Monday, March 09, 2015

ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளின் முகமூடி கிழிந்தது!



ஆட்டுத்தோல் போர்த்திய நரிகளின் முகமூடி கிழிந்தது!


அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

அதிரை தாருல் (ஃபித்னா) தவ்ஹீதினரால் நடத்தப்படும் கள்ள வெப்ஸைட் ஒன்றில் சகோதரர் மஹ்ஸின் அவர்கள் வீட்டில் நபி வழியில் நடைபெற்ற ஜனாஸா தொழுகையை விமர்சித்து எழுதியிருந்தனர்.

இவர்களுக்கு குர்ஆனும் தெரியாது, ஹதீஸும் தெரியாது. இந்நிலையில் ஹதீஸையெல்லாம் போட்டு நம்மைக் கிண்டல் செய்கின்றனர். சரி அதுவாவது ஆதாரப்பூர்வமான செய்தியா? என்று கோவையில் இன்று வரை நாறிக்கொண்டிருக்கும் மன்மதக் குஞ்சு மற்றும் இவர்கள் கொண்டாடும் இலங்கை மன்மதக் குஞ்சு அல்லது ரதி மீனா பஸ் ஸ்பெஷல் மன்மதக் குஞ்சு அல்லது இவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் ஓரினச் சேர்க்கை புகழ் ஆலிம்சா (இன்னொரு மைனர் குஞ்சை அவசியம் கருதி தவிர்த்து இருக்கிறோம் )ஆகிய எவரிடமாவது இந்த ஹதீஸ் குறித்து கேட்டு இருக்கலாம் .
அப்படிக் கேட்காமல் விமர்சிக்க துவங்கும் போதே பொய்யான ஹதீஸை சொல்லியே தங்கள் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸா?

3020 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الْوَثَنَ وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ وَلَكِنَّهُمْ كَانُوا إِذَا أَحَلُّوا لَهُمْ شَيْئًا اسْتَحَلُّوهُ وَإِذَا حَرَّمُوا عَلَيْهِمْ شَيْئًا حَرَّمُوهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ وَغُطَيْفُ بْنُ أَعْيَنَ لَيْسَ بِمَعْرُوفٍ فِي الْحَدِيثِ رواه الترمذي

என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலை இருக்கும் நிலையில் நபிகளாரிடம் சென்றேன். அப்போது இந்த சிலையை எரிந்துவிடுங்கள் என்று கூறினார்கள். பின்னர் பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் (31 வது வசனமான) அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், கடவுள்களாக்கினர். என்பதை ஓதினார்கள். மேலும் இவர்கள், அவர்களை வணங்கவில்லை.
மாறாக  அவர்கள் ஏதாவது ஒன்றை ஹலால்  என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் ஹலாலாக்கிக்கொள்வார்கள். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) ஹராமாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல் :திர்மிதீ (3020)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் குதைஃஃப் பின் பின் அஃயன், அல்ஹுஸைன் பின் யஸீத் என்ற இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளதால் இது பலவீனமான செய்தி. ஆதாரப்பூர்வமானதல்ல. எந்த செய்தியை வைத்து பிஜேயானிகள் என்று எங்களை விமர்சிக்கிறார்களோ அதுவே ஹதீஸல்ல எனும் போது இவர்களின் ஆரம்பமே கிழிந்து தொங்குகிறது.

போலி ஒற்றுமை

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் மதீனாவில் வாழ்ந்த யூதர்களும் கிறித்தவர்களும் நெருப்பு வணங்கிகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்திற்கு எதிராக போலி ஒற்றுமையைக் காட்டியது போல் இவர்கள் அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்துடன் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.

அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்திற்கு எங்களையும் தெரியும் உங்களையும் தெரியும். நீங்கள் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் போது மட்டுமே அவர்களுடன் ஒன்று சேருவீர்கள் என்பதையும் நிர்வாகத்திற்கும் பதவிக்கும் ஆசைப்படும் போலி தவ்ஹீத்வாதிகள் நீங்கள் என்பதையும் பதவிக்காக தவ்ஹீதையும் விற்கும் தவ்ஹீத் வேஷம் போடும் கூட்டம் நீங்கள் என்பதையும் அவர்கள் விளங்காமல் இல்லை.

 ஒரு காரியம் சுன்னத்தாக இருக்குமேயானால் எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாமல் உயிரைக் கொடுத்தும் அதை நாங்கள் நிலை நாட்டுவோம் என்பதையும் அவர்கள் விளங்கி வைத்துள்ளனர். ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாக நீங்கள் அதிரை ஜும்மா பள்ளி நிர்வாகத்திற்காக அழாமல் வேறு வேலையிருந்தால் பாருங்கள். உங்களையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள்

ஜனாஸா தொழுகையை நபிவழிப்படி நடத்துவதிலேயே எங்கள் கவனம் இருந்ததால் பள்ளிவாசலில் அறிவிப்புச் செய்வது பற்றி கவனமில்லாமல் இருந்து விட்டோம். அது தவறு தான். ஜும்மா பள்ளி நிர்வாகத்திடம் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்தியதோ பள்ளியில் அடக்கம் செய்ததோ தவறு என்று இவர்கள் நம்மை சாடுகிறார்கள், சுன்னத் வல் ஜமாஅத்தினரை தூண்டி விடுகிறார்கள் என்றால் இவர்கள் தவ்ஹீத்வாதிகளல்ல, நபிவழியைக் கிண்டல் செய்யும் கூட்டம் நபிவழியை எதிர்க்கும் கூட்டம் என்பதை மக்கள் மீண்டும் விளங்கிக் கொண்டுள்ளனர்.
இவர்களின் தவ்ஹீத் சாயம் மீண்டும் வெளுத்துவிட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

இவர்களின் இரட்டை முகம்

தவ்ஹீத் ஜமாஅத்தினர் நபிவழியைக் கடைப்பிடித்தால் கூட தர்ஹாவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும் கூட தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நபிவழியை எதிர்க்கும் அளவுக்கு இவர்களிடம் பொறாமையும் வஞ்சகமும் காழ்ப்புணர்வும் தவ்ஹீத் எதிர்ப்பும் தலைக்கேறியுள்ளது.
தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் போது சுன்னத் வல் ஜமாஅத்தினரை தவ்ஹீத்வாதிகள் என்று கூறும் அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போய் விட்டனர்.

அதே நேரத்தில் மார்க்கம் தெரியாதவர்கள் செய்யும் எந்த பித்அத்தையும் இப்படி இவர்கள் எதிர்த்ததுண்டா? என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

இணைகற்பிப்பவர்கள் நரகத்திற்கு அழைக் கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக் கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான் அல்குர்ஆன் 2:221)

மேற்கண்ட வசனங்கள் இணைவைப்பவருக்கு பள்ளிவாசலை நிர்வாகம் செய்யத் தகுதியில்லை என்றும் அவர்கள் நரகத்தின் பக்கம் அழைப்பவர்கள் என்றும் கூறுகின்றன.
இணைவைப்பவர்களைப் புறக்கணிக்குமாறும் பல வசனங்கள் வருகிறது. அந்த அடிப்படையில் இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழுவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.
இணைவைக்கும் இமாம்களின் இணைவைப்பை விமர்சிக்க இவர்கள் துணிந்தார்களா?
மவ்லித் ஓதும் இமாம் இணைவைப்பவர் என்று சொல்ல இவர்களுக்கு திராணி இருக்கிறதா?
இணை வைத்து மக்களை வழிகெடுக்கும் இமாம்களைக் கண்டிக்கத்  துப்பில்லாமல் நம்மை கண்டிக்கின்றனர்.
தர்காவை வழிபட்டுக் கொண்டிருக்கும் இமாமின் பின்னால் மவ்லூத் ஓதி வரும் இமாமின் பின்னால் ஜனாஸா தொழுமாறு நம்மை அழைக்கிறார்கள்.
தர்ஹாவை வழிபடும் இமாம் பின்னால் நின்று தொழலாம் என்று இவர்கள் வாதிப்பார்களேயானால் முதலில் இவர்களின் ஆய்வாளர் (?)களிடம் அதைக் கேட்டு ஃபத்வா வெளியிடட்டும்.

அப்போது இவர்கள் அனைவரின் சாயமும் வெளிப்படும்

வீட்டில் ஜனாஸாத் தொழுகை நடத்தக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஐவேளைத் தொழுகையில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தில் கலந்து கொண்டது போல் ஜனாஸா தொழுகையிலும் பங்கேற்றுள்ளனர்.

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்
நூல்: ஹாகிம் 1/519

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். மேலும் வீட்டிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்பதையும் மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617

பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.
ஐவேளைத் தொழுகைக்கும் ஜனாஸாதொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு வருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் தவ்ஹீத் பள்ளியைத் தவிர வேறு எங்கும்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதாலும் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்த நபிவழியில் அனுமதி உண்டு என்ற காரணத்தினாலும் தான் வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.


வீட்டில் அடக்கம் செய்தல்


பள்ளிவாசலில் தொழ வைக்காமல் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் வீட்டிலேயே அடக்கம் செய்ய வேண்டியது தானே என்று கேட்கின்றனர்.
வீட்டில் அடக்கம் செய்யக் கூடாது என்று நபிமொழிகளில் வந்த செய்திகள் கூட இந்த கூமுட்டைகளுக்குத் தெரியவில்லை.
'(கடமையில்லாத) உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள். வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 432, 1187

வீடுகளை மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்திருப்பதால், குடியிருக்கும் வீட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது.
உங்களால் இது போன்ற நபிவழியை நடைமுறைப்படுத்த துப்பில்லாவிட்டாலும் தைரியம் இல்லாவிட்டாலும் தவ்ஹீத் ஜமாத்தினர் நடைமுறைப்படுத்தும் போது அதை ஆதரிக்காவிட்டாலும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாமல் இருங்கள். சத்தியப் பிரச்சாரம் செய்தவர்களைத் தடுத்ததினால் தான் இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டம் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்பதையும் பயந்து கொள்ளுங்கள் என்பதையும் மார்க்கம் தெரியாமல் மார்க்கத்திற்கு எதிராக எதையாவது உளறி வைக்காதீர்கள் என்பதை மக்கள் இவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

இணைவைப்பு அரங்கேறும்  பள்ளியில் அடக்கம் செய்தது ஏன்?

ஜனாஸா தொழுகைக்கு பள்ளிவாசலைப் புறக்கணித்து விட்டு அங்கு அடக்கம் செய்தது ஏன்?  என்று போலி தவ்ஹீத் பேசுவோர் கேட்கின்றனர்.
இந்தக் கேள்வியை அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் கூட கேட்கவில்லை. காரணம் இணைவைக்கும் இமாம் பின்னால் நாம் தொழ மாட்டோம் என்பதும் மவ்லித் ஓதப்படும் பள்ளியில் நாம் தொழ மாட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சில மஸாயில்களில் கருத்து வேறுபாடு அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் இருந்தாலும் தவ்ஹீத் திருமணத்தை நடத்தி வைத்தல், ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்தல் போன்ற விசயங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தினருடன் பள்ளி நிர்வாகம் சுமூகமான போக்கையே மேற்கொள்கின்றனர். ஆனால் அதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நம் இமாமை எப்படிப் புறக்கணிப்பது? பாரம்பரியமிக்க நம் பள்ளியை எப்படிப் புறக்கணிப்பது? இவர்களை எப்படி இங்கே அடக்கம் செய்ய அனுமதிப்பது? என்று ஜனாஸாவை அடக்கம் செய்ய விடக் கூடாது என்ற கோரிக்கையை வைப்பதன் மூலம் இவர்கள் தவ்ஹீதுக்கு எதிரிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை நம்பும் ஒரு சிலர் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். இல்லையானால் தவ்ஹீத்வாதிகளின் ஜனாஸாவை இணைவைக்கும் இமாம் குளிப்பாட்டுவார், தொழுகை நடத்துவார், ஏராளமான சடங்குகள் நமது மரண நேரத்திலும் நடைபெறும் சூழல் உருவாகி விடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

ஜூம்மா பள்ளியினருக்கும்  இவர்களுக்கும் சில மசாயில்களில் மட்டும் தான் கருத்து வேறுபாடாம் மற்றபடி இவர்களும் அவர்களும் ஒன்று என்று ஒற்றுமை பேச வந்து இருக்கும் வெட்கங்கெட்ட போலி தவ்ஹீத் வாதிகளே அதிரையில் தவ்ஹீத் பள்ளி கட்டும்போது ஒற்றுமை வேஷமிட்டு ஜூம்மா பள்ளியில் தொழுத நீங்கள் தனிப்பள்ளி கண்டதின் அவசியமென்ன என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா  உங்களுக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்ற நப்பாசையில் ஒற்றுமை பேசும் அயோக்கியர்களே !!

5057. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்: அவர்கள் குறைந்தவயது கொண்ட இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும்) அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம் வரை) செல்லாது. எனவே, அவர்களை நீங்கள் எங்கு எதிர்கொண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களை ஒழிப்பது, அவர்களைக் கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்' என்று கூறினார்கள்.
என அலீ(ரலி) அறிவித்தார். 67

இப்படி  ஒரு ஹதீஸை போட்ட அயோக்கியர்களே அத்தகைய அயோக்கியர்களை ரசூலுல்லாஹ் அடையாளத்தோடு விளக்கியதை  நாங்கள்  போடுகிறோம் பார்த்துகொள்ளுங்கள்
7562. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவேமாட்டார்கள்' என்றார்கள்.
'அவர்களின் அடையாளம் என்ன?' என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மொட்டைபோடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)து தான் (அவர்களின் அடையாளம்)' என்று பதில் சொன்னார்கள்.

மொட்டை போடாமலே யாருக்கு இங்கே சொட்டை என்பதை எழுதியவன்  யோசிக்கட்டும்


//குர்ஆனையும் ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களையும் ஏற்றுக் கொண்ட, இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் //

என்று  தங்களை  பற்றி  கூறி கொள்வார்களாம்  நபிவழியில்  நடந்த  இந்த ஜனாஸா தொழுகையை  வைத்து  குளிர்  காய  வருவார்களாம் என்னங்கடா லாஜிக் இது ??

1 comment:

  1. // மேலத்தெரு குத்பா பள்ளி நிர்வாகத்திற்கும், முழுமையாக குர்ஆன் ஹதீஸை பின்பற்றுகின்ற முஸ்லீம்களுக்கும் இடையே தீர்த்துக் கொள்ள முடிகின்ற சில மஸாயில்கள், பித்அத் பிரச்சனைகள் பல இருந்தாலும் குர்ஆனையும் ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களையும் ஏற்றுக் கொண்ட, இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்களின் பள்ளிவாசலாகும். இந்தப்பள்ளியில் குர்ஆன் தமிழாக்கத்தை திரித்தும், நூற்றுக்கணக்கில் ஸஹீஹான ஹதீஸ்களை மனமுரண்டாக மறுத்தும் வருகின்ற பீஜே குஞ்சுகள் இந்தப் பள்ளியின் மையவாடியை சொந்தம் கொண்டாட நிர்வாகமும், முஹல்லாவாசிகளும் அனுமதிக்கலாமா?//

    ஜூம்மா பள்ளிக்கும் எங்களுக்கும் பகை என்ற புகையை மூட்டி அதில் குளிர் காய நினைக்கும் அயோக்கியர்களே ஹதீஸ் என்ற பெயரில் என்ன இருந்தாலும் அதை ஏற்று கொள்ளும் கொள்கை குன்றுகள் நாங்கள் என்று முதல் ஹதீஸே பொய்யான ஒன்றை ஹதீஸ் என்ற பெயரில் போட்டு உங்கள் பொய் முகத்தை உண்மையாக தோலுரித்து காட்டிவிட்டீர்களே

    ReplyDelete

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.