Sunday, June 29, 2014
Saturday, June 28, 2014
அதிரை மின்சாரவரியத்திற்கு எச்சரிக்கை (வீடியோ)
Saturday, June 28, 2014
No comments
மாதாரந்திர பராமரிப்புக்காக அதிரை மின்சாரவாரியம் நாள் முழுவதும் மின்சாரத்தை நிறுத்திவைக்கின்றனர். இனிவரும் காலங்களில் வெள்ளிக்கிழமையை தவிர்த்து மற்ற கிழமைகளில் பராமரிப்பு பணிகளை செய்யுமாறும் இனி வெள்ளிக்கிழமை மின்சாரம் துன்டிக்கப்பட்டால் தவ்ஹீத் ஜமாஅத் மக்களை திரட்டி போரட்டம் நடத்தவேண்டிவரும் என்ற எச்சரிக்கையை அதிரை மின்சார வாரியத்திற்கு தெரிவித்துக்கொள்கிறது.
Friday, June 27, 2014
தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு
Friday, June 27, 2014
No comments
தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அதிராம்பட்டினம் தவஹீத் பள்ளியில் வியாழக்கிழமை 26.6.2014 நடைபெற்றது மாவட்டத்தலைவர் சாதிக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் தவ்ஹீத் வாதிகளிடம் இருக்கக்கூடாத தீய பண்புகள் என்ற தலைப்பில் உரை
தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மாவட்ட சார்பாக தஞ்சையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவது
மாவட்ட தர்பியா நிகழ்ச்சி நடத்துவது
ரமலான் மாதத்தில் அதிகமான தாவா பணிகள் செய்யவேண்டும்
ரமலானின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஜும்ஆ வசூல் மாநில தலைமைக்கு அனுப்புவது
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளிலும் இரவுத்தொழுகை அதனை தொடர்ந்து பயான் நிகழ்ச்சி நடத்துவது
பெருநாளைக்கு முன்பாகவே பித்ரா வினியோகம் செய்வது
மாநில தலைமையினால் நடத்தப்படும் அனாதை சிறுவர் சிறுமியர் இல்லம், முதியோர் இல்லம், தாவா சென்டர், போன்றவைகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிகமான நிதிகளை வசூல் செய்து தலைமைக்கு கொடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நிகழ்த்தினார்கள்மாவட்ட தர்பியா நிகழ்ச்சி நடத்துவது
ரமலான் மாதத்தில் அதிகமான தாவா பணிகள் செய்யவேண்டும்
ரமலானின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஜும்ஆ வசூல் மாநில தலைமைக்கு அனுப்புவது
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளிலும் இரவுத்தொழுகை அதனை தொடர்ந்து பயான் நிகழ்ச்சி நடத்துவது
பெருநாளைக்கு முன்பாகவே பித்ரா வினியோகம் செய்வது
மாநில தலைமையினால் நடத்தப்படும் அனாதை சிறுவர் சிறுமியர் இல்லம், முதியோர் இல்லம், தாவா சென்டர், போன்றவைகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிகமான நிதிகளை வசூல் செய்து தலைமைக்கு கொடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Thursday, June 26, 2014
ரமலான் பிறை அறிவிப்பு வேண்டுகோள்
Thursday, June 26, 2014
No comments
ரமலான் பிறை அறிவிப்பு!
கடந்த மே 30.05.14 வெள்ளிக் கிழமை மஹரிப் முதல் தமிழகத்தில் ஷாஃபான் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 28.06.14 சனிக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
28.06.14 சனிக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
மாநில தலைமையகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தொடர்புக்கு:
Wednesday, June 25, 2014
மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர்
Wednesday, June 25, 2014
No comments
அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் தெருவைச் சார்ந்த முகம்மது சித்தீக் அவர்களின் மகன் அப்துல்லாஹ் (திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்) கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சமிபத்தில் அவருக்கு கேன்சர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்நோயாளிளாக சிகிச்சை பெற்றுவருகிறார் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த சகோதரின் மருத்துவ செலவுகளுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
தொடர்புக்கு
99448-24510
95008-21430
Monday, June 23, 2014
அதிரை TNTJ துபாய் கிளை மாதாந்திர கூட்டம்
Monday, June 23, 2014
No comments
இன்ஷா அல்லாஹ், வருகின்ற 27.06.2014 வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் துபாய் அதிரை TNTJ’வின் மாதாந்திரக் கூட்டம் நடக்க இருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பற்றிய ஆலோசனைகள் நடக்க இருப்பதால், தவறாமல் அனைத்து அதிரை தவ்ஹித் ஜமாத் ஆதரவாளர்களும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இடம்: துபாய் தேய்ரா TNTJ (JT) மர்கஸில்
மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட சகோதரர்களைத் தொடர்பு கொள்ளவும்:
சகோ. ஷாகுல் ஹமீத் – 0505063755
சகோ. நஸீர் - 0559081550
சகோ. மக்தூம் நைனா - 0507397093
கடற்கரைத் தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!
Monday, June 23, 2014
No comments
தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களின் இல்லத்தில்
இன்று (22-06-2014) காலை 11.00 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம்
நடைபெற்றது.
இதில் சென்னை ஆவடியை சேர்ந்த கபீர் அவர்களின் மகன் அப்துல்
மாலிக் மணமகனுக்கு கடற்கரைதெருவை சேர்ந்த அஹமது ஜலீல் அவர்களின் மகளை 40
கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் சகோதரரிடம் கொடுத்து மணமுடித்தார்.
இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர்
முஜாஹிதீன் மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி
சிறப்புரையாற்றினார். இதில் கடற்கரைதெரு ஜமாஅத் நிர்வாகிகள், உட்பட பல கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, June 22, 2014
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம்
Sunday, June 22, 2014
No comments
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பி ன் ஒருங்கிணைப்புக் கூட்டம்
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பி ன் ஒருங்கிணைப்புக் கூட்டம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். .
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பி ன் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 13.06.2014 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 8.10 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.
அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதனையடுத்து எதிர்வரும் ரமலான் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன.
மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஜசாக்கல்லாஹ்..
Saturday, June 21, 2014
இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 33) - அமானிதம் பேணல்
Saturday, June 21, 2014
No comments
இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 33) - அமானிதம் பேணல்
இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.
Wednesday, June 18, 2014
இலங்கையில் இஸ்லாமியர் மீது தாக்குதல்: மத்திய அரசு குரல் கொடுக்க கருணாநிதி கோரிக்கை
Wednesday, June 18, 2014
No comments

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கையின் ஆட்சி
அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக்கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச்
சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள்,
இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி
செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து
கடைப்பிடித்து வருகிறார்கள்.
இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை
மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிச் சின்னாபின்னப்படுத்திய சிங்கள
வெறியர்கள், கடந்த சில நாட்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான
முஸ்லீம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத்
தொடங்கியுள்ளார்கள்.
2012ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும்,
முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாகவும், தொடர்ச்சியாகவும் கடந்த 2012ஆம் ஆண்டு
முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறைச்
சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கொழும்பு நகருக்கருகில் அலுதமா பகுதியில் கடந்த நான்கு
நாட்களுக்கு முன் திடீரென வன்முறை மூண்டு, முஸ்லீம்கள் கடுமையாகத்
தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதலில் 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
100க்கு மேற்பட்டோர் படுகாயமுற்றிருக்கிறார்கள். மேலும் பள்ளிவாசல்களும்,
முஸ்லீம்களுக்குச் சொந்தமான வீடுகளும், கடைகளும்
தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையே இலங்கை அரசின் அமைச்சர் பைசர் முஸ்தபா என்பவர், கல்லூரி விழா
ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள், அவரைத்
தடுத்து நிறுத்திய தோடு, அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற விடாமல் சிறைப்
பிடித்திருக்கிறார்கள்.
பின்னர் காவலர் வந்து ஒரு மணி நேரத்துக்குப் பின் அவரை
மீட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் மற்றும்
இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தத் தாக்குதலை நடத்தி
வருகிறார்கள்.
சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இலங்கையின் இந்தக் கடினமான போக்குக்கு
அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வேறு பல நாடுகளும் கண்டனம்
தெரிவித்துள்ளன.
தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பினர்
தொடர்ந்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை அரசைக்
கண்டித்து தமிழகத்திலே போராட்டம் நடத்திப் பலர் கைது
செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இங்கேயுள்ள மத்திய, மாநில
அரசுகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் இருக்கின்றன.
இலங்கையில் இதுவரை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை நடத்தி
முடித்ததை அடுத்து, இஸ்லாமியர்களும் கடுமையாகத் தாக்கப்படுகின்ற நிலையில்,
அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் குரல்
கொடுக்க முன்வரவேண்டும்". இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி : தி இந்து
சென்னையில் நடைபெற்ற இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்
Wednesday, June 18, 2014
No comments
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று
குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து நேற்று (17.06.2014) 11 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து நேற்று (17.06.2014) 11 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்ககானோர் இதில் கலந்து கொண்டனர்.
Sunday, June 15, 2014
மேலத்தெருவில் நடைபெற்ற நபிவழி திருமணம்!
Sunday, June 15, 2014
2
comments
மேலத்தெரு சூனா வீட்டு அலி அக்பர் அவர்களின் மகன் தையுப் (தம்பி ராஜா) மணமகனுக்கு இன்று (15.6.2014) காலை 11.30 மணிக்கு மணமகன் இல்லத்தில் 24 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் தந்தையிடம் கொடுத்து நபிவழித் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மாநில பேசாளர் கபுர் மிஸ்பாயி மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள்.