Sunday, June 09, 2013

அதிரை மேலதெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்


07.06.13 வெள்ளியன்று அசர் தொழுகைக்கு பிறகு  மேலத்தெரு சவுக்கு கொள்ளையில்   பெண்கள் பயான் நடை பெற்றது  .இதில் சகோதரர் அஷ்ரஃபதின் ஃபிர்தவ்சி  அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


இதில் ஏராளமான பெண்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர் 








இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்

'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Volume :1 Book :2 (புகாரி 24)

ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புஹாரி 9)


மனிதனுக்கு மட்டுமே உள்ள உணர்வு வெட்கம் 

. அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து ''இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்  (அல்குர்ஆன் 7:22)

 ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7:26)

பெண் என்றாலே வெட்கம் தான்

    அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, ''நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். ''நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிலிருந்து நீர் வெற்றி பெற்று விட்டீர்'' என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன் 28:25)

மஹ்ரமானவர்கள்

   1.மகன். 2.தந்தை. 3.சகோதரன். 4.சகோதரர் மகன். 5.தகப்பன், தாயுடன், பிறந்தசகோதரன்.  6.பால்குடி மகன். 7.பால்குடி சகோதரன். 8.மகளை திருமணம் செய்த மருமகன். 9.தாயை திருமணம் செய்தவர். 10.கணவனின் தகப்பனார்.

மஹ்ரமில்லாதவர்கள்

   சின்னம்மா  பெரியம்மா மகன்,  மாமா மகன்,  சகோதரியின்  கணவர்,  வட்டிக்கடைக்காரன்,  பால்காரன்,  சிறு  வயதிலிருந்தே  வீட்டிர்க்கு  வரும்  இளைஞன் ....

இவர்கள் முன்னிலையில் அரை குறை ஆடை கூடாது !

   இது பெண் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் தடையாக இல்லை ஏன்னா இது உங்களுக்கு தெரியாது . படைத்தவனுக்கு தெரியும்.(ANTI VIRUS மாதிரி சொல்கிறான் .)


 நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக் கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (33:59)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்(24:31)

வெட்கத்தை தொலைத்தால் நரகமே பரிசு 

முஸ்லிம்3971

(இருக்கமான ஆடை மெல்லிய ஆடை கூடாது )

இதை இவ்வளவு கடுமையாக சொல்லக் காரணம் நல்ல ஆம்பிளை கூட இதனால் கேட்டுப் போய் விடுவான் 

தனிமை கூடாது !

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.(புஹாரி 5232)

கணவனின் நண்பன் ,சின்னம்மா பெரியமா மகன் ,மாமா மகன் சிறு வயதிலிருந்தே வீட்டிற்கு வரும் இளைஞன் ....... இவர்களுடன் தனிமை கூடாது 

கட்டிட வேலை பார்ப்பவன்,வட்டிக்காரன், ஆட்டோ, கார், பயணம், பஞ்சாயத்து பேச வரும் இயக்க தொண்டன் ,மவ்லித் ஓத வரும் ஆலிம்சா .. 

அஹ்மத் 109 

யூசுப் நபியும் இதில் விதி விலக்கல்ல ...

இதை சொல்ல காரணம் பாதிப்பு பெண்களுக்கு தான் .

குலைந்து பேச கூடாது !

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (33:32)

அந்நாளில்1 அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர் களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.(24:24)


(தொலைபேசி அரட்டை ... ஆட்டோக்காரன் முதல் ஜவுளி  இன்னும் நகைக் கடைக்காரன் என அனைவரிடமும் நம்பர் கொடுக்கும் கெட்ட  பழக்கம் )

*இது உங்களை ஏமாற்றி நாசமாக்குவதற்கு (விபசாரத்திற்கு) உதவுமா ?இல்லையா? 

*குடும்ப பெண்களை ஏமாற்றி செல்போன் பேச்சை பதிவு செய்து அதை வைத்து மிரட்டுவதிலும் கற்பை பறிக்கவும் ஒரு கும்பல் முயற்சிகிறதா? இல்லையா?

தவறான பார்வை கூடாது !

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்(24:31)

பிறர் வீட்டினுல் எட்டி பார்ப்பது கூடாது !

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். 
ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது; அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது 'என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்ட மாக்கப்பட்டது' என்று கூறினார்கள். (புஹாரி 6901)

அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உன் அனுமதியின்றி ஒருவர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை. புஹாரி6902)

தொலைகாட்சிக்கு முன்னால் வெந்து போகும் வெட்க உணர்வுகள் 

வெட்கம் என்றால் என்ன? 

*வெட்கம் பொம்பளைகளுக்கு உள்ளது என்று ஆக்கி விட்டோம் 

*வெட்கம் என்பது உடல் ரீதியான விஷயம் என்று எல்லோரும் சொல்லி கொண்டு இருகிறார்கள்

வெட்கம் என்றால் இழிவு தரும் காரியத்திலிருந்து ஒதுங்கி கொள்வது 

*மனிதர்களுக்கு பயந்து தீமைகளை விடுவது தவறல்ல . அது ஈமானில் உள்ள கிளை

*மனிதனுகாக வணக்கத்தை செய்து விட கூடாது

திர்மிதி


இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், 'நாணம் நன்மையே தரும்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது புஷைர் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள், 'நாணத்தில் தான் கம்பீரம் உண்டு; நாணத்தில் தான் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது' என்று கூறினார். அப்போது அவரிடம் இம்ரான்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளவை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கேட்டார்கள்.  (புகாரி 6117)

 வெட்கம் உள்ளவன் சபையில் அழகாக சாப்பிடுவன் . டீ குடிக்கும் போது அழகாக குடிப்பான் . படுக்கும் போது தொடை தெரிவது மாறி படுக்க மாட்டான் 

வெட்கம் யாரிடமிருந்தாலும் நல்லவர்கலாக வாழ வைக்கும் 

அபுசுஃப்யான் ஹெர்குலிஸ் மன்னரிடம் உண்மை பேசியது

   (குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக்கூறினார். 
அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, (எங்களிடம்) மன்னர் 'தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) 'அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்' என்று ஆணையிட்டார். பின்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், 'நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானிகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்' என ஆணையிட்டார். நான் பொய் கூறினார்கள் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன். 
பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி,.... (புஹாரி 7)

நபிமார்களின் போதனைகளில் எஞ்சியது

          buhari 3224

நிதனமாகச் செய்பவன் தவறைச் செய்ய மாட்டான்

வெட்கம் இருந்தால்...

*குடிப்பானா ? திருடுவானா ? விபச்சாரம் செய்வானா?
*வட்டி வாங்குவானா? வரதட்சனை வாங்குவானா?
*ஃபிராட் பண்ணுவானா ? ஊழல் பண்ணுவானா?
*தேர்தலில் அளித்த வாக்குருதிகளை மீறுவானா?
*கோள் சொல்லுவானா? கெட்ட வார்த்தை பேசுவானா?
*கடன் வாங்கி விட்டு ஏமாற்றுவானா?

                                                        வெட்கங்கெட்ட காரியங்கள்

*குளத்தில் குளிப்பது, ஜட்டியுடன் குளிப்பது, பொது இடங்களில் மல ஜலம் கழிப்பது
*இல்லறத்தின் போது கணவன் மனைவியின் உருப்புகளைப் பார்ப்பது தவறல்ல

திர்மிதி (2693)

நசாயி (403)

பூப்புனித நீராட்டு விழா, கத்னா

நபி (ஸல்) அவர்களின் குணம் வெட்கப்படுவது

  அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார் 
  நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்" என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள். (புஹாரி 3562)

. நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தர வாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதை யேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக் கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக் குப் பின் ஒரு போதும் அவரது மனைவி யரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது (அல்குர்ஆன் 33:53)

நசாயி(17)

உஸ்மான் அவர்களின் வெட்கம்

முஸ்லிம்(4413)

கல்வியைத் தேடும் விசயத்தில் வெட்கம் கூடாது

 நன்மை விட சிறுவர்களிடம் கேள்வி கேட்கும் போது நாம் வெட்கப்படுகிறோம்

 முஸ்லிம் (500),(4042)


        'உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.(புஹாரி130)

     'மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். 'அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார்.(புஹாரி132)

அஹ்மத் (19773)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்." 
ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி) அறிவித்தார்.(புஹாரி1471)

Saturday, June 08, 2013

மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழக்கம் 7.6.13 அன்று வழங்கப்பட்டது.

 சகோதரர் சுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது

சகோதரர் பாரதி அவர்களுக்கு வழங்கப்பட்டது

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 2) - பொருளாதாரத்தின் கேடுகள்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 2) - பொருளாதாரத்தின் கேடுகள்


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே சொல்லவும்.

Friday, June 07, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 07.06.13


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 07.06.13
உரை: அஷ்ரஃபதின் ஃபிர்தவ்சி

மிஃராஜ் பயணம்



. மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன்.10 அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்(17:1)



நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள். 

வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். 

இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள். 

பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார். 

'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள். 
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள். 
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள். 
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள். 
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) 

"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 
கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார். (புஹாரி 349)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நான் ('மிஅராஜ்' எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக் கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக் கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்திலுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், 'நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்' என்று சொல்லப்பட்டது. 
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா(ரஹ்) அவர்களிடமிருந்து ஹிஷாம், ஸயீத், ஹம்மாம்(ரஹ்) ஆகியோர் (சொர்க்கத்து) நதிகள் குறித்து மேற்கண்டபடி அறிவித்தார்கள். (ஆனால்,) மூன்று கிண்ணங்கள் பற்றி அவர்கள் (தம் அறிவிப்பில்) குறிப்பிடவில்லை.(புஹாரி5610)

3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. .(புஹாரி3207)




ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அறிவித்தார் 
'(வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்' எனும் (திருக்குர்ஆன் 53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்வூத்(ரலி) எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள். (புஹாரி4856)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் '(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?' என்று கேட்டேன். அவர் 'இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸா' என்றார். 'அதன் மண்' அல்லது 'அதன் வாசனை' நறுமணமிக்க கஸ்தூரியாகும். 
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.154 
'வாசனை' யா(தீப்)? 'மண்ணா' (தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.  (புஹாரி6581)

அபூ தர்(ரலி) அறிவித்து வந்ததாக அனஸ்(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிளக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, 'ஸம்ஸம்' தண்ணீரால் கழுவினார்கள். பிறகு, நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தட்டு ஒன்றைக்கொண்டு வந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு, என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறினார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், 'திறங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'யார் அது?' என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், 'இதோ ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'உங்களுடன் வேறெவராது இருக்கிறரா?' என்று கேட்டார். அவர்கள், 'என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், '(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?' என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், 'ஆம், திறவுங்கள்" என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) 'நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!" என்று கேட்டேன். அவர், 'இவர் ஆதம்(அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள். 
பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உரயத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு, இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்" என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் வாயிலைத்) திறந்தார். 
அனஸ்(ரலி) தொடர்ந்து கூறினார்கள்: 
"நபி(ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ்(அலை), ஈசா(அலை) இப்ராஹீம்(அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர்களின் இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம்(அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம்(அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே கூறினார்கள்" என்று அபூ தர்(ரலி) கூறினார். 
அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்: 
"ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, 'நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், 'இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், 'இவர் மூஸா" என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!" என்று கூறினார்கள். பிறகு நான் ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், '(இவர்) ஈசா" என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு, 'இவர் இப்ராஹீம்" என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹய்யா(ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்கி(ரலி) கூறினார் 
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக் கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன். 
இப்னு ஹஸ்கி(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாய்யத்தாருக்காக) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப்பெற்றுக் கொண்டு நான் திரும்பியபோது மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூஸா அவர்கள், 'உங்கள் சமுதாயத்தவர் மீது என்ன கடமையாக்கப்பட்டது" என்று கேட்டார்கள். நான், 'அவர்களின் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அவர்கள், 'அப்படியானால் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது" என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூஸா அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறி முன்பு போல் ("உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது") என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா அவர்களிடம் மீண்டும் கூறியபோது, 'உங்களுடைய இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்" என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், 'அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒரு முறை சொல்லப்பட்ட சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை" என்று கூறினான். உடனே, நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், 'உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். நான், 'என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்" என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) 'சித்ரத்துல முன்தஹா'வுக்குச் சென்றார்கள். அப்போது அவையென்னவென்று நான் அறிய முடியாத படி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.  (புஹாரி3342)


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவாக்ளை 'ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் பெரும் பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம். 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
"தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்" என்று நபி(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.(புஹாரி3239)




இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். 
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.(புஹாரி3241)






(((bbbbbujh

Thursday, June 06, 2013

மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு

மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு தேர்வுகள் முடிந்து பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக் காலம் தொடங்கி விட்டது. பால்குடி மறந்த பச்சை மழலைகள் முதல் பருவமடைந்த வாலிப வயதினர் வரை மழலையர், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் பெரு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்களது முயற்சிகளில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அல்லது தெரிந்தே கண்டு கொள்ள மறுக்கின்றனர். 

1. கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தல்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கிறித்துவப் பள்ளிக்கூடங்களில் கொண்டு போய்ச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை விட வெறி கொண்டு அலைகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அங்கு போய் பயில்கின்ற பிஞ்சு நெஞ்சுகளில் கிறித்தவப் போதனைகள், கிறித்தவப் பிரார்த்தனைகள் பதியப்படுவதுடன் மண்டியிட்டுச் செய்கின்ற வணக்க வழிபாடுகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

தும்மினால் கூட 'ஏசப்பா' என்று குழந்தைகள் சொல்கின்ற அளவுக்கு, உலகக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கிறித்தவ மதத்திற்குப் பாதை மாற்றம் செய்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்'' 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1358, 1359, 1385, முஸ்லிம் 4803

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் இந்தப் பெரும் பாவத்தை எந்த ஒரு சலனமும் இல்லாமல் செய்கின்றனர்.

கிறித்தவ நிறுவனங்களில் பணி புரிவோர், பிஞ்சு உள்ளங்களில், தளிர்க்கின்ற சின்னஞ்சிறு நாற்றுக்களிடம் தங்கள் நச்சுக் கருத்துக்களை நடுவதற்குப் பாடம் பயின்றவர்கள்; பயிற்சி பெற்றவர்கள்.

இந்தக் கிறித்தவ மையங்களில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்த்து கிறித்துவ மயமாக்குவதற்கு இஸ்லாமியப் பெற்றோர்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். இது மழலைப் பிள்ளைகளின் நிலை என்றால் விடலைப் பிள்ளைகளின் நிலை வேதனையிலும் வேதனையாக அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்க்காமல் கிறித்தவ நிறுவனங்களில் கொண்டு போய் சேர்க்கின்றனர். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் இதைச் செய்தாலாவது பரவாயில்லை. பணம் கட்டிச் சேர்க்கும் போதும் இத்தகைய கிறித்தவப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பது தான் வேதனையாகும். இந்தக் கல்லூரிகள், முஸ்லிம் மாணவர்களை ஜும்ஆ கூடத் தொழ அனுமதிப்பதில்லை. இப்படி இம்மைக்காக மறுமையை இழப்பதற்குப் பெற்றோர்கள் முன்வரலாமா? என்பதைச் சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும். 

 2. பெண்களின் மேல்படிப்பு

பெற்றோர்கள் தங்கள் பெண் மக்களைக் கல்லூரியில் சேர்ப்பதில் கடுமையான ஆர்வத்தைக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணுக்கு உயர் கல்வி வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் உன்னத கற்பா? உயர் கல்வியா? என்று கேட்டால் கற்பு தான் என்று இந்தப் பெற்றோர் பதிலளிப்பர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் கல்லூரி வாழ்க்கை அபாயகரமானதாகவும் ஆபத்தானதாகவுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் அது மிக மிக அபாயகரமானதாக ஆகி விட்டது. சர்வ சாதாரணமாக சக மாணவர்களுடன் திரையரங்கம் சென்று அருகருகே அமர்ந்து படம் பார்ப்பது, ஹோட்டல், பார்க், பீச் என்று சுற்றுவது போன்ற அத்துமீறல்கள், ஆபாசக் கலப்புகள் எல்லாம் இப்போது சாதாரண ஒன்றாகி விட்டது. இப்படிச் சுற்றித் திரியும் பெண் பிள்ளைகள் எப்படி கற்பு சுத்தம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். அதனால் நம்முடைய பெண் பிள்ளைகளை நரகத்திலிருந்து காப்பாற்றியாக வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 66:6)

ஆனால் நம்முடைய உலக ஆசை இதையெல்லாம் செய்வதற்குத் தடையாக அமைகின்றது. இதை உள்ளடக்கும் விதமாகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 87:16,17)

நாம் நம்முடைய பிள்ளைகளின் மறுமைத் தேர்வை முதன்மையாக்குவோமாக!

நன்றி: ஏகத்துவம்

Wednesday, June 05, 2013

PJ கேப்டன் நியூஸ் பேட்டி

தவ்ஹீத் ஜமாஅத் சிறைவாசிகளுக்காக குரல் கொடுப்பது இல்லை ஏன்?

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளா?

தாலிபானை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கிறதா?

உங்கள் ஜமாஅத்தில் உள்ளவர்கள் மட்டும் தான் முஸ்லிம்களா?

குடும்ப கட்டுப்பாட்டை எதிர்ப்பது ஏன்?

நீங்கள் இடஒதுக்கீடு கேட்பது ஏன்?

இஸ்லாம் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி சொல்லியிருக்கிறதா?

இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பீ ஜே யின் பதிலை கீழே பாருங்கள்

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா?


ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா? 

- ரூபான் எம்.ஐ.எஸ்.சி

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என அனைவராலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன. 

முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர, குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை. இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் அமல்கள் ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் காட்டித்தந்த அமல்கள், வணக்க வழிபாடுகள் (இபாதத்) ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள் மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன. அமல்களை நிர்ணயிக்க வேண்டியது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தானே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித்தோன்றல்களோ அல்ல! 

துரதிஷ்டவசமாக இன்று இந்நிலை முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்கின்ற போது தனி மனித வழிபாடும், வழிகேடுகளும், மூட நம்பிக்கைகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான்.

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. 

அல்குர்ஆன் 42:2

எனவே எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு நபிவழியில் ஆதாரம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் அதைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதை விட்டும் ஒதுங்கி விட வேண்டும். 

இதுவே நபிவழியைக் கடைப்பிடிக்கும் அழகான வழிமுறையாகும். இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும், மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக்களை) கேட்டும், மூன்று யாஸீன் சூரா ஓதியும் விசேஷமான தொழுகைகளை நடத்தியும் இன்னும் இது போன்ற பல்வேறு செயல்களைச் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேஷமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

"பராஅத் இரவு' "ஷபே பராஅத்' என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்புமிக்க இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகின்றது. ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப்படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. பராஅத் எனும் அரபிச் சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது. நன்றி: சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை, சென்னை மாவட்டம்.

"லைலத்துல் கத்ரு' "லைலத்துல் ஜும்ஆ' போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் "லைலத்துல் பராஅத்' என்னும் சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ, இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா? ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதைச் செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும். (இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும். (இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது)

பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடைவீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராயிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. (நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273) மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக! 

ஏன் இந்தச் சிறப்பு? அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? ஷஅபான் பிறை 15 அன்று தான் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிவமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி. மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. 

இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனைத் தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது.

சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும். அதில் குறிப்பாக நீடுரைச் சார்ந்த மவ்லவி. எ. முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாகவி என்பவர் ''அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா'' என்ற (மே-ஜூன் 2013) மாத இதழில் ''ஷஅபான் மாதத்தின் சாந்த நாள்'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஷஅபான் மாதம் 15-ம் நாள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்கு இப்னுமாஜாவில் வரக்கூடிய ஒரு ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்.

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, "பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அலீ (ரலி), 
நூல்: இப்னுமாஜா 1378 

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள். அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், அவர் அடுத்ததாக ஒரு வாதத்தை வைக்கிறார். அது என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில மாதங்களாக பைத்துல் முகத்திஸை நோக்கித் தொழுது வந்தார்கள். பிறகு அவர்கள் கஅபாவை நோக்கித் தொழுமாறு இறைவன் கட்டளையிட்டான். இந்தச் சம்பவம் ஷஅபான் 15-ல் தான் நடந்தது என்று ஒரு பொய்யைக் கட்டவிழ்த்து விடுகிறார். ஆனால் இதற்கான ஆதாரத்தை அவர் காட்டவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதோ அவர் வைக்கும் ஆதாரம்: புனித ஷஃபான் 

15ஆம் நாள் ஜெருசலத்திலுள்ள பைத்துல் மக்தஸிலிருந்து புனிதக் கஅபாவை நோக்கி கிப்லா மாற்றித் தொழும்படி உத்தரவு இறங்கியதாக அறிஞர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. அதா பின் பஸார் (ரஹ்) அவர்கள் இதை நினைவில் வைத்துத் தான் இவ்வாறு கூறுகிறார்கள். லைலத்துல் கத்ரு இரவுக்குப் பின் சிறந்த இரவு பராஅத் இரவு ஆகும். "கிப்லா மாற்று சம்பவம் ஷஃபான் 15 பராஅத் பெருநாளில் நிகழ்ந்ததாக பல வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு'' என்று இவரே கணித்துக் கூறியிருக்கிறார். 

இவர் இதனை தன்னுடைய சொந்தக் கூற்றாகச் சொல்லியிருந்தால் கூட இதனை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால் அப்படியில்லாமல் கஅபாவை நோக்கித் தொழ ஆரம்பித்தது ஷஅபான் 15-ல் தான் நடந்தது. எனவே அந்த நாளுக்கு சிறப்பு இருக்கிறது. என்று இமாம்கள் கூறியதாக வேறு இவர் இதனை இட்டுக்கட்டிச் சொல்கிறார். இமாம்கள் எந்த நூலில் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற ஆதாரத்தையும் தெளிவுபடுத்தவில்லை. அப்படியே அந்தச் சம்பவம் ஷஅபான் 15-ல் தான் நடந்தது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அந்த நாள் சிறப்புக்குரிய நாள் என்றும். அந்த நாளை மையமாக வைத்து நோன்பு நோற்க வேண்டும், 100 தடவை யாஸீன் ஓத வேண்டும், இரவு முழுவதும் நின்று தொழ வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டித் தந்துள்ளார்களா? அதற்கான ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸாவது இருக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். 

மேலும், இவர் இதற்கு இன்னொரு ஹதீஸையும் ஆதாரமாக வைக்கிறார். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபிகளார் என்னோடு தங்கும் நாளில் நடுநிசியில் நான் நன்கு தூங்கிக் கொண்டிருந்தேன். இடையில் விழிப்பு ஏற்பட்டது. என் அருமைக் கணவரை படுக்கையில் தேடினேன். அவர்கள் இல்லை. எழுந்துப் பார்த்தால் அவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். மிகச் சுருக்கமாக நின்று ருகூஉ செய்த அவர்கள் நெடுநேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். இரண்டாம் ரக்அத்தையும் அவ்வாறே நிறைவேற்றினார்கள். பின்பு ஸஜ்தாவிலேயே பஜ்ரு வரை அசையாமல் கிடந்தார்கள். எங்கே அவர்கள் புனித ஆத்மா கைப்பற்றப்பட்டு விட்டதோ? என்ற கவலையுடன் அவர்களது பாதங்களை நான் தொட்டேன். அவர்களின் பொற்பாதங்கள் அசைந்தன. அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். 

அப்பொழுது அவர்கள் ஸஜ்தாவில் இந்த துஆவை ஓதினார்கள். ஸஜத லக அஸ்வதீ வஆமன பிக ஃபுவாதீ வ ஹாதிஹி யதீ யல்லதீ ஜனய்த்து பிஹா அலா நஃப்ஸீ ஃபக்ஃபிர்லீ அத்தன்பல் அலீம். ஃப இன்னஹூ லா யக்பிருத் தனூப இல்லர் ரப்புல் அளீம். அவூது பிரிளாக மின் சுக்திக, வபி முஆபாதிக மின் உகூபதிக. வபிக மின்க லா உஹ்ஸீ தனாஅன் அலைக. அன்த கமா அத்னய்த அலா நஃப்ஸிக இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பொழுது, "ஆயிஷாவே! இது என்ன இரவு என உனக்கு தெரியுமா?'' எனக் கேட்டுவிட்டுக் கூறினார்கள். இது ஷஃபான் பதினைந்தாம் இரவு. இவ்விரவில் அல்லாஹ் ஒரு சில பாவிகளை தவிர மற்ற முஃமின்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான். அந்த பாவிகள் மதுக்குடியை நிரந்தரமாக்கிக் கொண்டிருப்பவர்கள். விபச்சாரம், வட்டியில் மூழ்கியிருப்பவர்கள். தம் பெற்றோரை வேதனைப்படுத்துபவர்கள். உருவப்படம் வரைபவர்கள். பிறரைக் குழப்பத்தில் ஆழ்த்துபவர்கள். ஷஅபானின் பதினைந்தாம் இரவு மிகவும் புண்ணியம் வாய்ந்த இரவு என்பதற்கு இந்நிகழ்ச்சி போதுமான சான்றாகும் என்று அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் செய்தி ஷுஅபுல் ஈமான் மற்றும் பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை. இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு நிகரானதாகும்.

இந்தச் செய்தியில் இடம்பெறும் சுலைமான் இப்னு அபீ கரீமா என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். சுலைமான் பின் அபீ கரீமா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள் (நூல்: இப்னு அபீ ஹாதிம்) சுலைமான் பின் அபீ கரீமா என்பாரின் பெரும்பாலான ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை ஆகும். இத்தகைய நிராகரிக்கத்தக்க செய்திகளை இவரிடமிருந்து அம்ர் பின் ஹாஸிம் அல்பைரோத்தி என்பார் அறிவிக்கின்றார் என இமாம் இப்னு அதீ அவர்கள் தம்முடைய காமில் என்ற நூலில் குறிப்பிடுகிறார். மேற்கண்ட செய்தியை சுலைமான் பின் அபீ கரீமா என்பாரிடமிருந்து அம்ர் பின் ஹாஸிம் அல்பைரோத்தி என்பாரே அறிவிக்கின்றார். எனவே இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட வகைக்கு மிக நெருக்கமான மிகப் பலவீனமான செய்தி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும் இதே செய்தியை அன்நள்ர் பின் கசீர் என்பார் வழியாக ஃபளாயிலுல் அவ்காத் என்ற நூலில் பைஹகீ அவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் சில நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அந்நள்ர் பின் கஸீர் என்ற அறிவிப்பாளரும் மிகப் பலவீனமானவராவார். இமாம் புகாரி அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கத் தகுந்தவை என்றும் தம்முடைய தாரீகுல் கபீர் மற்றும் தாரீகுஸ் ஸகீர் என்ற நூற்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் முன்திரி அவர்கள் தம்முடைய தஹ்தீபு சுனன் என்ற நூலில் அந்நள்ர் பின் கஸீர் என்பார் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள். இமாம் அபூஹாதிம் அவர்களும் அந்நள்ர் என்ற அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

மேலும் இவர் உறுதியான அறிவிப்பாளர்கள் வழியாக செய்திகளை இட்டுக்கட்டி அறிவிக்கக் கூடியவர். இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்வது கூடாது என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாமல் உறுதியாகிறது. மேலும் இதே செய்தி உறுதியான அறிவிப்பாளர்கள் வழியாக முஸ்லிம் போன்ற பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஷஅபான் மாதத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை. பொதுவான ஒரு இரவில் நடந்த சம்பவமாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. நரகமே கூலி பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல. எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். 

நூல்: முஸ்லிம் 3243

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

"செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப் பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்'' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) 
நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில் நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்பேன். அதற்கு இறைவன், "உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்கு) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான். 

புகாரி 6575, 6585 

இதன்படி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கையை மீறி அமல் செய்தால் நாளை மறுமையில் அது சாந்த நாளாகாது; சாப நாளாக ஆகிவிடும். மார்க்கத்தில் இல்லாத பராஅத் இரவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு அடங்கிய ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் செய்ய வேண்டிய அமல்களைச் செய்வதில்லை. 27ஆம் இரவில் மட்டும் சில பித்அத்தான காரியங்களைச் செய்து விட்டு முடித்துக் கொள்கின்றனர். மறுமையை நம்பியவர்களே! உங்களைப் பாவியாக்கும் பராஅத் இரவைத் தூக்கி எறிந்து விட்டு இறைவனாலும் இறைத்தூதராலும் காட்டித் தரப்பட்ட தூய இஸ்லாத்தைப் பின்பற்ற எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவானாக!

நன்றி: ஏகத்துவம் http://onlinepj.com/egathuvam/2013-/ega_jun_2013/

Monday, June 03, 2013

வாய்க்கால் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்


கடந்த  31-05-2013 அன்று இஷா தொழுகைக்குப்பின் வாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளி அருகில் 'மார்க்க விளக்க' தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'இதுதான் இஸ்லாம்' என்ற தலைப்பின் கீழும், சகோதரர் அன்வர் அலி அவர்கள் 'மலைக்க வைக்கும் சமுதாயப்பணி' என்ற தலைப்பின் கீழும் உரையாற்றினார்கள்.

இதில் பெரும்திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




Sunday, June 02, 2013

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 1) - பொருளாதாரத்தின் அவசியம்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர்) - பொருளாதாரத்தின் அவசியம்

இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற தலைப்பில் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் தொடர் உரையாற்றினார். இதில் பொருளாதாரம் சம்பந்தமாக இஸ்லாம் வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் தெளிவுப்படுத்தி, நவீன காலத்தில் இருக்கும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கு இஸ்லாத்தின் தீர்வை எடுத்துரைத்தார்.

இந்த விஷயங்களை அறிந்து கொள்வது ஹலால் எது? ஹராம் எது? என்பதை அறிந்து, அதை நாம் வாழ்வில் கடைபிடிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் அந்த தொடர் உரையை இங்கே தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ்.


இந்த உரையின் முழுமையாக கேட்க இங்கே சொல்லவும்.

Saturday, June 01, 2013

தொண்டியில் கந்தூரி திருவிழாவிற்கு பூட்டு போட சம்மதித்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்!

தொண்டியில் கந்தூரி திருவிழாவிற்கு பூட்டு போட சம்மதித்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பல வருட தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு பிறகு இந்த வருடம் முதல் கந்தூரி திருவிழாவை நிறுத்த தர்ஹா நிர்வாகிகள் முன்வந்துள்ளனர். தவ்ஹீத் சகோதரர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த முடிவுக்கு வந்தனர் தர்ஹா நிர்வாகிகள். அல்ஹம்துலில்லாஹ்.



சிங்கள மொழியில் குவைத்தில் நடந்த “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்”

அரபு மண்ணில் ஓர் அறிவுப் புரட்சி - சிங்கள மொழியில் குவைத்தில் நடந்த “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ குவைத் மண்டலம் சார்பாக  கடந்த 31-5-2013 வெள்ளிக்கிழமை அன்று மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக உலக அளவில் இரண்டாவது முறையாக சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புத்த மத சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள SLTJ யின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான முறையில் பதிலலித்தார்.

ஹலால் பிரச்சினை ஏன்?
முஸ்லிம்கள் ஏன் தாடி வைக்கிறார்கள்?
ஹிஜாப் பெண்ணடிமைத் தனமில்லையா?
கஃபத்துல்லாஹ் புத்த கோயில் தானே?
பொதுபல சேனாவின் நோக்கம் தான் என்ன?
மாற்று மதத்தவர்களை மக்காவில் நுழைய ஏன் அனுமதிப்பதில்லை?
நபிகளாரின் பலதார மனம்,
மற்றும் முஸ்லி ஆண்களுக்கு ஏன் நான்கு திருமண அனுமதி?

போன்ற இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கிய கேள்விகள் கேட்க்கப்பட்டது.

இது போன்ற நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துங்கள் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கள சகோதரர்கள் கோரிக்கை வைத்தனர்.

நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பதிலும், வந்தவர்களை முஸ்லிம்கள் உபசரித்த விதமும் எங்களுக்கு இஸ்லாமியர்கள் மீது நன் மதிப்பை உயர்த்தியுள்ளது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரர் கூறியது மனதை நெகிழச் செய்தது.


நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி முடிந்து சென்று கொண்டிருந்த ஒரு சிங்கள சகோதரர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அவரது நண்பரை தொடர்பு கொண்டு “அற்புதமான ஒரு நிகழ்ச்சியை தவற விட்டு விட்டீர்கள்” என கடிந்து கொண்டது  நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து இரவு ஒன்பது மணிக்கு முடிந்த நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவருக்கும் மண்டலம் சார்பாக மாலை சிற்றுண்டியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரங்கத்தில் இலவசமாக நூறு பேறுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, பலதார மனம் ஏன்?, இஸ்லாத்தில் இல்லறம், யார் இந்த முஹம்மது (ஸல்) அவர்கள்? ஆகிய நூல்களும் “யார் இந்த பொதுபல சேனா?” என்ற DVD யும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.