Sunday, February 28, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 08.02.2010 அன்று மேலத்தெருவில் அதிராம்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள். 


Thursday, February 25, 2010

சத்திய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் சவுந்தர்ராஜன் அவர்களின் உரை

சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்ட சவுந்தர்ராஜன் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தது எப்படி என்பதை விளக்கி தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற 'தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில்' ஆற்றிய உரை.
  

Tuesday, February 23, 2010

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு!
மவ்லிது விழா புறக்கணிப்பு!
திருமண விழா புறக்கணிப்பு!
நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு!
பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு!
கத்னா விழா புறக்கணிப்பு!
இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு!
இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு!
இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு!
புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் அதையும் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்.
திருமணம் எனும் போது திருமண சபையில் ஓதப்படும் யாநபி பாடல், வாங்கப்படும் வரதட்சணை, வழங்கப்படும் பெண் வீட்டு விருந்து காரணமாக அதைப் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்!
இவை அல்லாமல் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத மேடைகளிலும் புறக்கணிப்பு! அது இஸ்லாமிய அமைப்புகள், அல்லது பிற மத அமைப்புகள் பங்கு கொள்ளும் பொது மேடைகளாயினும் சரி! அல்லது அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பங்கு கொள்ளும் மேடைகளாயினும் சரி! நாம் புறக்கணிக்கவே செய்கிறோம்.
இதனால் உறவினர்களுக்கு மத்தியில் விரிசல்! நண்பர்களுக்கு மத்தியில் பகைமை! அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி போன்றவற்றைச் சந்திக்கிறோம்.
இவையெல்லாம் ஒரு தவ்ஹீதுவாதியின் உள்ளத்தில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு விதமான சலிப்பு, ஒரு விதமான சங்கடம் நம் உள்ளத்தை ஆட்கொள்கின்றது.
எங்கும் புறக்கணிப்பு! எதிலும் புறக்கணிப்பு! ஏன் இப்படி? என்ற கேள்விக் கணையை நம்முடைய மனம் தொடுக்கின்றது.
இவை அனைத்துமே ஒன்றே ஒன்றுக்காகத் தான். இறைவனுக்கு இணை வைக்கும் பாவத்திற்கு நாம் துணை போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்தப் புறக்கணிப்புகள்!
மற்றவர்களுடன் நாம் பங்கேற்கும் மேடையில் நாம் பேசிய பின்பு வரும் பேச்சாளர் இணை வைப்பைப் பேசி விடும் போது, நாம் இருக்கும் போதே உருவப் படங்களைத் திறந்து வைக்கும் போது, நெருப்பைப் புனிதமாகக் கருதி குத்து விளக்கை ஏற்றும் போது இந்த இணை வைத்தல் நிகழ்ச்சியில் நாமும் பங்கெடுத்தவர்களாகி விடுகின்றோம்.
பிற மதத்தவர்களுடன் இந்த நிலை என்றால், இஸ்லாமிய அமைப்புகளுடனும் இதே நிலை தான். பல பேச்சாளர்கள் தங்கள் பேச்சைத் துவக்கும் போது, முஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பார்கள் அல்லது உரையை முடிக்கும் போது, நபியவர்களைக் கனவிலும் நனவிலும் கண்டு களிப்போம் என்று கூறுவார்கள். இந்த இணை வைப்புக்கு நாம் சாட்சியாக முடியுமா?
எனவே இதில் நாம் எள்ளளவு கூட சமரசம் செய்யாமல் புறக்கணிக்கிறோம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது நம்மைக் கொள்கையில் முடமாக்கி விடுகின்றது. ஏன்? பிணமாகவே ஆக்கி விடுகின்றது. அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.
இந்த பாதுகாப்பு அரணைத் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கையில் எடுத்தார்கள். இணை வைப்பு ஊரில் பகை கொண்டு குகை சென்ற குகைவாசி இளைஞர்கள் கையில் எடுத்தார்கள்.
உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
நாளை மறுமையில் அவரவர் வணங்கிய தெய்வங்களுக்குப் பின்னால் செல்லுங்கள் என்று ஒரு குரல் ஒலிக்கும். அவ்வளவு தான்! ஈஸா நபி, உஸைர் ஆகியோரது தோற்றத்தில் அமைந்த உருவங்களுக்குப் பின்னால் அவர்களை வணங்கிய கூட்டத்தினர் சென்று விடுவர். (முஹ்யித்தீன், காஜா முயீனுத்தீன், ஷாகுல் ஹமீது ஆகியவர்களை வணங்கியவர்களின் நிலையும் அதுதான்.) அவர்கள் அனைவரும் நரகத்தில் வீழ்ந்து விடுவர்.
ஆனால் ஒரு கூட்டம் மட்டும் யாருக்குப் பின்னாலும் செல்லாமல் அசையாமல் நிற்பர். இதைப் புகாரியில் இடம் பெறும் ஹதீஸில் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நால் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம்! மேகமே இல்லாத நண்பகல் வெச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், இல்லை என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று பதிலத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்: மறுமை நாள் ஏற்படும் போது அழைப்பாளர் ஒருவர் ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும், கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர்.
முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்கல் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்கடம் யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அவர்கள், அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலப்பார்கள். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்படும். மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். அதற்கவர்கள் எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக! என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா? என (ஒரு திசையைச்) சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம் என்று கூறுவர். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர்.
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்கள் (அடையாளம் கண்டு கொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது எதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வோரு சமுதாயமும் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவைகளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனரே! என்று கேட்கப்படும். அவர்கள், உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின் தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், நானே உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 4581, 7440
இந்தப் பதிலைச் சொல்பவர்கள் யார்? உலகத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிகழ்ச்சிகளை அவனுக்காகப் புறக்கணித்தார்களே - அவனுக்காக உறவுகளை, ஊர்களை, வரவுகளை, வாழ்க்கை வசதிகளைப் புறக்கணித்தார்களே இம்மக்கள் தான் இந்தப் பதிலைச் சொல்கின்றனர்.
இப்போது சொல்லுங்கள்! இணை வைப்பு நடக்கும் இடம் எங்கும் புறக்கணிப்பு, எதிலும் புறக்கணிப்பு என்பதில் சலிப்புத் தட்டுமா? என்று இப்போது சொல்லுங்கள்.
எனவே இணை வைப்பு நிகழ்ச்சிகளை, நிரல்களை, விருந்துகளைப் புறக்கணியுங்கள்.
அதிலும் குறிப்பாக இது மவ்லிதுக் காலம்! இந்த மவ்லிதுக் காலத்தில் மவ்லிதுப் பாடல்களைப் பாடுகின்ற சபைகளைப் புறக்கணியுங்கள். அதற்காகச் சமைக்கப்பட்ட நெய்ச் சோறு, புலவு, பிரியாணி போன்றவற்றையும் புறக்கணியுங்கள். சாப்பாட்டுக்கு ஊர் வரி செலுத்தாதீர்கள்.
சாப்பாடு வேண்டாம்; ஆனால் ஊர்க் கட்டுப்பாட்டுக்காக வரியை மட்டும் செலுத்துகிறேன் என்று செலுத்தினாலும் அதுவும் இணை வைத்தலுக்குத் துணை போகும் செயல் தான். எனவே இது போன்ற மவ்லிதுகளுக்கு வரி செலுத்தியோ, அல்லது வரி செலுத்தாமல் இலவசமாகவே வருகின்ற உணவுகளையோ வாங்காதீர்கள். புறக்கணியுங்கள்! புறக்கணிப்பில் புடம் போட்ட தங்கமாக இருங்கள்!
நன்றி: ஏகத்துவம்

பாமரர்களால் குர்ஆனை விளங்க முடியுமா?

இந்த கேள்விக்கு 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சகோதரர் பிஜே அவர்கள் அல் ஜன்னத் இதழில் பதில் அளித்து இருந்தார். அதன் பதிலை ஆன்லைன் பிஜே இணைய தளம் வெளியிட்டது. அதை நாம் இங்கே வெளியிடுகிறோம்.

கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழிபெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது?

பதில்: மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். குர்ஆன், ஹதீஸையே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.

குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மை தான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத் தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மை தான்.

இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா? நான்கு இமாம்களும் தமது தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய, அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.

இதே வாதத்தின் அடிப்படையில் இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதனாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும், அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும்.

அப்படிச் செய்யவில்லையே அது ஏன்? இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.

அரபு மொழியில் எழுதப் பட்ட மத்ஹபுச் சட்டங்கள் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் குர்ஆன், ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?

மத்ஹபுகள் மீது இவர்களுக்கு வெறி இருப்பதாலும், குர்ஆன், ஹதீஸ் இவர்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனர்.

தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது?

மொழிபெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். இதை அரபி மொழியறியாதவர்களால் சில வேலை கண்டுபிடிக்கப் படாமலும் போகும்.

ஆனால் அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.

நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழிபெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை மன்னிக்க மாட்டான்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தாங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில் புத்தகங்களில் குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன், ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்?

மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்கள் கூறினால் விளங்கும் மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?

இதெல்லாம் ஷைத்தானின் மாய வலை. இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

Friday, February 19, 2010

வெள்ளிமேடை - 19.02.2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைமையகத்தில் 19.02.2010 அன்று நடைபெற்ற ஜும்ஆ உரையின் வீடியோ.

தலைப்பு: பித்அத்
உரை: மௌலவி அப்துந் நாஸிர்

Visit:
http://www.tntjwebmedia.info/Vellimedai_19-2-2010.wmv

Wednesday, February 17, 2010

இறை இல்லங்களுக்கு இணையான தர்ஹாக்கள்!

இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன.

இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவாசலில் கூட இன்னிசைப் பாட்டுகள் இடம் பெறுவதில்லை.

இந்த அடிப்படையில் தான் தொழுகைக்கு அழைக்கப்படும் இஸ்லாமிய அழைப்பு என்பது மணியோசையாகவோ, ஊதியின் நாதமாகவோ இல்லாமல் ஒரு வித்தியாசமான, செவிக்கு இதமான பாங்கோசையாக அமைந்திருக்கின்றது.

மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்து சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 606

மாற்று மத நண்பர்கள் கூட தங்கள் திருமணம் மற்றும் இன்னபிற திருவிழாக்களின் ஊர்வலங்கள் பள்ளிக்கு அருகில் வரும் போது மேள தாளங்களை, இசை வாத்தியங்களை நிறுத்திக் கொள்கின்றார்கள். அந்த அளவுக்கு இசைக்கும் இஸ்லாத்திற்கும் தூரம் என்று மாற்று மத நண்பர்கள் கூட விளங்கி வைத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட இந்த விளக்கம் முஸ்லிம்களுக்குத் தெரியாமல் போய் விடுமா? நிச்சயம் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் தான் இஸ்லாம் தடுத்துள்ள இன்னிசைப் பாட்டுக் கச்சேரிகள், மேள தாளங்கள், கரகாட்டங்கள், வெடி முழக்கங்கள், நடிகர் நடிகையரின் நடனங்கள் போன்ற கூத்துக்களை எல்லாம் பள்ளிவாசலில் செய்யாமல் தர்ஹாக்களில் அரங்கேற்றி அவற்றின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தையும் தாகத்தையும் தணித்துக் கொள்கின்றனர்.

இந்த மோகத்தின் வெளிப்பாடாகத் தான் கந்தூரியில் யானை கொடி ஊர்வலமும், வானை நோக்கிப் பறக்கும் வெடி முழக்க வெறித்தனங்களும் அரங்கேறின. தொடர்ந்து நாயகம் வாப்பா கொடி, அப்துர்ரஹ்மான் தங்கள் கொடி, பஸீரப்பா கொடி போன்ற கொடியேற்றங்களும் கொண்டாட்டங்களும் நடந்தேறுகின்றன.

ஆனை மீது ஆலிம்சா:

ஐதுரூஸ் தங்கள் கொடி ஊர்வலத்தில் வாண வேடிக்கைகளும், டிஜிட்டல் மியூசிக்கும் சிறப்பம்சங்கள் என்றால், நாயகம் வாப்பா எனப்படும் கொடி ஊர்வலம் அதை மிஞ்சும் வகையில் அமைந்திருக்கும்.

துருக்கி குஞ்சா தொப்பி போட்ட கீழக்கரை கிழடுகளின் சுழல் தப்ஸ் ஆட்டமும், வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டு மெட்டில் தூள் பறத்தும் பேண்டு வாத்தியமும், அவற்றுக்குத் தக்கவாறு விசில் அடித்துக் கொண்டு ஆட்டம் போட்ட சிறுவர்கள், இளைஞர்களின் படை பட்டாளங்களும் நாயகம் வாப்பா என்ற கொடியின் சிறப்பம்சங்கள் ஆகும்.

இவை அத்தனைக்கும் மெருகூட்டுவது போல் ஊர்வலத்தில் வந்த யானையின் மீது மதரஸாவில் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்சா ஒருவர் அமர்ந்து கொண்டு உலா வருவதுதான். இந்தத் தீமையிலிருந்து மக்களைத் தடுக்க வேண்டிய ஆலிம்கள் இதில் பங்கெடுத்துக் கெடுக்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டதால் தான் இந்தக் கொடியேற்றக் கொண்டாட்டங்களும், வெடி முழக்க வெறித்தனங்களும் வீரியம் பெற்றுள்ளன.

நாயும் மணியும் இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 3949, திர்மிதீ 1625, நஸயீ 5127, அபூதாவூத் 2192, அஹ்மத் 7250

மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 3950, அபூதாவூத் 2193, அஹ்மத் 8428

இந்த ஹதீஸ்களில் சாதாரண மணி ஓசையையே ஷைத்தானின் இசைக் கருவி என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும் போது இந்தப் பேண்டு வாத்தியங்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஷைத்தானியப் படை தான் கொடியைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் உலா வருகின்றனர். இதற்கு ஓர் ஆலிம்சாவின் தலைமை வேறு!

விடலைப் பையன்களின் விசில் ஓசைகள்! குமரிப் பெண்களை நோக்கி அவர்கள் பாய்ச்சுகின்ற காமப் பார்வைகள்! கால்நடைகளும் பறவைகளும், தொட்டிலிலில் தூங்கும் குழந்தைகளும், நோயாளிகளும் அலறும் வண்ணம் முழங்கும் வெடிச் சப்தங்கள்! இத்தனையும் வணக்கம் என்ற பெயரில் அரங்கேறுகின்றன.

இடி முழக்கம் போன்ற இசைகளையும், வெடி முழக்கங்களையும், கரகாட்டங்களையும், கானா கச்சேரிகளையும் சாதாரண முறையில் அரங்கேற்றினால் ஈமான் உள்ள (?) இந்த ஆலிம்கள் சீறிப் பாய்வார்கள்.

அவ்லியாக்கள் பெயரில் அரங்கேற்றினால் ஆலிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதற்கு ஆதரவாக யானை மீதேறி உளம் பொங்க, உவகை பெருக்கோடு வலம் வந்து ஆசி வழங்குவார்கள்.

இத்தகைய அலங்கோலங்கள், அனாச்சாரங்கள் மூலம் இந்த ஆலிம்களும் தர்ஹா டிரஸ்டிகளும், தரீக்கா குருட்டு பக்த கோடிகளும் மக்களை அறியாமைக் கால இருட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அறியாமைக் கால மக்களின் வணக்கம் இப்படித் தான் அமைந்திருந்தது.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 8:35

அல்லாஹ் எவற்றையெல்லாம் கயமைத் தனம் என்று கழித்துக் கட்டுகின்றானோ அவற்றைத் தான் இவர்கள் அவ்லியாக்களின் பெயரால் மார்க்க வணக்கம் என்று கருதி செய்து கொண்டிருக்கின்றனர்.

தீமைகளின் தீய கூடாரம்

இந்தத் தீமைகளுக்கு அஸ்திவார மாகவும் ஆணி வேராகவும் தர்ஹாக்கள் தான் அமைந்துள்ளன.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் இணை (ஷிர்க்) இல்லங்களாக இவை எழுந்து நிற்கின்றன. இன்னும் சொல்லப் போனால் கோயில்களுக்கு மறு பெயர் தான் தர்ஹா என்று கூறி விடலாம்.

அங்கே சிலை வணங்கப் படுகின்றது. இங்கே கல்லறை வணங்கப்படுகின்றது. இரண்டுக்கும் வித்தியாசம், அங்கே நட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே படுக்க வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கேயும் குத்து விளக்கு! இங்கேயும் குத்து விளக்கு!

அங்கே சூடம்! இங்கே பத்தி, சாம்பிராணி!

அங்கே திருநீறு! இங்கே சந்தனம்!

அங்கே பால் அபிஷேகம்! இங்கே சந்தன அபிஷேகம்!

அங்கே தேங்காய், வாழைப்பழம்! இங்கே வெறும் வாழைப்பழம்!

அங்கே சிலைகளைச் சுற்றி வலம் வருதல்! இங்கே கப்ருகளைச் சுற்றி வலம் வருதல்!

அங்கே தேர்த் திருவிழா! இங்கே சந்தனக் கூடு திருவிழா!

அங்கேயும் யானை! இங்கேயும் யானை!

அங்கே யானையின் நெற்றியில் சூலம்! இங்கே யானையின் நெற்றியில் பிறை!

அங்கேயும் கொடியேற்றம்! இங்கேயும் கொடியேற்றம்!

அங்கே பூசாரி! இங்கே ஆலிம்சா!

அங்கும் வெடி, வாண வேடிக்கைகள்! இங்கும் வெடி, வாண வேடிக்கைகள்!

அங்கு சிலைகளுக்கு மேல் பட்டுப் புடவைகள், பூமாலைகள்! இங்கு கப்ருகளுக்கு மேல் பச்சைப் போர்வைகள், பூமாலைகள்!

திருவிழாவின் போது மேள, தாள வாத்தியக் குழுவினர் ஒரு குவார்ட்டரை உள்ளே தள்ளி விட்டு அந்த நாற்றத்துடன் மேள, தாளம் முழங்கி நாதஸ்வரம் ஊதுவர்.

அதே குழுவினர் தர்ஹாவுக்கும் அழைக்கப்படுகின்றனர். (அண்மையில் மேலப்பாளையத்தில் பஸீரப்பா கந்தூரியின் போது இக்குழுவினர் அழைக்கப்பட்டனர்)

கோயில் கொடை விழாக்களில் டிஜிட்டல் வாத்தியங்கள் உண்டு! இங்கும் டிஜிட்டல் இசை வாத்தியங்கள் உண்டு!

கோயிலை விட இங்கு இசைக் குழுவினர் கூடுதலாக அழைக்கப் படுவர். கீழக்கரை கிழடுகளின் தப்ஸ் குழு, கயிறு சுற்றும் தயிரா குழு, பக்கீர் குழு போன்ற பல்வேறு குழுக்கள் இங்கு அழைக்கப்படுகின்றன. அந்த வாத்தியக் குழுவினர் குவார்ட்டரை உள்ளே இறக்கி விட்டு ஊதுவார்கள். இவர்கள் கஞ்சாவைக் கசக்கி அடித்துக் கொண்டு கொட்டு அடிப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

கோயில் விழாக்களின் போது கிடா அறுத்து சோறு படைப்பார்கள். அது போல் இங்கும் கிடா அறுத்து கடாலப் பானை வைத்து சோறு படைத்து நேர்ச்சை விநியோகம் செய்வார்கள்.

இங்கே பட்டியலிட்ட இந்தக் காரியங்களை அல்லாஹ்வுடைய பள்ளியில் வைத்து அரங்கேற்ற முடியுமா? நிச்சயமாக அரங்கேற்ற முடியாது. அதற்காகத் தான் இந்த தர்ஹாக்கள் எனும் தரித்திர மண்டபங்கள்.

தர்ஹாக்களுக்கு அனுமதி பள்ளிவாசலுக்குத் தடை:

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களுக்குத் தொழ வருவதற்குத் தடை விதிக்கும் இந்த ஆலிம்கள் தர்ஹாக்களுக்குப் பெண்கள் வருவதற்குத் தாராளமாக வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றனர். அதனால் இந்த தர்ஹாக்கள் விபச்சாரத்திற்கு வலை விரிக்கும் வலைத் தளங்களாக, விடுதிகளாக மாறியிருக்கின்றன.

இப்படி தீமைகளின் ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடும் திராவக அருவிகளாக தர்ஹாக்கள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடங்களைச் சபிக்கின்றார்கள்.

சாபத்திற்குரிய சன்னிதானங்கள்:

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1244

உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822

இன்று தர்ஹாக்களில் உழைக்காமல் ஊது பத்திகளைக் கொளுத்திக் கொண்டு, உண்டியலை மட்டும் நம்பிக் கொண்டு, தர்ஹாக்களின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டு பரம்பரை ஹக்தார்கள், டிரஸ்டிகள் என்று வயிறு வளர்க்கும் பண்டார சன்னிதானங்களையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பணக்கார சுகவாசிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பினத்திலேயே கெட்டவர்கள் என்று கூறுகின்றார்கள்.

அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சமுதாய மக்கள் எரி நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்ற தூய கரிசனத்துடன், தூர நோக்குடன், தீர்க்க தரிசனத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801

மக்கள் வரிசையாகக் கந்தூரிகள் கொண்டாடி நரகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக விளங்குவது இந்த தர்ஹாக்கள் தான். இந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பள்ளிவாசல்களில் ஆலிம்கள் சொல்வது கிடையாது.

ஆலிம்கள் இந்த சத்தியத்தை மறைப்பதுடன், தர்ஹாக்களில் போய் அதிலும் குறிப்பாக கந்தூரி தினத்தன்றே போய் பயான் செய்கின்றார்கள். பாழாய் போன இந்த இடங்களில் பயான் வேறு வாழ்கின்றது.

என்ன தான் இவர்கள் சத்தியத்தை மறைத்தாலும் இன்று ஏகத்துவத்தை விளங்கிய ஓர் இளம் தலைமுறை தோன்றியிருக்கின்றது.

அவர்கள் எதிர்காலத்தில் சமுதாய மக்களின் சம்மதத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்கி விட்டு, அவற்றை பாடசாலைகளாக, தொழிற்பயிற்சிக் கூடங்களாக அல்லது வீடின்றி தவிக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களாக மாற்றும் அந்த நாள் தூரத்தில் இல்லை, இன்ஷா அல்லாஹ்!

Sunday, February 14, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்


அதிராம்பட்டிணத்தில் கடந்த 13.02.2010 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்' என்ற தலைப்பிலும், மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'சத்தியத்தை மறைக்காதீர்கள்' என்ற தலைப்பிலும், மௌலவி எம்.எஸ் சுலைமான் அவர்கள் 'இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் எழுதிய முன்று நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறிப்பு: நல திட்ட உதவிகள் இந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்படவில்லை. இந்த உதவிகள் விரைவில் வழங்கப்படும். அவை வழங்கப்பட்டபின், அது தனி செய்தியாக இடம்பெறும்.








Thursday, February 11, 2010

மரைக்காயர் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

மரைக்காயர் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி மற்றும் ரஹ்மானிய மதரஸா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக 10.02.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'சிந்திக்க தூண்டும் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். 

ஒரு காலத்தில் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறு தடைகள் இருந்தது. ஆனால், இன்று அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் எங்கும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறுகிறது. கேரளாவிற்கு பரோவியிசத்தை சப்ளை செய்யும் ரஹ்மானிய மதரஸாவின் அருகில் கூட தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு தடையில்லாமல் ஆகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, February 09, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 02.02.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் ‘நாவை பேணுவோம்’ என்ற தலைப்பிலும், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘இறையச்சம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



Thursday, February 04, 2010

MSM நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 04.02.2010 அன்று MSM நகர் பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.