார்கள். அரசாங்கம் ஜப்தி செய்வதைப் போன்று தட்டுமுட்டு சாமான்களைத் தெருவில் வீசி எறிந்து, ஏற்கனவே. நாணி, கூனி குறுகி நிற்கும் கடன்பட்டவர் கடுமையாக அவமானப் படுத்தப்படுகின்றார். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் தோழர் அபூகதாதா (ரலி) நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் ஊட்டிய போதனையில் நடந்து கொள்கின்றார். இந்த ஹதீஸில் அபூகதாதா (ரலி) தவணையளித்தார்களா? அல்லது தள்ளுபடி செய்தார்களா? என்ற குறிப்பு நமக்கு கிடைக்கவில்லை

பின் வரும் புகாரி ஹதீஸின் படி அபூகதாதா (ரலி) அவர்கள் கடனைத் தள்ளுபடி செய்யும் பண்பாளர் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. அந்த அடிப்படையில் இங்கும் அவர்கள் நிச்சயமாகக் கடனைத் தள்ளுபடி செய்திருப்பார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். இது பற்றி இன்னொரு ஹதீஸைப் பார்ப்போம். ஹராமிய்யா கிளையைச் சார்ந்த இன்னார் மகன் இன்னாரிடம் எனக்குத் தரவேண்டிய பணப் பற்று உள்ளது. நான் அவருடைய குடும்பத்தாரிடம் சென்று ஸலாம் சொல்லி “அவர் இங்கிருக்கின்றாரா?” என்று கேட்டேன். வீட்டினர் “இல்லை” என்று பதிலளித்தனர்.

அப்போது வீட்டிலிருந்து விடலைப் பையன் ஒருவன் வெளியே என்னை நோக்கி வந்தான். நான் அவனிடம், “உன்னுடைய தந்தை எங்கிருக்கின்றார்?” என்று கேட்டேன். “உங்களுடைய சப்தம் கேட்டதும் என் தாயாரின் படுக்கை அறை கட்டிலுக்குச் சென்று விட்டார்” என்று பதில் சொன்னான். உடனே நான் (அவரை நோக்கி) “எங்கிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். வெளியே என்னிடம் வந்து விடு” என்று கூறினேன். உடனே அவர் வந்தார்.

“நீ என்னை விட்டு ஒளிய வேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டேன் அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களிடத்தில் பொய் சொல்லவும் வாக்களித்து விட்டு உங்களுக்கு மாறு செய்வதையும் பயந்தேன். (அதனால் தான் ஒளிந்தேன். இந்த விஷயத்தில்) நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழராவீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ கஷ்டப்படுபவனா? என்று நான் கேட்டேன். அவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கஷ்டப்படுபவன் தான் என்றார்.

அபுல் யஸார் (ரலி) யிடமிருந்து இதை அறிவிக்கும் உப்பாதா பின் ஸாமித் (ரலி)யின் மகன் தொடர்ந்து கூறுகின்றார்.

அவருடைய கணக்குச் சீட்டைக் கொண்டு வந்து அதைத் தன் கையால் அழித்து விட்டு (கடன்பட்டவரை நோக்கி) திருப்பிக் கொடுக்கும் வசதியைப் பெற்றால் எனக்கு (அதை) நிறைவேற்றிவிடு. “(கடன்பட்டு) கஷ்டப்படுபவருக்கு யார் அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவரை அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலில் நிறுத்தி நிழலிடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லும் போது அவர்களை (தன் கண்களைச் சுட்டிக்காட்டி) என்னுடைய இரு கண்களின் பார்வை பார்த்தது. அவர்கள் சொன்னதை என்னுடைய செவிப் புலன் செவியுற்றது. அதை இந்த மனம் மனனம் செய்தது என்று நான் சான்று கூறுகின்றேன் என்று அபுல் யஸார் (ரலி) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் வாங்கிய கடனைத் தரவில்லையே என்று இந்த நபித்தோழர் கோபப்படுகின்றார். அதன் பின் நிதானமாகி நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளை நினைத்துப் பார்க்கின்றார்கள். உச்சந்தலைக்கு மிக நேராக மிக நெருக்கமாக வரும் உதய சூரியன் மறுமை நாளில் மூளையை உருகச் செய்யும் அவ்வேளையை ஒரு கணம் தனது எண்ண ஓட்டத்தில் ஓட விட்டுப் பார்த்து, அபூயஸார் (ரலி) கடனாளியை விட்டு விடுகின்றார்.

கடன் கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள், கடன்பட்டவர் கொடுக்க முடியாவிட்டால் இது போன்று தள்ளுபடி செய்யும் மனப் பாங்குள்ளவர்களாக நமது சமுதாயத்தில் உருவாக வேண்டும். அப்போது தான் இந்தச் சமுதாயம் சீரும் சிறப்பும் பெறும்.

இதையெல்லாம் இங்கே கூற வேண்டிய காரணம் மறுமையை நம்பிய முஸ்லிம்கள் மறுமைக்காக கடன் கொடுப்பதில்லை. உலகத்தின் லாப நட்டக் கணக்கைப் பார்த்து, தன்னிடம் பொருளிலிருந்தும் கொடுக்க மறுத்து விடுகின்றனர். என்ன தான் நெருக்கமாக இருந்தாலும். எவ்வளவு தான் பழகியிருந்தாலும் நாம் கடன் என்று கேட்டதும் செல்வந்தர்கள் நம்மை ஏற இறங்கப் பார்க்கின்றார்கள் இவரெல்லாம் திரும்பத் தரப்போகிறாரா? என்று எத்தனையோ இழிவான எண்ணங்களைக் கடன் கேட்ட நொடிப் பொழுதில் கொண்டிருக்கின்றார் என்று அவரது பார்வை நமக்குப் புலப்படுத்திக் காட்டுகின்றது.

அந்த நேரத்தில் கடன் கேட்ட நாம் நொந்து நுலாகப் போய் விடுகின்றோம். ஏதோ பழகிய நண்பராலேயே அவர் நம் மீது கொண்டிருக்கும் பாரதூரமான பலவீன எண்ணத்தாலேயே, அவர் நம்மை ஒரு பெரும் மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விட்ட ஒரு பிரமையை உணர்கின்றோம். மறுமையின் நம்பிக்கை பிரதிபலிக்குமேயானால் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் அரவணைப்பு என்ற அருட்கொடையை எண்ணிப் பார்ப்போமானால் இதுவெல்லாம் எம்மாத்திரம் என்றாகி விடும். இப்படி ஒரு நிலை சமுதாயத்தில் நீடிக்குமானால் வங்கிப் பக்கம் வட்டி வாங்க எவருமே சென்றிருக்க மாட்டார்கள். எத்தனையோ சகோதரர்கள் பீடி, லாட்டரி, மது, வட்டி போன்ற தொழில்களை விட்டு வெளியே வரத் துடிக்கின்றனர். வங்கியில் வளமான இருப்பு வைத்திருக்கும் வசதிமிக்க சீமான்கள் இவர்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து உலகத்தில் அனுபவிக்கும் நரக வாழ்க்கையை விட்டும் மறுமை உலக நரக வாழ்க்கையை விட்டும் பாதுகாக்க, கடன் கொடுத்துக் கை தூக்கி விட மறுக்கின்றனர்.

அப்படியே கடன் கொடுத்த பின் கடன்பட்டவர் கடனைச் செலுத்தாமல் தவிக்கும் போது அதைத் தள்ளுபடி செய்ய முன் வருவதில்லை. அத்தகையவர்கள் மன நிலையில் மேற்கண்ட ஹதீஸ்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பது இந்தக் கட்டுரையின் பலமான எதிர்பார்ப்பு.

இதை ஒவ்வொருவரும் தன்னுடைய உறவினரிடமிருந்து துவங்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தனது குடும்பத்திலிருந்து துவங்கி விட்டால் நிச்சயமாக அது சமுதாய மாற்றமாகப் பரிணமிக்கும். ஏனெனில் பல குடும்பங்களின் சங்கமம் தான் ஒரு சமுதாயம். அது தான் நாம் எதிர்பார்க்கும் சஹாபிய சமுதாயமாகும்.

நன்றி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளம்

Saturday, April 24, 2010

தமிழக அரசு தமிழில் வெளியிட்டுள்ள கல்வி வழிகாட்டி புத்தகம்!

கல்வி வழிகாட்டி புத்தகம் ஒன்றை தமிழ் மொழியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது நம் சமுதாய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Saturday, April 17, 2010

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :

1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.

ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார்.

1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.

1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்.

1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.

25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

மக்கள் தொகை (பக்கம் 13):

முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17):

1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %

அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.

2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25):

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.
அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைகோடு என்றால் என்ன ?

அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்

மாதவருமானம் (பக்கம் 30):

ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

பரிந்துரைகளில் சில :

1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

அந்த பரிந்துரைகளில் சில :

1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2).

2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2).

3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2).

4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2).

முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.

இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள்.

இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

தொகுப்பு: S.சித்தீக், M.Tech, TNTJ மாணவர் அணி

Friday, April 16, 2010

அதிரையில் மார்க்க விளக்க கூட்டம்

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 24.04.2010 அன்று அதிராம்பட்டிணம் தக்வா பள்ளி அருகில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெறவுள்ளது.

குறிப்பு: இந்த கூட்டம் நடக்கும் நாள் 24.04.2010. நோட்டிஸில் 18.04.2010 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, April 13, 2010

அதிரையில் ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிற்கு மருத்துவ மற்றும் நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மருத்துவ உதவியாக தலா இரண்டாயிரம் வீதம் ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டது.



மேலும், ஜந்து கிரைண்டர்களும், இரண்டு தையல் மெஷின்களும் வாழ்வாதார உதவியாக ஏழு நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, April 06, 2010

அதிரையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

அதிராம்பட்டிணம் ECR ரோட்டில் உள்ள 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கடந்த 02.04.2010 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.

இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Friday, April 02, 2010

அதிரையில் 'ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு' பிரச்சாரம் துவங்கியது

ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்) ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டிற்காக அதிரையில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தின் காட்சிகள்.




Tuesday, March 30, 2010

அதிரை TNTJ வின் மருத்துவ உதவி

அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. இதை கிளை துணைத்தலைவர் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்கினார்.


Saturday, March 27, 2010

மரைக்காயர் (அக்ஸா) பள்ளி அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

மரைக்காயர் (அக்ஸா) பள்ளி மற்றும் ரஹ்மானிய மதரஸா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக 25.03.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'புகழை விரும்பாத நபி (ஸல்)' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 


தனது உரையில் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு புகழை விரும்பாதவர்களாக இருந்தார்கள் என்பதை விளக்கினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரும் எழுந்து நிற்க கூடாது என்று கட்டளையிட்டதை எடுத்துக் காட்டினார். இன்று மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில போலி முல்லாக்கள், தங்களுக்கென்று குடை பிடிக்க ஒரு கூட்டத்தை உருவாக்கியிருப்பதை தவறு என்று விளக்கி பேசினார்.

இதில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.  மரைக்காயர் (அக்ஸா) பள்ளியில் இருந்த சகோதரர்களும் உரையை கேட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, March 25, 2010

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்!  ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். 
(அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப்பட்டது தான்.  ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதாயம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு!  ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!

இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.

பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.

குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)

இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்!  இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள்.

அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.


(அல்குர்ஆன் 4:125)

இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான்.  அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை – அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான்.  இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. 
(அல்குர்ஆன் 16:123)

நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.

“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை).
(அல்குர்ஆன் 60:4)

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.

அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். 
(அல்குர்ஆன் 9:114)

இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான்.  ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.  முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர்.  முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு – நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.  
(அல்குர்ஆன் 18:28)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள்.  ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான்.  இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார்.  எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள்.  “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார்.  அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.

ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.  
(அல்குர்ஆன் 80:1-10)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.

ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது.  ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.  இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை.  இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான்.  அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். 
(அல்குர்ஆன் 60:8,9)

இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை.  ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Wednesday, March 24, 2010

நக்கீரன் அலுவலகம் முற்றுகை: தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி அறிவிப்பு!

நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பிட்டு மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான செய்தியை கண்டித்து இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாளை (25-3-2010) சென்னையில் உள்ள நக்கீரன் அலுவகத்தை முற்றுகையிடும்!

நாள்: 25-3-2010

நேரம்: மாலை 3.30 மணி

இடம்: நக்கீரன் அலுவலகம், சென்னை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அதிரடி ஆர்ப்பாட்டத்திற்கு அணி அணியாய் வாருங்கள்!


முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரனுக்கெதிரான உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்!

Thursday, March 18, 2010

முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.

மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்

எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ‘அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ – இறைச் செய்தி – வர முடியாது” என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் ஏற்படுத்தலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக் கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடை களை உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்து விட்டேன். (அல்குர்ஆன் 5:3)

‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: முஸ்லிம் (3541)

‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” எனவும் நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 2697 முஸ்லிம் 3540

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அதுவும் அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன். புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது. அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை என்பதே மவ்லிதை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலைச் (நல்லறத்தைச்) செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லிது ஓதுமாறு நாயகம்(ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததே மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

தமிழகத்தில் ரபீவுல் அவ்வல் மாதத்தில் சுப்ஹான மவ்லிதும், ரபீவுல் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன் மவ்லிதும் ஓதப்படுகிறது. ரபீவுல் ஆகிர் மாதத்தில் ஓதப்படும் முஹ்யித்தீன் மவ்லிது ஏன் ஓதப்படுகிறது? முற்காலத்தில் வாழ்ந்த அப்துல்காதிர் ஜீலானி என்ற பெரியாரை புகழ்வதற்காகவே இந்த மவ்லித் ஓதுகிறோம் என்று கூறுகின்றனர்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிகச் சிறந்த மார்க்க மேதை! உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர்! இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகின்றோம். ஆயினும் அவரது பெயரால் போலிகள் சிலர் இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்(ஸல்) அவர்களுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும் மாற்றமாகக் கதையை புனைந்து முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறச் செய்துள்ளனர்.

காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் துதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து ‘என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது” என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ‘காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு!’ என்று உன் மகனுடைய காதில் கூறு” என்றார்கள். அவர் கட்டளையிடப் பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. இவ்வாறு முஹ்யித்தீன் மவ்தில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் பதினைந்து மாதகாலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா? இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும் காய்ச்சலுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும் அதை நீக்குபவனும் அல்லாஹ்தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்ப டையான கொள்கை. இதை திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிருந்தும் அறியலாம்.

‘நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.’

(அல்குர்ஆன் 26:80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள் அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

‘இந்தப் பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.’

(அல்குர்ஆன் 57:22)

‘எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப் பத்தைக் கொண்டே தவிர இல்லை.’

(அல்குர்ஆன் 54:11)

இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

‘மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை” என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

(நூல்: புகாரி 5675)

நபி(ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது. அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்பமுடியாது.

முஹ்யித்தீன் மவ்லிதில் உள்ள மற்றொரு கதையை பாருங்கள்:

ஜும்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசிரியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பி விட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள்.

இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறும் ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்து விட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.

ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசகாகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆ தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன்’ என்றேன்.

நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன்? இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர்இ இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக்கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா?’ என்று கேட்டார்.

நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றிவிட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாஃபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தக் கதையிலுள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அபத்தம் – 1:
ஜும்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இறைநேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜும்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போதுதான் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று இந்த கதை கூறுகின்றது.

ஒரு சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் செய்யவேண்டும். வலுக் கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது சுன்னத்தை நிறை வேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.

அபத்தம் – 2:
கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாஃபஹா செய்தார்கள் என்பதிருந்து இதை அறியலாம். உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது.

எந்த ஆத்மாவுக்கு இறைவன் மரணத்தை ஏற்படுத்தி விட்டானோ அவற்றைத் தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான்.

(அல்குர்ஆன் 39:42)

அவர்கள் (மரணித்தது முதல்) திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கின்றது.

(அல்குர்ஆன் 23:99)

இறந்தவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.

…பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக்கூறப்படும். ‘நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களை கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் ‘நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! அந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி)
நூல்: திர்மிதி (991)

இது நபியவர்கள் தந்த விளக்கம். நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர் ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அபத்தம் – 3:
ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக்கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸிற்கு இது முரணாக உள்ளது. மேலும் இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் கூற்றுக்கு (30:52 35:22) முரணாக உள்ளது.

திருக்குர்ஆனுக்கும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் நேரடியாக மோதக்கூடிய இதுபோன்ற அபத்தங்கள் நிறைந்த இந்த மவ்லிதை ஒரு உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா?! அல்லது அன்னியர்களின் சதிதிட்டமா? நமக்கு பொருள் தெரியாது என்பதால் மார்க்க அறிஞர்கள் ராகமிட்டுப் பாடி நம்மை ஏமாற்றுகிறார்களா?! என்பதையெல்லாம் நாம் தெளிவாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. இஸ்லாத்தின் கடமைகள் எத்தனையோ இருக்கும் போது மார்க்கம் அனுமதிக்காத இணை வைப்புக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மவ்லித் தேவைதானா? என்பதை ரபியுல் ஆகிர் மாதமான இம்மாதத்தில் சிந்திப்போம்: செயல்படுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வழிநடத்தி செல்வானாக!

Tuesday, March 16, 2010

தனிப்பள்ளி கட்ட மார்க்கத்தில் ஆதாரம் உண்டா?



தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே!

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்! தாயத்து தகடுகள், தர்ஹா வழிபாடுகள், மௌலிது குப்பைகள் போன்ற இணை கற்பிக்கும் காரியங்களை எதிர்த்ததற்காகவும் மத்ஹபுப் பிரிவினைகளைக் கண்டித்ததற்காகவும் ஏகத்துவ வாதிகள் ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்? தொழுகைக்குக் கூட பள்ளி வாசல்களில் தடை செய்யப்பட்டனர்.

நான்கு மத்ஹபுகளுக்கு மாற்றமாக தலையில் தொப்பி போடாமல், நெஞ்சில் கைகட்டி, விரலசைத்துத் தொழுபவர்கள் இப்பள்ளியில் தொழக் கூடாது; இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றெல்லாம் ஜமாஅத்துல் உலமாவின் தூண்டுதலின் பேரில் ஊருக்கு ஊர் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் போர்டுகள் மாட்டப்பட்டன.

நபிவழியின் பிரகாரம் விரலசைத்துத் தொழுதவர்களின் விரல்கள் நறுக்கப்பட்டன. கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஆனால் அதே சமயம், மது அருந்துபவர்கள், வரதட்சணை வாங்கும் கயவர்கள், வட்டி மூசாக்கள், நாத்திகவாதிகள், அரசியல் புரோக்கர்கள் ஆகிய அனைவருக்கும் பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. எங்களது அடிப்படை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் ஆகிய இரண்டு மட்டுமே என்றுரைத்ததற்காக மட்டுமே தவ்ஹீத்வாதிகள் பள்ளிகளை விட்டும் விரட்டப்பட்டனர்.

இவர்கள் நம்மைப் பள்ளிகளை விட்டும் விரட்டுவதென்ன? இது போன்ற பள்ளிகளில் உண்மையான முஃமின்கள் ஒரு போதும் நிற்கக் கூடாது என்பது தான் ஏக நாயனின் கட்டளை! இதோ இறைவனின் கட்டளையைப் பாருங்கள்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! 
அல்குர்ஆன் 9:107, 108

மேற்கண்ட வசனத்தில் நபியவர்களுடைய காலத்தில் ஏகத்துவவாதிகளுக்கெதிராக முனாஃபிக்கீன்கள் கட்டிய ஒரு பள்ளிவாசலைப் பற்றித் தான் அல்லாஹ் பேசுகிறான். முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியைப் பற்றி அல்லாஹ் நான்கு காரணங்களைக் கூறுகிறான்.

1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்
2. ஏக இறைவனை மறுத்தல்
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல் 
4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்

இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.

இந்த நான்கு காரணங்களும் எந்தெந்தப் பள்ளிகளில் காணப்படுகின்றதோ அவற்றைக் கட்டியவர்கள் அதனைப் பள்ளிவாசல் என்று சொல்லிக் கொண்டாலும் அவை இறைவனின் பார்வையில் இறையாலயமாகாது. இப்படிப்பட்ட பள்ளிகளில் உண்மையான முஸ்லிம்கள் சென்று தொழுவதும் தகாது.

இன்று நம் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்றதா என்று பார்ப்போம்.

1. முஃமின்களுக்குத் தீங்கிழைத்தல்:

நபிகள் நாயகம் காலத்தில் பள்ளிவாசல் என்பது மக்களின் துயர் துடைக்கும் மையமாக விளங்கியது. பசியால் வாடுபவர்களும், படுப்பதற்கு இடமில்லாதவர்களும், பிணியால் அவதிப்படுவோரும், துயரங்களுக்கு உள்ளானவர்களும் நாடி வரும் இடமாகப் பள்ளிவாசல் தான் இருந்தது. ஆனால் இன்றோ வயிற்றுச் சோறுக்கு வழியில்லாதவன் கூட பள்ளிக்கு வரி கட்டவில்லையென்றால் அவனுக்கு அடக்கம் செய்ய இடம் கிடையாது என்று அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் நபிவழியின் பிரகாரம் விரலசைத்து, நெஞ்சில் கைகட்டி தொழுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பெண்களுக்குப் பள்ளிவாசல்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. மஃரிப் உடைய முன் சுன்னத் போன்ற தொழுகைகள் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நபி வழியின் பிரகாரம் சப்தமிட்டு ஆமீன் கூறுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பள்ளியில் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் படிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

தன்னைப் பெற்ற தந்தைக்கு மகன் ஜனாஸா தொழுவிப்பதற்குப் பள்ளிவாசல் நிர்வாகிகள் கதவடைக்கின்றனர். சத்தியக் கருத்துகளை உள்ளது உள்ளபடி பள்ளியில் எடுத்துரைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. நபிவழியின் பிரகாரம் வரதட்சணை வாங்காமல் அனாச்சாரங்களை ஒழித்து செய்யப்படும் திருமணங்களுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. பதிவுப் புத்தகம் தர மாட்டோம் என்று மிரட்டப்படுகின்றனர்.

வரதட்சணை வாங்கினாலும் பள்ளிக்குப் பங்கு தரவேண்டும் என்று ஜமாஅத்துகள் விதி வகுத்துள்ளன. வரதட்சணைத் திருமணங்கள் பள்ளிவாசல் இமாம், முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் முன்பாகவே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன.

பள்ளிவாசல்களுக்குக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் மக்களிடம் பணம் கறப்பதில் தான் பள்ளிகள் போட்டியிடுகின்றனவே தவிர யாருக்கும் எந்த உதவியும் இன்றைய பல பள்ளிகளில் காண முடிவதில்லை. இவ்வாறு பல விஷயங்களில் பள்ளிவாசல்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இடமாகத் தான் உள்ளனவே தவிர நபிகள் நாயகம் காலத்தில் இருந்த ஒரு நிலையை சில பள்ளிகளில் தவிர மற்றவற்றில் காண முடிவதில்லை. 

2. இறை நிராகரிப்பு:

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

மேற்கண்ட வசனத்திற்கு நேர் எதிராகப் பல பள்ளிவாசல்கள் இணைவைப்புக் காரியங்களின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. பள்ளிவாசல்களுக்குப் பெயர் வைக்கும் போதே நாகூராண்டவர் பள்ளிவாசல், முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்று இறைவனல்லாத ஆண்டவர்களுக்காகத் தான் பள்ளிவாசல்களே கட்டப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவர் எங்கும் வருவார் என்ற குஃப்ரான நம்பிக்கையில் தான் பல பள்ளிகளுக்கு இவருடைய பெயரைச் சூட்டுகின்றனர்.

இறைவனுடைய அடிமைகளை எல்லாம் இறைவனாகப் பாவித்து ஓதப்படுகின்ற கேடுகெட்ட மௌலிது குப்பைகள் பள்ளிவாசல்களில் தான் அரங்கேற்றப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் விரைந்து வருவார்; அழைப்பிற்குப் பதில் தருவார் என்ற நரகத்து வரிகளை உள்ளடக்கிய யாகுத்பா, சுப்ஹான மௌலிது, நாகூர் ஆண்டவர் மௌலிது, ஸலாத்துன் னாரிய்யா போன்ற பல குப்பைகள் பள்ளிவாசல்களில் கொட்டப்படுகின்றன. பள்ளிவாசல்களுக்குள்ளேயே கப்ருகள் கட்டப்பட்டு வணக்க வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் பள்ளிவாசல்களோடு இணைந்ததாக பள்ளிவாசல் காம்பவுண்டிற்குள் அட்டாச்டு தர்ஹாக்களும் இணைந்துள்ளன. மேலும் தாயத்து தகடுகள், பில்லி, சூனியம், பால்கிதாப் பார்த்தல், போன்ற இன்னும் பல இணை கற்பிக்கும் காரியங்கள் அனைத்தும் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. இவ்வாறு பல பள்ளிகள் இறை நிராகரிப்பின் தளங்களாகத் தான் திகழ்கின்றன. இந்த இரண்டாவது காரணமும் பல பள்ளிகளில் நிதர்சனமாக, தெளிவாகவே காணப்படுகிறது.

3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்:

பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் மையமாகும். ஆண்டியும், அரசனும், கருப்பனும், வெள்ளையனும் சமம் என்றுரைக்கும் இடம் தான் பள்ளிவாசல். ஆனால் இத்தகைய பள்ளிவாசல்கள் தான் முஃமின்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் இடங்களாக நமக்கு மத்தியில் காட்சியளிக்கின்றன. நான்கு மத்ஹபுகளின் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் எங்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று போர்டு மாட்டி வைத்திருப்பதே பிரிவினைக்கு முதல் சான்றாகும். சமுதாயத்தில் ஏற்படும் எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் கூட தீர்த்து விடலாம். ஆனால் இந்த ஷாஃபி, ஹனஃபி பிரச்சினை கியாமத் நாள் வரை தீராத பிரச்சினையைப் போன்றும், ஜாதிப் பிரிவினைகளைப் போன்று பிறக்கும் போது ஒட்டிக் கொண்டு பிறக்கின்ற ஒரு பிரிவினையாகி விட்டது. இன்றைக்கும் கூட பல ஊர்களில் ஷாஃபியாக்கள் மற்றும் ஹனஃபியாக்களுக்கு மத்தியிலான திருமண உறவுகள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. பள்ளிவாசல்கள் உருவாக்கப்படும் போது இது ஷாஃபி பள்ளி இது ஹனஃபி பள்ளி என்று பிரிவினையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரே பள்ளியில் குறுக்காகச் சுவர் வைக்கப்பட்டு ஷாஃபிகள் ஒரு புறமும், ஹனஃபிகள் ஒரு புறமும் தொழுது வருகின்றனர். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற பெரும் மதரஸாக்களிலெல்லாம் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைப் போன்று ஷாஃபி மாணவர்கள் ஒரு புறமும் ஹனஃபி மாணவர்கள் ஒரு புறமும் மிகவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

கஃபாவில் கூட பல ஆண்டுகளாக நான்கு முஸல்லாக்கள் விரிக்கப்பட்டிருந்தன. தவ்ஹீதின் ஆட்சி வந்த பிறகு தான் அவையனைத்தும் ஒன்றாக்கப்பட்டன. அனைத்து ஆலிம்களும் ஷாஃபி ஹனஃபி பிரிவினை தான் சரி என்றே பள்ளிவாசல்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.

இமாம் ஷாஃபியின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் அபூ ஹனீஃபாவின் மிகச் சிறந்த ஒரு மார்க்கத் தீர்ப்பை ஷாஃபியானவன் பின்பற்றினால் அவன் நரகவாதியா? இமாம் அபூ ஹனீஃபாவின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் ஷாஃபி அவர்களின் மிகச் சிறந்த மார்க்க ரீதியிலான கருத்துக்களை ஹனஃபியானவன் பின்பற்றினால் அவன் நரக வாதியா?

இதற்கெல்லாம் இந்தப் பிரிவினை ஆலிம்கள் பதில் கூறத் தயாரில்லை. இப்படிப்பட்ட இந்த மத்ஹப் பிரிவினைகளின் உலைக்களங்களாகத் தான் இன்றைய பல பள்ளிகள் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பள்ளிகள் உண்மையான முஸ்லிம்கள் தொழுவதற்குத் தகுதியானதா? என்பதை உண்மை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

4. அல்லாஹ்விற்கும் தூதருக்கும் எதிராகப் போர் புரிபவர்களுக்குப் புகலிடம்:

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். 
அல்குர்ஆன் 9:17, 18

மேற்கண்ட வசனங்கள் இணைகற்பிப்பவர்கள் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது கூடாது என்பதைத் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகிகள்:

1. அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர்களாகவும்
2. தொழுகையை நிலை நாட்டுபவர்களாகவும் 
3. ஸகாத்தை நிறைவேற்றுபவர்களாகவும். 
4. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளின் நிலைகளை நாம் பார்க்கும் போது இதற்கு நேர்மாற்றமாகத் தான் உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மௌலிதுகள் போன்ற அனைத்து இணை கற்பிக்கும் காரியங்களுக்கும் குத்தகைதாரர்களாகத் திகழ்கின்றனர். இவையனைத்தையும் பள்ளி வாசல்களில் இவர்கள் தான் அரங்கேற்றுகின்றனர்.

மேலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யக்கூடிய வட்டி மூசாக்கள், வரதட்சணையை ஆதரிக்கும் இமாம்கள், முத்தவல்லிகள், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள், லாட்டரி வியாபாரிகள், கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள், பள்ளிவாசலை சீட்டாட்டத்திற்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்தி விட்டுப் பாங்கு சொன்னவுடன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறக் கூடியவர்கள், அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கக்கூடிய அரசியல் புரோக்கர்கள், பெண்களைப் பலவந்தமாக அடையக் கூடிய காமவெறியர்கள், விபச்சாரம் செய்யக் கூடியவர்கள், மது அருந்தக் கூடியவர்கள் ஆகியோர் தான் இன்றைக்குப் பல பள்ளிவாசல் நிர்வாகிகளாகக் காட்சி தருகின்றனர். மேலே சுட்டிக்காட்டப்பட்ட காரணங்களிலும் அல்லது சொல்லப்படாத இன்னும் பல தீய காரணங்களிலும் ஒன்றோ இரண்டோ அல்லது இதற்கு அதிகமான விஷயங்களோ இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்படாமல் இல்லை. இவற்றை வெளிப்படையாகவே பலர் செய்து வருகின்றனர். இப்படி இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, இறைவனுக்கெதிராக யுத்தம் செய்கின்றவர்களுக்குப் புகலிடமாகத் தான் பல பள்ளிகள் திகழ்கின்றன.

இது போன்ற பள்ளிகள் உண்மையான முஃமின்கள் நின்று வணங்குவதற்குத் தகுதியானவை கிடையாது என்பது தான் முதலில் நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இறைவனின் பிரகடனமாகும். 

1. முஃமின்களுக்கு தீங்கிழைத்தல்
2. ஏக இறைவனை மறுத்தல் 
3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல் 
4. அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போரிடுவோருக்குப் புகலிடம்.

இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.

நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!
அல்குர்ஆன் 9:108

முனாஃபிக்கீன்கள், நாங்கள் நல்லதற்காகத் தான் இப்பள்ளியைக் கட்டியுள்ளோம் என்று சத்தியம் செய்து கூறிய போதும் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கூறியது பொய் என அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அது போன்று மேற்கண்ட நான்கு காரணங்களும் நடைபெறுகின்ற பள்ளிவாசல் நிர்வாகிகள் நாங்கள் நல்லதற்காகத் தான் இந்தப் பள்ளியை நிர்மாணித்துள்ளோம் என்று கூறிய போதிலும் இந்நான்கு காரணங்களும் நீக்கப்படுகின்ற வரை அவை முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளிகளாக ஆகாது என்பதே உண்மையாகும்.

முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளி எது?

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்குர்ஆன் 9:108

இப்படிப்பட்ட பள்ளி வாசல்கள் வரிசையில் தவ்ஹீத் பள்ளிகள் தான் முன்னிலை வகிக்கின்றன. இன்றைக்குத் தவ்ஹீத் பள்ளிகள் ஏழை மக்கள் நாடிவரும் தலங்களாகவும் துயர் துடைக்கும் இடங்களாகவும் திகழ்கின்றன. தவ்ஹீத் பள்ளிகளின் பணிகளை பட்டியலிடத் துவங்கினால் இந்த இதழ் பற்றாது. மக்களுக்கு இடையூறு செய்தல் என்பது தவ்ஹீத் பள்ளிகளில் அறவே கிடையாது. முஃமின்களைப் பிரிக்கக்கூடிய மத்ஹபுப் பிரிவினைகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. அனைத்து மத்ஹபிலிருந்து நபிவழிக்கு வந்தவர்களும் இன்றைக்கு ஒரே முறையில் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். மேலும் மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்களும் அவர்களது முறைப்படி தொப்பி அணிந்து விரலசைக்காமல் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிலை நாட்டுகின்றனர். அவர்கள் தாக்கப்படுவது கிடையாது. பித்அத்தான காரியங்களைச் செய்வதற்குத் தான் தவ்ஹீத் பள்ளியில் தடை விதிக்கப்படுமே தவிர வேறு யாரும் தடுக்கப்படுவது கிடையாது. மேலும் நபி வழியின் அடிப்படையில் தொழுபவர்கள் மட்டுமே இங்கு வரவேண்டும் என்ற போர்டுகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. மேலும் ஏகத்துவத்தை எடுத்துரைத்து, இணை கற்பிக்கும் காரியங்களை அழிக்கக் கூடிய தளங்களாகத் தான் தவ்ஹீத் பள்ளிகள் திகழ்கின்றன.

இறைவன் கூறிய பண்புகளுக்குச் சொந்தக்காரர்கள் தான் தவ்ஹீத் பள்ளிவாசல் நிர்வாகிகளாகத் திகழ்கின்றனர். எனவே தான் இன்றைக்கு ஊருக்கு ஊர் தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளிகளை உருவாக்கி வருகின்றது. இவை அடித்தளமிடப்படும் போதே இறையச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

இதை இங்கு எழுதுவதற்குக் காரணம், அனைத்து இறையாலயங்களும் இதைப் போன்று மாற வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, மற்ற ஆலயங்களைத் தகர்க்க வேண்டும் என்பதற்கல்ல. இந்நிலை கனியும் தருணம் இறைவன் நாடினால் வெகு தூரத்திலல்ல. மிக அருகில் தான் காட்சியளிக்கிறது.

மேற்கண்ட நான்கு தீய நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகள் திருந்திக் கொண்டால் அப்போது தான் அவை பள்ளிவாசல்களாகக் கருதப்படும்.

இதனை வேறொரு விதமாகவும் அல்லாஹ் நமக்குத் தெளிவு படுத்துகிறான். இப்ராஹீம் நபியிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என்று கூறும் இறைவன், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கூட்டத்தை விட்டு நாம் விலகி விட வேண்டும் என வழி காட்டுகிறான். 

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
அல்குர்ஆன் 60:4

இணை கற்பிப்பவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி வாசல்களைப் புறக்கணித்து, தக்வா எனும் இறையச்சத்தின் அடிப்படையில் பள்ளிகளை அமைப்பது உண்மை முஸ்லிம்களின் கடமையாகும். அது குடிசையாக இருந்தாலும் சரியே!