அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....
கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து அப்பாஸ் அலி பதறி ஓட்டம்:
ஞாயிற்றுக்கிழமை 04.01.2015 அதிரையில் அப்பாஸ் அலி உரை நிகழ்த்த உள்ளதாகவும், அந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கேள்வி கேட்டால் அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்ற ரீதியில் பல பில்டப்புகளை கொடுத்து கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
04.01.2015 அன்று அதிரையில் அப்பாஸ் அலி.
கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து அப்பாஸ் அலி பதறி ஓட்டம்:
ஞாயிற்றுக்கிழமை 04.01.2015 அதிரையில் அப்பாஸ் அலி உரை நிகழ்த்த உள்ளதாகவும், அந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கேள்வி கேட்டால் அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்ற ரீதியில் பல பில்டப்புகளை கொடுத்து கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
04.01.2015 அன்று அதிரையில் அப்பாஸ் அலி.
ததஜவினருக்கு அறிய வாய்ப்பு!
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்இன்ஷா அல்லாஹ், அதிரையில் எதிர்வரும் 04.01.2015 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து...
ததஜவினருக்கு அறியதோர் வாய்ப்பு
1. ஒரு சில மாதங்களுக்கு முன் மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் காரைக்கால் நகருக்கு வருகை தந்திருந்தபோது, ததஜவினர் 'சூனியம்' குறித்து தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும்இ தெளிவுபெற வேண்டி சிறப்பு கேள்வி பதில் நேரத்தை ஒதுக்கித் தரும்படியும் பகிரங்கமாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வேண்டிக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களும் அவர்களின் மனநிலையில் உள்ள ஏனைய ததஜவினரும்...
2. ததஜ தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தபடி, மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் பேசும் இடங்களில் எல்லாம் சூனியம் சம்பந்தமாக கேள்வி கேட்டு அவரை திணறடிக்க விரும்பும் ததஜவினரும்...
3. மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கேள்வி கேட்க விரும்பும் ததஜ சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்...இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்.
மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் உரைக்குப்பின் நேரடியாக கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.
மேற்கண்டவாறு அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் சொல்லப்பட்டது பெயரளவுக்குச் செய்யப்பட்டதா? உண்மையாகவே தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய எங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக அறிவிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அப்பாஸ் அலியை வைத்து பொதுக்கூட்டம் நடத்தும் தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கு நமது அதிரை கிளை சார்பாக கடிதம் வழங்கினோம்.
அதில் கீழ்க்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
அதிரை தாருத் தவ் ஹீத் நிர்வாகிகளுக்குஇ
அஸ்ஸலாமு அலைக்கும்
எங்களுக்கு சூனியம் தொடர்பாக சுமார் 30க்கும் மேற்பட்ட கேள்விகள் உள்ளன. அவை அனைத்துக்கும் விளக்கம் அளித்தால் தான் உண்மையான அறிவிப்பாக இது இருக்க முடியும். அவ்வாறு இல்லாமல் கூட்டம் முடியும் நேரத்துக்கு நெருக்கத்தில் கேள்வி பதில் என்று ஆரம்பித்துஇ இத்துடன் நேரம் முடிந்து விட்டது என்று சொல்லப்பட்டால் அந்த அறிவிப்பு போலி அறிவிப்பாகி விடும். எனவே இதை உறுதிப்படுத்திக் கொள்ள இக்கடிதம் அளிக்கிறோம். எங்களின் கேள்விக்காக குறைந்தது எங்களுக்கு இரண்டு மணி நேரங்கள் ஒதுக்கித் தர வேண்டும்.
அல்லது குறைந்தது 20 கேள்விகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இப்படி உறுதி மொழி அளித்து எங்களுக்கு எழுத்து மூலமான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
மேலும் கேள்விகள் எழுத்து மூலமாக இல்லாமல் வாய்மொழியாக கேட்க அனுமதிக்க வேண்டும். எழுத்து மூலமாக கேள்வி என்று அறிவித்தால் அதில் தனக்கு சாதமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் நாடகம் நடத்தி எங்கள் கேள்விகள் தவிர்க்கப்படும் என்ற சந்தேகம் ஏற்படும். இதற்கு இடம் தாரமல் நேரடி வாய் மொழியான் கேள்விக்கு உத்தரவாதம் தர வேண்டும் என்று கோரி இம்மடலை அளிக்கிறோம்.
ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேரடியாக கேள்விகள் கேட்க தங்களது எழுத்துப்பூர்வமான ஒப்புதலை வரக்கூடிய 31.12.14 புதன் கிழமை இரவு 8மணிக்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
அதிரை கிளை தலைவர்
மேற்கண்டவாறு நாம் அவர்களுக்கு அளித்த கடிதத்திற்கு கீழ்க்கண்டவாறு பதிலளிதத்தன் மூலம் வாய்ச்சொல் வீரர் அப்பாஸ் அலி நமது தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையினரது கேள்விகளை சந்திக்க திராணியில்லாமல் ஓட்டமெடுத்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
அவர்கள் அளித்துள்ள பதிலை பாருங்கள்:
'2மணி நேரத்தில் தவ்ஹீத் ஜமாத்தினர் மட்டுமல்லாது பார்வையாளர் பகுதியில் இருப்பவர்களது கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். 3 நிமிட்த்திற்கு மேல் கேள்வி கேட்க அனுமதியில்லை' இது தான் அவர்களது பதில் கடித்த்தின் சாரம்சம்.
தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று தான் அவர்களது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்கள்.
நாம் குறைந்தது 20 கேள்விகள் கேட்பதற்கோ அல்லது குறைந்தது 2மணி நேரமோ ஒதுக்கச்சொல்லி கேட்டிருந்தோம். நமது கேள்விகளை எதிர்கொள்ள நான் தயார் என்று சொல்பவர் என்ன செய்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்தை நாங்கள் ஒதுக்குகின்றோம்; தவ் ஹீத் ஜமாஅத்தினர் எப்படி வேண்டுமானாலும், அந்த இரண்டு மணி நேரத்தில் கேள்விகளைக் கேட்கலாம்; அத்துனை கேள்விகளுக்கும் அப்பாஸ் அலி வரிக்கு வரி பதிலளிப்பார் என்று பதில் தந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பதிலளிக்க திராணியில்லாமல், 'இரண்டு மணி நேரத்தை கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக நாங்கள் ஒதுக்கியுள்ளோம்; அதில் தவ் ஹீத் ஜமாஅத்தினரும் கேள்வி கேட்கலாம்; தவ் ஹீத் ஜமாஅத் அல்லாத பார்வையாளர் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்படும் என்று சொல்லி தவ் ஹீத் ஜமாஅத்தினரது கேள்விகளுக்கு பயந்து பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டமெடுத்துள்ளனர்.
கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு கேள்விகளை மட்டும் தவ் ஹீத் ஜமாஅத்தினரை கேட்க விட்டு விட்டு, பார்வையாளர் பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் கேள்வி கேட்க அனுமதி அளித்துள்ளதால் உங்களுக்கு கேள்வி கேட்க அனுமதியில்லை என்று ஓட்டமெடுப்பதற்குத்தான் இத்தகைய நாடகம் என்பதை அனைவரும் எளிதில் விளங்கலாம்.
தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று அறிவிப்பு செய்துவிட்டு, கேள்வி கேட்க அனுமதிக்கின்றோம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வந்து தாராளமாக கேள்வி கேட்கலாம் என்று சொல்லிவிட்டு, நாம் கேள்வி கேட்க அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தவுடன் அந்தர் பல்டி அடித்து, 'உங்களுக்கும் பதில் சொல்வார்; ஊருக்கும் பதில் சொல்வார்' என்று ஓட்டமெடுத்துள்ளார் அப்பாஸ் அலி.
மேலும் ஒரு கேள்வி கேட்க 3 நிமிட்த்திற்கு மேல் அனுமதியில்லையாம். சந்தேகங்களுக்கு பதில் சொல்பவர் இப்படித்தான் 3 நிமிட ஷரத்துகளை போடுவார்களா?
பொதுப்படையாக கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றோம் என்று போட்டிருந்தால் நாம் கடிதம் கொடுத்திருக்கமாட்டோம். தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அரிய வாய்ப்பு என்று ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை கோடிட்டுக்காட்டி அறிவிப்பு செய்துவிட்டு எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்று சொல்லி அறிவிப்பு செய்துவிட்டு இப்படி அந்தர் பல்டி அடித்துள்ளதன் மூலம் இவர்களது உண்மை முகம் அம்பலமாகியுள்ளது.
மேலும் கேள்விக்கு பதில் அளிப்பதாக இருந்தால் எவ்வித சலசலப்பும் ஏற்படாது என்பதற்கு பொறுப்பேற்று நாம் உறுதிமொழிக்கடிதம் வழங்க வேண்டுமாம். அப்பொழுதுதான் கேள்வி பதில் நிகழ்ச்சியில் நாம் கேள்வி கேட்க அனுமதி அளிப்பார்களாம். அப்படியானால் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு மட்டும்தான் கேள்வி கேட்க அனுமதி அளிக்கின்றோம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். நாம் எவ்வித சலசலப்பும் ஏற்படாது என்று பொறுப்பேற்று கடிதம் வழங்கிய பிறகு பார்வையாளர்கள் பகுதியில் இருந்து யாராவது சலசலப்போடு கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வார்களாம். இப்படி ஒரு முரண்பட்ட உளறலையும் தங்களது கடித்த்தில் உளறியுள்ளனர்.
இஸ்மாயில் ஸலபி கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக அறிவிப்புச் செய்தவுடன் 2மணி நேரம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்கியதுமே ஆட்டம் கண்டு சப்பை காரணங்களைச் சொல்லி ஓட்டமெடுத்தார். அதுபோலத்தான் தற்போது அப்பாஸ் அலியும் தவ்ஹீத் ஜமாஅத்தினரது கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியில்லாமல் ஓட்ட மெடுத்துள்ளார். சூனியத்திற்கு கொடி தூக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த இழி நிலையைத்தான் வல்ல ரஹ்மான் ஏற்படுத்துவான் என்பது மீண்டும் ஒரு முறை நீருபணமாகி உள்ளது.
குறிப்பு : அப்பாஸ் அலியின் உளறல்களுக்கு வரிக்கு வரி பதிலளிக்கக் கூடிய மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 10.01.15 சனிக்கிழமை இரவு 6.30மணிக்கு நடைபெறும் இன்ஷா அல்லாஹ்....
No comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.