அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு!
சமீபத்தில் நமது ஊரில் சகோ அப்துந்நாசர் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. அதில் பலவிதமான கேள்விகளை நமது ஊர் சகோதரிகள் கேட்டனர். அவை அனைத்திற்கும் அழகிய முறையில் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கேள்வி பதில் மூலம் பலர் பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்!
இதை பொறுக்காத ADT என்ற அமைப்பின் ‘அவதூறு பரப்பிகள்’ வழக்கம் போல் தங்கள் குணத்தை வெளிபடுத்தி, கேளுங்கள் மக்கழே.. கேளுங்கள்..!
//முழுமையாக வெளியிடும் 'திராணி' உண்டா?
ததஜவினர் அடித்துவிடும் தங்களுடைய பத்வாவில் உண்மையாளர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருந்தால் 14.03.2015 அன்று ததஜவினர் அதிரையில் நடந்திய நிகழ்ச்சியின் காணொளியை முழுமையாக பதிய வேண்டும் ஆனால் நமதூர் பெண்களால் நிகழ்ச்சியின் இறுதியில் எழுப்பப்பட்ட கீழ்க்காணும் முக்கிய கேள்வியையும் அதற்கான மவ்லவி அப்துல் நாசரின் பதிலையும் கத்தரித்து விட்டு காணொளியை பதிந்தது ஏன்? இனியாவது வெட்டி ஒழித்த பகுதிகளை மீண்டும் பதிவார்களா?//
இப்படி ஒரு செய்தியை பரப்பினார்கள். இதில் இருந்த உண்மை என்ன என்பதை நாங்கள் தெரியபடுத்த கடமைப்பட்டுள்ளோம். நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தப்பின், வஆஹிர் தஃவானா.. என துஆவெல்லாம் ஓதி நிறைவு பெற்றப்பின் வீடியோ பதிவு நிறுத்தப்பட்டது.
அதற்கு மேலும் சகோதரிகள் கேள்வி கேட்டார்கள். அந்த சூழ்நிலையில்தான் அப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோதரர் அப்துந் நாசர் பதில் அளித்தார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாங்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கும்வரை எந்த ஒன்றையும் கத்தரிக்கவோ, நீங்கள் பரப்பும் அவதூறுகளுக்காக அதை மீண்டும் நூல் வைத்து தைக்கவோ வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை! “பெண்களின் கிடிக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டு முழித்த ததஜ மவ்லவி அப்துல் நாசரின் நிலை” என்று குறிப்பிட்டிருந்த அந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெளிவாக தெரியும்.. அந்த கேள்விகளின் நிலையும், சகோதரரின் பதிலில் உள்ள விளக்கமும்!
மனமுரண்டாக மறுப்பவர்களுக்காக சுருக்கமாக இங்கே:
குர்ஆனுடைய (2: 102) இந்த வசனத்துக்கு ‘அல்லாஹ் நாடினால் சூனியக்காரர்கள் பாதிப்பை ஏற்படுத்த சக்தி பெறுவார்கள் என்றால், அல்லாஹ் மாதிரியே அவர்களுக்கும் சக்தி கிடைக்க அல்லாஹ் நாடுவானா?’ என்று மீண்டும் மீண்டும் சகோதரர் அப்துந் நாஸர் அவர்கள் கேட்டும்கூட, அதற்கு பதில் சொல்ல இயலாமல் அடுத்த கேள்விக்கு தாவுகிறார்கள். இதுதான் கிடிக்கிப் பிடியா?? அப்துந் நாஸர் எடுத்து வைத்த வாதம் கிடிக்கிப் பிடியா? ‘ஒவ்வொன்றுக்கும் தாவித் தாவி போகக்கூடாது’, ‘இவ்வளவு ஆதாரத்தை வைத்துக் கேட்டிருக்கிறேன்.. அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் போகக்கூடாது’ என்றெல்லாம் அவ்வப்போது சகோதரர் அறிவுறுத்தவும் செய்கிறார். ஒன்றைவிட்டு இன்னொன்றுக்கு தாவிச் செல்லும் இதே நிலைதான் ஒவ்வொரு கேள்விக்கும் அங்கே நிலவியது.
இந்த இடத்தில் நாம் அந்த சகோதரிகளை குறை சொல்வதற்காக இதைக் குறிப்பிடவில்லை. "அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுத்துவிடுகிறான்" (புஹாரி 71) என்ற நபிகளாரின் பொன்மொழிக்கேற்ப, அசத்தியத்தின் பக்கம் இருக்கும் அந்த சகோதரிகளுக்கும் அல்லாஹ்தஆலா சத்தியத்தின் பக்கம் விரைவில் தெளிவைக் கொடுக்கட்டும், இன்ஷா அல்லாஹ்! ஆனால், சகோ அப்துந் நாஸரின் எதிர் கேள்விகளுக்கு அந்த சகோதரிகள் மறுபதில் சொல்ல இயலாமல் அடுத்தடுத்த கேள்விகளுக்கு அவர்கள் நகர்ந்ததை அப்படியே மறைத்துவிட்டு, சகோ அப்துந் நாஸர் மாட்டிக் கொண்டு முழித்ததாக கைக்கூசாமல் எழுதி வைத்துள்ளவர்களுக்கே இந்த விளக்கம்!
ஆக, நாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பது அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் தெரியும். அப்போது கேள்வியை கேட்டதாக உங்களிடம் சொன்ன சகோதரிகள், வீடியோவை அனைத்துவிட்ட பின்தான் இந்த கேள்வியைக் கேட்டோம் என்று உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்றே நம்புகிறோம். வழமைப்போல் உண்மையை மறைத்து திசை திருப்பி கேள்வி கேட்க மட்டுமே தெரிந்த அவர்கள், அவர்களின் அவதூறு வேலையை செவ்வனே செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் அருளால் அவர்கள் செய்த பித்தலாட்டத்துக்கு அவர்கள் மேடையிலேயே பதில் கிடைக்க அல்லாஹ் உதவி செய்துவிட்டான். தான் செய்த ஆய்வையே என்னவென்று தெரியாமல் மறந்துப்போன ஆய்வாளர், நேற்று நமதூரில் பேசுகிறேன் என்று ஏற்கனவே ADT எடுத்த அவதூறு வாந்தியை இவர் பங்கிற்கு திரும்ப எடுக்க முயற்ச்சிக்கும்போது, நமது நிகழ்ச்சிக்கு வந்த சகோதரிகள் உண்மையில் நடந்தது என்ன என்பதை அங்கேயே தெரியப்படுத்திவிட்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்..!!
“சகோதரிகள் அங்கேயே உண்மையை போட்டுடைத்ததை அப்படியே வெளியிடும் திராணி இப்போது இவர்களுக்கு இருக்கின்றதா?” என்று நாங்கள் கேட்கும் நிலைக்கு திரும்பக் கொண்டு வந்து நிறுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
சகோ பிஜெ குர்ஆன் தமிழாக்கத்தில் தவறு, முகம் மறைத்தல் போன்ற அனைத்து கேள்விகளையும் எடிட் பண்ணாமல் அப்படியே வெளியிடுவீர்கள் என்று நம்புகிறோம். எங்களிடம் தற்சமயம் ஆடியோ மட்டும் இருப்பதால் வீடியோ வை தாமதம் இல்லாமல் வெளியிடுவீர்கள் என்ற ஆவலுடன்..!
அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம். (அல்குர்ஆன் 27 : 50)
No comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.