Thursday, January 31, 2013

விஸ்வரூபம் பற்றி முதல்வரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு (வீடியோ )

விஸ்வரூபம் பற்றி முதல்வரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு 






சென்னை: விஸ்வரூபம் படத்தை தடை செய்தது அரசியல் பிரச்சினை அல்ல. அது முற்றிலும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு இப்போதைக்குப் போகப் போவதில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் இதுதொடர்பாக ஆலோசனையில் இறங்கினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில டிஜிபி ராமானுஜம், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அவர் கொடுத்த பேட்டியின் விவரம்...

கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக டிவிகள், பத்திரிக்கைகள், இணையதளங்களில் காட்டுக்கத்தலாக இருக்கிறது.என்னைப் பறறியும், எனது அரசைப் பற்றியும் இரக்கமே இல்லாமல் குற்றச்சாட்டுக்கள், புகார்களை சுமத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். இப்பட விவகாரம் தொடர்பான அனைத்து தவறான கருத்துக்களையும் மறுக்க வேண்டியது அவசியம் என்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு.

இந்தப் படத்தை அரசு தடை செய்திருக்கக் கூடாது என்பது முதல் குற்றச்சாட்டு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதும் ஒரு புகார். பலருக்கு சட்டம் ஒழுங்கை அரசு எப்படி பாதுகாக்கிறது என்பதே புரிவதில்லை. அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரிவதில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிப்போர் அரசின் சிரமங்கள், நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து புரிந்து கொள்வதே இல்லை.

ஒரு முதல்வர் என்ற வகையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் எனது முதல் முன்னுரிமையாகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமையாகும். மக்கள் அமைதியாக, சுமூகமான முறையில், இணக்கமான முறையில் தினசரி வாழ்க்கையை நடத்த வேண்டியது அவசியமாகும். அதை உறுதி செய்ய வேண்டியது எனது கடமையாகும்.

விஸ்வரூபம் படத்தை 525 தியேட்டர்களில் வெளியிடுவதாக கூறியிருந்தனர். ஆனால் இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று 24 முஸ்லீம் அமைப்புகள், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் ஆகியவை சார்பில் அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. உள்துறைச் செயலாளரிடம்இதைக் கொடுத்னர். அவர்களின் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டங்களையும் அறிவித்தனர்.

 இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவானது.

சட்டம் ஒழுங்குசீர்குலைந்து, வன்முறை மூண்டால் அதை காவல்துறையினரால் சமாளிக்க முடியுமா என்பதை அரசு பரிசீலித்தது. தமிழக காவல்துறையின் மொத்த காவலர் பணியிடம் 1,13,780 பேராகும். இதில் காலியிடம் 21,911 ஆகும். எனவே இருப்பது 91,807 பேர்தான். இதில் கோர்ட் பணி, ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் போன காவலர்களைத் தவிர்த்துப் பார்த்தால், மீதமிருப்பது வெறும் 9226 பேர்தான்.

ஆனால் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் 525 தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் குறைந்தது 56,440 போலீஸார் தேவைப்படுவார்கள். ஆனால் அது இயலாத காரியம். சில தியேட்டர்கள் என்றால் பரவாயில்லை, 525 தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு தருவது என்பது எப்படி முடியும். எனது அரசுக்கும், முதல்வராக எனக்கும், ஒருதிரைப்படத்தை விட மக்களின் சட்டம் ஒழுங்கு நிலைதான் முக்கியம் என்பதால் படத்தைத் தடை செய்யும் முடிவை அரசு எடுத்தது என்றார் ஜெயலலிதா.

விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது. ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுகுறித்து அவர் கூறியதாவது...

விஸ்வரூபம் படம் தொடர்பாக 24 முஸ்லீம் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைமைச் செயலாளரிடம் புகார்களைக் கூறி மனு அளித்தனர். இதையடுத்து அதை உள்துறைச் செயலாளருக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிவைத்தார். படத்தத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் பேசியுள்ளோம், உங்களது ஆட்சபனைகளைப் பரிசீலித்து தேவையானதைச் செய்யுமாறு கூறியுள்ளோம் என்று அரசுத் தரப்பில் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதே அதைக் கமல்ஹாசன் கவனித்து சரி செய்ய முன்வந்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் கமல்ஹாசன் என்ன செய்தார்...

தன்னை சந்தித்த முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் படம் போட்டுக்காட்ட ஒரு தேதி சொன்னார். அன்று அவர்கள் போனபோது பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வேறு தேதியில் படம் காட்டுவதாக கூறினார்கள். ஆனால் கூறியபடி படம் காட்டப்படவில்லை. இப்படியே ஒரு மாதம் போய்விட்டது.

இந்த நிலையில் டிடிஎச்சில் படம் திரையிடுவது தொடர்பாக கமல்ஹாசனுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் விளைவாக படம் ஜனவரி 25ம் தேதிக்கு ரிலீஸாவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜனவரி 21ம் தேதிதான் இஸ்லாமிய பிரதிநிதிகளுக்குப் படத்தைப் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.

அதன் பின்னர் 22ம் தேதி இஸ்லாமியப் பிரதிநிதிகள் அமர்ந்து படம் குறித்துப் பேசினர்.இறுதியில் படத்தைத் தடை செய்யக் கோருவது என்று முடிவெடுத்தனர். இதையடுத்து 23ம் தேதி உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பல்வேறு தொடர் போராட்டங்களையும் அவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து 23ம்தேதி அரசு உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும், முற்றுகை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் குறித்து அரசு சாதக, பாதக நிலையை அலசிப் பார்த்தது. ஒரு வேளை போராட்டம் நடந்து, வன்முறை மூண்டால் அதைக்கலைக்க, ஒடுக்க தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என்று போக நேரிடும். அப்படி நடந்தால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களும், மீடியாக்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே, படத்தைத் தடை செய்வது என்ற முடிவை அரசு எடுத்தது. மேலும் கமல்ஹாசனும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக் காட்சிகளை நீக்க அவர் முன்வரவும் இல்லை. எனவேதான் அரசு நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

இந்தத் தடையும் கூட 15 நாட்களுக்கு மட்டும்தான் விதிக்கப்பட்டது. மேலும் இந்தத் தடையை நீக்க உடனடியாக கமல்ஹாசன் எங்களை அணுகியிருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை. அப்படி வந்திருந்தால், முயன்றிருந்தால் அன்றே பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அரசுக்கு எதிராக அவர் கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதன் பிறகு நடந்தது உங்களுக்கேத் தெரியும்.

இந்தத் தடைக்கு நான்தான் காரணம் என்று கூறுவது அபத்தமானது. சிங்கப்பூரில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. கத்தாரில், ஐக்கியஅரபு எமிரேட்ஸில், மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.இதற்கு நான்தான் காரணமா...

கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. மைசூரில் தியேட்டர் தாக்கப்பட்டது. ஆந்திராவில், கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. இதற்கெல்லாம் நான்தான் காரணமா...

மேலும் 24 இஸ்லாமிய அமைப்புகள் இணைந்த கூட்டமைப்பை சிறிய குழு என்று கூறுகிறார்கள். அது எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும். தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பில் ஏழரை லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் சிறிய குழுவா... என்று கேட்டார் ஜெயலலிதா

நன்றி: தட்ஸ்தமிழ்

காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் வெளியிடலாமா ?TNTJ நிலைப்பாடு (வீடியோ)

காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபத்தை வெளியிடலாமா ?




காட்சிகளை நீக்கி விஸ்வரூபத்தை வெளியிடலாமா ?-TNTJ from Adiraitntj on Vimeo.



விஸ்வரூபம் பிரச்சினை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் விளக்கம்:

சகோ.பஷீர் தொடர்பு கொண்டது உண்மை. அவரை நாம் பிரதிநிதியாக அனுப்பவில்லை. 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும்.

பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் வாசல் திறக்கப்பட்டாம் வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது.
...
23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் கூடாது. 23 அமைப்புகள் இவ்விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக்கொள்ளும்.

இவ்விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம்.

Wednesday, January 30, 2013

தங்க காசு கொடுத்து நரகத்திற்கு அழைக்கும் வழிகெட்ட கூட்டம்!

தங்க காசு கொடுத்து நரகத்திற்கு அழைக்கும் வழிகெட்ட கூட்டம் !

மக்களை வழிகெடுப்பதில் அரசியல்வாதிகளுக்கும் கப்ர் வணங்கி ஆலிம்சாக்களுக்கும் எவ்வளவு ஆனந்தம் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் அதிரையில் நடைபெற்றுள்ளது. மீலாது விழா என்ற வழிகேட்டை அரங்கேற்ற அரசியல்வாதிகளும் கப்ர் வணங்களும் படாதபாடுபடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்று செய்தியே வரலாற்றில் பாதுகாக்கப்படவில்லை. மீலாது நபி விழா என்ற நபி (ஸல்) அவர்களின் பிறப்பை நபி (ஸல்) அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ அல்லது இவர்கள் பின்பற்றுவதாக சொல்லும் இமாம்களோ கொண்டாவில்லை. 'உஸ்வத்துன் ஹஸானா' என்றால் 'அழகிய முன்மாதிரி' என்று பொருள். நபி (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி உள்ளது என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

ஆனால், இந்த வழிகெட்ட கூட்டம் 'அழகிய முன்மாதிரி' என்ற பெயரை வைத்துக்கொண்டு, நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத செயலை அரங்கேற்றுகிறது. மீலாது நபி விழாவோடு மவ்லூத் என்ற இணைவைப்பு பாடலையும் பாடி மக்களின் காதுகளை கிழித்துள்ளார்கள்.

மக்களை வழிகெடுக்கும்  இந்த கூட்டம், மக்கள் எல்லாம் தவ்ஹீத் எழுச்சியினால் நம்மை அடையாளம் கண்டுவிட்டார்கள், எனவே, பரிசு கொடுத்து அழைத்தால் தான்  நமது நிகழ்ச்சிக்கு  வருவார்கள் என்று எண்ணி குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தங்க காசு பரிசு என்று அறிவிப்பு வேறு . அட பாவிகளா, நரகத்திற்கு அழைத்து சொல்ல பரிசு வேறு கொடுக்கணுமா ?

இந்த வழிகெட்ட நிகழ்ச்சிக்கு அதிரை இணையதளம் ஒன்று விளம்பரம் செய்தது தான் கொடுமை.

இந்த நிகழ்ச்சியில் அதிரை பள்ளிவாசல்களில் இமாம்களாக இருக்கும் கப்ர் வணங்கி இமாம்கள் (?) ரோஜா மலரே ராஜ குமாரி என்ற பாடல் மெட்டில்   மௌலூது பாடி முன்னிலையும் வகித்து இருக்கிறார்கள்.

இவர்கள் பகிரங்க இணைவைப்பிலும், நரகத்திற்கு கொண்டு செல்லும் பித்அத்தான செயல்களை செய்யும் இமாம்களை (?) பின்பற்றி தொழுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும். இவர்களை பள்ளிவாசல்களை விட்டும் துரத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இமாம்கள்:

முஹம்மது நெய்னா, இமாம், முகைதீன் ஜூம்ஆ பள்ளி (இவர்கள் கப்ர் வணக்கத்தை வளர்க்கும் ரஹ்மானிய மதரஸாவின் பேராசிரியர் (?))
முஹம்மது தமீம், இமாம், தக்வா பள்ளி,
கலீலுர் ரஹ்மான், இமாம், பெரிய ஜூம்ஆ பள்ளி


இந்த இமாம்களை (?) தவ்ஹீத் ஜமாஅத் நேரடி விவாத்திற்கு அழைக்கிறது. இவர்கள் மௌலூது மற்றும் மீலாது பற்றி நேரடியாக தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதித்து நிரூபிக்கும்படி அழைக்கிறது. இவர்களுடன் விவாதிக்க மதரஸாவில் பாடம் படிக்காத சகோதரர்கள் போதும் என்பது வேறு செய்தி. சத்தியம் இருந்தால் வரட்டும்.



கடல்கரைத் தெருவில் காட்சி தந்த ஹாஜா ஒலி அப்பா அவ்லியாவின் மருமகள்!

கடல்கரைத் தெருவில் காட்சி தந்த ஹாஜா ஒலி அப்பாவின் மருமகள் !


பெண் அவ்லியாவிற்கு தேவையான வளையல்கள் 
அவரின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. நல்ல 
வேலை வளையல்லோடு
நிறுத்திக்கொண்டார்களே!!
அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்களை நரகத்திற்கு அனுப்ப மூன்று விசேஷ இடங்கள்  உள்ளன. ஒன்று மேலத்தெருவில் உள்ள தர்ஹா, இரண்டு கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹா, மூன்று புது தெருவில் உள்ள தைக்கா என்ற தர்ஹா. காலம் காலமாக நமது முன்னோர்களை வழிகெடுக்க இந்த நாற்றம் எடுத்த தர்ஹாககள் காரணமாக இருந்தன.


அல்லாஹ்வின் அருளால், தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சியினால், ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த இந்த தர்ஹா வழிபாடு இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



தர்ஹா வழிபாட்டை ஆதரித்து மக்களை வழிகெடுக்கும் குட்டி ஆலிம்சாக்கள் இன்று வழிகேடராக அதிரையில் உள்ள 95 சதிவீத மக்களால் பார்க்கப்படுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தமிழகத்தில் இருக்கும் தர்ஹாக்களில் பலவற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளாதாக சொல்லப்படும் மகான்கள் (என்று சொல்லப்படுபவர்கள், யார் மகான் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தான் தெரியும்) உண்மையில் அங்கு வரவுமில்லை அங்கே அடக்கம் செய்யப்படவுமில்லை என்று பல காலமாக தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி வருகிறது.

பல இடங்களில் கழுதை, குரங்குளை அடக்கம் செய்து வைத்து தான் மகான் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை உண்மைப்படுத்தும்  விதமாக ஒரு சம்பவம் அதிராம்பட்டிணத்தில் நடந்துள்ளது.

அதிரை கடல்கரை தெரு தர்ஹாவிற்கு வரும் பெண்கள் தங்கி, சமைத்து சாப்பிடும் ஒரு இடம் உள்ளது. கடந்த வாரம் புதிதாக ஒரு கப்ர் திடீர் பிள்ளையார் போல திடீர் கப்ர் உருவாக்கியுள்ளார்கள்.

அட மடையர்களே, எவனும் சாகவில்லை, யாருக்குடா இந்த கப்ர் என்று கேட்டால், அவ்லியா பக்தர்கள் சொல்லும் கதை அவர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. புதிகாக முளைத்துள்ள கப்ரில் இருப்பவர் ஒரு பெண் அவ்லியாவாம். யாருடா இது என்று கேட்டால், கடல்கரைத் தெருவில் உள்ள ஹாஜா ஒலி அப்பாவின் மருமகளாம்.

மக்கத்து காஃபிர்கள்  கூட அடக்கம் பண்ண ஒரு மைய்யத் இல்லாமல் ஒரு அடக்கஸ்தலம் உருவாக்க வில்லை. இன்று ஒரு மைய்யத் கூட இல்லாமல் திடீர் கட்டடம் உருவாக்கி அதை ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று சொல்கிறார்கள்

அடக்கம் செய்யாமலே கப்ர் கட்டும் இவர்களின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது. பாக்தாதில் பிறந்த அப்துல் காதர் ஜெய்லானி என்பவருக்கு இந்தியாவின் பல இடங்களில் கப்ர் உள்ளது. இந்த அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் இந்தியாவிற்கு வந்தார் என்பதற்கே ஆதாரம் இல்லை. ஆனால், பல இடத்தில் செத்து அடக்கம் செய்ததாக கப்ர் வணங்கி மதத்தினர் மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் நம்ம ஊரில் உள்ள கப்ர் வணங்கிகளும் தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளனர்.

இந்த கப்ர் சிந்தனை திடீர் என்று எப்படி வந்தது என்று அதன் நிர்வாகிகளை கேட்டதற்கு அவர்கள் சொன்ன கதை என்ன தெரியுமா?

இவர்களுடைய கனவில் போய் அந்த அம்மா சொன்னிச்சாம் விலை வாசி எல்லாம் நன்றாக ஏறி கொண்டு இருக்கிறதே இந்த காலத்தில் 2 உண்டியல் எப்படி பத்தும் ? ஆக நான் வெயிலிலும் மழையிலும் கிடப்பது உங்களுக்கு தெரிய வில்லையா ?எனக்கு ஒரு உண்டியல் வைத்தால் நல்லா கல்லா கட்டலாமே என்ற அறிவு கூட உங்களுக்கு இல்லையா என்று கேட்டுச்சாம்.

உடனே இவர்கள் அதிரடியாக கட்டடம் கட்டி அதற்கு  ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று பெயரும் வைத்து விட்டார்கள்

கனவில் வந்து சொன்னார் என்றால் யாரும் ஆதாரம் கேட்க முடியாது அல்லவா? அதற்கு தான் கனவு என்ற ஆயுதம்.

தரிசாக கிடந்த இடம், பிணமே இல்லாமல் கப்ர் ஆகும் போது,கபுர் எப்படி தர்காவாகின்றது என்பது நமக்கு விளங்காதா ?

மாற்று மத சகோதரர்கள் மரத்தடியிலும், எல்லை கல் அடியிலும் ஒரு உண்டியல் வைப்பார்கள் அது பிறகு கோவிலாக உருவெடுக்கும். அது அவர்கள் வழி. ஆனால் இஸ்லாத்தில் தர்கா வழிபாடே கூடாது என்று இருக்க உண்டியல் வைத்து வயிற்று பிழைப்பு பிழைக்க நினைக்கும் நிர்வாகிகள் மரத்தடியில் உண்டியல் வைத்தால் கல்லா கட்ட முடியாது என்பதை விளங்கி செங்கல் செலவில் உண்டியல் வைத்து ஒரு கனவு என்று கதை சொன்னால் போதும் தர்கா உருவாகிவிடும்.

அதன்பின் மண் செங்கல் ஆகும் செங்கல் கட்டடம் ஆகும் கட்டடம் கப்ர் ஆகும் .கப்ர் தர்காவாகும். பத்தி வரும் சாம்பிராணி வரும் பூஜை பண்ண சாமியார் வருவார் அவரை உள்ளே வைத்து கதவை மூடி கொல்லவும் முடியும்

அவ்லியா வச்ச ஆப்புக்கு பரிசு புதிய கப்ர்:

சமீபத்தில் இதே தர்ஹாவில் அவ்லியாவின் சேவகர் ஒருவரை பலி வாங்கினார் ஹாஜா ஒலி அப்பா அவ்லியா. அதற்கு பரிசாக தான் ஒரு புதிய கப்ரை கட்டியுள்ளனர் அதிரை கப்ர் வணங்கிகள்.

அனைவராலும் எதிர்க்கப்படும் கப்ர் வணக்கம்:

ஒரு காலத்தில் அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள் என்றால் அடித்து துவைத்து விடுவார்கள். ஆனால், இன்று கப்ர் வணக்கத்தை நமதூரில் உள்ள மக்களில் 95 சதவீத்தினர் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு நாள்:

இன்ஷா அல்லாஹ், இந்த கப்ர் வணக்கம் ஒரு நாள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

புது கப்ருக்கு எதிர்ப்பு, பழைய கப்ருக்கு ஆதரவு (?):

புதிதாக முளைத்துள்ள இந்த கப்ருக்கு  நமது ஊரில் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டியுள்ளார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், ஏற்கனவே, ஒரு சில பள்ளிவாசல் வளாகத்திலேயே கப்ர் உள்ளது. இதை இவர்கள் எதிர்ப்பதாக தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், அந்த பள்ளிகளிலேயே இவர்கள், ஷிர்க் வைக்கும் இமாமை பின்பற்றி தொழுது வருகிறார்கள். இது இரட்டை முகமான செயல் என்பதில் சந்தேகம் இல்லை. இவற்றையும் எதிர்ப்பது உடன், இவர்களை பின்பற்றி தொழுவதையும் தவிர்க்க வேண்டும்.

கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்:

கப்ர் வணக்கத்தை எதிர்க்கும் நம்மில் சிலர் ஏதோ ஒரு சிலர் அறியாமல் கப்ர் வணக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்று நம்புகிறார்கள். நமது ஊரில் கப்ர் வணக்கத்தை வளர்ப்பதே இரு மதரஸாக்கள் தான். இந்த மதரஸாக்களில் ஓதியவர்கள் தான் தர்ஹாக்களில் பாத்திஹா ஓதி இணைவைப்பு காரியத்தை ஆரம்பித்து வைக்கிறார்கள். சிலர் இவற்றை ஆதரித்து கொண்டு, கப்ர் வணக்கத்தை எதிர்க்கிறார்கள். இந்த மதரஸாக்களை ஒழிக்காத வரை கப்ர் வணக்கம் ஒழியாது. இந்த மதரஸாக்கள் மார்க்கத்தை போதிக்கின்றன என்று நிதி உதவி செய்பவர்கள் சற்று சந்திக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் பணம் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் கொடிய பாவத்தை அரங்கேற்றத்தான். 

நமது ஊர் பள்ளிகளில் இமாமாக (?) இருந்துகொண்டு மௌலூது ஓதுவது, வரதட்சணை திருமணத்தில் பாத்திஹா ஒதுவது, சுன்னத் தான தாடியை சிரைக்க பித்அத்தான பாத்திஹா ஒதுவது போன்ற வழிகெட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் இந்த கப்ர் வணக்க மதரஸாக்களின் மாணவர்கள் தான்.  காம களியாட்டம், குடிகாரர்களின் குத்தாட்டாம், சினிமா கூத்தாடிகளின் ஆபாச நடனம், இசையுடன் கூடிய போலி இஸ்லாமிய பாடல்கள் என அனாச்சாரங்களை கொண்டு ஆரம்பிக்கப்படும் கந்தூரி களியாட்டத்தில் பாத்திஹா ஓதி ஆரம்பித்து வைக்கும் நரகத்தின் கொள்ளிக்கட்டைகளான போலி ஆலிம்சாக்களும் இந்த மதரஸாக்களின் மாணவர்களே.

யார் சொன்னது இந்த மதரஸாக்கள் தான் கப்ர் வணக்கத்தை போதிக்கிறது என்று யாராவது வாதம் செய்வார்களானால், அவர்களுக்கு நாம் விடும் சவால் இது தான். இந்த மதரஸாக்களில் தர்ஹா கட்டுவது, அதில் போய் முட்டுவது, தர்ஹாவில் கச்சேரி வைத்து, அதில் 'கொய்யா காய்க்கு ஆசைப்பட்டு, கொலுந்தநாரை வைச்சு கிட்டேன்' என்று சினிமா பாட்டு பாடி அவ்லியாவை தரிசிப்பது இது எல்லாம் தவறு என்று பகிரங்கமாக அறிவிக்க சொல்லுங்கள் (கியாமத் நாள் வரை இது மட்டும் நடக்காது).

தர்காக்கள் உருவான விதம் அல்லாஹ் நமக்கு விளங்க வைத்த ஏற்பாடு !

வயிற்று பிழைப்புக்காக மார்க்கத்தை விற்கும் சுயநலவாதிகளே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.


ரசூலுல்லாஹ் அடக்கஸ்தலத்தை தானே வணக்கஸ்தலமாக ஆக்க கூடாது என்று சொன்னார்கள். நாங்கள் எங்கே அடக்கஸ்தலத்தை வணக்கஸ்தலமாக ஆக்கினோம் வெறும் தரிசு தானே என்று சொல்லி தப்பிக்க முடியாது.


மெலூதை கண்டித்து தக்வா பள்ளி அருகில் நடந்த தெருமனை பிரச்சாரத்தில் புதிதாக முளைத்துள்ள பொம்பளை அவ்லியாவை கண்டித்து உரையாற்றப்பட்டது.

Monday, January 28, 2013

அதிரை நெசவுகாரத் தெருவில் நடந்த பெண்கள் பயான்

அதிரை நெசவுக்காரத் தெருவில் நடந்த பெண்கள் பயான்
இதில் சகோதரர் Y.அன்வர் அலி அவர்கள் பயான் செய்தார்கள் 







Sunday, January 27, 2013

மேலத்தெரு சவுக்கு கொள்ளை யில் நடந்த பெண்கள் பயான்

மேலத்தெரு சவுக்கு கொள்ளையில் நடந்த பெண்கள் பயான்
இதில் சகோதரி ஹதிஜா அவர்கள் முகஸ்துதி என்ற தலைப்பிலும் சகோதரி ரிஸ்வானா கபுரின் வேதனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் பங்கு பெற்று பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் .கலந்து கொண்ட பெண்கள் வாராவாரம் பயான் வைக்கும் படி வேண்டுகோள் விடுத்தனர்





Saturday, January 26, 2013

மௌலுதை கண்டித்து தக்வா பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் - பத்து லட்சம் பரிசு!

அதிரை தக்வா பள்ளி அருகில் மௌலுது நபி விழாவை கண்டித்து தெருமுனை பிரசாரம் நடந்தது .இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இந்த விழாவில் உள்ள தீமையை விளக்கி பயான் செய்தார்கள் .

மௌலுது ஓத ஆதாரம் இல்லை. அப்படியே ஆதாரம் எவரேனும் கொண்டு வந்தால் பத்து லட்சம் கொடுக்கப்படும் என்று சவால் விட்டார்.

மேலும் ஷிர்க் வைக்கும் இமாம்களை பின்பற்றி தொழ கூடாது என்பதையும் வலியுறுத்தினார்கள்.

மௌலூது ஓதும் தக்வா பள்ளி இமாமை பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என்றும் விளக்கி பேசினார்.

மௌலூதை சரிகாணும் முஹம்மது குட்டி ஆலிம்சா (?), தக்வா பள்ளி, ரஹ்மானிய்யா பள்ளி போன்ற பள்ளிகளில் இருக்கும் ஆலிம்கள், தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையிடம் மௌலூது ஒதுவதற்கு ஆதாரம் காட்டி 10 லட்சம் பரிசை தட்டிச் செல்லலாம்.

மௌலூதை சரிகாணும் ரஹ்மானியா மதரஸா மற்றும் ஸலாஹிய்யா மதரஸாக்களுக்கும் 10 லட்சம் கண்டிப்பாக உண்டு (ஆதாரம் காட்டினால்). 

முஹம்மது குட்டி ஆலிம்சா, ரஹ்மானியா மதரஸா  மற்றும் ஸலாஹிய்யா மதரஸா மாணவர்களே அல்லது ஆலிம்களே (?), தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்து மௌலூது ஒதுவதை குர்ஆன் ஹதீஸில் இருந்து நிரூபிக்கலாம். நிரூபித்தால் 10 லட்சம் உண்டு. இவர்களை தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்ய அழைத்து வருபவர்களுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.






Friday, January 25, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 25.01.13(வீடியோ )

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 25.01.13
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி 
சபிக்கப்பட்டவர்கள் யார் ?




அதிரை வண்டிபேட்டையில் நடைபெற்ற பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரை வண்டிபேட்டை காசிம் கடை மாடியில் இன்று 25.01.13 அஸருக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள்.







Thursday, January 24, 2013

அதிரை மேலத்தெரு சானாவயலில் நடைபெற்ற பெண்கள் பயான்


மேலதெரு சானாவயலில் 22.01.13 அன்று அசர்தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றியும் சகோதரி ஹதிஜா அவர்கள் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பிலும் பயான் செய்தார்கள் அதன் பின் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஜனாஸாவின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்தினார்கள்.

இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.







தமிழக அரசுக்கு அதிரை கிளையின் நன்றி

தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பும் அரைவேக்காடுகளுக்கு அறைகூவலும் 



நபிகளார் பிறந்த தினமா மிலாது நபி (வீடியோ )


நபிகளாரின் பிறந்த தினம் தான் மிலாது நபியா ?

இதை கொண்டாட மார்க்கத்தில் அனுமதியுள்ளதா ?


قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ [٢:١٣٦]

. ''அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்! (அல்குரான் 2:136)


நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்பதைச் சிலர் சரியாக விளங்காமல் இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டி வருகின்றனர். வேறு சிலர் இறைத் தூதர்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் எனக் கூறி வருகின்றனர். இவ்விரு கருத்துக்களுமே தவறாகும்.

எல்லா இறைத் தூதர்களையும் சமமான தகுதிகளுடன் அல்லாஹ் அனுப்பவில்லை. ஒருவருக்கு வழங்காத தகுதிகளை மற்றவருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்லாஹ் வழங்கிய அந்தச் சிறப்புக்களை நாமும் எடுத்துக் கூறுவது பாகுபாடு காட்டுவதாக ஆகாது.
ஈஸா நபி தந்தையின்றி பிறந்தார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 3:45, 3:47, 3:59, 4:171, 19:19-21, 21:91, 66:12)

ஈஸா நபி இன்று வரை உயிருடன் இருக்கிறார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 4:157-159, 5:75, 43:61)

"இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை'' எனக் கூறுவது பாகுபாடு காட்டுவதாகாது. ஏனெனில் இந்தச் சிறப்பை அல்லாஹ் தான் அவருக்கு வழங்கினான்.

"சில தூதர்களை மற்றும் சிலரை விட நாம் சிறப்பித்துள்ளோம்'' என்று இறைவன் கூறுகிறான். (பார்க்க: திருக்குர்ஆன் 2:253, 17:55)
அது போல் இப்ராஹீம் நபியின் குடும்பத்தாருக்கு வழங்கியது போன்ற பாக்கியங்களை வேறு எவருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை எனக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது.
(பார்க்க: திருக்குர்ஆன் 2:124, 2:125, 4:125, 11:73, 16:120)

ஸுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், உலகில் எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை எனக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது. (பார்க்க: திருக்குர்ஆன் 21:81, 21:82, 27:16-18, 27:40, 34:12, 38:35).
அது போல் இறுதி நபியாகவும், அகில உலக நபியாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். இது யாருக்கும் வழங்காத சிறப்பு.
(பார்க்க: திருக்குர்ஆன் 4:79, 6:19, 7:158, 9:33, 21:107 33:40, 34:28, 48:28, 61:9)

மகாமு மஹ்மூத் (பார்க்க: திருக்குர்ஆன் 17:79)

ஹவ்லுல் கவ்ஸர் (பார்க்க: திருக்குர்ஆன் 108:1)

மறுமையில் முதல் பரிந்துரை (பார்க்க: புகாரி: 99, 335, 438, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)
இது போன்ற சிறப்புக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். இதைக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது.
அப்படியானால் பாகுபாடு காட்டுவது என்பதன் பொருள் என்ன?

"'இவர் தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அவர் சிறப்பாகச் செய்ய வில்லை'' என்று கூறினால் தான் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும். அல்லாஹ் தகுதியானவர்களைத் தான் தேர்வு செய்வான் என்ற அடிப்படை யையே இது தகர்த்து விடும். எனவே "ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார்கள்'' என்று தான் நாம் நம்ப வேண்டும்.
மூஸா நபியின் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் இதைவிடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள் என்று கூறினால் அது பாகுபாடு காட்டியதுடன் இறைவனின் தேர்வைக் குறை கூறிய குற்றமாகவும் அமையும்.
இது போன்ற பாகுபாடுகள் காட்டுவது மாபெரும் குற்றமாகும் என்பதே இதன் கருத்து.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை வேறு நபியிடம் அல்லாஹ் ஒப்படைத்திருந்தால் அதை அவரும் சிறப்பாகச் செய்திருப்பார்'' என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியில் எள்முனையளவும் குறை வைக்கவில்லை; விலை போக வில்லை; மனிதர்களுக்கு அஞ்சவில்லை; மறுமையை விட இவ்வுலகைப் பெரிதாக நினைக்கவில்லை. இப்படி எல்லாத் தூதர்களுமே சிறந்து விளங்கினார்கள் என்று நம்ப வேண்டும் என்பது தான் இதன் கருத்து.


கிருஸ்தவர்கள் ஈசா நபி பிறந்த தினத்தை கிருஸ்துமஸ் என்று கொண்டாடுகிறார்கள் .அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என்று எதிர்க்கும் நாம் ,அதே போன்று ஆதாரம் இல்லாத முகம்மது நபியின் பிறந்த தினம் என்று சொல்லும் இந்த நாளையும் மிலாது நபியையும் கொண்டாட எப்படி முடியும் என்று சிந்திப்பது இல்லை .
அதில் உள்ள ஷிர்க்கான வார்த்தைகளை கணக்கில் கொள்ளாமல் மேலோட்டமாக பார்த்தாலே இது தவறு என்று படவில்லையா ?





Wednesday, January 23, 2013

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!
தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலி! அல்ஹம்துலி்ல்லாஹ்!
சற்றுமுன்பு விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலியாக இந்த அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி நேரில் வலியுறுத்தினர்.

இந்த திரைப்படம் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வந்த செய்திகளைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்.

இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்தது.

சிலர் இந்த திரைப்படம் வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் கெடும் என்பதைவிட சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதுதான் பிரதான விஷயம் என்பதையும், எவ்வளவுதான் ஜனநாய ரீதியாக போராட்டங்களை நடத்தினாலும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத்தான் அராசங்கம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நமது நிர்வாகிகள் உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடரித்தில் விளக்கினர்.

உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு நன்றி!

சிறுபான்மையினரது கோரிக்கையை ஏற்று அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.
உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து TNTJ கொடுத்த கடிதம்: http://www.tntj.net/128361.html
திரைப்படத்தை கண்டித்து சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்: http://www.tntj.net/128369.html

Tuesday, January 22, 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு



விஸ்வரூபம் திரைபடத்தை ஓட விட மாட்டோம் 


நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.\

அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்




விஸ்வரூபம் திரைப்படம்” – போஸ்டர் வாசகம்




விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது!
இவன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – மாவட்டம்
  தகவல்  :  http://www.tntj.net/128024.html

ஸலவாத்துன்னாரிய்யா என்ற நரகத்து ஸலவாத்து


ஸலவாத்துன்னாரிய்யா என்ற நரகத்து ஸலவாத்து
ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான். இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய (?) பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பைமார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர்.
இந்த நரகத்து ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. மாறாக இது பிற்காலத்தில் மார்க்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்தக்கூடிய சில முல்லாக்களால் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான். இதன் காரணமாகத் தான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த 4444 தடவை என்பது அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறியதில்லை.
இந்த நரகத்து ஸலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதைப் பாருங்கள். அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப்சின் பி அததி குல்லி மஃலூமின் லக்க
பொருள்: அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது. அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது. துன்பங்களை
நீக்குபவன் யார்?
மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில், நபி (ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல் அவிழ்கிறது என்றும், துன்பம் நீங்குகிறது என்றும், தேவை நிறைவேறுகிறது என்றும் வருகிறது. உண்மையில் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு,இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய இணை கற்பிக்கின்ற காரியமாகும்.
அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.
ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்.
அல்குர்ஆன் 6:64
நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமறை குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் 7:188
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக! அல்குர்ஆன் 72:20, 21, 22
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 10:107
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களை, சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பியவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து, துன்பத்தைப் போக்கி, உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! அல்குர்ஆன் 27:62
நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தை நாம் ஓதலாமா? இதனை ஓதி வருகின்ற இஸ்லாமியப் பெருமக்கள் நன்றாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?
மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.
நபி (ஸல்) அவர்களின் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாட்டங்களை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது நிறைவேறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ்,அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான்.
(முஹம்மதே!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல் குர்ஆன் 9:80
நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபூ தாலிப், ஏகத்துவக் கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய மரணத் தருவாயில் அவர்களிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வரை பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள்.
ஆனால் அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை இறைவன் நிறைவேற்றவில்லை. மாறாக, நபிக்கு நாடியதைச் செய்யும் ஆற்றல் கிடையாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.
அல் குர்ஆன் 28:56
மேலும் நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற அனைத்து காஃபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.
அல்குர்ஆன் 26:3
நபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேறவில்லை. நாட்டங்களை நிறைவேற்றக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று இந்த ஸலவாத்தில் வரக்கூடிய வரிகள் நிரந்தர நரகத்தைத் தரக் கூடிய வரிகளே என்பது தெளிவாகிறது.
அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?
நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிறது என ஸலாத்துந் நாரியாவில் வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.
ஒருவன் மரணிக்கும் போது சுவர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்;நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 5175
மேற்கண்ட ஹதீஸ் ஒருவனின் இறுதி முடிவு இறைவனின் நாட்டப்படியே தீர்மானிக்கப்படுகிறது என்பதை மிக உறுதிப்படுத்துகிறது. எனவே, நபியவர்கள் மூலம் அழகிய இறுதி முடிவு ஏற்படுகிறது என்பது நபியவர்களைக் கடவுளாக வணங்குவதாகும்.
மேலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறதென்றால் அவர்கள் விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா,ஷைபா போன்ற இன்னும் பலர் முஸ்லிம்களாக மரணித்திருக்க வேண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக மரணித்தார்கள்? இதைச் சிந்தித்தாலே மேற்கண்ட வரிகளை ஓதினால் நாம் நிரந்தர நரகத்தைத் தான் சென்றடைவோம் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மழை பொழிவிப்பவன் யார்?
ஸலவாத்துன்னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தில் நபியவர்களின் திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது என்று வருகிறது. இந்த வரிகளும் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற வரிகளாகும்.
மழையைப் பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?
அல் குர்ஆன் 56:68, 69, 70
அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன். அல் குர்ஆன் 42:28
அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
அல்குர்ஆன் 30:48
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது. நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்கல் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ் தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்;நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)
நூல்: புகாரி 4777
மேற்கண்ட இறை வசனங்களும், ஹதீஸ்களும் மழையைப் பொழியச் செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே நபியவர்களின் திருமுகத்தின் மூலமே மழை பொழிகிறது என்று நரகத்து ஸலவாத்தில் வரக்கூடிய இந்த வாசகங்களை நாம் ஓதினால் நாம் செல்லுமிடம் நரகம் தான்.
கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3445
இந்த ஸலவாத்துன் நாரியாவை ஓதினால் நரகம் தான் பரிசாகக் கிடைக்கும். அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!
அல்குர்ஆன் 33:56
இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்,அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரி 4797
எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது? என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது. தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. (பார்க்க: நஸயீ 2728)
யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 577
முஅத்தினின் பாங்கை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்). அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆக வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)
நூல்: முஸ்லிம்
பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும்,அவர்களுக்காக வஸீலா வேண்டிப் பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலைமோதும் மறுமை நாளில் நமக்குப் பரிந்துரையைப் பெற்றுத் தரும் சாதனமாக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் ஸலாத்துந்நாரிய்யாவை இனியும் ஓதலாமா?
ஒரு தொண்டன் தனது தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தனது தலைவருக்கு தனது அன்பின் பரிமாணம் தெரிய வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். உடல் உறுப்புக்களைச் சேதப்படுத்துதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற ஆபத்தான அழிவுப் பாதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றான். இஸ்லாம் இந்த உளவியல் ரீதியான பிரச்சனையை உரிய வகையில் கையாள்கின்றது.
உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் நூல்: அபூதாவூத் 883
நிச்சயமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: நஸயீ 1265
அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலாத்துந் நாரிய்யாவை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.
குறிப்பு: நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது.
நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி: ஏகத்துவம்