அதிராம்பட்டினத்தில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் 10 நாட்கள் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மேலான்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மெளலவி யாசிர் இம்தாதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பெண்களுக்கு பெண் ஆலிமா பயிற்சியளித்தார். இதில் எராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதை தொடர்ந்து கடந்த 06.06.2009 அன்று மாலை 4 மணிக்கு மஸ்ஜிதே தவ்ஹீத் பள்ளியில் கோடை கால பயிற்சி முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு அளிப்பு விழாவும், இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அப்துன் நாசர் அவர்கள் கலந்து கொண்டு கோடை கால பயிற்சி முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். மேலும், ”இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மௌலவி அப்துன் நாசர் அவர்கள் பதில் அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இதற்கான செலவுகளை துபாயில் உள்ள அதிராம்பட்டினம் ததஜ சகோதரர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.